//சிம்பிளாக ஒரு கேள்வி....
Nazeer Ahamed
நான் இந்தியன்.......
எனக்கு என் மதநம்பிக்கை பெரியதா?... இந்திய தேசியம் பெரியதா என்ற கேள்வி வந்து ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படுமாயின்.....
அதாவது இந்தியாவில் மதநம்பிக்கை என்பது தடை செய்யப்படுமாயின்....
நான் என் மத நம்பிக்கைகளை தூர வீசிட்டு இந்திய தேசியத்தைதான் தேர்ந்தெடுப்பேன்.....
நீங்கள் எப்படி?...
உங்கள் மத நம்பிக்கையை துறந்துவிட்டு இந்திய தேசியத்தை தேர்ந்தெடுக்க உங்களால் முடியுமா?....//
-Ram Nivas
முதலில் இந்திய தேசியம் என்றால் என்ன? அது எவ்வாறு இருக்கும்? அதன் அடிப்படை என்ன? யாரெல்லாம் அதில் கோலோச்சுவார்கள் என்பதை முதலில் தெரிந்து கொண்டுதான் இதற்கு விடையளிக்க முடியும்.
இவ்வாறெல்லாம் மத சுதந்திரத்துக்கு தடை போட இந்தியாவில் எந்த சாத்தியதையும் இல்லை. பார்பனர்கள் மட்டுமே இந்துத்வாவுக்கு கொடி பிடிப்பர். மற்ற 80 சதவீதமான பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித் மக்கள் இந்துத்வாவை ஓட ஓட விரட்டுவதில் முன்னணியில் இருப்பார்கள். சமீபத்தில் பீஹாரில் அதனைத்தான் கண்டோம். அந்த மக்களுக்கு இஸ்லாமியரும், கிருத்தவரும், சீக்கியர்களும் துணை நிற்பர்.
ஒருகால் ராம் நிவாஸ் சொல்வது போல் இந்தியாவில் மதம் மார்க்கம் தடை செய்யப்படுமாயின் அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வையும் காண்போம்.
முதலில் அரசுக்கு மதம் மற்றும் மார்க்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி சாத்வீக முறையில் போராட்டங்களை நடத்த வேண்டும். அமைதி முறை சரி வரவில்லை என்றால் அரசுக்கு எதிராக ஆயுதங்களை எடுக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டம் பண்ணும் அளவுக்கு வசதியும் வாய்ப்புகளும் இல்லை என்றால் நாட்டை துறந்து எந்த நாடு இஸ்லாமிய மார்க்கத்தை கடை பிடிக்க அனுமதிக்கிறதோ அங்கு சென்று விட வேண்டும். இது கடைசி நிலையே...
ஆனால் எனது நாடான இந்தியாவில் இப்படியான ஒரு நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே இப்படியான ஒரு சிந்தனைக்கு அவசியமும் இல்லை.
ராம் நிவாஸ் வெகு சுலபமாக மதத்தை உதறி விட்டு வரலாம். அதனை இந்து மதமும் அனுமதிக்கும். ஆனால் இஸ்லாம் அதனை அனுமதிக்காது. இஸ்லாமிய மார்க்கமில்லாது ஒரு முஸ்லிம் இந்த உலகில் நிம்மதியாக வாழ்ந்து விடவும் முடியாது. சகல சுதந்திரத்தையும், சகல இன்பங்களையும் இஸ்லாமிய மார்க்கத்தால் அனுபவித்து வரும் நான் எவ்வாறு எனது மார்க்கத்தை கை கழுவ முடியும்?
2 comments:
வீண் வெட்டி வேலை என்பாா்களே ஆது இதுதான்.
ஆம் , வேதத்தை பற்றி தெரியாமல் கல்லை கடவுள் என்றும் கூறுபவருக்கு இது முட்டாள் தனம் தான்
Post a Comment