Followers

Monday, May 01, 2023

தேசபக்தர்களின் ஏப்ரல் மாத தியாகக் கதைகள்

 



 

தேசபக்தர்களின் ஏப்ரல் மாத தியாகக் கதைகள்

 

========================

வெடிகுண்டு சம்பவம் -1

 

நாள் - 09-04-23

கேரள மாநிலம் கன்னூர் காக்கயங்காடு பகுதியில் பாஜகவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் தனது வீட்டில் improvised explosive device என்ற வெடி குண்டை தயாரிக்கிறார்.

 

தேசத்துக்கு எதிரான சக்திகளை வீழ்த்த அவர் அந்த வெடிகுண்டை தயாரித்துக்கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்துவிட்டது

இதனால் அவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.

பின்னார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது சந்தோஷை கைது செய்துள்ளனர் காவல் துறையினர்

 

இந்த வழக்கை உள்ளூர் போலீஸ் தான் விசாரிக்கிறது

https://keralakaumudi.com/en/news/mobile/news.php...

 

வெடி குண்டு சம்பவம் -2

 

நாள் 11-04-23

 

கேரள மாநிலம் கன்னூர் தலச்சேரி பகுதியில் 20 வயது இளைஞரான விஷ்ணு பாஜகவை சேர்ந்தவர்.

 

வீட்டிற்கு அருகில் இருந்த காலியிடத்தில் IED அதாவது improvised explosive device தயாரித்துக்கொண்டிருந்தார்.

 

தேசத்துக்கு எதிராக சக்திகளை அழிக்கவும்,

நாட்டை பாதுகாக்கவும் வெடிகுண்டுகளை தயாரித்த போது,

அது திடீரென வெடித்து சிதறியதால்

விஷ்ணுவின் உள்ளங்கைகள் முற்றிலும் சிதைந்து நாசமானது

 

சாப்பிடக்கூட வழியின்றி தேசபக்தர் விஷ்ணு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை உள்ளூர் போலீஸ் தான் விசாரிக்கிறது

https://thenewsminute.com/.../bjp-worker-injured-while...

 

வெடிகுண்டு தொடர்பான சம்பவம் -3

 

நாள் - 28-04-23

 

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ளார்.

 

ஆள்கடத்தல்,நிலத்தை மிரட்டி பறிக்க முயற்சித்தது தொடர்பாக,சிவக்குமார் என்பவர்

கார்த்திகேயன் மீது நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் தருகிறார்.

தகவலறிந்த கார்த்திகேயன் தலைமறைவாகிவிடுகிறார்

 

போலீஸார் பிஜேபி நிர்வாகி கார்த்திகேயன் வீட்டை லேசாக சோதனையிடுகின்றனர்

improvised explosive device தயாரிப்பதற்கு தேவையான வெடிமருந்துகள் கைப்பற்றப்படுகிறது.

 

கத்தி,அரிவாள் ஆயுதங்கள் எல்லாம் பெரிய விஷயமில்லை.

அதெல்லாம் சமையறையில் பயன்படுத்துபவையாக இருக்கலாம்..

ஆனால்,

 

improvised explosive device தயாரிக்க உதவும் வெடிமருந்துகள் எதற்கு ?

 

இந்த வழக்கை உள்ளூர் போலீஸான நாச்சியார் கோவில் காவல்துறை விசாரிக்கிறது

https://hindutamil.in/.../982674-kumbakonam-bjp-state...

 

இதே காரியங்களை வேறு கட்சிகளை சேர்ந்தவர்களோ அல்லது வேறு சமூகத்தை சேர்ந்தவர்களோ செய்திருந்தால், உள்துறை அமைச்சகத்தின் CTCR Division வழக்கை

@NIA_India விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கும்.

 

சம்பந்தப்பட்டவர்களுக்கு தீவிரவாதி முத்திரை குத்தி ,சோதனை என்ற பெயரில் இந்த நாட்டையே அதிர வைத்திருப்பார்கள்

 

ஆனால்,2023 ம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நடந்துள்ள இந்த மூன்று சம்பவங்களில்

improvised explosive device தயாரிக்க முற்பட்டது அத்தனை பேரும் பிஜேபி காரன் என்பதால் அதை லோக்கல் போலீஸே விசாரிக்கட்டும் என அமைதியாக விட்டுவிட்டனர்..

 

கேரளாவில் வெடிகுண்டு தயாரித்தவர்கள் விஷூ பண்டிகைக்காக அதை தயாரித்தார்கள் என்று வழக்கையும் சிறப்பாக விரைவில் முடித்து விடுவார்கள்

எனவே இத்துடன் இந்த கதை முடிவடைகிறது

 

 

Aravindakshan B R

@RealAravind36

 

No comments: