Followers

Monday, November 30, 2015

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு உண்மையிலேயே அவமானம் ஏற்பட்டதா?



கர்நாடக திரையரங்கினுள் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து மரியாதை செய்யாத இஸ்லாமிய தம்பதியினர் அரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனரர். தியேட்டரில் தேசிய கீதத்தை போடலாமா? அதற்குரிய மரியாதை கிடைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நம்ம ஆர்எஸ்எஸ் அரை டவுசர்களுக்கு சிந்திக்கும் திறன் முதலில் இல்லை. இஸ்லாத்தை கொச்சைபடுத்த ஏதாவது காரணத்தை தேடி அலைந்து கடைசியில் அவர்களுக்கு கிடைத்த ஒன்றே இந்த நாடகம். ஆர்எஸ்எஸ் அரை டவுசர்களுக்கு தேசப் பற்று என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தலித்களையும் இஸ்லாமியர்களையும் கிருத்தவர்களையும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடிப்பவர்களிடம் தேச பக்தி குடி கொண்டிருக்குமா... கண்டிப்பாக இருக்காது.

சரி.... அது ஒரு பக்கம் இருக்கட்டும். வங்காள மொழியில் உள்ள நமது தேசிய கீதம் அப்படி என்னதான் சொல்கிறது என்ற அர்தத்தையும் பார்போம்.

" Victory to thee, O ruler of the minds of the people,- ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

O Dispenser of India's destiny. - பாரத பாக்ய விதாதா.

Thy name rouses the hearts of Punjab, Sindh, பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா

Gujarat and Maratha,

Of the Dravida, Odisha and Bengal; - திராவிட உத்கல வங்கா.

It echoes in the hills of the Vindhyas and Himalayas, - விந்திய இமாச்சல யமுனா கங்கா

mingles in the music of Yamuna and Ganges and is உச்சல ஜலதி தரங்கா.

chanted by the waves of the Indian Sea. தவ ஷுப நாமே ஜாகே

We get up with your blessed name on our lips தவ ஷுப ஆஷிஷ மாகே,

We pray for your auspicious blessings காஹே தவ ஜெய காதா.

Thou dispenser of India's destiny - ஜன கண மங்கள தாயக ஜெயஹே

Victory, victory, victory to thee." - ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

'மக்கள் மனதில் வீற்றிருக்கும் ஆட்சியாளரே! உமக்கு வெற்றி நிச்சயம்!

இந்திய நாட்டின் விதியை நிர்ணயிப்பவரே!

பஞ்சாப் சிந்து குஜராத் மற்றும் மராட்டிய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவரே!

உங்கள் மீது வைத்த அன்பானது விந்திய மற்றும் இமய மலைகளின் அடிவாரங்களில் எதிரொலிக்கிறது.

யமுனை மற்றும் கங்கை நதிகளும் இந்திய கடல் அலைகளும் இதனையே முழக்கமிடுகின்றன.

உம்முடைய பெயரை கேட்ட மாத்திரத்திலேயே எங்கள் உதடுகள் உம்மை ஆசீர்வதிக்கின்றன.

இந்தியாவின் விதியை நீங்களே நிர்ணயிப்பவர்..

உங்களுக்கு வெற்றி நிச்சயம்... வெற்றி நிச்சயம்.... வெற்றி நிச்சயம்'


இதுதான் நமது தேசிய கீதத்தின் உண்மையான பொருள். ஆங்கில மொழியாக்கம் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வின் தளத்திலிருந்து எடுத்தது. அதனை தமிழில் மட்டுமே நான் மொழி பெயர்த்துள்ளேன்.

1. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணி மேரியும் 1911 ஆம் ஆண்டு இந்தியா வருகை தந்த போது அவரை வரவேற்க எழுதப்பட்ட பாடல்தான் நமது தேசிய கீதம்.

2. இந்த பாடலில் நமது நாட்டின் சிறப்பு எதுவும் எடுத்தாளப்படவில்லை.

3. 'பாரத பாக்ய விதாதா' - அன்றைய இந்தியாவின் சட்டங்களை நிர்ணயித்தவர்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.

4. 'அதி நாயக்' என்ற வார்த்தையை கடவுளுக்கும் பயன்படுத்தலாம் நாட்டை ஆள்பவருக்கும் பயன்படுத்தலாம்.

5. இந்த பாடலானது முதன் முதலாக இந்தியாவில் பாடப்பட்டது டிசம்பர் 1911 ஆம் ஆண்டு. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் முதன் முதலாக இந்த பாடல் பாடப்பட்டது. இந்த மாநாடே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காக கூட்டப்பட்டது. 1905 ஆம் ஆண்ட பெங்காளை தனி மாகாணமாக பிரித்ததற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பாடப்பட்டதே இந்த பாடல்.

6. பின்னர் 1937 ஆம் ஆண்டு இந்த பாடல் மேலும் பிரபலப்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் தங்களை புகழ்ந்து பாடும் இந்த பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நம்மை அடக்கி ஆண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழ்ந்து பாடிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாக முறுக்கோடு பாடிக் கொண்டிருக்கிறோம்.

7. இந்த பாடல் எழுதப்பட்டபோது சிந்து நம்மோடு இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானோடு சென்று விட்டது. அந்த சிந்து மாகாணத்தையும் நாம் ஒவ்வொரு முறையும் வாழ்த்துகிறோம். இதுவாவது இந்த அரை டவுசர்களுக்கு தெரியுமா என்ற விபரம் நம்மிடம் இல்லை. :-)



1 comment:

Elambodhi said...

தமிழ் மொழி பெயர்ப்பு எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது. எனக்கு இது புதிய தகவல் நன்றி