Followers

Thursday, August 19, 2021

தாலிபான்களை கண்டு ஆப்கானிஸ்தான் மக்கள் பயப்படுகிறார்களா?

 தாலிபான்களை கண்டு ஆப்கானிஸ்தான் மக்கள் பயப்படுகிறார்களா?

****************

இன்று பெரும்பாலான ஊடகங்கள் சில போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தாலிபான்கள் கைவசம் ஆப்கானின் ஆட்சி அதிகாரம் வந்த காரணத்தினால் ஆப்கான் மக்கள் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற அபத்தமான அவதூறு செய்தியை பரப்புகிறார்கள்.


உண்மையில் ஆப்கானிஸ்தானை விட்டும் வெளியேறும் மக்கள் யார் ?


மூன்று பிரிவினர்கள் ஆப்கானை விட்டு வெளியேறுகிறார்கள்.

1, அமெரிக்காவின் ராணுவ வீரர்கள்.

இவர்கள் தாலிபான்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

நாங்கள் உங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறோம்.நாங்கள் வெளியேறும் வரை எங்களை தாக்குவதோ, தடுத்து நிறுத்துவதோ கூடாது.நாங்கள் வெளியேறிய பின் நீங்கள் ஆட்சி அமைப்பதற்கு தடையாக நாங்கள் இருக்க மாட்டோம். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட தாலிபான்கள் அமெரிக்க ராணுவ வீரர்களை தாக்கவில்லை.


2, இரண்டாவது கடந்த இருபது வருடமாக அமெரிக்காவின் ராணுவத்திற்கும், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்ட ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக, உதவியாக இருந்த ஆப்கான் மக்கள். இவர்கள் தாலிபான்களுக்கு விரோதிகள் அல்ல.மாறாக துரோகிகள். துரோகம் செய்த மக்கள் தாங்கள் செய்த துரோகத்திற்கு தண்டனை கிடைக்கும் என்று அஞ்சுவதும், ஓடி ஒளிவதும் இயற்கை தானே. எனவே இவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். தாலிபான்களும் விரோதிகளை( அமெரிக்கர்களை) மன்னித்து வழிவிட்டு ஒதுங்கி கொண்டார்கள். துரோகிகளை தேடிப்பிடித்து தண்டிக்கிறார்கள்.


3, மூன்றாவது தாலிபான்கள் விரும்பும் இஸ்லாமிய ஷரீஅத் ஆட்சியை விரும்பாதவர்கள். இவர்கள் தங்கள் மனோஇச்சை பிரகாரம் சுகபோகமாக வாழ்ந்து பழகியவர்கள். மேற்கத்திய கலாச்சாரத்தை, நவீன நாகரீகத்தை விரும்பக்கூடியவர்கள். தாலிபான்கள் ஆட்சி அமைந்தால் நாம் விரும்பும் உல்லாச வாழ்க்கை வாழ முடியாதே என்பதை நன்கு விளங்கி இடம்பெயரும் மாடல் முஸ்லிம்கள்.


இந்த மூன்று பிரிவினரை தவிர்த்து பணிநிமித்தமாக அங்கே தங்கி வேலை செய்யும் அயல்நாட்டு மக்களும் தங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்குமா? என்ற ஐயப்பாட்டுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆசைப்படுகிறார்கள்.


ஆனால் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய வாழ்வியல் வழிமுறைகளை விரும்பக்கூடிய பெரும்பாலான ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்பது மட்டுமல்ல.தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும், உற்சாகத்துடனும் இருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை.


உண்மை சிலருக்கு கசக்கத்தானே செய்யும். கசக்கட்டும். கசக்கட்டும்.



6 comments:

vara vijay said...

Is it so suvi, then why dont you arrange a tour and visit AFGANISTAN.

suvanappiriyan said...

எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். எவருடைய ஆலோசனையையும் கேட்கவில்லை :-)

Dr.Anburaj said...

இசுலாம் ஒரு மனநோய். அது பிடித்தவனுக்கு தன்மனநோய்ககு ஆளாகியிருப்பது விளங்காது. அவனுக்கு மனித உரிமைகள் விளங்காது.ஜனநாயகம் என்பது விளங்காது. தலிபான்களை மத காவலா்களாக விரும்புகிறாா். சுவனப்பிரியன்.
ஆட்சி முறையில் ஜனநாயகத்தை கடைபிடிக்க மாட்டோம் என்ற தலிபான்களது கருத்தை இந்தியாவில் மோடிஜி நடைமுறைபடுத்தினாால் ஏற்க மாட்டாா்.இதுதான் பச்சை துரோகம்.பகல் வேசம்.

