'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, July 04, 2014
மரியா ஷரபோவா - சச்சின் டெண்டுல்கர் - சீதா சாகு
சச்சின் டெண்டுல்கரை தெரியாது என்று கூறிய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா மீது ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சொற்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரை சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று பார்ப்பது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த சனிக்கிழமை அன்று சச்சின், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் ராயல் பாக்ஸில் அமர்ந்து போட்டியைப் பார்த்தனர்.
ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்து வந்தபோது, அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் டேவிட் பெக்காம் அருகில் வரும் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்டதற்கு 'தெரியாது' என்று பதில் அளித்து ரசிகர்களின் கோபாவேசக் கருத்துகளுக்கு ஆளாகியுள்ளார்.
மரியா ஷரபோவாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்குச் சென்று, அவரது இந்தக் கருத்திற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதல் உலகிலிருந்து பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் அவரை தாறுமாறாகக் கிழித்துள்ளனர். கடும் கெட்டவார்த்தைகளுடன் கூடிய கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றை விடுத்து சுவையான சில ட்வீட்களைப் பார்ப்போம்: 'யார் இந்த மரியா ஷரபோவா' என்ற அர்த்தம் கொடுக்கும் சொற்பதம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.
'சச்சின் டெண்டுல்கரைத் தெரியவில்லை என்றால், அவர் ஒரு கிரிக்கெட் நாத்திகவாதி'; 'சச்சின் களத்தில் நின்ற ஆண்டுகள்கூட ஷரபோவா வயது இருக்காது. அதற்காக கடவுளைச் சிறுமைப்படுத்தலாமா?' என்கிற ரீதியில் பல ட்வீட்கள் வலம் வந்துள்ளன.
மேலும், ஆயிரக்கணக்கானோர் ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் நுழைந்து, 'சச்சின்' 'சச்சின்' 'சச்சின்' என்று பக்கம் முழுதையும் அவர் பெயரைக் குறிப்பிட்டு நிரப்பியுள்ளனர்.
ஒருவர் மிக நகைச்சுவையாக மரியா ஷரபோவா ரசிகர்களிடம் வசை வாங்கிக்கட்டிக் கொள்வதைப் பார்த்து, விக்கிலீக்ஸ் அசாஞ்சே 'இப்போது எனக்கு சச்சினைத் தெரிந்து விட்டது' என்று கூறியதாக கிண்டல் செய்துள்ளார்.
சர் ரவீந்தர் ஜடேஜா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பதிவில், மரியா ஷரபோவா டென்னிஸ் வலை மீது ஷூவை வைத்திருக்கும் படத்தை வெளியிட்டு, சச்சின் டெண்டுல்கர் மைதானத்தைத் தொட்டுக் கும்பிடும் படத்தையும் வெளியிட்டு, 'டியர் மரியா ஷரபோவா இதுதான் சச்சின்' என்று பதிவிடப்பட்டுள்ளது.
மற்றொரு ட்வீட்டில் "நீ ஆடும் ஒவ்வொரு ஷாட்டிற்கும் சத்தம் எழுப்புகிறாய், ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டிற்கு ரசிகர்கள் சப்தம் எழுப்புகின்றனர். அவர் கடவுள், நீ சாதாரண பிளேயர்' என்று பதிவிடப்பட்டுள்ளது.
வசைகள், கேலி - கிண்டல்களுக்கு இடையே ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் நிறைய ட்வீட்கள் வந்துள்ளன. 'இதுவல்லாமல் ஷரபோவாவுக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியவில்லை இதனால் ஆகப்போவதென்ன' என்று சில நடுநிலை பதிவர்களும் கூறியுள்ளனர்.
நன்றி: ஹிந்து நாளிதழ்
இது போன்ற கூத்துக்கள் நமது இந்தியாவில்தான் நடைபெறும். ஒரு சாதாரண கிரிக்கெட் வீரரை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நம்மால்தான் முடியும். அதே ரசிகர்களிடம் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார் என்றால் தெரியாது. கால் பந்தாட்ட அணியில் ஒருவரின் பெயரும் தெரியாது.
அவ்வளவு ஏன் மேலே படத்தில் உள்ள சீதா சாகு என்ற பெண்மணி ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். முறையே 200 மீட்டர் 1600 மீட்டர் ஓட்டத்தில் 2011 ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நமது நாட்டுக்கு பெருமை தேடி தந்தார். இடையில் அவரது அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. எனவே பள்ளி செல்வதை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அந்த அளவு வறுமை அந்த குடும்பத்தை வாட்டி வதைத்தது. குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றார். இன்று பழங்களை விற்றுதனது குடும்பத்தின் வறுமையை போக்கி வருகிறார். இவரை யாராவது நினைத்தோமா? இந்த சகோதரியின் மேல் படிப்புக்கு நமது அரசு என்ன செய்தது? கோடிகளில் புரளும் இந்த கிரிக்கெட்டால் பலர் சூதாட்டத்தில் விழுந்ததுதான் மிச்சம். கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு ஏன் தரப்படுவதில்லை. ஒரு வேளை பார்பனர்கள் மற்ற விளையாட்டுகளில் நுழைய ஆரம்பித்தால் அதன் முக்கியத்துவம் கூடுமோ என்னவோ? :-)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment