'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, November 01, 2011
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
By BADEA ABU AL-NAJA | ARAB NEWS
Published: Nov 1, 2011 01:54 Updated: Nov 1, 2011 01:56
MAKKAH: Custodian of the Two Holy Mosques King Abdullah urged Islamic scholars and preachers on Monday to reach out to non-Muslim communities and said the message of Islam came addressing the whole humanity, not a particular community.
“We have to open up to other communities because the message of Islam does not address a particular community excluding others. In fact, it is a message for the whole humanity,” the king said in his opening speech at the 12th Makkah conference.
The king’s speech was read out by Makkah Gov. Prince Khaled Al-Faisal. The three-day conference is organized by the Muslim World League.
King Abdullah emphasized the duty of Muslims to spread the message of Islam all over the world. “Despite the material progress achieved by man, he is still suffering from a lack of spirituality,” he said while emphasizing the importance of dawa work.
In his keynote speech, King Abdullah said Islam is a comprehensive religion of peace and mercy. “The message of Islam explains how man and woman on this earth should live, with all its details.”
The king continued: “Islam alone presents a complete way of life based on divine values and presents a balanced approach toward life. It can save them from the present dilemma while protecting their material achievements.”
King Abdullah called for reforms in dawa work, keeping pace with modern developments. “We have to carry on dawa work with the intent of spreading our religion among other nations in the right form, highlighting its moderate teachings,” he said.
He said preachers should be able to address modern issues in the light of Islamic teachings and make use of modern information technology.
King Abdullah emphasized the fact that Muslims should change their lifestyle and behavior in accordance with the teachings of Islam to remove the existing poor impression about them from the minds of other communities.
“Setting a good example is the best way to defend Islam and encourage others to embrace our religion,” the king said while noting the Kingdom’s efforts in the service of Islam and Muslims all over the world.
Saudi Arabia builds mosques, Islamic centers, institutes and schools in different parts of the world. It also finances a number of Islamic research chairs in leading international universities.
King Abdullah took the initiative to promote dialogue between followers of different faiths and cultures and establish an international counterterrorism center in New York. “There is a single entity derived from the Qur’an and Sunnah. Islam cannot be classified as political and nonpolitical or extremist and moderate.”
King Abdullah commended the efforts being made by MWL to introduce Islam and confront the smear campaigns against Islam and Muslims.
Sheikh Abdul Aziz Al-Asheikh, grand mufti, Abdullah Al-Turki, secretary-general of MWL, and Yousuf Salama, imam and khateeb of Al-Aqsa Mosque, also addressed the opening session. “Islamic preaching is a duty imposed on Muslims by the Shariah,” said Al-Turki.
The grand mufti denounced the move by enemies to tarnish the image of Islam. “Islamic preachers are not terrorists. If any individual has made any mistake it should not be generalized,” he said and stressed the need to do dawa with wisdom.
சவுதி மன்னர் குர்ஆனும் நபிமொழியும் என்ன சொல்கிறதோ அதனையே வழிமொழிகிறார். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே இஸ்லாத்தை போதித்துக் கொண்டிருக்காமல் அனைத்து மக்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாத்தின் மேல் மாற்றார்கள் செலுத்திய எதிர்ப்புகளை அன்போடு எடுத்து சொல்லி உண்மையை விளங்க வைக்க வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும்.
'மனிதர்களே! இத்தூதர்(முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கு சிறந்தது'
-குர்ஆன் 4:170
-----------------------------------------------------
kindly translate to தமிழ். – கண்ணன்
நண்பர் கண்ணனின் வேண்டு கோளுக்கினங்க மன்னர் அப்துல்லாவின் செய்தியின் தமிழாக்கத்தின் சுருக்கம்:
'முஸ்லிம் வேல்ட் லீக்' என்ற அமைப்பின் சார்பில் மூன்று நாட்கள் மெக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னர் அப்துல்லா உலக மக்களுக்கு விடுத்த செய்தி:
'இஸ்லாம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கோ உரியதன்று. இது முழு உலக மனித குலத்துக்கும் சொந்தமானது. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற அழகிய வழிமுறையை நமக்கு கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம். வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு சரி செய்து கொள்வது என்பதற்கும் இங்கு வழி இருக்கிறது. தற்போது உலக மக்கள் அனுபவிக்கும் குழப்பமான பல நிலைகளுக்கு தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.
முஸ்லிம்கள் நாம் நம்முடைய அழைப்புப் பணியை புதிய அணுகு முறையில் கொண்டு செல்ல வேண்டும். கணிணி யுகத்துக்கு தக்கவாறு நமது அழைப்புப் பணியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் இன்றைய முன்னேறிய உலகுக்கு தக்கவாறு இஸ்லாம் வழங்கும் தீர்வுகளை மாற்றாருக்கு தெளிவாக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான அபிப்ராயம் மாற்றார் மத்தியில் உள்ளது. எனவே முஸ்லிம்கள் குர்ஆன் ஹதீஸ் சொன்னபடி தங்களது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிமகளாகிய நாம் சிறந்த உதாரணமாக இருந்தால்தான் மாற்றார் இஸ்லாத்தை நேசிக்க வழி வகுக்கும்.
சவதி அரேபியா உலகம் முழுவதும் இஸ்லாமிய கலாசார மையங்களை நிறுவி வருகிறது. பல நாடுகளில் பள்ளிவாசல்களையும் கட்டி வருகிறது. மார்க்கத்தை போதிக்க பல கல்விச் சாலைகளையும் நிர்வகித்து வருகிறது. இதை உலக முஸ்லிம்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
ஸலாம் நண்பரே
1, பிறருக்கு ஆலோசனை, அறிவுரை வழங்குவது மிக எளிதான செயல்.பின்பற்றுவது மிக மிக கடினம்.இஸ்லாம பரம்பரை மன்னர் ஆட்சியை ஆதரிக்கவில்லை.அதனை அரசர் அப்துல்லா பின்பற்றினால் நலம்.
இபோதைய புதிய இளவரசர் கூட அப்துல்லாவின் சகோதரரே!!!.ஏன் பிறருக்கு திறமை கிடையாதா?
2. அமெரிக்காவிற்கு அப்துல்லா கப்பம் கட்டும் வரை இவர்& வம்ச ஆட்சிக்கு எந்த குறையும் இருக்காது!!!!!!.அப்துல்லாவின் ஆட்சியை பாதுகாப்பது அமெரிக்காவே!!!!!!!!!!!