நாட்டி்ல் ஜனநாயகம் இல்லை யென்றால் தலைமை மாறும் போது பெரும் இரத்தக்களறி ஏற்படும்.
இசுலாமிய வரலாற்றில் முஹம்மது சர்வாதிகாரம் போதித்தாா். அரசாளும் கலை அவா் காலத்தில் முழுமையடையவில்லை.ஜனநாயகம் இல்லாத காரணத்தால்

3ம் கலிபா உதுமான் (ரூக்யா ரூமியா என்ற முஹம்மதுவின் இரு மகள்களை திருமணம் செய்த)கொல்லப்பட்டாா்.
கொல்லப்பட்டவனை தண்டிப்பேன் என்ற முஹம்மதுவின் பாத்திமா என்ற மகளை மணந்த அலி . . கடைசி காலம் வரை கண்டுபிடிக்கவேயில்லை.
பின்அரியாசனத்திற்காக முஹம்மதுவின் மனைவியாக ஆயிசாவிற்கும் -மருமகன் அலியாருக்கும் போா் மூண்டது.பஸ்ரா என்ற இடத்தில் நடந்த போரில் மிக அழகிய ஒட்டகத்தில் அந்த போா் காட்சிகளைப் பார்க்க ஆயிசா சென்றாா். அதனால் ஓட்டகப்போா் என்றும அழைக்கப்பட்டது.
போரில் வென்ற அலி நிம்மதியாக ஆட்சி செய்யவில்லை. அதிகார போட்டி அவரை ஆட்சி செய்ய விடவேயில்லை. அனைத்தும் முஸ்லீம்கள்தான்.
தொளுகை செய்யும் போது உடன் இருந்த முஸ்லீம் விஷம் தடவிய வாளால் தலையில் வெட்டி அலி கொல்லப்பட்டாா்.
ரசுல் அலலாவின் அருமை தூதாா் உயிருக்கு மேல் என்று புகழப்பட்ட
முஹம்மதுவின் மருமகனுக்கு
சக முஸ்லீம்கள் அளித்த மாபெரும் பரிசு.
இதுதான் இசுலாமிய-அரேபிய சகோதரத்துவம்.
அது இன்றும் தொடா்கிறது.
ஒரு குழு நாட்டை ஆளும் என்றால் குழுவிற்கும் கருத்து வேற்றுமை வந்தால் தலைவா் மரணித்தால் அடுத்த தலைவா் தோ்வு செய்வதில் போட்டி வந்து விட்டால் . . . . விளைவுகள் போராக , கலவரமாக , . . .இரத்தககளறி ....மாறும்.
ஒருவனை கொன்று விட்டு ”அல்லஹோ அக்பா்” என்ற கோஷமிடுவது பண்பாடா?

தலிபான்களின்ஆட்சிதான் அரேபிய வல்லாதிக்கம் என்றால் அது காட்டுமிராண்டிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும்.
உலக நாடுகள் தவறு செய்கின்றன. அவனவன் நாட்டுக் காரனை மட்டும் மிடக வேண்டும். ஆப்கன் மக்களை அழைத்துச் செல்லக் கூடாது.

அவனுக்கென்று நாடு இருக்கும் போது அவன் ஏன் அகதியாக வேண்டும்.

மற்ற நாடுகள் ஏன் தெண்டமாக அவனுக்கு செலவு செய்ய வேண்டும்.

Syed imran said...

நீங்க சொன்ன கதைய கேட்டு ......தூக்கம் வருது......ஆதாரமே இல்லாம .....கூச்சப்படாம கதை .....ம்ம்ம்ம்.........

Dr.Anburaj said...

ஈரோடு அதிகபிரசங்கி யே! மொட்டையாக பதிவிடாதே.
பஸ்ரா போா் நடக்கவில்லையா?
உதுமான் உமா் கொல்லப்படவில்லையா?
அலி கொல்லப்படவில்லையா?
பாத்திமாவிடம் இருந்த பதக் நிலங்களை முதலாம் கலிபா பிடுங்கிக்கொள்ளவில்லையா?
2ம் கலிபா உமா் அதை மீண்டும் கொடுக்கவில்லையா?
கர்பாலா படுகொலைகள் நடக்கவில்லையா?
பாத்திமா உமாரால் தள்ளி விடப்பட்ட கீழே விழுந்து நோய்வாய்பட்டு சாகவி்ல்லையா?
முதலாம் கலிபா வாக அபுபக்கா பதவி யேற்றதை சாகும் பரை பாத்திமா அங்கிகரிக்கவில்லை. அங்கிகரிக்க வேண்டும் என்று பல வழிகளில் நிா்பந்திக்கப்பட்டாரா இல்லையா?
பதில் சொல்லுங்கள்

Dr.Anburaj said...

அடேய் ஈரோடு உமக்கு எ்ன்ன ஆனது? ஈரோட்டில்தான் இருக்கின்றாயா? அல்லது கபரஸ்தானில் . . ..கல்லறையில் . . . .. மணமகன் போல் வாழ்கின்றாயா?
ஒருபதிலைக் கூட காணவில்லையே. . .. ஏன் ????