Followers

Monday, January 09, 2012

பாலைவனம் சோலை வனமாக சாத்தியமா?

பாலைவனம் சோலை வனமாக சாத்தியமா?

நான் சவுதிக்கு கடந்த 20 வருடத்துக்கு முன் வந்த போது பெரும்பாலான இடங்கள் பாலைவனமாகவே காட்சி தந்தது. ஆனால் அந்த இடங்களை எல்லாம் இன்று பார்க்கும் போது என்னால் நம்ப முடியவில்லை. எவ்வளவு அசுர வளர்ச்சி. அதிலும் கூட ஒரு நிதானம். குவைத்தையும் துபாயையும் போல தான்தோன்றித் தனமாக ஆடம்பர செலவுகளை செய்து விட்டு பிறகு கையை பிசைந்து கொண்டிருக்காமல் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கிறது சவுதி அரசு.

கோதுமை உற்பத்தியை எடுத்துக் கொண்டால் 1984 ஆம் ஆண்டு சவுதி அரேபியா உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1980 ஆம் ஆண்டு 67000 ஹெக்டேரானது படிப்படியாக 907000 ஹெக்டேராக விரிவடைந்தது.

1993 ஆம் அண்டு 4.5 மில்லியன் டன்னாக உற்பத்தி வேகமாக உயர்ந்தது. இதே கால கட்டத்தில் 2 மில்லியன் டன் கோதுமையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறனையும் பெற்று விட்டது. தங்களின் சுய தேவையை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியை தொடங்கிய இவர்கள் இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லமையை பெற்றுள்ளனர். சில பொருட்களின் உற்பத்தி விகிதததை சற்று பார்ப்போம்.

1.பார்லி: 1980 ல் 6011 டன்னாக இருந்த உற்பத்தி 1990ல் 11940 டன்னாக உயர்ந்தது.

2.தினை உற்பத்தி: 1980ல் 7505 ஆக இருந்த உற்பத்தி 1990ல் 11940 ஆக உயர்ந்தது.



3.தக்காளி: 1990ல் 232042 டன்னாக இருந்த உற்பத்தி 1990ல் 462964 டன்னாக உயர்வு பெற்றது.

4.தர்பூசணி பழ உற்பத்தி: 1980ல் 193352 ஆக இருந்த உற்பத்தி 1990ல் 460725 ஆக உயர்ந்தது.

5.உருளைக்கிழங்கு: 1980ல் 6700 டன்னாக இருந்த உற்பத்தி 1990ல் 47700 டன்னாக பரிணமித்தது.

6.பேரித்தம் பழ உற்பத்தி: 1980ல் 371038 டன் ஆக இருந்த உற்பத்தி 1990ல் 519765 டன்னாக உயர்ந்தது.

7.திராட்சை உற்பத்தி: 1980ல் 60537 ஆக இருந்த உற்பத்தி 1990ல் 99799 ஆக பரிணமித்தது.

இன்னும் பட்டியல் இருக்கிறது. பதிவு விரிவாகி விடும் என்பதால் விடுகிறேன்.



இந்த முன்னேற்றத்தை தினமும் பார்க்கும் என் கண்கள் நமது நாட்டு தற்போதய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனம் கனத்து விடுகிறது. எனது தாத்தா இரண்டு வேலி சொந்த நிலத்தை பயிரிடும் போது 10, 15 பார வண்டிகளில் நெல் மூட்டைகள் அடுக்கி கொண்டு வரப்படும். கரும்பு பஞ்சு என்று எந்த நேரமும் வீடு ஆள் நடமாட்டத்தோடு இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் ஆள் வசதி இல்லாததால் விற்று விட்டோம். அந்த நிலங்களை எல்லாம் தற்போது சென்று பார்த்தேன். சில இடங்கள் கல்லூரிகளாகவும், மற்றும் சில இடங்கள் விவசாயம் அல்லாத துறைகளுக்கு பயன்படுவதைப் பார்த்தேன்.

