Followers

Showing posts with label TNTJ. Show all posts
Showing posts with label TNTJ. Show all posts

Tuesday, September 12, 2017

தவ்ஹீத் ஜமாத்தால் என்ன மாற்றம் வந்தது என்று கேட்பவர்களுக்காக!

தவ்ஹீத் ஜமாத்தால் என்ன மாற்றம் வந்தது என்று கேட்பவர்களுக்காக!

"வாங்கிய வரதட்சணை ஐம்பதாயிரம் ரூபாயும் 15 சவரன் நகையையும் திருப்பி தரும் நிகழ்ச்சி"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளையின் உறுப்பினரான சகோதரர் முஸ்தபா அவர்கள் ஆதமங்கலம் புதூர் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமண நேரத்தில் மணமகள் வீட்டில் வாங்கிய வரதட்சணையை தவறு என்பதை சில காலம் கழித்து உணர்கிறார்.

மனம் திருந்தி அல்லாஹ்விற்கு பயந்து பெண் வீட்டாரிடமிருந்து வாங்கிய வரதட்சணையை திருப்பித் தர முன் வருகிறார். TNTJ மாவட்ட தலைவர் சகோதரர் M.ஷாகித் மற்றும் TNTJ வந்தவாசி கிளை தலைவர் சகோதரர் புஹாரி ஷரீப் முன்னிலையில் "ஐம்பதாயிரம் ரூபாயும் 15 சவரன் நகையையும்" சகோதரர் முஸ்தபா அவர்கள் திருப்பி மணமகள் தாயாரிடம் வழங்கினார்.

அல்ஹம்துலில்லாஹ்.!! எல்லா புகழும் இறைவனுக்கே!

"பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!"

திருக்குர்ஆன்  4:4

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன்  3:132


வரதட்சணைக்காக மணமகளை உயிரோடு கொளுத்தி விடும் பல நிகழ்வுகளை ஆங்காங்கே கேள்விப்படுகிறோம். இந்த இளைஞனுக்கு இத்தகைய் மாற்றத்தை ஏற்படுத்தியது எது? கடந்த 30 ஆண்டு காலமாக செய்த ஏகத்துவ பணியின் பலனை சிறிது சிறிதாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இது போன்ற பல நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடந்து வருகின்றன. எல்லா புகழும் இறைவனுக்கே!



Sunday, September 10, 2017

அவதூறு ஆடியோ குறித்து பீஜேவின் பதிலடி உரை.

அவதூறு ஆடியோ குறித்து பீஜேவின் பதிலடி உரை.

பொறையாரில் இன்று நடைப்பெற்ற முஹம்மதுர் ரஸுல்லாஹ் நாகை மாவட்ட மாநாட்டில் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு ஆடியோவிற்கு சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆணித்தரமான பதிலடியை விளக்கமாக கொடுத்தார்.

பின்னர்..

பிஜேவின் உரையிலிருந்து....

இந்த மாநாட்டோடு தாவா பணிகளிலிருந்து ஒதுங்கி வியாபாரத்தில் கவனம் செலுத்தலாம் என்றிருந்த போது எதிரிகள் போலியாக உருவாக்கிய இந்த அவதூறு ஆடியோ பரப்பபட்டது. இனி இந்த பழியோடு ஒதுங்க கூடாது. முன்பை விட இன்னும் சமுதாய பணியில் செயல்பட வேண்டும். புது புத்துணர்ச்சியுடன் இந்த மார்க்கத்தை இன்னும் அதிக வீரியத்துடன் எடுத்துரைக்க வேண்டும் எண்ணம் உருவாகிறது.

இந்த ஜமாஅத்தின் பவரை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கு பல்லை காட்டினால் பல கோடிகளுக்கு அதிபதியாகி எங்கோ போயிருக்கலாம் ஆனால் ஒரு போதும் மார்க்கத்தை வைத்து சாம்பாதித்தது கிடையாது உழைத்து தான் முன்னேறினோமே தவிர பிழைப்பிற்காக மார்க்கத்தை பயன்படுத்தியதில்லை. எனது வருமானத்திற்காக எந்த பணக்காரரிடமோ அல்லது ஜமாஅத்திடமோ அல்லது வெளி ஆட்கள் வேறு யாரிடமோ கடன் கூட வாங்கினதாக காட்டமுடியாது. எனது சொந்த உழைப்பினால் தான் முன்னேறினோமே தவிர வேறு எந்த வழியில் முன்னேறியதில்லை.

