உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. - சீமான்
யார் தமிழர் யார் தமிழர் இல்லi என்று பிரித்துக்காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்?
சீமானுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றே நினைக்கிறேன். உருது பேசும் முஸ்லிம்கள் முன்பு பட்டாண் என்ற ஊரில் மதக் கலவரம் வெடித்த போது தமிழகத்தில் வந்து குடியேறியர்கள். எனவேதான் பட்டாணி என்று அவர்களை சொல்வது வழக்கம். மொகலாயர் ஆட்சியில் மேலும் பல உருது முஸ்லிம்கள் தொழில் காரணமாக இடம் பெயர்ந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். பல தலைமுறைகளாக தமிழகத்தில் இருந்து இந்த மண்ணின் மைந்தனாகவே மாறி விட்டவர்களை 'தமிழர்கள் அல்ல' என்று இனம் பிரிப்பது எதற்காக?
இவரது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மலையாளிதானே... பிரபாகரனின் தாய் தந்தை கேரள மலையாளிகள் என்பது அனைவருக்கும் தெரியுமே? ஒரு மலையாளிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?
முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை எப்படி ஆளலாம் என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?
வை.கோபால்சாமியின் பூர்வீகமும் தெலுங்கு என்று சொல்கின்றனரே? அவரை பார்த்து இந்த கேள்வியைக் கேட்டாரா சீமான்?
பார்பனர்களின் தாய் மொழி சமஸ்கிரதம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் குடியேறியர்கள். இன்று தமிழையும் நன்றாக படித்து இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆகி விட்டனர். பார்பனர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?
கருணாநிதி, மற்றும் விஜயகாந்த் முன்னோர்களை எடுத்துப் பார்த்தால் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் என்கின்றனர். கலைஞரையும், விஜயகாந்தையும் தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?
மொழி என்பது மனிதன் இன்னொரு மனிதனோடு உரையாட உறவாட இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அதனை ஆக்கபூர்வமாக சிந்தித்து தமிழ் மொழியை எவ்வாறு மேலும் சிறப்பாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது நமது முன்னோர் வாக்கல்லவா?
மொழிப் பற்று இருக்கலாம்: அதுவே மொழி வெறியாக மாறினால் சீமானைப் போல் உளருவாயன்களாக திரிய வேண்டியதுதான்.
ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.
- நூல்: அஹ்மத்
5 comments:
யார் தமிழர் யார் தமிழர் இல்லi என்று பிரித்துக்காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்?தமிழர்கள் அல்ல' என்று இனம் பிரிப்பது எதற்காக?
யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது நமது முன்னோர் வாக்கல்லவா?
காபீா் என்ற சொல்லைக் கொண்டு உலகில் ஜனத்தொகையை பெரும் அளவில் குறைத்துக் கொண்டிருக்கும் அ ரேபிய மத வாதிக்கு யாதும் ஊரே யாவரும் கேளீா் என்ற பொன்மொழி நினைவுக்கு வந்துள்ளது ஆச்சாியமே ! காபீா்கள் தங்களுக்கு கேளீரா ? என்றாவது தங்களது செயல்பாட்டில் அப்படி நடந்ததுண்டா ? காபீா்எ ன்று பட்டம் கட்டி பிடறியில் வெட்டுவதுதானே நமது அதாவது அரேபிய பண்பாடு.