//The king continued: “Islam alone presents a complete way of life based on divine values and presents a balanced approach toward life. It can save them from the present dilemma while protecting their material achievements.”//
3.இச்சூழ்நிலையில் இவர் (வஹாபி?) இஸ்லாம் மட்டும் என்று சொல்லும் பிரச்சாரத்தை எப்படி எடுப்பது? எந்த இஸ்லாம் என்பதும் அடுத்த பிரச்சினை.இஸ்லாம் பிற மதங்கள் போல்தான்.காலத்திற்கேற்றபடி இன்னும் பல சீர்திருத்தங்களுக்கு உட்படும் என்பது மட்டும் நிச்சயம்.
கடந்த கால சீர்திருத்தம் எ.கா சவுதியில் அடிமை முறை சட்ட விரோதம் ஆக்கப் பட்டது 1963ல்தான்.
http://www.bbc.co.uk/religion/religions/islam/history/slavery_1.shtml
நன்றி
kindly translate to தமிழ்.
//இஸ்லாம பரம்பரை மன்னர் ஆட்சியை ஆதரிக்கவில்லை.//
அப்டியா?
சலாம் சார்வாகன்!
//1, பிறருக்கு ஆலோசனை, அறிவுரை வழங்குவது மிக எளிதான செயல்.பின்பற்றுவது மிக மிக கடினம்.இஸ்லாம பரம்பரை மன்னர் ஆட்சியை ஆதரிக்கவில்லை.அதனை அரசர் அப்துல்லா பின்பற்றினால் நலம்.
இபோதைய புதிய இளவரசர் கூட அப்துல்லாவின் சகோதரரே!!!.ஏன் பிறருக்கு திறமை கிடையாதா?//
'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதருக்கும்(முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்'
-குர்ஆன் 4:59
இங்கு இறைவன் 'அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்' என்று கூறுகிறான். எனவே நம் நாட்டை ஆளக் கூடிய ஆட்சியாளருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிகிறோம். இஸ்லாத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட ஆட்சி முறையை குறிப்பிட்டு சொல்லவில்லை. மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருந்தாலும் மக்களை நன்றாக வைத்திருக்க வேண்டும்.
ஜனநாயக நாடு என்று மார் த்ட்டிக் கொள்ளும் நம் நாட்டின் நிலையை போன பஞ்சாயத்து தேர்தல்களில் கண்ணார பார்த்தோம். பிரியாணிக்கும், ஒரு குவார்ட்டருக்கும் ஓட்டுக்கள் விற்கப்படுகிறது. எங்கும் லஞ்சம். எதிலும் லஞ்சம். பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான். ஏழை மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கிறான். நமது நாட்டின் வருங்காலத்தை நினைத்தால் மிகவும் அச்சமாக இருக்கிறது. கொலை கொள்ளைகள் மலிந்து விட்டது. இத்தனை சோகங்களை சுமந்து கொண்டு ஜனநாயக நாடு என்று பெருமை பேசுவதை விட சவுதியை போன்ற மன்னராட்சி எவ்வளவோ தேவலாம் என்பேன்.
'தாவூதுக்கு(டேவிட்டுக்கு) சுலைமான்(சாலமோன்) வாரிசானார்.'
-குர்ஆன் 27:16
ஆட்சி அதிகாரத்தில் வாரிசுகள் வருவதற்கு குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கிறது. 'பைஅத்' அதாவது ஆட்சியாளரின் கைகளை பிடித்து 'உங்களுக்கு கட்டுப்படுகிறேன்' என்று வாக்கு கொடுப்பதற்கும் குர்ஆனில் ஆதாரம் உண்டு. ஏறக்குறைய நமது தேர்தல் முறையை ஒத்து. எந்த ஆட்சி முறையாக இருந்தாலும் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும்.
மன்னராட்சி இஸ்லாத்துக்கு எதிரானது என்று எந்த குர்ஆன் வசனம் சொல்கிறது? கொஞ்சம் விளக்குங்கள்.
சலாம் சார்வாகன்!
//2. அமெரிக்காவிற்கு அப்துல்லா கப்பம் கட்டும் வரை இவர்& வம்ச ஆட்சிக்கு எந்த குறையும் இருக்காது!!!!!!.அப்துல்லாவின் ஆட்சியை பாதுகாப்பது அமெரிக்காவே!!!!!!!!!!!//
மக்கள் நலமாக இருப்பதற்கு சில எலும்புத் துண்டகளை போடுவதால் சவுதி கஜானா ஒன்றும் குறைந்து விடாது. பாவம் அந்த மக்களும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள் அல்லவா!
//3.இச்சூழ்நிலையில் இவர் (வஹாபி?) இஸ்லாம் மட்டும் என்று சொல்லும் பிரச்சாரத்தை எப்படி எடுப்பது? எந்த இஸ்லாம் என்பதும் அடுத்த பிரச்சினை.//
குர்ஆனும் ஹதீஸும் எதை போதித்ததோ அதுதான் இஸ்லாம். அதைத்தான் வஹ்ஹாப் அவர்களும் பிச்சாரம் செய்தார். அது நீடிப்பதுதானே முறை. நம் தமிழகத்திலும் தர்ஹாக்கள் இடிக்கப்பட்டு கல்வி சாலைகள் அதி விரைவில் உருவாக்கப்படும். கவலைப்படாதீர்கள்.
//இஸ்லாம் பிற மதங்கள் போல்தான்.காலத்திற்கேற்றபடி இன்னும் பல சீர்திருத்தங்களுக்கு உட்படும் என்பது மட்டும் நிச்சயம்.
கடந்த கால சீர்திருத்தம் எ.கா சவுதியில் அடிமை முறை சட்ட விரோதம் ஆக்கப் பட்டது 1963ல்தான்.//
அடிமை முறை கூடாது என்பதற்காககத்தான் இஸ்லாம் பல தவறுகளுக்கு பிராயச்சித்தமாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மதுவை தடை செய்தது போல் அன்றே ஏன் தடை செய்யவில்லை என்பதற்கான காரணத்தை உங்களுக்கு நான் முன்பே விளக்கியிருக்கிறேன்.
திரு கண்ணன்!
//kindly translate to தமிழ்.//
உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தருமி!