மேலும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த ஜமாஅத்திலிருந்து நான் போனாலும், யார் போனாலும் சரி தான் கொள்கைக்காக மட்டுமே இதில் இருக்கவேண்டும், குர்ஆன் ஹதீஸுக்காக மட்டுமே இதில் இருக்கவேண்டும் தவிர எந்த தனி நபருக்காகவும் இதில் இருக்க கூடாது.

(அல்லாஹ் காப்பாற்றட்டும்) நாளைக்கே நான் தப்பு செய்தாலும் இந்த ஜமாஅத்தை விட்டு என்னை தூக்கி எறிவார்கள். அப்போது நீங்கள் என் பின்னால் வரமாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன் காரணம் அப்படி தான் உங்களை இந்த ஜமாஅத் உருவாக்கியுள்ளது. நாளைக்கு நான் வெளியே போனால் நீங்கள் அல்லாஹ்வை தவிர்த்து வேறு நபரையா வணங்க போகிறீர்கள்.? அல்லது ரஸுல்லாஹ்வை தவிர்த்து வேறு ஒருவரை நபியாக கொள்வீர்களா.? இந்த குர்ஆனுக்கு பதிலாக புது குர்ஆனை உருவாக்குவீர்களா.? ஆகவே எவன் போனாலும் எவன் வந்தாலும் இந்த ஜமாஅத்தை பொறுத்தவரை ஒரு சிறு சலனம் கூட ஏற்படாது.

ஒரு தலைவர் ராஜினாமா செய்தார் அதனால் எந்த சலனமாவது இந்த ஜமாஅத்தில் ஏற்பட்டதா.? எந்த கிளையிலாவது பிரச்சனை ஏற்பட்டதா.? அதனால் யாராவது இந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறினார்களா.? அப்படி ஒரு நிகழ்வும் இந்த ஜமாஅத்தில் கிடையாது.

காரணம் 30 ஆண்டுகள் உரம் மேல் உரம் போட்டு உறுதியாக கொள்கையால் வார்த்து எடுக்கப்பட்ட ஒரே ஜமாஅத்.

அல்ஹம்துலில்லாஹ்..!!






Wednesday, August 30, 2017

பிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்

பிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்....

TNTJ முதியோர் இல்லத்திற்காக உபகரணங்கள் வழங்கிய மாற்று மத சகோதரர்கள்....

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நெசப்பாக்கம் பகுதியை சார்ந்த சகோ.ஷங்கர். ஷங்கர் மற்றும்  அவர்களின் சகோதரி மேலும்  அவரின் மாமி ஆகியோர் குடும்பத்தில் ஆலோசனை செய்து முதியோர்களுக்கு பயன்படும் வகையில் புகைபடத்தில் காணும் சாதனங்களை சுமார் 20,000/-  க்கும் அதிகமான மதிப்பிலான உபகரணங்களை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து வழங்கியுள்ளார்கள்.

அவர்கள் சொன்ன வார்த்தை “தவ்ஹீத் ஜமாத் தின் முதியோர் இல்ல விளம்பரத்தை பார்த்தேன்.... தமிழகத்தில் உள்ள பல இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாத் வசம் கொடுத்தால் தான் அது 100% சரியான வகையில் பயன்படும் என தாங்கள்  நம்புவதாகவும்” தெரிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

இது போன்று மாற்று மத சகோதரர்களையும் செயல்பாடுகளால் ஈர்க்கும் வண்ணம் நம்முடைய செயல்கள் மேலும் வீரியம் பெற அல்லாஹ் உதவி செய்வானாக ....


சகோதரர் ஷங்கர் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் நேர்வழியில்  நடந்து ஏக இறைவனின் அருள் பெற து ஆ செய்யவும்....



Tuesday, August 29, 2017

"மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJ

"மும்பையில் கனமழை வெள்ளம்: களப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத், தாராவி கிளை"

மும்பையில் தற்போது கனமழை கொட்டி வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதனால் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது! சாலைகளில் மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் பல இடங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில்....