இன்னும் சில இடங்களில் அருமையான விளை நிலங்கள் எலலாம் மனைகளாக போடப்பட்டு புதர் மண்டிக் கிடக்கும் காட்சியைப் பார்த்தேன். 'சோழ நாடு சோறுடைத்து' என்பது போய் 'சோழ நாடு மனையுடைத்து' என்றாகி விட்டது. சில இடங்களில் எல்லா விளை நிலங்களும் கல்லூரிகளாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு கல்லூரி இருப்பதால் சட்டமும் தனது கண்ணை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. ஒரு இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விளை நிலங்கள் அனைத்தும் மனைகளாக்கப்பட்டிருந்தன. உரிமையாளர் யார் என்று விசாரித்தேன். நமம சின்ன மேடம் சசிகலாவினுடைய பினாமி என்று விவரித்தனர். இன்னும் இந்த அம்மா எவ்வளவு சொத்து சேர்க்குமோ தெரியவில்லை. சொத்து சேர்த்து யாருக்கு கடைசியில் கொடுத்து விட்டு போகப் போகிறது? நானும் பல இடங்களில் பார்க்கிறேன். வாரிசு இல்லாதவர்கள்தான் சொத்து சேர்ப்பதில் ரொம்பவும் குறியாக இருக்கிறார்கள். இது எனது உறவினர்களிடததிலும் பார்த்துள்ளேன். அதே போல் காடுகளும் அழிக்கப்படுகின்றன. மழை பொய்த்ததினால் தண்ணீர் வேண்டி விலங்குகள் நகரத்தை நோக்கி படையெடுக்கும் அவல நிலையை கொண்டு வந்துள்ளோம்.

சரி இனி சவுதிக்கு வருவோம். இவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த பசுமை புரட்சியானது மேலும் மேலும் விரிவடைந்து செல்கிறது. மூலப் பொருளான களி மண்ணை நம் நாட்டிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும் கடல் மார்ககமாக கொண்டு வந்து பாலைவனத்தை சோலைவனமாக்குகிறார்கள்.

சூடானில் பல நிலங்களை குத்தகை முறையில் எடுத்து அதிக நீர் தேவைப்படும் பயிர்களை அங்கு விளைவிக்க சவுதிகள் முதலீடு செய்கின்றனர்.

சாலை வசதிகளை எடுத்துக் கொண்டால் ஒரு முறை சரியான முறையில் சாலைகளை அமைத்து ஓரங்களில் மரங்களையும் நட்டு அழகிய முறையில் பராமரிக்கின்றனர். இங்குள்ள தார் ரோடுகள் எந்த மழையிலும் சேதமாகாமல் உறுதியோடு நிற்கிறது. ஆனால் நம் நாட்டிலோ ஒவ்வொரு மழையிலும் சாலை வீணாவதும் பிறகு காண்டராக்டர் வந்து சில ஜல்லிகளை மேலே தூவி விட்டு காசு பார்ப்பதும் தொடர்கதையாக நடக்கும் செயல். குண்டும் குழியுமாக உள்ள நம் சாலைகள் எத்தனை உயிர்களை பழி வாங்கியிருக்கிறது. வீணாகப் பொகும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி சாலை போட்டால் தார் ரோட்டை விட சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

அதே போல் மனிதர்கள பயன்படுத்திய தண்ணீரை பல இடங்களில் சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீரையே விவசாயத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். மனிதக் கழிவுகளைக் கூட சுத்திகரிக்கப்பட்டு அதனை உரங்களாக டின்களில் அடைத்து பல மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். அந்த இடங்களை எல்லாம் சென்று பார்த்தேன். இத்தனை வருட காலத்தில் ஒரு முறை கூட தண்ணீர் தட்டுப்பாடு என்று இங்கு நான் கேள்விப்படவில்லை. அந்த அளவு நீரின் உபயோகத்தை உணர்ந்து சிறந்த முறையில் சேமிக்கின்றனர். கடல்நீரை குடி நீராக மாற்றி இன்று சவுதி முழுவதும் பகிர்ந்தளிக்கின்றனர். நம் நாட்டிலும் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு இதோ வருகிறது அதோ வருகிறது என்று கடல் நீரை குடிநீராக மாற்றுகிறோம் என்கிறார். தண்ணீர் வந்த பாடில்லை. கோடிகள் போனதுதான் மிச்சம். ஆட்சியும் மாறி விட்டது. இனி சுத்தம்.