//இஸ்லாம பரம்பரை மன்னர் ஆட்சியை ஆதரிக்கவில்லை.//
அப்டியா?//
சார்வாகனுக்கு கொடுத்த பதிலை படித்து விட்டீர்கள்தானே!
வாஞ்சூர் அண்ணன்!
//அடியிற்கண்ட சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.//
மிகச்சிறந்த காணொளிகளை தேடிப் பிடித்து கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி!
சவதி அரேபியா உலகம் முழுவதும் இஸ்லாமிய கலாசார மையங்களை நிறுவி வருகிறது. பல நாடுகளில் பள்ளிவாசல்களையும் கட்டி வருகிறது. மார்க்கத்தை போதிக்க பல கல்விச் சாலைகளையும் நிர்வகித்து வருகிறது. இதை உலக முஸ்லிம்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் பாதுகாப்பில் வாழும் சவுதி மன்னர் ஒரு மதவெறியரே!
சார்வாகன்!
//அதாகப் பட்டது இந்த விஷயங்கள் அனைத்துமே சுகங்கள். அதனை இஸ்லாமியர்கள் அல்லா குரானில் சொல்லி விட்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே தவிர்க்கின்றனர்.ஆனால் சில விவரமில்லாத இந்துக்கள் இயல்பாகவே தவிர்க்கின்றனர். இவர்களுக்கு சுவனத்தில் இதற்கான வெகுமதி கிடைக்காது!!!!!!!!!ஹா ஹா ஹா//
'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் (யூத, கிறித்தவ மதத்தை சாராத மற்றவர்கள். எ.கா இந்துக்கள்)இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்'
-குர்ஆன் 2:62
குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதர் தெரஸா போன்றவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளாக இருந்து இறைபணியை முழுமையாக செய்திருந்தால் நிச்சயம் இறைவனிடம் அவர்களின் செயல்களுக்கேற்ற கூலி தருவதாக இறைவன் குர்ஆனில் கூறுகிறானே சார்வாகன்.....
பலீனோ!
//அமெரிக்காவின் பாதுகாப்பில் வாழும் சவுதி மன்னர் ஒரு மதவெறியரே!//
எந்த அடிப்படையில் அவரை மதவெறியர் என்கிறீர்கள்? ஒரு கொள்கையை கட்டாயம் கடை பிடி என்று துன்புறுத்தினால் உங்கள் வாதத்தில் நியாயம் இருக்கிறது. ஒரு கொள்கையை பரப்புவதை மத வெறி என்று சொன்னால் உலகில் எங்குமே கூட்டம் போட முடியாது: பத்திரிக்கைகள் நடத்த முடியாது: மனிதனின் சுதந்திரமும் பறி போகும்.
'முஹம்மதே! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்கு முறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவனுக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக!'
-குர்ஆன் 50:45
//குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதர் தெரஸா போன்றவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளாக இருந்து இறைபணியை முழுமையாக செய்திருந்தால் நிச்சயம் இறைவனிடம் அவர்களின் செயல்களுக்கேற்ற கூலி தருவதாக இறைவன் குர்ஆனில் கூறுகிறானே சார்வாகன்..... //
அய்யோ பாவம் அந்த மூவரும்.
உட்ருங்க அவங்களை.
நானே இந்த ஓட்டம் ஓடுறேன். அவங்க கிட்டே உங்க சுவனம் பற்றிச் சொன்னால் காத தூரம் பாய்ஞ்சு ஓடீர மாட்டாங்க ...?
Brother,
Assalamu Alaikkum.
Islam doesn't allow dynasty politics.
You are giving a wrong example of Dawood and sulaiman. They were appointed by Allah.. Here Saudi Kings are not appointed by Allah..but by themselves. THey are answerable to Allah. Allah knows the best
//Brother,
Assalamu Alaikkum.
Islam doesn't allow dynasty politics.
You are giving a wrong example of Dawood and sulaiman. They were appointed by Allah.. Here Saudi Kings are not appointed by Allah..but by themselves. THey are answerable to Allah. Allah knows the best//
வஅலைக்கும் சலாம்!
மன்னராட்சியை குர்ஆன் தடை செய்கிறது என்று நீங்கள் சொன்னால் அதற்கு நேரிடையான தடையை குர்ஆனிலிருந்தோ ஆதாரபூர்வமான ஹதீதுகளிலிருந்தோதான் நீங்கள் காண்பிக்க வேண்டும். உங்களின் சொந்த விருப்பு வெறுப்பை மார்க்க விஷயத்தில் நுழைக்க அனுமதி இல்லை.
மன்னராட்சி ஏற்படும் என்று முகமது நபியவர்கள் கணித்து சொன்ன ஆதாரபூர்வமான ஹதீதையும் கீழே நான் தந்துள்ளேன். குர்ஆன் வசனம் ஒன்றையும் முன்பே நான் தந்துள்ளேன். முகமது நபி சொன்னது போல் மன்னராட்சி சவுதியில் ஏற்பட்டது அவர்கள் நபிதான் என்பதற்கு மற்றொரு ஆதாரமாகவும் இருக்கிறது. இதே நபியவர்கள்தான் இந்த மன்னராட்சி முடிவுக்கு வந்து நபித்துவ ஆட்சி திரும்பவும் மலரும் என்கிறார்கள்.
ஏசு நாதர்(ஈசா நபி) திரும்பவும் இவ்வுலகுக்கு வரும் போது அந்த நிலை ஏற்படும் என்பது தெளிவாகிறது. அல்லது இறைவன் நாடினால் அதற்கு முன்பே கூட சவுதியில் இஸ்லாமிய குடியரசு மலரலாம். அது எப்பொழுது என்பது இறைவனுக்கே தெரியும்.
'நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று இறைவன் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு இறைவன் நாடும்போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாபத் ஆட்சி அமையும். பிறகு இறைவன் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அதன் பிறகு அடக்கு முறை கொண்ட மன்னராட்சி அமையும். பிறகு இறைவன் நாடும்போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாபத் ஆட்சி அமையும் என்று கூறி நபியவர்கள் அமைதியாகி விட்டார்கள்.'
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
ஆதாரம் நூல்: அஹமத் 17680
கோவி கண்ணன்!