ஆல்இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மும்பை மண்டலம் தாராவி கிளை சகோதரர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கினர்

இன்று நீண்ட நேரம் மழை இடைவிடாது பெய்ததால் மாஹீம் ரயில்வே நிலைத்தில் வெளியே பயணத்தில் இருந்த மக்கள் வீடு திரும்ப முடியாத சூழல், அனைத்து கடைகளும் உணவு விடுதிகளும் அடைந்திருந்தது இதனால் பல மணி நேரம் குழந்தைகளும் முதியோர்களும் உட்பட மக்கள் அதிகமானோர் பட்னியில் இருந்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத் தாராவி கிளை சகோதரர்கள் ஏற்பாட்டில்  அனைத்து உடனடியாக உணவு பொட்டலங்களை தயார் செய்து பல கிலோமீட்டர் பயணம் செய்து வெள்ளத்தால் சிக்கிகொண்ட மாஹிம் நிலையத்தில் சிக்கி கொண்ட  மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட், உணவு போன்றவைகளை முதற்கட்டமாக வழங்கி பொதுமக்களின் பசியை தீர்த்தனர்.

இதில் பாதுகாப்பு நின்ற காவலர்களுக்கு கூட உணவு இல்லாமல் துன்பபட்டனர். அவர்களுக்கும் தாராவி கிளை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உணவு வழங்கியதும் மிக பெரிய தெம்புடன் நம் சகோதரர்களை கட்டி தழுவி நன்றியை தெரிவித்தனர்.

புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்

மனிதரிடம் காட்டும் இரக்கமும் அன்பும் ஏக இறைவனுக்கு மிக பிடித்தமானது என்று இஸ்லாத்தின் அடிப்படையான மனிதநேயத்தை மராட்டிய மண்ணில் மழைவெள்ளத்தால் மக்கள் இந்த உணவு ஊட்டுதல் மூலம் புரிந்திருப்பார்கள்.

ஏனெனில்...

"இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்" :-  நபி நாயகம் (ஸல்)

மேலும் கனமழை தொடராமலும் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்





Wednesday, August 16, 2017

சகோதரர் நாகராஜ் உடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

சகோதரர் நாகராஜ் உடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

குவைத்தில் பணிபுரிந்து வந்த மாயவரம் மங்கநல்லூரை சேர்ந்த நாகராஜ் (51) குவைத் வந்த சில தினங்களில் மாரடைப்பால் காலமானார்.

குவைத்தில் அவருக்கு உறவினரோ நன்பர்களோ இல்லாத சூழலில் நாம் தகவல் அறிந்ததை அடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவரின் சடலத்தை தாயகம் அனுப்பி வைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இன்று 16/8/2017 ஸபா மருத்துவமனையில் பெட்டியில் அடைக்கப்பட்டு இரவு இலங்கை விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.






Sunday, August 13, 2017

வருங்கால ஏகத்துவ பிரச்சாரகர்கள்!

வருங்கால ஏகத்துவ பிரச்சாரகர்கள்!


அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


*
அறிவும் அமலும் - தேர்வு நடைபெற்றது* 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்


நாள் : 13.08.2017 ஞாயிறு

நேரம் : காலை 9.00 மணி

தேர்வு மையம் : *இராஜகிரி கிளை மர்கஸ்*


தேர்வு மேற்பார்வையாளர் :
*
சையது சுல்தான்*
பாடம்: *தொழுகை*


பங்குபெற்ற கிளைகள் விபரம் :


1.
பாபநாசம்
2.
இராஜகிரி
3.
பண்டாரவாடை


மேற்கண்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




Friday, August 11, 2017

சுதந்திர தின இரத்த தான முகாம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின இரத்த தான முகாம்..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்

சுதந்திர தின இரத்த தான முகாம்..

 நடைபெறும் இடங்கள் ...


