Followers

Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

Friday, July 04, 2014

மரியா ஷரபோவா - சச்சின் டெண்டுல்கர் - சீதா சாகு



சச்சின் டெண்டுல்கரை தெரியாது என்று கூறிய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா மீது ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சொற்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரை சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று பார்ப்பது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த சனிக்கிழமை அன்று சச்சின், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் ராயல் பாக்ஸில் அமர்ந்து போட்டியைப் பார்த்தனர்.

ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்து வந்தபோது, அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் டேவிட் பெக்காம் அருகில் வரும் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்டதற்கு 'தெரியாது' என்று பதில் அளித்து ரசிகர்களின் கோபாவேசக் கருத்துகளுக்கு ஆளாகியுள்ளார்.

மரியா ஷரபோவாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்குச் சென்று, அவரது இந்தக் கருத்திற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் உலகிலிருந்து பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் அவரை தாறுமாறாகக் கிழித்துள்ளனர். கடும் கெட்டவார்த்தைகளுடன் கூடிய கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றை விடுத்து சுவையான சில ட்வீட்களைப் பார்ப்போம்: 'யார் இந்த மரியா ஷரபோவா' என்ற அர்த்தம் கொடுக்கும் சொற்பதம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.

'சச்சின் டெண்டுல்கரைத் தெரியவில்லை என்றால், அவர் ஒரு கிரிக்கெட் நாத்திகவாதி'; 'சச்சின் களத்தில் நின்ற ஆண்டுகள்கூட ஷரபோவா வயது இருக்காது. அதற்காக கடவுளைச் சிறுமைப்படுத்தலாமா?' என்கிற ரீதியில் பல ட்வீட்கள் வலம் வந்துள்ளன.

மேலும், ஆயிரக்கணக்கானோர் ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் நுழைந்து, 'சச்சின்' 'சச்சின்' 'சச்சின்' என்று பக்கம் முழுதையும் அவர் பெயரைக் குறிப்பிட்டு நிரப்பியுள்ளனர்.

ஒருவர் மிக நகைச்சுவையாக மரியா ஷரபோவா ரசிகர்களிடம் வசை வாங்கிக்கட்டிக் கொள்வதைப் பார்த்து, விக்கிலீக்ஸ் அசாஞ்சே 'இப்போது எனக்கு சச்சினைத் தெரிந்து விட்டது' என்று கூறியதாக கிண்டல் செய்துள்ளார்.

சர் ரவீந்தர் ஜடேஜா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பதிவில், மரியா ஷரபோவா டென்னிஸ் வலை மீது ஷூவை வைத்திருக்கும் படத்தை வெளியிட்டு, சச்சின் டெண்டுல்கர் மைதானத்தைத் தொட்டுக் கும்பிடும் படத்தையும் வெளியிட்டு, 'டியர் மரியா ஷரபோவா இதுதான் சச்சின்' என்று பதிவிடப்பட்டுள்ளது.

மற்றொரு ட்வீட்டில் "நீ ஆடும் ஒவ்வொரு ஷாட்டிற்கும் சத்தம் எழுப்புகிறாய், ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டிற்கு ரசிகர்கள் சப்தம் எழுப்புகின்றனர். அவர் கடவுள், நீ சாதாரண பிளேயர்' என்று பதிவிடப்பட்டுள்ளது.

வசைகள், கேலி - கிண்டல்களுக்கு இடையே ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் நிறைய ட்வீட்கள் வந்துள்ளன. 'இதுவல்லாமல் ஷரபோவாவுக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியவில்லை இதனால் ஆகப்போவதென்ன' என்று சில நடுநிலை பதிவர்களும் கூறியுள்ளனர்.

நன்றி: ஹிந்து நாளிதழ்

இது போன்ற கூத்துக்கள் நமது இந்தியாவில்தான் நடைபெறும். ஒரு சாதாரண கிரிக்கெட் வீரரை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நம்மால்தான் முடியும். அதே ரசிகர்களிடம் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார் என்றால் தெரியாது. கால் பந்தாட்ட அணியில் ஒருவரின் பெயரும் தெரியாது.

அவ்வளவு ஏன் மேலே படத்தில் உள்ள சீதா சாகு என்ற பெண்மணி ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். முறையே 200 மீட்டர் 1600 மீட்டர் ஓட்டத்தில் 2011 ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நமது நாட்டுக்கு பெருமை தேடி தந்தார். இடையில் அவரது அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. எனவே பள்ளி செல்வதை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அந்த அளவு வறுமை அந்த குடும்பத்தை வாட்டி வதைத்தது. குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றார். இன்று பழங்களை விற்றுதனது குடும்பத்தின் வறுமையை போக்கி வருகிறார். இவரை யாராவது நினைத்தோமா? இந்த சகோதரியின் மேல் படிப்புக்கு நமது அரசு என்ன செய்தது? கோடிகளில் புரளும் இந்த கிரிக்கெட்டால் பலர் சூதாட்டத்தில் விழுந்ததுதான் மிச்சம். கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு ஏன் தரப்படுவதில்லை. ஒரு வேளை பார்பனர்கள் மற்ற விளையாட்டுகளில் நுழைய ஆரம்பித்தால் அதன் முக்கியத்துவம் கூடுமோ என்னவோ? :-)

Friday, August 03, 2012

ஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்!



சாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்ளேன். அம்மாபேட்டை, ஒரத்தநாடு, வலங்கைமான், கும்பகோணம், அய்யம் பேட்டை என்று பல பள்ளிகளில் படிக்கும் காலங்களில் நான் படித்த பள்ளிக்காக விளையாடிய அனுபவம் உண்டு.