//எனக்கு நித்ய கன்னிகைகள் மீது ஆசை இல்லை. எனக்கு அந்த சுவனம் வேண்டாம். :)//
உங்கள் விதிப்படி மறுமையில் நீங்கள் சுவனம் புகுவதாக இருந்தால் நீங்கள் விரும்பாவிட்டாலும் வானவர்கள் உங்களை வலுக்கட்டாயமாக சுவனத்தில் தள்ளி விடுவார்கள். இனி வரும் காலங்களில் உண்மையை உணர்ந்து நாத்திகத்திலிருந்து ஆத்திகராக மாறி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு நீங்கள் தள்ளப்படலாம். யார் கண்டது? :-(
கோவி,
//எனக்கு நித்ய கன்னிகைகள் மீது ஆசை இல்லை. எனக்கு அந்த சுவனம் வேண்டாம். :)//
ஆமாம் கோவி. ஆசை இருக்கோ இல்லியோ .. வேண்டாங்க .. ரொம்ப அசிங்கமா இருக்கு!
//உங்கள் விதிப்படி மறுமையில் நீங்கள் சுவனம் புகுவதாக இருந்தால் நீங்கள் விரும்பாவிட்டாலும் வானவர்கள் உங்களை வலுக்கட்டாயமாக சுவனத்தில் தள்ளி விடுவார்கள். //
என்னங்க கோவி .. இந்த மாதிரி ஒரு டேஞ்சர் இருக்கே. கழுத்தைப் பிடிச்சி தள்ளுனா என்ன ஆவுறது? ஆக .. நல்ல மனுசனா இருந்தா இப்படியும் நடக்குமாமோ...
என்ன பண்ணலாம் .. யோசிச்சி சொல்லுங்க ..!
முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிற மதத்தினருக்கும் சொந்தம் என்று அறிக்கை விட சுவுதி மன்னர் என்ன இஸ்லாத்தின் ஓனரா என்ன?
அவருக்கு சொந்தாமாயிருப்பது சவுதி மண். அது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிற மதத்தினருக்கும் சொந்தம். அதனால் கிறுத்தவர்கள், யூதர்கள்,இந்துக்கள் பெளத்தர்கள் என எல்லா பிற மதத்தாரும் கோவில் கட்டலாம், விழா கொண்டாடலாம் எனச் சொல்லலாமே?
அட அதுக்கூட வேணாம், அட்லீஸ்ட் மெக்கா முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிற மதத்தினருக்கும் சொந்தம். அதனால் அவுங்களும் நுழையலாம் என்றாவது சொல்லலாமே?
அதை விடுத்து அடுத்தவனுங்க வேண்டாமுன்னு ஓடுற ஐட்டத்தை நைசாக அவர்கள் தலையில் கட்டப்பார்க்கறாரே உமது கில்லாடி மன்னர்!
//கில்மான்கள் = அடிமைச் சிறுவர்கள்
பதில் தேடி இது கிடைத்தது. சரிதானே?
இது நான் சொன்னதை விட
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அசிங்கம்’லா?//
நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்.' என்று லூத் கூறினார்.
-குர்ஆன் 7:81
'நமது கட்டளை வந்த போது அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து அதன் மேற்பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.
அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் இந்த அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.'
-குர்ஆன் 11:82,83
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். அவர்கள் திருந்தாத காரணத்தால் அந்த ஊரையே தலைகீழாக புரட்டி எடுத்து விட்டதாக இறைவன் கூறுகிறான். அந்த இடம் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆகியுள்ளது. Dead Sea 'இறந்த கடல்' என்று ஜோர்டான் கடல் பகுதியில் இன்றும் அந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம். அந்த கடல் பகுதிகளுக்குள் மீன்கள் வந்தாலும் இறந்து விடுகிறதாம். அந்த அளவு உப்பின் அளவு மற்ற கடல்களை விட அதிகரித்திருப்பதே காரணம். குர்ஆன் பெரும்பாவங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையை கண்டித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற பொயயை நெஞ்சறிந்து சொல்லலாமா?
'அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்'
-குர்ஆன் 52:24
'இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும் தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்'
-குர்ஆன் 56:17,18
இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!
//சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான்.//
சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பணிவிடை செய்ய அனுப்பும் சுரண்டல்கார சுயநலவாதியாக இருக்கிறானே இறைவன்?
இறைவனே இப்படி தவறு செய்யதால் பூமியில் மனுசன் என்னவெல்லாம் செய்வான்?
சக நீதிபதிகள் தன்னை அவமானபடுத்துகிறார்கள் : நீதிபதி சி.எஸ்.கர்ணன் புகார் !சக நீதிபதிகள் தன்னை அவமானபடுத்துகிறார்கள் : நீதிபதி சி.எஸ்.கர்ணன் புகார் !
பதிவு செய்த நாள் : 11/3/2011 17:28:26-Dinakaran daily
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் புகார் தெரிவித்துள்ளார். தன்னுடன் பணிபுரியும் சக நீதிபதிகள் நான் தலித் இனத்தை
சேர்ந்தவன் என்று தன்னை இழிவுபடுத்துவதாக அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்க்கு 2009 ஆம் ஆண்டு கொடுமைகள் இழைக்கப்பட்டதாகவும் இதுப்பற்றி தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.
அனானி!
//முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிற மதத்தினருக்கும் சொந்தம் என்று அறிக்கை விட சுவுதி மன்னர் என்ன இஸ்லாத்தின் ஓனரா என்ன?//
'இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது. இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குர்ஆன் 2:185
இந்த இடத்தில் இறைவன் முஸ்லிம்களை பார்த்து மடடும் கூறவில்லை. 'மனிதர்களே' என்று உலக மக்கள் அனைவரையும் அழைத்துதான் இறைவன் உபதேசிக்கிறான். எனவே குர்ஆனின் வார்த்தையைத்தான் மன்னர் பிரதிபலிக்கிறார்.
//அவருக்கு சொந்தாமாயிருப்பது சவுதி மண். அது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிற மதத்தினருக்கும் சொந்தம். அதனால் கிறுத்தவர்கள், யூதர்கள்,இந்துக்கள் பெளத்தர்கள் என எல்லா பிற மதத்தாரும் கோவில் கட்டலாம், விழா கொண்டாடலாம் எனச் சொல்லலாமே?//
அது எப்படி? அங்கு முன்பு குடியிருந்த சிலைவணங்கிகள், கிறித்தவர்கள், யூதர்கள் அனைவரும் மதம் மாறி முஸ்லிம்களாகி விட்டனரே! சவுதியில் 100 சதவீதம் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர்.