#இராமநாதபுரம் வடக்கு#
1.தேவிபட்டினம் 

#திருவள்ளூர் கிழக்கு#
2. சிங்கிலிமேடு 

#நாகை வடக்கு#
3. மயிலாடுதுறை நகரம்

 #தேனி மாவட்டம்#
4. பெரியகுளம் கிளை

#திருவாரூர் வடக்கு#
5. அடியக்கமங்கலம்
6.திருவாரூர்
7.கொல்லாபுரம்
8.நாகங்குடி

#நெல்லை மேற்கு#
9.புளியங்குடி
10.ஜின்னா நகர்
11.சொக்கம்பட்டி

#மதுரை மாவட்டம்#
12.மதுரை

#திருவாரூர் தெற்கு#
13.திருத்துறைப்பூண்டி
14.மன்னார்குடி
15.முத்துப்பேட்டை
16.கோவில்வேனி

#தஞ்சை வடக்கு#
17.பண்டாரவாடை
18.திருமங்கலகுடி
19.கோணுல்லாம்பள்ளம்

#சிவகங்கை#
20.புதுவயல்

#திருவள்ளூர்(மேற்கு)#
21.பட்டாபிராம்
22. பாடி
23.நெற்குன்றம்
24.ஆழ்வார்திருநாகர்
25. அயப்பாக்கம்

#வேலூர்(கிழக்கு)#
26.ஆற்காடு

   #ஈரோடு#
27.அக்ரஹாரம்

    #தருமபுரி#
28.தருமபுரி


#வடசென்னை#
29.புதுபேட்டை
30.பெரியமேடு  31.கொருக்குப்பேட்டை (தெற்கு)
32.ஓட்டேரி
33.தாஷா மக்கான் -
34.பெரியார் நகர் -

#மும்பை#
35..தாராவி

36.துபை(துபை மண்டலம்)

# கோவை தெற்கு#
37.ஆனைமலை.

#கன்னியாகுமரி#
38. கன்னியாகுமரி.

#நெல்லை கிழக்கு#
39. ஜங்ஷன்.

#கர்நாடகா#.
40. மெஜஸ்டிக்.
41. முஸ்லிம் காலணி.
42. மைசூர்(பகுதி).
43. கே.ஜே.ஹல்லி.

#கரூர்#
44. தோட்டக்குறிச்சி.

#வேலூர் மேற்கு#

45. ரஹ்மதாபாத்


Thursday, June 08, 2017

முரளி முனுசாமிக்கு டிஎன்டிஜே பற்றி சில விளக்கங்கள்!

//தெரியாம தான் கேக்குறேன் பிஜே என்ன ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தலைவரா?? அவரை விமர்சனம் பண்ணா போலிஸ் பிடிக்குமா??//

//வருசம் முழுவதும் பாஜகவை விமர்சனம் செய்கிறேன். அப்போதெல்லாம் என்னை காவி என சொல்லாதவர்கள்
ததஜவ விமர்சனம் செய்தால் மட்டும் காவி என குறிப்பிடுவது ஏன்??
நண்பர்கள் இதற்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும்.//







கடந்த 30 ஆண்டுகள் முன்பாக தமிழகத்தில் முஸ்லிம்கள் கல்வி, இஸ்லாமிய சிந்தனை போன்றவற்றில் மிகவும் பின்தங்கியிருந்தனர்.  பில்லி சூன்யம், தர்ஹா வணக்கம், தட்டு தாயத்து என்று மதியிழந்து இதுதான் இஸ்லாம் என்று விளங்கியிருந்தார்கள். நான் கூட சிறிது சிறிதாக நாத்திகத்தின் பக்கம் சென்றேன். அந்த கால கட்டத்தில்தான் பிஜேயின் பிரசாரம் ஆரமபமானது. உண்மையான இஸ்லாம் என்ன என்பதை கிராமங்கள் தோறும் சொல்ல ஆரம்பித்தார். இதனால் அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஊர் முழுக்க அடி உதை விழுந்தது. லெப்பை குடி காட்டில் பள்ளி வாசலில் விவாதத்துக்கு கூப்பிட்டு 500 பேர் சேர்ந்து பிஜேயை அடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு இளைஞன் பிஜே யின் மேல் படுத்துக் கொண்டு அவருக்கு விழுந்த அடியை தன் மீது வாங்கிக் கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு அந்த இளைஞன் இறந்தே போனான். என்னையும் எங்கள் கிராமத்து பள்ளிக்கு தொழ வர வேண்டாம் என்று தடுத்தனர். எனது உறவினர்களும் எனது நண்பர்களும் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். பத்து ஆண்டுகள் இப்படியே சென்றது.

இதனிடையில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை பிஜே பல நகரங்களில் நடத்த ஆரம்பித்தார். கோவை கலவரத்தால் அந்நியப்பட்டிருந்த இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியால் இந்துக்களின் வெறுப்பிலிருந்து மீண்டார்கள். உண்மையான இஸ்லாத்தை அறிந்து கொண்ட பல இந்துக்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்றனர். அது இன்று வரை தொடர்கிறது.

முல்லாக்களின் பிடியில் சிக்கியிருந்த இஸ்லாமியர்களை அந்த முல்லாக்களோடு பல விவாதங்கள் நடத்தி முஸ்லிம்களை மீட்டெடுத்தது டிஎன்டிஜே. இன்று தமிழகத்தில் ரத்த தானத்தில் பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்து பலமுறை தமிழக அரசின் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது சவுதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளிலும் பல விருதுகளை பெற்றுள்ளது. உலகம் முழுக்க பல கிளைகளோடு சமூக பணிகளை செய்து வருகிறது. வளைகுடா நாடுகளில் இறந்து போன இந்து நண்பர்களின் உடல்களை அவர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று சேர்க்கும் பணியையும் செய்து வருகிறது. தீயினால் குடிசைகள் எரிந்து அனாதரவாக நின்ற பல இந்து குடும்பங்களை தேடிச் சென்று அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை இன்று வரை செய்து வருகிறது. தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி மாற்று மத மக்களும் பலன் பெற தன்னலம் மறந்து சேவையாற்றி வருகிறது.

கல்வி உதவி தேவைப்படும் குடும்பங்கள் அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்களை தேடிச் சென்று கல்வி உதவிகளை அளித்து வருகிறது. எங்கள் கிராமத்தில் ஒரு இந்து குடும்பத்துக்கு டிஎன்டிஜே சார்பாக கல்வி உதவி கொடுத்து இன்று அந்த குடும்பம் சிறந்த நிலையில் உள்ளது.

கோவை கலவரத்தால் வெறுப்புற்று தீவிரவாதத்தை நோக்கி சென்ற பல இஸ்லாமிய இளைஞர்களை அழைத்து இஸ்லாம் போதிக்கும் கட்டளைகளை அவர்களுக்கு விளக்கி அவர்களை நேர்வழிப்படுத்தியுள்ளது டிஎன்டிஜே. அதன் நீட்சியாகத்தான் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் முதல் ஆட்களாக டிஎன்டிஜே யின் இளைஞர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

சென்னையில் விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் வெள்ளக் காடானபோது தங்கள் உயிரை பணயம் வைத்து இந்து மக்களை காப்பாற்றி கரை சேர்த்தது டிஎன்டிஜே. மழை நீர் வற்றிய பிறகு  சென்னையே துர் நாற்றத்தால் நாறிக் கிடந்தது. அரசும் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்றது. அந்த இடத்திலும் கைகளிலும் கால்களிலும் உறைகளை மாட்டிக் கொண்டு டிஎன்டிஜே இளைஞரணி தொண்டர்கள் களமிறங்கி சென்னையை சுத்தப்படுத்தினர். அவ்வாறு சுத்தப்படுத்தும் போது அவர்களுக்கு கிடைத்த நகைகளையும், பணத்தையும் உரியவர்களிடம் சேர்ப்பித்தது டிஎன்டிஜே. மலத்தையும் குப்பை கூளங்களையும் அள்ளிய அந்த இளைஞர்கள் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகள். கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள இளைஞர்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் குர்ஆனின் கட்டளையை செயல்படுத்தினர்.

