Followers

Tuesday, October 18, 2022

உத்தமசோழன்

உத்தமசோழன் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட செல்கிறான்..... காட்டில் வேட்டையாடிவிட்டு மதிய உணவு அருந்திய பின் தனது அமைச்சரவை சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அன்று ஏகாதசி என்பதை உணர்கிறான்.. அவன் ஏகாதசி விரதம் இருப்பவன்... ஏகாதசி என்பதை மறந்து அன்று மதிய உணவு உண்டு விட்டான் உடனே மனம் பதைத்து, அரண்மனையில் உள்ள பார்ப்பனர்களிடம் ஆலோசனை கேட்கிறான்....

உடனே பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை விடுவார்களா... ''மன்னா, ஏகாதசி விரதம் அன்று உணவு உண்டு விட்டீர்கள்... இதற்குப் பரிகாரம் உள்ளது'' என்று சொல்கிறார்கள்
உடனே மன்னன் ''பரிகாரமா, என்னவென்று சொல்லுங்கள் செய்துவிடலாம்'' என்கிறான்....

'' மன்னா, ஆயிரம் அந்தணர்களுக்கு வீடு கட்டி, அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு நிலங்கள் பசுக்கள் போன்றவைகளை வழங்கினால்.... நீங்கள் செய்த பாவம் தீரும் என்கிறார்கள்...'' உடனே மன்னன் அவ்வாறே செய்கிறான்.... அவ்வாறு வழங்கப்பட்ட ஊர் தான் #உத்தமதானபுரம்...

தமிழ் தாத்தா என அழைக்கப்படும் ஊ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த ஊர்,..

தமிழ் தாத்தா இதை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே எப்படி நமது தமிழ் மன்னர்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது....

1 comment:

Dr.Anburaj said...

பார்ப்பனா்கள் அதிக அளவு எடுத்தாா்கள் என்பது உண்மைதான்.