Followers

Tuesday, August 04, 2009

பன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு என்ன?



உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவும் தப்பவில்லை. புனேயைச் சேர்ந்த ரீடா ஷேக் என்ற 11 வயது சிறுமி தனது உயிரை இக் கொடிய நோயினால் இழந்துள்ளார். ஒரு உயிர் இழப்புக்கு பின்புதான் நமது நாடு தற்போது சுதாரித்துக் கொண்டிருக்கிறது. சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால்தான் இச்சிறுமியின் உயிர் பிரிந்தது என்று அரசு அறிக்கை கூறுகிறது. விமான நிலையத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் டாக்டருக்கும் இந்நோய் தொற்றியுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கிட்டதட்ட 500 பேருக்கு இந்நோயின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது போன்ற நிலைகளில் நாம் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதைப் பார்ப்போம்.

'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது கொள்ளை நோய் பரவி விட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்க்காக அவ்வூரை விட்டு வெளியேறாதீர்கள்.' என்று முகமது நபி கூறினார்.

-முகமது நபி சொல்லக் கேட்டவர் நபித் தோழர் அப்துல்லாஹ் பின் ஆமிர்.
-ஆதார நூல் புகாரி, எண் 5973

இதிலிருந்து நாம் அறிவது ஒரு நாட்டில் தொற்று நோய் பரவி விட்டதாக கேள்விப் பட்டால் அந்நாட்டிற்க்குப் பயணிக்காமல் இருக்க வேண்டும். அடுத்து நாம் இருக்கும் ஊரில் தொற்று நோய் பரவி விட்டால் நோய்க்கு பயந்து வெருண்டோடக் கூடாது என்றும் விளங்குகிறோம். ஏனெனில் நம்மையறியாமல் நம்மை அந்த நோய் தாக்கியிருந்தால் அதை மற்றவருக்கு பரப்பும் காரணியாகவே நாம் ஆகி விடுகிறோம்.

முகமது நபி ஒரு மார்க்க அறிஞராக மட்டும் இல்லாமல் மக்கள் நலனிலும் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். இதே முகமது நபியின் பெயரை பயன்படுத்தி தாலிபான்களும், பாகிஸ்தானிய தீவிரவாத குழுக்களும் நடத்தும் கூத்துக்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் இந்த மடையர்கள்(பாகிஸ்தானிய தீவிரவாதிகள்) உண்மையான இஸ்லாத்தை சரிவர விளங்காததே!

6 comments:

கோவி.கண்ணன் said...

//இதே முகமது நபியின் பெயரை பயன்படுத்தி தாலிபான்களும், பாகிஸ்தானிய தீவிரவாத குழுக்களும் நடத்தும் கூத்துக்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் இந்த மடையர்கள்(பாகிஸ்தானிய தீவிரவாதிகள்) உண்மையான இஸ்லாத்தை சரிவர விளங்காததே! //

இப்படியும் எழுதுவதற்கு பாராட்டுகள் !

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//இப்படியும் எழுதுவதற்கு பாராட்டுகள் !//

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக மீடியாக்கள் மூலம் தொடர்ந்து ஒரு தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. உண்மையில் மற்ற இனத்தவரை விட முஸ்லிம்களே பாகிஸ்தானியரை அதிகம் வெறுக்கின்றனர். இதை நேரிடையாக சவுதியில் பார்த்தும் இருக்கிறேன். இன்று முஸ்லிம்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின் தங்கி இருப்பதற்கு மூல காரணமே பாகிஸ்தான் பிரிவினைதான். நாடு பிளவுபடாமல் இருந்திருந்தால் பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்த முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு இன்று வரை கிடைத்து வந்திருக்கும். சமூக நீதியும் காப்பாற்றப் பட்டிருக்கும்.

இந்திய முஸ்லிம்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டாது தான் சுகமாக வாழ்ந்தால் போதும் என்று பிரிந்த பாகிஸ்தானியரின் மேல் இந்திய முஸ்லிம்களுக்கு எப்படி பரிவும் பாசமும் வரும். மேலும் தான் பிறந்த மண்ணை நேசிப்பது என்பது அந்த மனிதனுக்குள்ளேயே ஊறிய ஒரு உணர்வு. இது மதங்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டது என்பதையும் நாம்நினைவில் கொள்ள வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

//நாடு பிளவுபடாமல் இருந்திருந்தால் பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்த முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு இன்று வரை கிடைத்து வந்திருக்கும். சமூக நீதியும் காப்பாற்றப் பட்டிருக்கும். //

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தான் - பங்களாதேஷ் பிரிவினை ஆகியவை மதம் சார்ந்தவை என்றாலும் அவை இன ரீதியான பிரிவினையாகத்தான் நடந்தது. எனவே இந்திய இஸ்லாமியர் அனைவருமே அவர்களுக்கு ஆதரவான நிலை எடுப்பதற்கு வலுவான காரணம் எதுவுமே கிடையாது

R.Alamsha Karnan said...