ஆனால் இன்று வெகு விமரிசையாக விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் விளையாட்டின் நோக்கத்தையே சிதைக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒலிம்பிக் கிராமங்களில் பாலியல் வக்கிரங்களை கணக்கின்றி பரவ விடுவதை எவரும் கண்டிக்காமல் இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

இவர்களின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்ட சில இஸ்லாமிய நாடுகள் இந்த போட்டிகளிலிருந்து ஒதுங்கி இருந்தன. இது ஏதோ மிகப் பெரிய தவறு என்று மீடியாக்கள் விமரிசிக்கப் போய் வேண்டா வெறுப்பாக சிலரை இந்த வருடம் சவுதி அரேபியா தனது வீராங்கனைகளை அனுப்பி வைத்துள்ளது. ஆண் துணையோடும் ஹிஜாப் உடையோடும் கலந்து கொள்வார்கள் என்ற கண்டிஷனோடு தனது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது சவுதி அரேபியா. கற்பை இழந்து கண்ணியத்தை இழந்துதான் அந்த ஒலிம்பிக் மெடலை வாங்க வேண்டும் என்றால் அதனை தூக்கி எறியவும் தயாராக இருக்க வேண்டும். சாந்தி என்ற முன்னால் தமிழக வீராங்கனை இன்று செங்கல் சூளையில் தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறாராம். இதுதான் அவர்களுக்கு கிடைத்த கடைசி பரிசு.

ஒலிம்பிக் விளையாட்டை நடத்தும் சில கம்பெனிகள் உலகுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களை தருவதை விட அந்த வீரர்களை செக்ஸ் அடிமைகளாக மாற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. போதை மருந்துகள் மிக இலகுவாக புழக்கத்தில் விடப்படுகிறது. இங்கு நடக்கும் பல அநாச்சாரங்களைப் பற்றி முன்னால் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் புனை பெயரில் 'தி சீக்ரெட் ஒலிம்பிக்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதே போல் ஒரு அமெரிக்க பெண் உடற் பயிற்சியாளர் 'பட் ஆஃப்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களும் ஒலிம்பிக் கிராமங்களில் எந்த அளவு மோசமாக பாலியல் வக்கிரங்கள் அரங்கேற்றப்படுகின்றன எனபதை விரிவாக விளக்குகின்றன.

ஒலிம்பிக் நடைபெறும் லண்டனில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தலா பதினைந்து ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும் மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. நம் நாட்டு வீரர்கள் ஏன் தங்கத்தையும் வெள்ளியையும் அள்ளவில்லை என்ற ரகசியம் இப்போதுதான் தெரிகிறது. அனைத்து நாடுகளின் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டம் விநியோகிப்பதின் அர்த்தம் என்ன? விளையாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம், அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம். அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும், 2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும், கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம் விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம் தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர்.

இந்த அழகில் இஸ்லாமிய நாடுகளை ஹிஜாபோடு ஒலிம்பிக் கிராமத்தில் ஏன் அனுமதித்தீர்கள்? இஸ்லாமிய நாடுகளுக்கு ஏன் அடி பணிந்தீர்கள் என்று லண்டனில் தங்களின் மேலாடையை கழட்டி நூதன போராட்டத்தை சில பெண் இயக்கங்கள் நடத்தியுள்ளன. போராட்டம் நடத்திய பெண்கள் எந்த அளவு ஒழுக்கமானவர்கள் என்பதற்கு அவர்களின் போராட்ட முறையே நமக்கு காட்டிக் கொடுத்துள்ளது. வெட்கங் கெட்ட விபசாரிகள் கும்பலாக வந்து மேலாடையை கழட்டி போராட்டத்தில் ஈடுபட்டதை லண்டன் காவல்துறை அனுமதிக்காமல் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது. சபாஷ் லண்டன் காவல் துறை! லண்டன் காவல் துறை மோசமாக நடந்து கொண்டதாக இக்பால் செல்வன் வேறு குறைபட்டுக் கொள்கிறார்....பாவம் அந்த பெண்கள்... இல்லையா இக்பால் செல்வன்?.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் அனுபவங்களை பார்ப்போம்.:

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார். மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன். கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.



பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர். இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது. இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம். இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம். கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும், பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.


உலக மக்களை வருடம் ஒரு முறை மெக்காவுக்கு அழைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒரு தாய் மக்கள்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று ஓங்கி ஒலிக்க வைக்கும் இஸ்லாமிய செயல்பாடுகள் எங்கே?

உலக விபசாரிகளை இறக்குமதி செய்து விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் காண்டங்களை இஷ்டம் போல் விநியோகித்து இளைஞர்களை வழி கெடுக்கும் மேற்கத்திய கலாசாரம் எங்கே?

நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


எனக்கு பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். “கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்” என்று இறைத்தூதர் கூற கேட்டிருக்கிறேன் என நபித் தோழர் அனஸ் அறிவித்தார்கள். (நூல் புகாரி- அத்தியாயம்-1- ஹதீஸ்-81)

…..According to the anonymously authored expose ‘The Secret Olympics’, which is written by a former British competitor, organizers supplied 70,000 condoms to athletes at the 2000 Summer Olympics in Sydney, Australia. The stockpile ran out in a week.
While alcohol and drugs are banned at Olympic Villages, competitors often fill water bottles with booze and smuggle in weed and doping agents.
While officials don’t condone such behaviour, they don’t condemn it either, and the only thing that matters is that the image of the Olympics remains unsullied…….


http://books.hindustantimes.com/2012/07/rampant-sex-and-booze-secrets-at-olympic-village-exposed/

------------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 13