Followers

Sunday, May 28, 2023

'என் இறுதி மூச்சு வரை இஸ்லாத்திலேயே இருப்பேன்' - ஹூதா

 

'என் இறுதி மூச்சு வரை இஸ்லாத்திலேயே இருப்பேன்' - ஹூதா

 

'நான் 2015 லிருந்து மதங்களை ஆராயத் துவங்கினேன்.  2018ல் பல இஸ்லாமிய தோழிகளின் உதவியால் குர்ஆன் கிடைத்தது. எனது தேடலுக்கு விடை கிடைத்தது. இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி சென்றேன். யுட்யூப் மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலம் எனது நம்பிக்கை மேலும் பலமானது. 2020 ஆம் ஆண்டு யாஸிர் என்ற இஸ்லாமியரை நானாக முன் வந்து விரும்பி கணவனாக ஏற்றுக் கொண்டேன். லவ் ஜிஹாத் என்பது எல்லாம் புரளி. காதல் செய்து ஒருவரை மதம் மாற்ற முடியும் என்பதெல்லாம் இயலாத காரியம். அந்த அளவு பலஹீனமாகவா இந்து மதம் உள்ளது?'

 

'எனது கணவர் குர்ஆனை கற்று அதனை பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியர். ஆனால் இவரை 'தீவிரவாதி' என்று கூறி ஏடிஎஸ் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்றுள்ளது. கண்டிப்பாக அவர் குற்றமற்றவர் என்று என்னிடம் திரும்பி வருவார். சதி வேலைகள் செய்து அவரை என்னிடம் அனுப்பாமலேயே ஆட்சியாளர்கள் ஏதும் செய்யலாம். அவ்வாறு நடந்தால் அது இறைவனின் நாட்டம் என்று எனது குழந்தைகளோடு பொறுமை காப்பேன். எந்நத நிலையிலும் இஸ்லாத்தை விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' 

 

இவ்வாறு சிரமம் கொடுத்தால் ஹூதா இஸ்லாத்தை விட்டு விடுவார் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். ஆனால் அந்த சகோதரியின் மன உறுதி நம்மை மலைக்க வைக்கிறது.

 

எல்லா புகழும் இறைவனுக்கே.


மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்




 

 

 

 

 

No comments: