Followers

Tuesday, May 30, 2023

அடிமையை விடுதலை செய்ய சொன்ன குர்ஆன், ஹதீஸ்

 

//1, அடிமையை விடுதலை செய்ய சொன்ன குர்ஆன், ஹதீஸ்

2, கற்பழிப்பிற்கு தண்டனை வழங்கும் குர்ஆன், ஹதீஸ்

இவை இரண்டிற்கும் ஆதாரம் இருக்கா?// -K.Raman

 

 

அல்லாஹ் கூறினான்:



நன்மை, தீமையின் தெளிவான இரண்டு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையை நன்மையின் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை. கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா? அதுதான் ஒருவனை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினியான நாளில் உறவினரான அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதும் ஆகும். (திருக்குர்ஆன் 90: 10-17)

 

 

 

 

புஹாரி  பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2544

 

தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

 

 

 

 

புஹாரி பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2517

 

அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.

 

புஹாரி  பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2530

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி(ஸல) அவர்களிடம்) சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னைப் பிரிந்தும் நான் அவரைப் பிரிந்தும் வழிதவறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்) என்று கூறினார்கள். நான், ‘(நபி(ஸல்) அவர்களே!) இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன் என்று கூறினேன்.

 

புஹாரி  2519. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.



நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

 

 

இவ்வாறு ஏதாவது ஒரு காரணத்தை வைத்து அடிமைகளை விடுதலை செய்து விடும்படி நபிகள் கட்டளையிட்டார்கள். நபிகள் நாயகம் இறப்பதற்கு முன்பே அடிமை தொழில் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டு ஒழிக்கப்பட்டது.

 

 

விபச்சாரக் குற்றம்

 

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!  நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில்  ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 22:2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

புகாரி 2649, 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும், மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூல்களிலும் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

 

கற்பழிப்பு

 

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணங்கி நடந்தாலே இருவருக்கும் உடல் சுகம் கிடைக்கும். இதில் பெண்ணின் விருப்பம் இன்றி வலுக்கட்டாயமாக ஒருவரோ அல்லது பலரோ வன் புணர்வு செய்தால் அதில் எவருக்கும் இன்பம் கிடைக்கப் போவதில்லை. அந்த பெண்ணை அவமானப்படுத்திய சுகம் வேண்டுமானால் அந்த ஆண்களுக்கு கிடைக்கலாம். சினிமாவில் கற்பழிப்பு சாத்தியமாகலாம். ஆனால் நிஜ வாழ்வில் இது சாத்தியமில்லை. அந்த பெண்ணை வீண் பழி சுமத்திய குற்றத்தில் இதனை சேர்க்கலாம். ஒரு பெண்ணின் மீது வீண் பழி சுமத்திய குற்றத்துக்கு இஸ்லாத்தில் கடுமையான தண்டனை உண்டு.

 

 

 

 

 


1 comment:

Dr.Anburaj said...

வலக்கரம் கைபற்றிய பெண்கள் உங்களுக்கு ஹலால் என்றால் யுத்தத்தில். .

உடல் பலத்தால் கைபற்றப்பட்ட பெண்களை திருமணம் செய்யாமல் செக்ஸ் உறவுக்கு பயன் படுத்தலாம் என்பதுதான் பொருள்.
அடிமைப் பெண்களோடு செக்ஸ் உறவு வைத்தால் அது விபச்சாரம்தானே. . . .

கசைஅடி. .கல்லால் அடித்து கொலை செய்வது போன்ற தண்டனை ஏன் கொடுக்கப்படவில்லை. குரான் ஒரு மோசடியான அசிங்கமான கருத்துக்களை மனிதனை காட்டுமிராண்டி ஆக்கும் கருத்துக்களை போதிக்கும் அரேபிய வல்லாதிக்க புத்தகம்.