//நான் கேட்ட கேள்விக்கும் உன்னோட பதிலுக்கும் என்ன சம்பந்தம்?
"யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்பதை இஸ்லாம் ஏத்துகுதா?// K.Raman
மிக சுலபம்... குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் 'ஓ அரபியரே!' என்று இருக்காது.. 'ஓ.. மனிதனே' என்றுதான் தொடங்கும். அதில் ராமனும் அடங்குவார்: கிருஷ்ணனும் அடங்குவார்: மோடியும் அடங்குவார்: அத்வானியும் அடங்குவார்.
“மனிதர்களே! உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய இறை தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை – குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்” (அல்-குர்ஆன் 10:13)
“ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே போதிக்கும் படி நாம் அனுப்பிவைத்தோம்” - குர்ஆன் 14:4
//தமிழ் தான் சிறந்ததுனு சொல்லி உங்க வீட்டுல நீ கொண்டாடுற ஒரே ஒரு தமிழ் கலாச்சார பண்டிகையாவது இருக்கா?//
ராமா... முதலில் தமிழ் கலாசாரம் என்பது எது? தமிழர்களின் பண்டிகை எது? அதனை வரையறுத்தவர்கள் யார்?
இதை முதலில் கூறு. உனது கேள்விகளுக்கு தானாக பதில் கிடைக்கும்.
//அட குறந்தபட்சம் உன்னோட பெயரின் அடையாளமாவது தமிழ் கலாச்சாரத்தை ஏற்க்கிறதா?//
அரபியில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று குர்ஆனோ நபி மொழியோ கூறவில்லை. நான் அழகிய தமிழ் பெயரான 'அன்பழகன்' என்ற பெயரை வைக்கிறேன். உனது வர்ணாசிரம மூளையானது இவன் எந்த சாதி? தாழ்த்தப்பட்டவனா? பிற்படுத்தப்பட்டவனா? அல்லது பார்பனனா? என்ற ஆராய்ச்சியில் இறங்குவாய். எனவேதான் தமிழகத்தில் சாதி ஒழியும் வரை அரபியில் பெயர் வைக்கிறோம். ரஷ்யாவில்,
சீனாவில் உள்ள முஸ்லிம்கள் தாய் மொழியிலேயே வைக்கின்றனர். அங்கு சாதி கிடையாது.
தமிழ் மேல் உள்ள பற்றால்தான் எனது இணைய பெயரை 'சுவனப்பிரியன்' என்று வைத்துக் கொண்டுள்ளேன்.
No comments:
Post a Comment