//அட அதுக்கூட வேணாம், அட்லீஸ்ட் மெக்கா முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல, பிற மதத்தினருக்கும் சொந்தம். அதனால் அவுங்களும் நுழையலாம் என்றாவது சொல்லலாமே?//
மற்ற மக்களும் விருப்பப் பட்டால் முஸ்லிம்களாக மாறி மெக்காவுக்குள் வரலாம். வருடா வருடம் நம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்து வழிபடுகிறாரே! மற்ற மதத்தவரை அனுமதித்தால் அங்கு இறைவன் அல்லாத சிலைகளையும் வைத்து வணங்க ஆரம்பித்து விடுவர்.எனவெதான் இறைவன் அங்கு முஸ்லிம்களை மட்டும் அனுமதிக்கச் சொல்லி கட்டளையிடுகிறான்.
//அது எப்படி? அங்கு முன்பு குடியிருந்த சிலைவணங்கிகள், கிறித்தவர்கள், யூதர்கள் அனைவரும் மதம் மாறி முஸ்லிம்களாகி விட்டனரே! சவுதியில் 100 சதவீதம் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர்.//
இது மகா அநியாயமாக இருக்குதே. அவர்களை நிம்மதியாக இருக்க விட்டால்தானே அவர்களின் சொந்த மதத்தில் இருப்பார்கள்?
சவுதி பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகள் ஆட்டோமேட்டிக்காக முசுலிம்களாவே கருதப்படுவார்கள். அப்புறம் மதம் மாறினால் மரணதண்டனை, முடிந்தது கதை! 2008-ல் கிருத்துவராக மதம் மாறிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? அவளின் நாக்கை வெட்டி பின் உயிரோடு எரித்து விட்டார்கள் அப்புறம் எப்புடி பிற மதத்தை சுதந்திரமாக கடைபிடிக்க இயலும்.
வேலைக்கு செல்லும் பிற நாட்டவரும் மதம் மாற சவுதி முதலாளிகள் நிர்பந்திப்பது உலகறிந்துதானே!
//மற்ற மக்களும் விருப்பப் பட்டால் முஸ்லிம்களாக மாறி மெக்காவுக்குள் வரலாம்//
இது தெரிந்த விடயம்தானே ஐயா. 1979-ம் ஆண்டு மெக்கா மசூதி முசுலிம் தீவிரவாதிகளால் கைப்பற்ற போது அதை மீட்க பிரான்சு நாட்டிடம் கதறிய சவுதிக்கு உதவ அனுப்பட்ட கமெண்டோக்களை மெக்காவுள் நுழைவதற்கு முன்பு முசுலிமாக மதமாற்றம் செய்து அனுப்பினார்கள். பிராஞ்சு கமெண்டோக்களும் பிரான்ஸில் முசுலிம்கள் மதம் மாறினால் யாரும் போட்டு தள்ள மாட்டார்கள் என்பதால் ஒத்துக் கொண்டார்களாம்.
நிற்க. சவுதியில் சிலைகளை வைத்தால் என்ன தண்டனை என அனைவரும் அறிந்ததுதானே, பிறகு மெக்காவில் சிலை வைப்பது நடக்கக்கூடிய காரியமா? இது இறைவன் அறியாததா? மேலும் இசுலாமே பிற மதத்தவர்களுக்கும் சொந்தமென்றாகி விட்ட பிறகு மெக்காவையும் சொந்தமாக்கி விடலாமே.
அனானி!
//இது மகா அநியாயமாக இருக்குதே. அவர்களை நிம்மதியாக இருக்க விட்டால்தானே அவர்களின் சொந்த மதத்தில் இருப்பார்கள்?//
எது அநியாயம்? உதாரணத்துக்கு நம் தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். நமது மூதாதயர்கள் சிலை வணங்கிகளாகவோ, பல தெய்வ வணக்க முடையவர்களாகவோ இருக்கவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைதான் தமிழ் மண்ணுக்கு சொந்தமான கொள்கை. அதே போல் 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்ற சித்தர் பாடல்களும் நம் நாட்டில் பிரசித்திப் பெற்றது. இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது! நமது முன்னோர்கள் வணங்கிய வழி முறைகளை விட்டு விட்டு இடையில் வந்த ஆரியர்களின் பழக்கத்தை சுவீகரித்துக் கொண்டது யார் செய்த தவறு?
அடுத்து இந்து மத வேதங்களும் பல தெய்வ வணக்கத்துக்கும் சிலை வணக்கத்துக்கும் எதிராகவே உள்ளது. ஆதாரம் வேண்டுமானால் தருகிறேன்.
//சவுதி பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகள் ஆட்டோமேட்டிக்காக முசுலிம்களாவே கருதப்படுவார்கள்.//
நீங்கள் இந்து மத பெற்றோருக்கு பிறந்ததனால் இன்று இந்துவாக இருக்கிறீர்கள். அதுபோல்தான் அவர்களும்.
//அவளின் நாக்கை வெட்டி பின் உயிரோடு எரித்து விட்டார்கள் அப்புறம் எப்புடி பிற மதத்தை சுதந்திரமாக கடைபிடிக்க இயலும்.//
கற்பனையான தகவலை தர வேண்டாம். இதற்கு ஆதாரம் தர முடியுமா?
அடுத்து இந்தியாவை பொறுத்தவரை இந்துவாக இருப்பதுதான் பாதுகாப்பு. ஏனெனில் பெரும்பான்மை இந்துக்கள். குஜராத்தில் மோடி அரசு முஸ்லிம்களை எந்த அளவு கொடுமைபடுத்தியது என்பது நினைவிருக்கலாம். இவ்வளவு கொடுமைக்கு பிறகும் ஏதாவது ஒரு முஸ்லிமாவது இந்துவாக மாறினார்களா? நம் தமிழகத்தில்தான் அப்படி ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துள்ளதா?
பிரபலமான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நமக்கு தெரிந்து முஸ்லிமாக மாறினார். இந்து மதத்துக்கு திரும்பினால் அதை யார்தான் தடுக்க முடியும். அது அவரக்கு மேலம் இந்தியாவில் பெருமையைத்தானே சேர்க்கும். ஆனால் மாற மாட்டார். ஏனெனில் இஸ்லாமிய கொள்கை அவரை அந்த அளவு கட்டிப் போட்டு வைத்துள்ளது. இந்த நிலைதான் எங்குமே!
