காலகாலமாக வர்ணாசிரமத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு பிற்படுத்தப்பட்ட இந்து இளைஞனின் உள்ளக் குமுறல்
"இந்துக்களே ஒன்று கூடுங்கள்!"
"சரி, கூடியாச்சு. அப்புறம் ?"
"கூடச்சொன்னா, இப்படி கிட்டத்துல வந்துடறதா ?
ஆச்சாரம் என்ன ஆவறது ? கொஞ்சம்
எட்டியே நில்லுங்கோ!"
"சரி சரி, எட்டியே நிற்கிறோம்.
எதுக்கு இந்துக்கள் அனைவரையும்
ஒன்று கூடச் சொன்னீங்க ?"
"வேற எதுக்கு ? கலவரம் செய்யத்தான்."
"யாருக்கு எதிரா ?"
"மாற்று மதமான இஸ்லாமியர், கிருத்துவருக்கு எதிராதான்."
"அவங்க என்ன செய்தார்கள் ?"
"இந்து மதத்தை அழிக்கப் பார்க்கிறாங்க."
"எங்களை கிட்ட வராதே, எட்டி நில்லுன்னு சொல்ற நீ இந்து மதத்தை வளர்த்துறே. எங்களை மாமன் மச்சானா, அண்ணன் தம்பியா பார்க்குற இஸ்லாமியனும், கிறித்தவனும் இந்து மதத்தை அழிக்கிறார்களா ?"
"ஆமா அந்த மதங்கள் நம்ம தேசத்துக்கு அந்நியமான மதங்கள் இல்லியோ ?"
"அடே, நீ மட்டும் எங்கிருந்துடா வந்தே ?
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டிற்குள் ஆடு மாடு ஒட்டிகிட்டு வந்த பயல்தானே நீ ?
நீ மட்டும் எப்படிடா இந்த மண்ணின் மைந்தன் ஆனாய் ?
இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று நீ அலறிய அலறல் கேட்டு ஏதோ நீ கோயிலுக்குள் வாருங்கள்,
" கருவறைக்குள் வாருங்கள் இந்துக்கள் ஒன்றிணைந்து சாமி கும்பிடலாம்!"
"இந்துக்கள் ஒன்றாகி,
இருக்கிற வாய்ப்புகளை சமமாகப் பிரித்துக்கொள்ளலாம்!"
"IITல் மாணவர் முதல் ஆசிரியர் என அனைத்து சாதியினரும் பங்கிட்டுக்கொள்ளலாம்!"
"உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றங்களில் ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை ஒழித்து அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு வழங்கலாம் !"
"பக்தி உள்ள அனைவரும்
சாதி வேற்றுமையின்றி அர்ச்சகர் ஆகலாம் !"
"IAS, IPS என எல்லா பதவிகளிலும் ஒரு சமூகத்தின் ஆதிக்கம் தவிர்த்து அனைத்து சாதியினரும் IAS, IPS, IFS ஆகலாம் !
அனைத்து சாதியினரும் MP, MLA, மந்திரி, பிரதமர் என உயர் பதவிகளில் அமரலாம் !"
என்றெல்லாம் அக்கறையோடு அழைப்பாய் என்று நினைத்தால், நீ வழக்கம் போல கலவரம் செய்ய மட்டும்தான் எங்களை அழைத்தாயோ ?
எங்கோ மத்தியதரைக்கடல் பிரதேசத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த நீ எங்களுக்கு வேண்டியவன், இங்கேயே பிறந்து, எங்களோடவே இருந்து சாதி கொடுமையால் மதம் மாறிய எனது சொந்த பந்தங்களான தொப்புள் கொடி உறவுகளான இஸ்லாமியனும், கிறித்தவனும் வேண்டாதவர்களா ?
நாங்களும் கறி சாப்பிடுவோம், இஸ்லாமியரும், கிறித்தவரும் கறி சாப்பிடுவார்கள். எங்களோடு சேர்ந்து நீயும் கறி சாப்பிடுவாயா ?
நீ வேறு, உன் சாமி வேறு, உன் மொழி வேறு, உன் பழக்க வழக்கம் வேறு.
எந்தவிதத்தில் நீயும் நானும் ஒரே இந்து மதம் ?
எனக்கு உன் பொண்ணைத் தருவாயா ? என்னை உன் வீட்டிற்குள் விடுவாயா ? என்னை கருவறைக்குள் விடுவாயா ?
நீயும் நானும் எப்படிடா ஒரே இந்து ?
உனக்காக, உன் இருப்பை தக்க வைப்பதற்காக எதுக்குடா நான் கலவரத்துக்கு வரணும் ?
எங்கள் நாடு அமைதியான நாடு. எங்கள் கொள்கை, யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
எனது முன்னோர்கள் வணங்கிய முறை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
எங்கள் சகோதர்களான இஸ்லாமிரோடும், கிறித்தவர்களோடும் இணக்கமாய் வாழ்ந்திட எங்களுக்குத் தெரியும்.
வந்த வழியே ஓடிப்போடா வந்தேறிப் பயலே!"
படித்ததில் பிடித்தது


No comments:
Post a Comment