முன்பெல்லாம் இஸ்லாமிய இளைஞர்கள் கல்லூரியை தொடுவது அரிது. கடந்த 30 ஆண்டுகளாக படிப்பின் அவசியத்தையும் அரசு வேலைகளை பெற வேண்டியதன் அவசியத்தையும் கிராமம் கிராமமாக கொண்டு சென்றது டிஎன்டிஜே. கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் மாறி மாறி  பேச்சு வார்த்தை நடத்தி 3.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது. இதனால் இன்று முஸ்லிம்கள் பல அரசு வேலைகளை சிரமமின்றி பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதனால் பலன் பெறுகின்றனர்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை தனி ஒரு அமைப்பாக நின்று தன்னலமற்று செயல்பட்டு வரும் ஒரு அமைப்பை எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் கூறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம் வராதா? என்னைப் போன்றவர்கள் இது வழக்கமான ஒன்று என்று கடந்து சென்று விடுவோம். ஒரு சில இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். அது போன்றவர்களை இனம் கண்டு தலைமை கண்டிக்கிறது. இவ்வாறு ஆபாச அர்ச்சனைகள் பண்ணுபவர்களை அடையாளப்படுத்தி தலைமைக்கு தெரிவியுங்கள். அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக டிஎன்டிஜேயையும் அதன் தலைமையையும் அதன் செயல்பாடுகளையும் ஆதாரமின்றி விமரிசிப்பது நல்லதல்ல. பல முறை அவசரப்பட்டு டிஎன்டிஜே யை குறை கூறி பதிவிட்டு நாங்கள் ஆதாரங்களை தந்தவுடன் அந்த பதிவுகளை நீக்கியிருக்கிறீர்கள், மன்னிப்பும் கேட்டுள்ளீர்கள். எனவே எது ஒன்றையும் பதியும் முன் யோசித்து பதிவது உங்களைப் போன்றவர்களுக்கு நல்லது என்பதை உங்களின் நெடுநாளைய முகநூல் நண்பன் என்ற உரிமையில் சொல்லிக் கொள்கிறேன்.

https://www.youtube.com/watch?v=GE3tIuTOHy0

https://www.youtube.com/watch?v=p4Br3GSXPTU

https://www.youtube.com/watch?v=yq0XS3sqZVc

https://www.youtube.com/watch?v=XCctTkiXJxU

https://www.youtube.com/watch?v=BQoseJGq_tY








Sunday, January 03, 2016

இரத்த தானம் - இந்துக்கள் அதிகம் கலந்து கொண்டனர்







மதுரை மாவட்டம் சுப்ரமணியம் புரம் கிளை சார்பாக தற்போது இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமியரை விட அதிகம் இந்து மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் நாடு தவ்ஙீத் ஜமாத் என்ற அமைப்பானது தற்போது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல. இந்து கிருத்தவர்களுக்கும் சொந்தமான அமைப்பாக மாறி விட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Monday, December 28, 2015

விபத்தில் இறந்தவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது!

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து அப்பாவிகள் மீது பள்ளிவாசலுக்குள் தடியடி நடத்திய காவல் துறையினரைக் ...

Posted by Nazeer Ahamed on Monday, December 28, 2015

மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து அப்பாவிகள் மீது பள்ளிவாசலுக்குள் தடியடி நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த நசீர் அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரான நசீர் அவர்களின் குடும்பம் அவருக்குப் பின் சிரமப்படக் கூடாது என்பதற்காக கொள்கைச் சகோதரர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிதி திரட்டியது.

அவருக்கு சொந்த வீடு இல்லாதைக் கவனத்தில் கொண்டு அவரது குடும்பம் சொந்த வீட்டில் குடியிருக்க ஒரு வீடும், வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தவும் உதவும் வகையில் மூன்று வீடுகள் கட்டி ஓரிரு வாரங்களில் நசீரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அந்த வீட்டின் வீடியோவைத் தான் நீங்கள் காண்கிறீர்கள்.

இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய்களாகும்.

அடையாளத்துக்காக சில ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து விட்டு ஓயாமல் தூர நோக்குடன் சிந்தித்து நல்ல ஏற்பாட்டைச் செய்திருப்பது இந்த ஜமாஅத்தின் பொறுப்பான செயல்பாட்டுக்கு ஆதாரமாகும்.

போராட்டத்துக்கு அழைத்த உடன் அறிக்கை மூலம் அனுதாபம் தெரிவித்து உயிரிழந்தவரை மறந்து விடாமல் அவரது குடும்பத்தாருக்கு வாழ்வாதார ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்கு உரியது....

Saturday, December 19, 2015

தவ்ஹீத் ஜமாத் தலைவர் அல்டாஃபியின் பேட்டி!


Wednesday, December 02, 2015

TNTJ சார்பாக சென்னை மீட்பு பணிக்கு - திருவாரூர்

திருவாரூர் மாவட்ட TNTJ சார்பாக சென்னை மீட்பு பணிக்கு மாவட்ட தலைவர் தலைமையில் முதல் குழு புறப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்....