ஆனால் நம் ஊரில் குளங்களைக் கூட மனைகளாக்கி காசு பார்த்து விடுகின்றனர். ஒரு சில குளங்கள் குப்பைக் கொட்டும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. கிராம அலுவலரிடம் 1000 அல்லது 2000 அமுக்கி அவர் வாயையும் அடைத்து விடுகின்றோம. இதனால் நிலத்தடி நீர் தேங்காமல் எங்கும் தண்ணீர் பிரச்னை. பெய்யும் மழை நீரோ எவருக்கும் உபயோகப் படாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் நாடு வளமாயிருந்தும் மக்கள் அறிவு சார்ந்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது: அந்த நாடு தன்னலமற்ற சிறந்த ஆட்சியாளர்களையும் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் சாத்தியப்படும் என்பதற்கு சவுதி அரேபியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.



சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

-------------------------------------------------

'முஹம்மதே! 'நாங்கள் உம்முடன் சேர்ந்து உன் மார்க்கமாகிய இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் வசிப்பிடத்திலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயமளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கி கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன் 28 : 57

முகமது நபிக் காலத்தில் அந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி கொண்டிருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமாக மேற்சொன்ன வசனங்கள் அருளப்பட்டன.

அபயமளிக்கும் புனிதத் தலம்!

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் மக்காவிலுள்ள கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபயத் தலமாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

கஅபா அபயத்தலம் என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயத் தலமாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்த தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

சதாம் முன்பு சவுதியை தாக்க ஏவுகணைகளை வீசிய பொழுது என் முதலாளியும் அவரது உறவினர்களும் சவுதியின் பாதுகாப்பான இடமாக தேர்ந்தெடுத்தது குர்ஆன் கூறும் அபயத் தலமான மக்காவைத்தான்.

இந்த அபயத் தலம் என்ற வார்த்தை இதுவரை காக்கப் படுவதால் குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்படுகிறது.

பாலைவனத்தில் கிடைக்கும் கனிகள்!

இன்றைய மக்கா நகரம் முகமது நபி காலத்திலும் அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கனி வர்க்கம் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது.

இந்தியாவில் இந்த வசனம் இறங்கியிருந்தால் இது ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்காது. நம் நாடு நில வளத்திலும், நீர் வளத்திலும் அன்று முதல் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பாலைவனப் பிரதேசமான மக்காவை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மண் வளமும் கிடையாது. தண்ணீர் வசதிக்கும் வாய்ப்பில்லை. இருந்தும் 'ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக மக்காவை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது' என்ற வாசகத்தைக் கவனிக்க வேண்டும்.

பாலைவனம் சோலைவனம் ஆக வேண்டுமாயின் அரபு நாடுகளுக்கு செல்வம் குவிய வேண்டும். கறுப்புத் தங்கமான பெட்ரோலை கணக்கில்லாமல் அந்நாடுகளுக்கு இறைவன் கொடுத்து இன்று அரபு நாடுகள் சோலைவனமான காட்சியைப் பார்க்கிறோம்.

-------------------------------------------------


அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .

எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது-
"ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

.அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"

ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"

ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது:

"எப்படி சொல்கிறீர்கள்......?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim) இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."மேலும் அவர் சொன்னவை:"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்தபார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)

25 comments:

ஆமினா said...

வடிகால்க்கு கூட இங்கே வழியில்லை... பல அரசியல் வியாதிகளின் மெத்தனபோக்கு தான் இன்னும் இந்நாட்டை முன்னேற விடாமல் செய்கிறது :-(

Barari said...

அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை.மக்களும் அவர்களை விட பொறுப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.மிக சிறந்த பதிவு.வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

வெளிநாடுகளில் இருக்கும் எல்லாருக்குமே இந்த ஏக்கம்தான், நம் இந்தியா இப்படி ஏன் இல்லை என்று!!

கோவி.கண்ணன் said...

//சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.//

இந்தியா ஆப்கானாக, பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//எமெக்கெல்லாம் கவலை இந்தியா சவுதி அரேபியா போன்று ஆகாமல் போனாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும் என்பது தான்.//

சவுதியில் பணிப் பெண்கள் சில வீடுகளில் தவறாக நடத்தப்படுவதை நானும் கண்டித்து இதற்கு முன் பதிவு எழுதியுள்ளேன். இதை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. வீட்டு வேலைக்கு வருபவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் வருகிறார். அவர் அடிமை முறையின் கீழ் வரமாட்டார். இன்று உலகில் அடிமை முறை இஸ்லாத்தால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் தனது கணவன் வீட்டு டிரைவராக பணி பரியும் இடத்துக்கே வர வேண்டும். தனியாக வர வேண்டாம் என்று முன்பே நான் பதிவிட்டிருக்கிறேன். அதிலும் விபசார விடுதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட சவுதியில் இது போன்ற தவறுகள் பல இடங்களில் நடந்து விடுகிறது. சவுதி அரசும் இதை தடுக்க பல சட்டங்களை போட்டவண்ணமே உள்ளது. நான் எழுதிய பதிவு பாலைவனமாக இருந்த சவுதி இன்று சோலை வனமாக மாறியது எவவாறு என்பதை தொட்டுக் காட்டவே!