//மேலும் இசுலாமே பிற மதத்தவர்களுக்கும் சொந்தமென்றாகி விட்ட பிறகு மெக்காவையும் சொந்தமாக்கி விடலாமே.//
ஆதியில் நம் முன்னோர்கள் கடை பிடித்த 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு வாருங்கள். உங்களை நானே மக்காவுக்குள் அழைத்துச் செல்கிறேன்.
அடுத்து நேற்று நீதிபதி கர்ணன் தன் மீது வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். இதுதான் நம் பாரத மண்ணின் பெருமை.
//இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!//
fantastic explanation!
//ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். //
ஆஹா! இதுவும் நல்லா இருக்கு.
ஆனால் ஒரு விசயம் ரொம்ப உதைக்குதே!
இந்த உலகத்தில் தண்ணி அடிக்காதே என்கிற உங்களிறைவன் ஏன் தண்ணியை நதியாகவே சுவனத்தில் ஒட விட்டிருக்கிறான்.
//இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு// இப்படிச் சொல்லிவிட்டு, இந்த உலகத்தில் பாலின உறவுகளுக்குச் சட்ட திட்டம் போட்ட உங்களிறைவன் ஏன் ’தலைக்கு 72 பிடி’ என்று அப்படி ஒரு ‘கூலி’யைச் சுவனத்தில் இவ்வளவு தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுக்கிறான்? அநியாயமாகவும் அக்கிரமாகவும் தெரியுதே!
இதைத்தான் நான் முன்பே கேட்டேன். இந்த உலகில் மதுவும், மாதுவும் தவறானவை என்று சொல்லி நம்மிடமிருந்து ஒதுக்கிய அல்லா எப்படி மறு வாழ்க்கையில் ஒதுக்கிய அத்தீமைகளைக் கூலியாக ‘தாராள மனசோடு’ இப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன் என்றுதான் கேட்டிருந்தேன். அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.
இதே போல் தான் கில்மான் விவகாரமும். இங்கு தடை; அங்கே அப்படியில்லையோ!
நல்லா இருக்கு உங்க மதச்சட்டங்கள்!
விக்கியில் கில்மானுக்குக் கொடுத்த வாசகங்கள்: The ghilman are also credited with producing a strongly homosexual sub-culture which left literary traces in Persian poetry.
According to the Qur'an, the ghilman are creatures who work in alongside their female counterparts called the houris in Paradise, in the service of the righteous Muslims. The promise of this reward is repeated four different times in the Qur'an.
//நமது முன்னோர்கள் வணங்கிய வழி முறைகளை விட்டு விட்டு இடையில் வந்த ஆரியர்களின் பழக்கத்தை சுவீகரித்துக் கொண்டது யார் செய்த தவறு? அடுத்து இந்து மத வேதங்களும் பல தெய்வ வணக்கத்துக்கும் சிலை வணக்கத்துக்கும் எதிராகவே உள்ளது.//
ஒரே முரண்பாடாய் இருக்குதே? இந்துமத வேதங்கள் பல தெய்வ வணக்கத்துக்கும் சிலை வணக்கத்துக்கும் எதிராகவே உள்ளது என்கிறீர்கள். ஆனால் ஆரியர்களின் வழக்கம் பல தெய்வ வழிபாடு என்கிறீர்கள் இந்து மத வேதங்கள் ஆரியர்களால் இயற்றப்பட்டவை அல்லவா?
//'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைதான் தமிழ் மண்ணுக்கு சொந்தமான கொள்கை.//
அப்பிடியா? மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன், முல்லை நிலத்துக்குரிய தெய்வம் திருமால், மருத நிலத்துக் குரிய தெய்வம் இந்திரன், நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் வருணன், தெய்வம் பாலை நிலத்துக்கு உரிய தெய்வம் கொற்றவை எனும் பெண் இவையை பழந்தமிழர் தெய்வங்களாகும். இவை ஒன்றல்ல. இதற்கு முன்பு தமிழர் மரம் சூரியம் போன்ற இயற்கை வழிபாடு செய்துள்ளனர்.
//நீங்கள் இந்து மத பெற்றோருக்கு பிறந்ததனால் இன்று இந்துவாக இருக்கிறீர்கள். அதுபோல்தான் அவர்களும்//
ஆனால் நான் நாளை, என்னை இந்துவாக தவறாக கருதிவிட்டார்கள், நான் உண்மையில் கிருத்தவன் என நம்பினால் சர்சுக்கு போக இயலும். ஆனால் சவுதி குடிமகன் செய்ய இயலுமா?
//கற்பனையான தகவலை தர வேண்டாம். இதற்கு ஆதாரம் தர முடியுமா?//
இதற்கான ஆதாரத்தை தனி பின்னூட்டமாய் போடுகிறேன். அப்பதான் உமக்கு டெலீட் பண்ண வசதியாயிருக்கும்.
ஆமாம், நீர் இந்தியாவில் ஊழல் ஜாதிவெறி பத்தியெல்லாம் தேதிவாரியாக பதிவு செய்கிறீரே, உமக்கு உதவியாக இருக்கும் என்று அந்த நாட்டின் தலைநகத்தில் நிலவும் வறுமை, ஊழல் பத்தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியினை பின்னூட்டமாக போட்டிருந்தேனே? அதை ஏன் நீக்கினீர். ஆங்கிலத்திலிருக்கும் அந்த செய்தியினை வெளியிட்டால் உமது அங்கங்களுக்கு பங்கம் இல்லாமல் இந்தியா வந்து சேர இயலாது என்பதினால் தானே? இந்தியாவில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் தலைவர்களை அவர்களின் தவறுக்காக திட்டலாம், தண்டிக்கலாம். ஆனால் அங்கு வாயை எதிர்த்து திறந்தால் வாயில் வெட்டுவார்கள்தானே? இதனால் தான் இசுலாம் கம்யூனிசம் இவற்றை பார்த்தாலே பயமாயிருக்கிறது.
//ஆதியில் நம் முன்னோர்கள் கடை பிடித்த 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு வாருங்கள். உங்களை நானே மக்காவுக்குள் அழைத்துச் செல்கிறேன்.//
முதலில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இதை கடைபிடிக்கும் யூதர்களையும் கிருத்தவரையும் அழைத்து செல்லலாமே!
தருமி!
//விக்கியில் கில்மானுக்குக் கொடுத்த வாசகங்கள்: The ghilman are also credited with producing a strongly homosexual sub-culture which left literary traces in Persian poetry.
