Followers

Friday, January 03, 2014

சவுதி மாணவி மூன்றாம் இடம்!



ஹயா அல் ஹூசைன் என்ற இந்த மாணவி ஹாங்காங்கில் நடந்த மாணவ மாணவிகளுக்கான திறன் அறியும் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்ற கணிதம் சம்பந்தமான அனைத்து ஆய்வுகளுக்கும் மாணவ மாணவிகள் உட்படுத்தப்பட்டனர். அமெரிக்கா, இந்தியா, கனடா, கொரியா, சைனா, ஆப்ரிக்கா என்று 14 உலக நாடுகளில் இருந்து 500 மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். சீன அபாகஸ் என்ற கஷ்டமான கணித போட்டியில் மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தனது திறமையை காட்டி நடுவர்களை அசத்தினார் இந்த சவுதி சிறுமி!

முன்பெல்லாம் சவுதிகள் என்றால் காவா(காபி) குடித்துக் கொண்டு பேரித்தம் பழங்களை தின்று கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை மணந்து கொண்டு சுகமாக தனி உலகத்தில் வாழ்பவர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் உலக பொருளாதார மந்த நிலை இந்த மக்களையும் உலக மக்களோடு போட்டி போட வைத்துள்ளது. படித்து முன்னேறினால்தான் எதிர்காலத்தில் கௌரவமாக வாழ முடியும் என்ற நிலைக்கு தற்போது இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க மாறுதலே!

உலக தரத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற இந்த சவுதி மாணவியை நாமும் பாராட்டி கல்விக்கு நாமும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போமாக!

'கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும், கற்கை நன்றே!'

தகவல் உதவி: சவுதிகெஜட்!

''கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்'' (இப்னு மஸ்ஊத்).

''சிறிது நேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்'' (அபூதர்தா)

''சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்'' (அபூஹுரைரா)

-நபி மொழிகளின் சுருக்கம்!

7 comments:

Dr.Anburaj said...

எத்தனையோ இந்திய மாணவ மாணவியா்கள் சா்வதேவ போட்டிகளில் மிகச்சிறந்த இடத்தை பல முறை பெற்றுள்ளனா். அது எல்லாம் தங்களுக்கு முக்கியமானதல்ல.சவுதி பெண் முதல் மதிப்பெண் பெற்றாள் என்பது பாராட்டுக்குாிய பயனுள்ள தகவல்தான்.இருப்பினும் தங்களின் ஆரேபிய அடிமைத்தனம் காணக்கிடைக்கின்றது.

suvanappiriyan said...

//எத்தனையோ இந்திய மாணவ மாணவியா்கள் சா்வதேவ போட்டிகளில் மிகச்சிறந்த இடத்தை பல முறை பெற்றுள்ளனா். அது எல்லாம் தங்களுக்கு முக்கியமானதல்ல.சவுதி பெண் முதல் மதிப்பெண் பெற்றாள் என்பது பாராட்டுக்குாிய பயனுள்ள தகவல்தான்.இருப்பினும் தங்களின் ஆரேபிய அடிமைத்தனம் காணக்கிடைக்கின்றது. //

நமது நாட்டு மாணவர்கள் உலக தரம் பெறுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் சவுதி மாணவர்களும் இந்த சாதனைகளில் இடம் பெற ஆரம்பித்துள்ளார்கள். இதனை நாம் பாராட்ட வேண்டும் இல்லையா?

நான் வேலை செய்வதற்கு ஏற்ற ஊதியத்தை பெறுகிறேன். எனவே அரபு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இறைவனின் அடிமையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

Anonymous said...

நோபெல் விஞ்ஞானி சந்திக்க மறுப்பு! குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கி ராமகிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல வகைகளிலும் முதல் அமைச்சராக நரேந்திர மோடி முயற்சி செய்து பார்த்தார்.

2002 மதக் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி சம்பந்தப்பட்டு இருப்ப தால் சந்திக்க இயலாது என்று அந்த விஞ்ஞானி மறத்துவிட்டார்!

இப்படிப்பட்ட கொடூர மனிதனான நரேந்திர மோடிதான் பிரதமர் ஆக வேண்டுமாம் - இவருக்காகத்தான் சோ வகையறாக்கள் முட்டுக் கொடுக்கிறார்கள் - எச்சரிக்கை!

----------------------------------------மின்சாரம் அவர்கள் 4-01-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Anonymous said...

//கல்விக்கு
நாமும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போமாக// சுவனப்பிரியர், இது
நீங்கள் அரபுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் கொடுக்க வேண்டிய அறிவுரை.
கல்வியின் அவசியத்தை இங்கு இயல்பிலேயே அனைவரும் உணர்ந்தே உள்ளனர்.
பொருளாதார குறைவால் சிலர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்களே தவிர
சவுதிகளை போல மதகொழுப்பு, பணக்கொழுப்பு எடுத்து கல்வியின் அவசியத்தை
உணராமல் இருக்கவில்லை.

Dr.Anburaj said...

முஸ்லிம்கள் மட்டும் அல்ல இந்துக்களும் உருப்பட வேண்டும் என்றால் 1.தொலைக்காட்சியில் மக்கள் டி.வி மட்டுமே பாா்க்க வேண்டும். 2.வீடுதோறும் அனைவரும் யோகா பழக வேண்டும் 3.பட்டதாாிகள் அனைவரும் ” கலைக்கதிா் ” போன்ற அறிவியல் பத்திாிகைகள் படிக்க வேண்டும்.4. ஊா்தோறும் நூலகம் அமைக்க வேண்டும்.அரேபிய நூல்களை தவிாத்தது விஞ்ஞான நூல்கள் வாங்கிப்படிக்க வேண்டும். 5.முறையாக சங்கிதம் படிக்க வேண்டும் .வீணை வயலின் மிருதங்கம் கீ.போாட் போன்ற இசைக்கருவிகள் அனைவரும் வாசிக்கப்பழக வேண்டும். நற்காாியங்கள் செய்ய சமய பேதம் பாா்க்க கூடாது.சதா என்மதம் பொியது என்று பீற்றிக் கொள்ளக் 4டாது. திருமந்திரம் கூறுகிறது யாவருக்கும் ஈமின் -கொடுங்கள் -அவா்இவா் என்றன்மின் - பேதமின்றி கொடுக்க பொருள் இருந்தால் கொடுங்கள்.இந்தப்பண்பாடு இந்தியப்பண்பாடு.

Dr.Anburaj said...

சமய நம்பிக்கைகள் பல விஞ்ஞான மனப்பான்மை பெற் தடையாக உள்ளது.இந்துமதம் ஒரு புத்தகத்தை பிரதானமாகக் கொள்ள வில்லை. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை வலியுறுத்தவில்லை. காலத்தில் ஒட்டத்தில் வளா்ச்சியை விரும்பம் ஏற்றுக் கொள்ளும் அற்பதகுணம் படைத்தது இந்துமதம். சுவாமி விவேகானந்தாின் நூல்களில் தெளிவான இந்து-இந்திய ஆன்மீகத்தைக்காணலாம். விஞ்ஞான உண்மைகளை அறியும் பக்குவத்தை குரான் மற்றும் ஆரெபிய நூல்களை நம்ப வேண்டும் என்ற நம்பிக்கை கெடுத்து விடுகிறது.

Anonymous said...

//ஆனால் சவுதி மாணவர்களும் இந்த சாதனைகளில் இடம் பெற ஆரம்பித்துள்ளார்கள். இதனை நாம் பாராட்ட வேண்டும் இல்லையா?//


சவுதிகள் யாரும் இந்தியர்களை பாராட்டுவது இல்லையே, அரபு அடிமைத்தனம் என்னவெலாம் பேச வைக்கிறது இந்த கோமாளிகளை