இந்தியாவின்
கடைசி உடன்கட்டை-1 /ஆனால் இந்து ராஷ்ட்ரா
அமைந்தால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
-----------------------------------------------------------------------
வழக்கின்
பெயர்: Deena Lal And Ors. Vs State of Rajasthan / Roop Kanwar Sati
Case.
FIR No: FIR No. 108/87, Deorala Police Station, Sikar District,
Rajasthan.
வழக்கு எண்: S.B.
Cr. Misc. Bail Appl. No. 3181/87, 3247/87, 2878/87.
நீதிமன்றம்:
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ஜெய்ப்பூர்
தீர்ப்பு
தேதி: 9 டிசம்பர் 1987
Citation: 1988 (1) WLN 6
தீர்ப்பு
சொன்ன நீதிபதி: நீதிபதி M.B. சர்மா (M.B.
Sharma)
மனுதாரர்கள்:
தீனா லால், கல்யாண் சிங், மதன் சிங் மற்றும் பலர். ரூப் கன்வரை எரிக்க உதவியதாக குற்றம்
சாட்டப்பட்டவர்கள்.
எதிர் தரப்பு:
ராஜஸ்தான் மாநில அரசு.
17 ஜனவரி1987 அன்று ரூப் கன்வர் என்கின்ற 17 வயது பெண்ணுக்கும், மால் சிங் என்பவருக்கும் திருமணம் ஆனது. 3 செப்டம்பர் 1987 அன்று மால் சிங்குக்கு திடீரென வயிற்று வலி.
சிகாரில் உள்ள கல்யாண் மருத்துவமனையில் சேர்த்தார்கள். 4 செப்டம்பர் 1987 அன்று காலை 6.50 மணிக்கு அவர் இறந்து போனார்.
அதற்கு பிறகு
நடந்தது தான் இந்தியாவையே அதிர வைத்தது.
மாமனார்
சுமேர் சிங் மற்றும் ஊர் மக்கள், ரூப் கன்வரை முழு அலங்காரத்தோடு இறுதி ஊர்வலத்தில் கூட்டி வந்தார்கள். பெண்கள்
இறுதி ஊர்வலத்தில் வருவது வழக்கம் இல்லை. ஆனால் ரூப் கன்வரை கூட்டி வந்தார்கள்.
கடை வீதி வழியாக ஊர்வலம் போகும் போது, இதை ஊரே வேடிக்கைப்பார்த்தது. அப்போதே, ரூப் கன்வர் சதியாக்கப் போகிறார்கள் என்று
ஊரே பேசியது. பிறகு மக்கள் நினைத்தது போலவே, கணவன் உடலோடு சேர்த்து, ரூப் கன்வரையும் தீயில் வைத்து எரித்தார்கள்.
இந்தச்
சம்பவம் இந்தியா முழுதும் பெரும் அதிர்வலைகளையும், போராட்டங்களையும் ஏற்படுத்தியது. அதனால்
ராஜஸ்தான் அரசு இதைத் தடுப்பதற்காக சட்டம் கொண்டு வந்தது.
அரசு தரப்பு
வாதம்:
ரூப் கன்வர்
தானாக உடன்கட்டை ஏறவில்லை. அவளை உயிரோடு எரித்திருக்கிறார்கள். உடன்கட்டையைப்
புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக, அவளை எரித்து விட்டு, அவளே சதி ஆனாள் என்று கதை
கட்டியிருக்கிறார்கள்.
குற்றவாளிகள்
தரப்பு வாதம்:
அவள் தானாகவே
விரும்பி உடன்கட்டை ஏறினாள். நாங்கள் யாரும் அவளை கட்டாயப்படுத்த வில்லை. இது அவள்
விருப்பம். இது எங்கள் மத நம்பிக்கை. என்றார்கள்.