According to the Qur'an, the ghilman are creatures who work in alongside their female counterparts called the houris in Paradise, in the service of the righteous Muslims. The promise of this reward is repeated four different times in the Qur'an.//
விக்கியில் வரும் செய்திகள் எல்லாம் குர்ஆனுக்கோ அரபு மொழிக்கோ ஆதாரமாக கொள்ள முடியாது. விக்கியில் வரும் செய்திகளை நானோ நீங்களோ கூட உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
மதுரையில் அரபு மொழி தெரிந்தவர்களிடம் 'கில்மான்களுக்கு' என்ன பொருள் என்று கேட்டுப் பாருங்கள். இல்லை என்றால் கூகுளில் அரபு டிக்சனரியில் 'கில்மான்கள்' என்று அரபியில் அடித்துப் பாருங்கள். 'யங்மென்' என்றுதான் பதில் வரும். நான் கொடுத்துள்ள ஒரு சுட்டியில் நீங்களும் முயற்ச்சித்து பார்க்கலாம்.
http://www.lexilogos.com/english/arabic_dictionary.htm
gilman=young men
//அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.//
முன்பு பதிலளித்த கேள்வியையே திரும்பவும் கேட்டால் என்ன செய்வது?
'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்'
-குர்ஆன் 4:124
'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்'
-குர்ஆன் 40:40
//இதைத்தான் நான் முன்பே கேட்டேன். இந்த உலகில் மதுவும், மாதுவும் தவறானவை என்று சொல்லி நம்மிடமிருந்து ஒதுக்கிய அல்லா எப்படி மறு வாழ்க்கையில் ஒதுக்கிய அத்தீமைகளைக் கூலியாக ‘தாராள மனசோடு’ இப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன் என்றுதான் கேட்டிருந்தேன்.//
இறைவன் தடுத்ததனால் என்னால் வட்டி வாங்க முடியவில்லை. ஒரு பாருக்கு சென்று மது அருந்த முடியவில்லை. எத்தனையோ பேர் சுலபமாக விபசாரத்தில் ஈடுபடும்போது நான் மட்டும் இறைவனுக்கு பயந்து ஒதுங்கி வாழ்கிறேன். இதனால் என் மேல் பிரியப்பட்ட நமது இறைவன் சொர்க்கத்தில் அத்தனை இன்பங்களையும் தருகிறான். தடுத்தவன்தானே என்னை அனுமதிக்கிறான்? இது ஏன் இவ்வாறு என்பதை மறுமையில் நீங்கள் இறைவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
அனானி!
//முதலில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' இதை கடைபிடிக்கும் யூதர்களையும் கிருத்தவரையும் அழைத்து செல்லலாமே!//
இந்த இருவரும் அந்த கொள்கையை விட்டு வெளியேறி வெகுநாட்களானது உங்களுக்கு தெரியாதா? தூதரான ஏசு எப்படி கடவுளாக்கப்பட்டார்? முந்தய வேதங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டிருந்தால் குர்ஆன் இறங்குவதற்கு வேலையே இருந்திருக்காது அல்லவா?
//இதற்கான ஆதாரத்தை தனி பின்னூட்டமாய் போடுகிறேன். அப்பதான் உமக்கு டெலீட் பண்ண வசதியாயிருக்கும்.//
தனி ஒரு மனிதன் தனது மகளின் நடவடிக்கை பிடிக்காமல் சில தண்டனைகளை கொடுத்தால் அதற்கு இஸ்லாமோ சவுதி அரசோ என்ன செய்ய முடியும்? நான் முன்பே சொன்னது பொல் விக்கிலீக்ஸில் வரும் செய்திகளெல்லாம் முழு நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல....
//ஒரே முரண்பாடாய் இருக்குதே? இந்துமத வேதங்கள் பல தெய்வ வணக்கத்துக்கும் சிலை வணக்கத்துக்கும் எதிராகவே உள்ளது என்கிறீர்கள். ஆனால் ஆரியர்களின் வழக்கம் பல தெய்வ வழிபாடு என்கிறீர்கள் இந்து மத வேதங்கள் ஆரியர்களால் இயற்றப்பட்டவை அல்லவா?//
இரண்டு கருத்துகளும் ஒரே வேதத்தில் எப்படி வர முடியும்? ஏக தெய்வ கொள்கையை ஆதரித்து வரும் வசனங்கள் அந்த வேதத்தின் உண்மையான வசனங்கள். பல தெய்வ வணக்கங்கள் வரும் இடங்களெல்லாம் மனிதர்கள் தங்கள் கைவரிசையை காட்டிய இடங்கள். எனவெ தான் அந்த வேதங்கள் சொந்த மக்களாலேயே தூரமாக்கப்பட்டுள்ளது.
//அப்பிடியா? மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன், முல்லை நிலத்துக்குரிய தெய்வம் திருமால், மருத நிலத்துக் குரிய தெய்வம் இந்திரன், நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம் வருணன், தெய்வம் பாலை நிலத்துக்கு உரிய தெய்வம் கொற்றவை எனும் பெண் இவையை பழந்தமிழர் தெய்வங்களாகும். இவை ஒன்றல்ல. இதற்கு முன்பு தமிழர் மரம் சூரியம் போன்ற இயற்கை வழிபாடு செய்துள்ளனர்.//
இவை எல்லாம் இறைவன் என்று சொன்னால் யார் நம்புவது. சொந்த மக்களே நம்பவில்லையே! இவை எல்லாம் தெய்வம் என்று யார் சொன்னது? வேதம் இறங்கியதா? அல்லது ஒரு தூதர் வந்து இவை எல்லாம் தெய்வம் என்று சொல்லி விட்டு சென்றாரா? இவை எல்லாம் மனிதர்கள் செய்த கற்பனைகளே!
இதை ஒத்துக் கொண்டால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சொற்றொடர் காலம் காலமாக புழக்கத்தில் உள்ளது எவ்வாறு?