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இஸ்லாத்தை தவறாக உள் வாங்கியதால் இன்று அவதிக்குள்ளாகியிருக்கிறது. இந்த இரு நாடுகளும் சவுதியை பின்பற்றி தங்களது ஆட்சியை அமைத்துக் கொண்டால் சிறப்புற்றே விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பகிர்வுக்கு நன்றி
ஒயாய்னா போன்ற ஏரியாக்களுக்கு போய் பாருங்கள் மரபுவழி இயற்கை விவசாயமும் செய்கிறார்கள் இவ்வளவு நவீன வசதிகள் இல்லாமலே ரியாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது

suvanappiriyan said...

//வெளிநாடுகளில் இருக்கும் எல்லாருக்குமே இந்த ஏக்கம்தான், நம் இந்தியா இப்படி ஏன் இல்லை என்று!!//



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஹூசைனம்மா!

suvanappiriyan said...

//வடிகால்க்கு கூட இங்கே வழியில்லை... பல அரசியல் வியாதிகளின் மெத்தனபோக்கு தான் இன்னும் இந்நாட்டை முன்னேற விடாமல் செய்கிறது :-(//



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஆமினா!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
அருமையான பதிவு. நிறைய தகவல்கள். நன்றி சகோ. எனது வலைப்பூவின் முதல் பதிவே இந்த 'சோழநாடு...' கவலைதான்..!

ஒருவரை கேவலமாக சொல்ல வேண்டுமானால்... 'மண்டையில் களிமண் இருக்கிறது' என்கிறார்கள்..!

ஆனால்,
அந்த களிமண்ணை உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரேபிய அரசியல் வாதிகளின் மண்டையில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எவ்வளவு சிறந்த மூளை இருக்கிறது என்பதை இங்கே சிலர் விளங்க வேண்டும்..!

அதேநேரம்,
நம் அரசியல்வாதிகள் மணல் திருட்டு நடத்திக்கொண்டு நீர்வளத்தை நாசமாக்கி...

விளை(யும்)நிலங்களை குறைந்த தொகைக்கு அல்லது வட்டி&அசலுக்கு பதிலாக போண்டியாக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து வாங்கி, சில வருடம் நன்கு காயவைத்து பின்னர் பிளாட் போட்டு அதை 'விலை'நிலங்களாக்கி....

எல்லா டிவி சேனல்களின் மூலமும் ரியல் எஸ்டேட் பிசினெசை கவர்ச்சியாக நடத்தி.....

அங்கே வீடு கட்டுவோர் அஸ்திவாரம் தோண்டிய பின்னர் அந்த களிமண்ணைக்கூட விட்டுவைக்காமல் அள்ளி எடுத்து காசுக்கு அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யும்... நம்மவர்களின் மண்டையில் இருப்பது .................................?

எங்கே போகிறோம் நாம்..?

suvanappiriyan said...

//அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை.மக்களும் அவர்களை விட பொறுப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.மிக சிறந்த பதிவு.வாழ்த்துகள்.//



சரியாக சொன்னீர்கள் சகோ பராரி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Sculpture Collector said...

The government was subsidising the sector by paying farmers about six times global prices..i.e. if the wheat price is $1/Kg, government was spending $6 to produce 1 Kg...

High quality global journalism requires investment. Please share this article with others using the link below, do not cut & paste the article. See our Ts&Cs and Copyright Policy for more detail. Email ftsales.support@ft.com to buy additional rights. http://www.ft.com/cms/s/0/a686f2b0-0753-11dd-b41e-0000779fd2ac.html#ixzz1ixyjoKJJ

John Sfakianakis, chief economist at SABB Bank, says that, however high the wheat price, the government should not backtrack.

