Followers

Sunday, September 23, 2018

பஞ்சாப் - காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும் வெற்றி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதேபோல், 150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு 2351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மோடி அமீத்ஷா திருட்டு கும்பலுக்கு பஞ்சாபிலிருந்து இறங்கு முக சிக்னல் கிடைத்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி 10 சதம் கூட வாக்குகளை பெறாதது வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம். இந்த மாற்றம் இந்தியா முழுக்க பரவ வேண்டும். பாஜக என்ற இந்த தேச விரோத கும்பல் இந்த நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும்.


1 comment:

ASHAK SJ said...

வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி ஆட்சியைப்பிடித்துவிட்டு, பார்ப்பனர் மற்றும் காற்பரெட்டு நலனுக்காக சாதாரண மக்களை கொலைசெய்வதைத்தான் இந்த அரசு செய்து வருகிறது