Followers

Monday, May 29, 2023

நீ அந்த தமிழுக்கு என்ன கவுரவதை கொடுத்து இருக்கே?

 

// ‘’ Nazeer Suvanappiriyan   குஜராத்தி மோடியை குறை சொல்லுறதுக்கு முன்பு தாய்மொழி தமிழ்னு சொல்லிக்குற நீ அந்த தமிழுக்கு என்ன கவுரவதை கொடுத்து இருக்கே?

உனது வாழ்வில் நீ கடைபிடிக்குற சங்க தமிழனோட ஏதாவது ஒரே ஒரு அடையாளம், கலாசார பண்பாடு ஏதாவது இருக்கா?’’//

 

-      K.Raman

 

நிறைய சொல்லலாம்.... எனது குடும்பத்தில் அனைவரும் ஆங்கில கலப்பில்லாத தூய தமிழ் மொழியைத்தான் வீட்டிலும் வெளியிலும் பேசி வருகிறோம்.

 

10 வருடங்களுக்கு மேலாக இணையத்தில் எழுதி வருகிறேன். எனது எழுத்தில் ஆங்கிலமோ, அரபியோ எங்கும் எட்டிப் பார்க்காது. தூய தமிழிலேயே இன்று வரை எழுதி வருகிறேன்.

 

லகரம், ளகரம், ழகரம், னகரம், ணகரம், நகரம் என்று எழுத்துப் பிழை இல்லாமல் இதுவரை எழுதி வருகிறேன். இலக்கணப் பிழைகளும் எனது எழுத்தில் அதிகம் இருக்காது. ஒரு முறை தமிழ் மணத்தில் ஒரு இந்து அன்பர். 'சுவனப்பிரியன்... மற்ற இஸ்லாமியர்கள் எழுத்தில் அரபு மொழி அதிகம் கலப்பு இருக்கும். எங்களைப் போன்றவர்களுக்கு புரிவது சிரமம். ஆனால் உங்களின் எழுத்து தூய தமிழில் உள்ளதால் உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்' என்று கூறியிருந்தார்.

 

ஆதி கால தமிழர்களின் இறைக் கோட்பாடான 'ஒன்றே குலம்: ஒருவனே தேவன்' என்ற கோட்பாட்டின்படி வாழ்ந்து வருகிறேன்.

 

ஆதிகால தமிழனிடத்தில் சிலை வழிபாடு கிடையாது: கீழடி ஆய்வுகளில் கடவுள் சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. சிலைவணக்கமானது பின்னால் வந்த ஆரிய படையெடுப்பபுகளால் வலிந்து உருவாக்கப்பட்டது.

 

எனது தாய் மொழியான தமிழை அதிகம் விரும்புகிறேன். அதே நேரம் உலக மூல மொழிகளையும் விரும்புகிறேன். உலக மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்வதற்காக இறைவனே படைத்ததாக குர்ஆன் சொல்கிறது.

 

ஆதிகால தமிழனிடத்தில் சுய மரியாதை இருந்தது: அதே சுய மரியாதை எனக்கும் உள்ளது.

 

இப்படி நான் எத்தனைதான் அடுக்கிக் கொண்டே போனாலும் பரம்பரையாக ஆரியனுக்கு அடிமையாகிப் போன உனது மூளையானது இதை எல்லாம் ஏற்காது. உனக்காக பிரார்தனை புரிகிறேன் ராமா.....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: