'சத்தியம் டிவி' சகோ. Aravind Akshan அவர்களின் ட்விட்டர் பதிவு :
//
அரசியல் ஆதாயத்திற்காக எதையும் செய்யலாமா ?
================================================
தி கேரளா ஸ்டோரி படத்தோட இயக்குநர்
சுதிப்தோ சென் மதம் மாறி, பின்னர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து ஆப்கான் ஜெயிலில் இருந்த கேரளாவைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் பேசியதாக கூறுகிறான்
ஆப்கான் அரசால் கைதுசெய்யப்பட்ட இந்தியாவைச்சேர்ந்த ISIS தீவிரவாதியோடு போனில் பேசியதாக கூறுகிறான்
இப்போது ஆப்கானில் நடப்பது தாலிபான்களின் ஆட்சி..
ஆகையால் எந்த வருடத்தில் எப்படி தொடர்பு கொண்டான் ?
யார் மூலமாக தொடர்பு கொண்டான் ?
எப்போது பேசினான் ?
வெளியுறத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்... போண்டா படங்களை இயக்கிய சுதிப்தோ சென்-ஐ தொடர்பு கொள்ள என்ன காரணம் ?
ஆப்கான் சிறையில் இருந்த பெண்ணோடு
இயக்குநர் சுதிப் எப்படி பேசினான் ?
தரைவழி இணைப்பின் மூலமாகவா, செல்போன் மூலமாகவா அல்லது தடைசெய்யப்பட்ட சாட்டிலைட் போன் முலமாகவா ?
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்பை எல்லாம் ட்ராக் செய்யும் RAW,IB போன்ற ஏஜென்சிகள் இதை கவனிக்க தவறியது எப்படி ?
இப்படி இந்த விவகாரத்தில் எண்ணற்ற கேள்விகள் இருக்கிறது.
சரி அதை விட்டுத்தள்ளுவோம்..
ஆயிரக்கணக்கான இந்தியப்பெண்கள் ஏமன் மற்றும் சிரியாவின் பாலைவனத்தில் உயிரோடு புதைக்கப்பட்டதாக டீசர் வெளியிடுகிறார்கள்..
வெளிநாட்டிற்கு குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் செல்வோர் மற்றும் வருவோர் குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் Bureau of immigration இதற்கு பதிலளிக்க வேண்டாமா ?
ஆயிரக்கணக்கான இந்தியப்பெண்கள் புதைக்கப்பட்டார்கள் என்ற படுபயங்கரமான இந்த தகவலை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய தூதரகங்களுக்கு இல்லையா ?
இதைப்பற்றியும் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.
எவ்வளவு மோசமான செயல் இது !
இதைவிட மிகப்பெரிய கேலிக்கூத்தும் உண்டு.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள ஆதாசர்மா,,
"மதம்மாறி ISIS தீவிரவாத இயக்கத்தில் இணைந்த பெண்ணை நேரில் சந்தித்து பேசினேன்" என்று பகிரங்கமாக பேட்டி கொடுக்கிறார். மெசேஜ் மூலம் தொடர்ந்து பேசி வருவதாகவும் வெளிப்படையாக கூறுகிறார்
அய்யா சாமிகளா..
உண்மையில் இந்த நாட்டில் என்ன தான் நடக்கிறது?
இது எல்லாம் உண்மையா என்று அவர்களை விசாரிக்க வேண்டியது யார் ?
மத்திய அரசின் பொறுப்பில்லையா ?
ஆனால் இதுவரை எந்த கேள்வியும் எந்த ஏஜென்சியும் இவர்களிடம் கேட்கவில்லை.
யாராவது கேட்டாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல இருக்கிறார்கள்.
தி கேரளா ஸ்டோரி திரைப்பட இயக்குநர் கூறியதையெல்லாம் யார் தான் அப்படியே நம்புகிறார்கள் என்றால் ?
சந்தேகமே வேண்டாம்..
எந்த கேள்வியும் கேட்காமல்,
பூம் பூம் மாடு போல தலையாட்டிக்கொண்டு,
நம்புவது சாட்சாத்
இந்திய அரசாங்கமே தான்
எவ்வளவு பெரிய அவமானம் இது !?
சாட்சிகள்,சட்டப்படியான ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்கள் கூட
நாடாளுமன்றத்தின் ஆவணங்களை ஏற்க மறுக்கிறது. குறைந்தபட்சம் பார்க்கக்கூட இல்லை.
மக்களின் கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற
இந்த நாட்டின் கெளரவத்தைக்கூட இழக்க தயாராகியுள்ளனர் ஆட்சியாளர்கள் என்பது உண்மையில் ஆச்சர்யமளிக்கிறது
அதாவது தெளிவாக சொன்னால்...
அரசாங்கத்தின் மொத்த சிஸ்டமும் அப்பட்டமான பொய்களை பரப்ப முழு மூச்சோடு வேலை செய்கிறது. 😢
இந்திய அரசின் ஆவணத்தோடு ஒத்துப்போகாத, பொய்யும், வெறுப்பும் நிரம்பிய ஓர் திடைப்படத்தை, 'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் ஆட்சியாளர்கள் ஆசீர்வதித்து நூறு சதவீதம் அனுமதித்துள்ளனர்
தி கேரளா ஸ்டோரி திரைப்படம்…
இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
நாடாளுமன்ற அவையின் மீது மக்கள் கொண்டிருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது.
உண்மையில்
இதை தடுக்க தவறிய ஆட்சியாளர்கள்
கொஞ்சமாவது அவமானப்பட வேண்டும்.
//
நன்றி சகோ.
https://twitter.com/RealAravind36/status/1654371003307556864?t=xyuVXIrA3PUYoONe0VGBZw&s=19
1 comment:
சினிமாக்கள். . .கவிதைக்கு பொய் அழகு . .மிகைப்படுத்துதல் அழகு.
சரி
இசுலாமிய தேச காடையா்கள் பற்றி கதை எடுத்தால் இங்குள்ள
முஸ்லீம்களுக்க ஏன் சுடுகிறது?
ஏன் பதை பதைப்பு ஏற்படுகிறது?
சகோதர பாசமா?
விரைவில் யெஸ்டி பைல்ஸ திரைப்படம் வெளியே வர உள்ளது.
Post a Comment