உயர்நீதிமன்ற
தீர்ப்பு - நீதிபதி M.B. சர்மா:
கணவன் உடலோடு
சேர்த்து ரூப் கன்வரும் தீயில் வைக்கப்பட்டாள் என்பதில் சந்தேகம் இல்லை. அவள்
தானாக உடன்கட்டை ஏறினாளா, அல்லது
உயிரோடு எரிக்கப்பட்டாளா என்பது தான் கேள்வி. அது விசாரணையில் தான் தெரியும் என்று, ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சுமேர் சிங், மங்கள் சிங் கூறினார்.
ஆனால் இந்த
வழக்கு தான் இந்திய சட்டத்தையே மாற்றியது.
ரூப் கன்வர்
எரிக்கப்பட்ட 1 மாதத்தில், 1 அக்டோபர் 1987-ல் ராஜஸ்தான் அரசு Rajasthan
Sati (Prevention) Ordinance 1987 என்கின்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து 3 ஜனவரி 1988-ல் மத்திய அரசு Commission
of Sati (Prevention) Act, 1987 கொண்டு வந்தது. பிறகு இது உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
வழக்கின்
பெயர்: Ch. Khemi Shakti Mandir Trust Vs Union of India
வழக்கு எண்: W.P.
(C) Nos. 1213/88, 767/89, 924/88, 713/90 & T.C. (C) No. 166/1988, W.P. (C)
No. 699/88, SLP (C) No. 1366/88.
உச்ச
நீதிமன்றம், புது டெல்லி.
தீர்ப்பு
தேதி: 7 நவம்பர் 2001.
Citation: (2002) 3 SCALE 78, 2010 (15) SCC 768.
தீர்ப்பு
சொன்ன நீதிபதிகள்: தலைமை நீதிபதி S.P. பரூச்சா (S.P. Bharucha), நீதிபதி S.S.M. காத்ரி, நீதிபதி N. சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி S.N. வரியவா, நீதிபதி சிவராஜ் V. பாட்டீல் - 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச்.
மனுதாரர்கள்:
கேமி சக்தி மந்திர் டிரஸ்ட் மற்றும் பழைய சதி கோவில்கள், எங்கள் கோவிலில் சதி வழிபாடு செய்வது மத
உரிமை, அதை
தடுக்கக்கூடாது.
இது கோயில்
தரப்பு வாதம்.
கோவில் தரப்பு
வழக்கறிஞர்:
திரு. சுஷில்
குமார் ஜெயின்.
“நாங்கள் சதியை கொண்டாட வில்லை. பழைய சதி கோவில்களில் வழிபாடு செய்கிறோம். அது
எங்கள் மத உரிமை. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 எங்களுக்கு மத உரிமை கொடுக்கிறது. Commission
of Sati (Prevention) Act, 1987 அரசியலமைப்புக்கு எதிரானது.”
எதிர் தரப்பு, மத்திய அரசு. வாதம்:
சதி என்பது
மதம் இல்லை. அது ஒரு கொலை. ஒரு விதவையை உயிரோடு எரிப்பது மத உரிமையாகக் கருத
முடியாது. அதை புகழ்வது கூட குற்றம் தான்.
உச்ச நீதிமன்ற
தீர்ப்பு:
சதி என்பது, சட்டத்தின் பிரிவு 2(c)-ன் படி, கணவன் உடலோடு சேர்த்து மனைவியை உயிரோடு
எரிப்பது அல்லது புதைப்பது. அப்படி எரிப்பதை புகழ்வது தான் சட்டம் தடுக்கிறது.
மனுதாரர்கள் கூட இதை ஒத்து கொள்கிறார்கள். விதவையை உயிரோடு எரிப்பது கொடூரமான
செயல், அதை தடுக்க
வேண்டும் அதனால் சதியை தடை செய்வதும், அதை புகழ்வதை தடை செய்வதும் சரியான நோக்கம்
தான்.
முடிவு: Commission
of Sati (Prevention) Act, 1987 சொல்லும். சதியை தடை செய்வது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது இல்லை. என்று
தீர்ப்புக் கூறினார்கள்.