Hi Suvanapriyan

If you like, you can translate this in Tamil and publish it. Thanks.
---------------------------
Undivided India:

Total population = 1.55 billion.

Muslims = 600 million
Low caste Hindus = 600 million
High caste Hindus = 200 million
Christians, Sikhs and Others = 150 million

Half Partition:

Undivided India will be controlled by Muslims. Because Jinnah+Ambedkar+Jesus would have easily joined hands and would have pushed Brahmins out.

Nehru realised this threat and hence wanted Muslims out. But the problem is, India without Muslims, Hindus will kill Hindus and again Brahmins will have no place to hide.

So he decided half partition with Lord Mountbatten and kept 50% Muslims as a shield between 15% highcaste and 85% low caste. Brahmins are hiding behind Muslims. No Muslims, No Brahmins. Simple.

Can someone disprove this theory?.

suvanappiriyan said...

திரு ஆலம்சா கர்னன்!

//Nehru realised this threat and hence wanted Muslims out.//

நேருவோடு சேர்த்து நம் குலக்கல்வி புகழ் ராஜாஜியையும், வல்லபாய் பட்டேலையும் மறந்து விட்டீர்களே! முஸ்லிம்களின் பெரும்பான்மையை குறைத்ததில் ராஜாஜிக்கும்,பட்டேலுக்கும் நிறைய பங்குண்டு. ஆனால் நாடு பிரிக்கப்பட்டதில் ஜின்னாவை மட்டுமே பலரும் குறை கூறுவர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

"அன்று அனுமன்; இன்று ராவணன்' :

பா.ஜ., கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:புத்தகம் எழுதியதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது. இந்திய அரசியலில் இந்த நாள் ஒரு துயரமான நாள். என் புத்தகத்தை படிக்காமலேயே பா.ஜ., தலைவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புத்தகம் தொடர்பாக காங்கிரஸ் விமர்சித்தால் சரி; ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இணைந்திருந்த பா.ஜ., கட்சி என்னை நீக்கியது வியப்பளிக்கிறது. என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிய விவரத்தை, ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.என் தரப்பு நியாயத்தை அறிய கட்சி தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. இதுநாள் வரை பாரதிய ஜனதா கட்சியின் அனுமன் என, என்னை மீடியாக்கள் விமர்சித்தன. ஆனால், இன்று நான் அந்தக் கட்சிக்கு ராவணனாகி விட்டேன். கடந்த 1977ம் ஆண்டில் ராணுவப் பணியை விட்டு, நாட்டுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன்.புத்தகம் எழுதியதன் மூலமாக, இந்தியாவுக்கு எதிராக நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. புத்தகம் எழுதியதற்காக நான் வருந்தவில்லை. அது என்னுடைய ஐந்தாண்டு கால கடின உழைப்பில் உருவானது. என் அரசியல் பயணம் தொடரும்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

ஜின்னாவால் 2வது முறையாக பாரதிய ஜனதாவில் சர்ச்சை : புதுடில்லி : பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா விவகாரத்தால், பா.ஜ., கட்சியில் சர்ச்சை ஏற்படுவது இது இரண்டாவது முறை.கடந்த 2005ம் ஆண்டில், பாகிஸ்தான் சென்றிருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அங்கு ஜின்னாவைப் பற்றி புகழ்ந்து பேசினார். "அவர் ஒரு மதச்சார்பற்ற தலைவர்' என்று, பாராட்டினார். இந்த விவகாரம் அப்போது பா.ஜ., கட்சியில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனால், அத்வானி தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இம்முறை ஜின்னாவை புகழ்ந்ததன் மூலம் ஜஸ்வந்த் சிங் பாதிக்கப்பட்டுள்ளார். பாக்., உருவாவதில் நேரு பங்கு அதிகம் என்றதுடன், சர்தார் படேலையும் குறைத்து அந்த நூலில் எழுதியிருக்கிறார்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாரதிய ஜனதா தலைமையில் மத்தியில் அமைந்த அரசுகளில் ராணுவம், நிதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பின்னணி எதுவும் கிடையாது. ம.பி.,யில், குவாலியர் மகாராணியின் ஆலோசகர் ஆங்கரே என்பவருக்கு நெருக்கமானவர் என்ற முறையில் பா.ஜ.,வில் சேர்ந்தார். ஆனால், வாஜ்பாய்க்கு மிகவும் வேண்டியவராக இருந்தார். ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார்கில் உள்ள ராஜ குடும்பத்தில், 1938 ஜனவரி 3ம் தேதி பிறந்த ஜஸ்வந்த் சிங், 1967ம் ஆண்டு வரை ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். பின்னர் அரசியலுக்கு வந்தார்.
-Dinamalar