//இந்த இருவரும் அந்த கொள்கையை விட்டு வெளியேறி வெகுநாட்களானது உங்களுக்கு தெரியாதா? தூதரான ஏசு எப்படி கடவுளாக்கப்பட்டார்? முந்தய வேதங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டிருந்தால் குர்ஆன் இறங்குவதற்கு வேலையே இருந்திருக்காது அல்லவா?//
மேலும் எல்லாக் கிருத்துவரும் ஏசுவை இறைவனாக கருதுவதில்லையே. பல சர்சுகள் அவரை கடவுளின் குமாரராகவே எண்ணுகிறார்கள். அப்படியே ஏசுவே கடவுள் என்போரும் ஒரே இறைவன் எனும் கருத்துடையோரே. எனவே யூதர் மற்றும் கிருத்துவரை மெக்காவில் அனுமதியும். யூதர்கள் என்ன பல இறை கொள்கையினையா கடைபிடிக்கிறார்கள்? அவர்கள் உறுதியாக முசுலிம்களை போல ஏக இறை பக்தர்களே, அதிலும் அவர்களும் அல்லாவையே வணங்குகிறார்கள் (முகமது நபியை மாத்திரம் ரிஜக்ட் பண்ணீவிட்டார்கள்)ஆக யூதரை மட்டுமாவது அனுமதியும்.
//முந்தய வேதங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டிருந்தால் குர்ஆன் இறங்குவதற்கு வேலையே இருந்திருக்காது அல்லவா?//
குர்ஆன் உருவாக்கப்பட்டதின் முக்கிய நோக்கமே உலகினை அரேபியமயமாக்கி அரேபியாவின் ஆட்சிக்குள் கொண்டுவருவதுதானே! உலகினை அல்லாவினுடைய ஆட்சியின் கொணர்வதில்லை அதன் உண்மை நோக்கம். ஏனெனில் உண்மையில் உலகு அல்லாதான் படைத்தார் எனில் அவர்தானே உலகின் ஓனர்? ஆக உலகு அவரது ஆட்சியின் கீழ்தானே உள்ளது?
//தனி ஒரு மனிதன் தனது மகளின் நடவடிக்கை பிடிக்காமல் சில தண்டனைகளை கொடுத்தால் அதற்கு இஸ்லாமோ சவுதி அரசோ என்ன செய்ய முடியும்//
அவரை தண்டிக்கலாமே? ஆனால் அவனுக்கு விருதல்லவா சவுதி அரசு வழங்கியிருக்கும்?
மேலும் சவுதியில் மதம் மாறினால் என்ன தருவார்கள்? இந்தியாவில் தருவது போல இடஒதுக்கீடா தருகிறார்கள்? உடனே அல்லாவிடம் அப்பாயின்மெண்டல்லவா தருவார்கள்?
//ஏக தெய்வ கொள்கையை ஆதரித்து வரும் வசனங்கள் அந்த வேதத்தின் உண்மையான வசனங்கள். பல தெய்வ வணக்கங்கள் வரும் இடங்களெல்லாம் மனிதர்கள் தங்கள் கைவரிசையை காட்டிய இடங்கள்//
அது எப்படி உமக்கு உறுதியாக தெரியும்? பல தெய்வ வணக்கங்கள் வரும் வசனங்கள் அந்த வேதத்தின் உண்மையான வசனங்கள். ஏக தெய்வ கொள்கையை ஆதரித்து வரும் இடங்களெல்லாம் மனிதர்கள் தங்கள் கைவரிசையை காட்டிய இடங்கள் - என்பதாகவும் உண்மை இருக்கலாமே?
//இவை எல்லாம் இறைவன் என்று சொன்னால் யார் நம்புவது. சொந்த மக்களே நம்பவில்லையே!//
யார் சொன்னது. முருகனும் திருமாலும் கொற்றவையும் இன்றும் தமிழ்நாட்டில் வழிபடப்படுகின்ற தெய்வங்களே. சூரிய வழிபாடுதானே பொங்கல் பண்டிகை!
//வேதம் இறங்கியதா? அல்லது ஒரு தூதர் வந்து இவை எல்லாம் தெய்வம் என்று சொல்லி விட்டு சென்றாரா? இவை எல்லாம் மனிதர்கள் செய்த கற்பனைகளே!//
முருகன் திருமால் போன்ற தெய்வங்களுக்கு ஏஜன்ட் (தூதர்) வைத்துக் கொள்ளுவதில் நம்பிக்கை இல்லாத்தினால் அவர்கள் நேரடியாகவே வந்து உரையாடிவிட்டு செல்லுவதாக தமிழர் நூல்கள் உரைக்கின்றன. உதாரணமாக முருகன் தமிழ் புலவரான ஒளவையாரொடு மீட்டிங் போட்டிருக்கிறாராம். திருமால் ஆழ்வார்கள் எனும் தமிழ் புலவரகளோடு பேசியுள்ளராம். இதுகெல்லாம் என்ன ஆதாரம் எனக் கேட்காதீர். நபியுடன் ஜிப்ரில் மீட்டிங்களுக்கு எவ்வளவு ஆதாரம் உண்டோ அதே அளவு ஆதாரம் இந்த மீட்டிங்களுக்கும் உண்டு.
//இதை ஒத்துக் கொண்டால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சொற்றொடர் காலம் காலமாக புழக்கத்தில் உள்ளது எவ்வாறு?//
இது கணியன் பூங்குன்றனார் எனும் தமிழ் சோதிடர் கம் புலவர் எழுதிய புறநானூறு பாடலின் முதல் வரியே இது (புறம்-129). ஆனால் புறநானூறு பாடல்களில் பழந்தமிழர் முருகன் சிவன் மற்றும் திருமால் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்ததாக பாடல்கள் உண்டு. வேண்டியதை மட்டும் எடுத்து வியாபாரம் செய்வதுதானே நம்மாட்களின் வழக்கம். பூங்குன்றனாரின் வரிகள் அரசியல் யாவாரத்திற்கு உதவும் நல்ல கேப்ஷனாக இருப்பதால் அதை பிரபலமாக்கிவிட்டார்கள்!
@Anonymous
நீங்கள் என்ன சொன்ன கருத்துக்களில் உள்ள நியாயத்தை சுவனப்பிரியன் அறியாமலில்லை. ஆனாலும் சுவனத்தின் மீதுள்ள மிகுந்த பிரியத்தால் திரும்பவும் விதண்டாவாதம்தான் செய்வார். இஸ்லாம் என்னும் பொய்யை நம்பினால்தான் சுவனத்திற்குப் போக முடியும் என்று குருட்டுத்தனமாக நம்புவதால் மனசாட்சியையும் மீறி தொடர்ந்து பொய் சொல்கிறார்.
yellarukm salam,
however all are heading towards death,At the the people who against islam will know the truth,
So wait and see.......
Allahuakbar..........
Post a Comment