State of Rajasthan Vs Hat Singh - சதியை புகழ்ந்தாலும் குற்றம்!
வழக்கு
விவரம்:
வழக்கின்
பெயர்: State of Rajasthan Vs Hat Singh & Ors.
வழக்கு எண்: Criminal
Appeal Nos. 671-678 of 1987.
Diary No: 70515 / 1987.
உச்ச
நீதிமன்றம். டெல்லி.
தீர்ப்பு
தேதி: 8 ஜனவரி 2003.
Citation:* (2003) 2 SCC 152.
தீர்ப்பு
சொன்ன நீதிபதிகள்: நீதிபதி R.C. லஹோட்டி (R.C. Lahoti) மற்றும் நீதிபதி பிரிஜேஷ் குமார் (Brijesh Kumar)
தீர்ப்பு
எழுதியவர்: நீதிபதி R.C. லஹோட்டி.
மேல்முறையீடு
செய்தவர்: ராஜஸ்தான் மாநில அரசு.
எதிர் தரப்பு:
ஹட் சிங் மற்றும் பலர் ரூப் கன்வர் சதியை புகழ்ந்து ஊர்வலம், கூட்டம் நடத்தியவர்கள்.
சட்டம் என்ன
சொல்கிறது?
பிரிவு 5: சதியை புகழ்ந்தால் 1 முதல் 7 ஆண்டு சிறை + ரூ. 5,000
முதல் 30,000
அபராதம்.
பிரிவு 6: மாவட்ட ஆட்சியர் சதியை தடுக்க உத்தரவு
போடலாம். அந்த உத்தரவை மீறினாலும் 1 முதல் 7 ஆண்டுவரை சிறை தண்டனை.
குற்றவாளிகள்
சொன்னார்கள்: எங்களை இரண்டு பிரிவிலும் தண்டிக்க முடியாது. அது Double
Jeopardy - ஒரே குற்றத்துக்கு
இரண்டு முறை தண்டனை. இது அரசியலமைப்பு பிரிவு 20(2)-க்கு எதிரானது என்று.
நீதிமன்ற
தீர்ப்பு:
பிரிவு 5 வேறு, பிரிவு 6 வேறு. பிரிவு 5 சதியை புகழ்வதை தண்டிக்கிறது. பிரிவு 6 சதி நடக்கும் முன்பே தடுக்க, ஆட்சியருக்கு அதிகாரம் கொடுக்கிறது. இரண்டும்
வெவ்வேறு குற்றங்கள். அதனால் இரண்டிலும் வழக்கு போடுவது Double
Jeopardy இல்லை. என்று
நீதிமன்றம் சொன்னது.
முடிவு:
ராஜஸ்தான் அரசின் மேல்முறையீடு ஏற்கப்பட்டது. வழக்கு தொடரும்.
இந்த வழக்கின்
சோகம் என்னவென்றால்,
1998-ல் 45 பேர் மீது சதியை புகழ்ந்ததாக வழக்கு
பதியப்பட்டது.
31 ஜனவரி 2004-ல் சிறப்பு நீதிமன்றம்: நீதிபதி சிவ் சிங்
சவுகான் 11 பேரை விடுதலை
செய்தார். காரணம்: அதற்கு ஆதாரம் இல்லை என்று.
அக்டோபர் 2024-ல் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் மீதியுள்ள 8 பேரையும் விடுதலை செய்தது. அவர்கள்: மகேந்திர
சிங், சிரவண் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தசரத் சிங், லட்சுமண் சிங், பன்வர் சிங்.
புதிய
சட்டங்கள் இயற்றியும் ரூப் கன்வருக்கு நீதி கிடைக்கவில்லை.
சங்கிகளின் ஆட்சியான
இந்து ராஷ்ட்ரா கொண்டு வரப்பட்டால் சதி என்ற உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, வர்ணாசிரம கோட்பாடு போன்றவை திரும்ப கொண்டு வரப்படுமா?

No comments:
Post a Comment