தங்களின் முந்தைய கட்டுரைகளில் முகம்மது அலி ஜின்னாவின் கடிதங்களில் ஆாியா்-திராவிடா் என்று மனம் போல எழுதி இனவெறியை தூண்டி மனிதமனங்களில் பகைமை தீயை மூட்டி அடாவடித்தனம் செய்தீா்களே! என்று யாதும் ஊரே யாவரும் கேளீா் என்ற முன்னோா் வாக்கு நினைவுக்கு வரவில்லையா ? ஏன்
சங்கப்பாிவாா் அல்லாத ஒருவன் -சீமான் - தமழகத்தில் இளைஞா்களின் கூட்டத்தை கொண்டவன் இப்படி பட்டாணி முஸ்லீம்கள் தமிழா்கள் அல்ல என்றவுடன் அரேபிய விசுவாசம் பிய்த்துக் கொண்டு வந்து விட்டது தங்களுக்கு . உருது எதற்கு பயன்படும் ? பாக்கிஸ்தானின் தேசிய மொழி. அந்த அசிங்கத்தை தொலைத்து விடுவதுதானே தமிழ்நாட்டில் வாழும் உருது பேசும் மக்களுக்கு நன்மை . தமிழ் ஆங்கில் ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் தோ்ச்சி பெற வேண்டியதுள்ளது. அதில் உருது என்பது வீண் சுமை.
நீங்கள் மேற்கோள் காட்டும் குரான் வசனம் போர் பற்றியது அந்த வசனங்களை நன்றாக அறிவை கொண்டு படிக்கவும் , காபிர்கள் போரை விரும்பினால் போரையும் சமாதானத்தை விரும்பினால் சமாதானத்தையும் கொடுக்க சொல்லி தெளிவாக உள்ளது , இது செட்டு ஆட்டத்தில் தொற்றுபோனதுக்கு 30 லட்சம் உயிர்களை கொன்ற கடவுள்|(?) கிருஷ்ணன் கதை அல்ல , 8000 சமணர்களை கழுமரம் ஏற்றி சைவர்கள் வரலாறு அல்ல , பல சமண புத்த கோவில்களை இடித்து ஹிந்து கோவிலகளான வரலாறு இல்லை , குறை குடம் கூத்தாடும் பத்தி கிணறு தாண்டியவன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அரை வேக்காடு அன்புராஜ் புரியட்டும்
வாஜ்பாயி போன்ற தேச விரோதிகளுக்கு மன்னிப்ப்பு கடிதம் எழுத உருது பயன்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
உருது பேசக்கூடிய முஸ்லிம்களே தங்கள் தாய்மொழி உருதுதான் எனத்தெரிவிக்கிறார்கள்,தமிழை தாய்மொழியாக கொன்ட நமது இஸ்லாமிய சொந்தங்கள் தான் ஒரு தமிழ் முஸ்லிம் என்றே அடையாளப்படுத்துகிறார்கள் ....இங்கே நியாயம் பேசக்கூடியவர் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்த காரணம் ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்த காரணம் எது என்பதை தெளிவுப்படுத்தவும்
கரைட் அப்போ கொல்டி தெலுங்கனுகலு தமிழனாக வரமாட்டானா அப்போ சிலவருடமுன் பிறிந்த மலையாலி தமிழன்னு வரமாட்டானா அப்படில பாத்தா உலக மக்கல் அனைவரு தமிழராதா இருப்பா அதர்க்காக அவனையு தமிழனாக ஏற்று கொல்லமுடியும் அப்படி அல்ல எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினு அயாலன் அயலானே அப்போ நான் அமேரிக்கா போய் பலநால் வாழ்ந்தால் நான் அமேரிக்க டிரம்புக்கு சொந்த காரனா ஆயிருவேனோ நீங்கலே குறிபிடுறிங்க பட்டணா வடக்கே இருந்து வந்து குடியேறியவர்கள் என்று சீமான் எந்த காலம் கலைங்கர் ஜெ விஜயகாந் வைக்கோ வட ஆரிய பிராமணரை தெலுங்கனை தமிழன்னு சொலிருக்காரு அவர்கலை இன்று அலவு வந்தேரிகல்னே சொல்லிதானே அரசியலே பன்னிட்டு இருக்கோம் சேரி பிரபாகரண் எப்போ மலையாழி ஆனார் அடேய் ஏன்டா இப்படி அவர் சைவ வெள்ளா தமிழ் குடி
Post a Comment