“The cost over the long term is much higher; the depletion of water resources is irreversible,” he says. “One of the ways in which the oil money was shared with the people [in the first oil boom] was through agriculture, so they manufactured a sector that had no reason for existence in Saudi Arabia.”

http://www.ft.com/cms/s/0/a686f2b0-0753-11dd-b41e-0000779fd2ac.html#axzz1ixrHxaFL

suvanappiriyan said...

தமிழன்!

//அமெரிக்க ஆதரவு - சவூதிக்கு இல்லாது போகும் போது, பாலாறு தேனாறு ஓடாது. ஆப்கன், ஈராக் போல ரத்தஆறு தான் ஓடும்.//

ஆக ஆப்கானிஸ்தானத்திலும் இராக்கிலும் ரத்த ஆறு ஓடுவதற்கு இஸ்லாம் காரணம் அல்ல. அமெரிக்காவின் நயவஞ்ச அரசியல் சதுரங்கமே என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி! சவுதியை அமெரிக்கா பகைத்துக் கொள்ளாது. ஒபாமா தலையை சொறிந்து கொண்டு பணத்துக்காக நிற்கும் போது இரண்டு மூன்று பிஸ்கெட் துண்டுகளை (மிலிடரி காண்ட்ராக்ட்) வீசி எறிந்தால் வாலை ஆட்டிக் கொண்டு சேவகம் செய்ய ரெடியாக இருக்கும்.

ராஜராஜன்!

//பாகிஸ்தானும்,ஆப்கானிஸ்தானும் இஸ்லாத்தை தவறாக உள்வாங்கியதற்கு முக்கிய காரணமே சவுதி வகாபிசமும்,அதனை நோக்கிய பொருளாதார உதவிகளும்.9/11 அவற்றை மாற்றிப் போட்டு விட்டன.பலன்கள் வெளிப்படையாகத் தெரிகிறது.அவ்வளவே.//

வகாபியிசத்தின் ஊற்றுக்கண்ணான சவுதி அரேபியாவில் அமைதி தவழ என்ன காரணம்? நமது இந்து சகோதரர்கள் குடுமபத்தோடு 10 வருடம் 20 வருடம் என்று சந்தோஷமாக இருக்கவில்லையா?

செப்டம்பர் 11க்குப் பிறகுதான் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இஸ்லாம் அதி வேகமாக பரவுவதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இஸ்லாம் காரணம் அல்ல என்பதை அந்த மக்கள் நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர்.

அடுத்து சவுதி வீடுகளில் நடக்கும் பல குற்றங்களுக்கு சவுதி அரசை நாம் குற்றம் காண முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களை கவனிக்கவே அரசில் தனி அமைச்சகம் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளது. பல பெண்கள் உரிய நஷ்ட ஈடு கிடைத்து நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமைகளை தடுக்க ஒரே வழி தனியாக பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பாமல் இருப்பதே!

நம் நாட்டில் இன்னும் கூட இரட்டை குவளை முறையும், மலம் தின்ன வைத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஆளும் காங்கிரஸையும் மன்மோகன் சிங்கையும் இங்குள்ள பெரும்பான்மை மக்களையும் குற்றம் கண்டால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா?

Anonymous said...

//இன்று உலகில் அடிமை முறை இஸ்லாத்தால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது//

சரியான காமெடி!!!!!!!!!!!!.
ஒரு சிறிய மாற்றம் குரான் போலவே ப்ராக்கெட் போடாமலே சொல்லி விட்டீர்களே!!!!!!!!!
இன்று (இஸ்லாமிய)உலகில் அடிமை முறை இஸ்லாத்தில் முற்றிலுமாக (மௌரிட்டானியா போன்ற சில நாடுகளில் தவிர, பிற மத நாடுகளால்) ஒழிக்கப்பட்டு விட்டது.எப்போது எப்படி என்று ஆதரபூர்வமாக் பதிவிட முடியுமா?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஹைதர் அலி!

//ஒயாய்னா போன்ற ஏரியாக்களுக்கு போய் பாருங்கள் மரபுவழி இயற்கை விவசாயமும் செய்கிறார்கள் இவ்வளவு நவீன வசதிகள் இல்லாமலே ரியாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது//

தகவலுக்கு நன்றி! நேரம் கிடைக்கும் போது சென்று பார்க்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும சலாம் சகோ ஆஷிக்!

//ஆனால்,
அந்த களிமண்ணை உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரேபிய அரசியல் வாதிகளின் மண்டையில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய எவ்வளவு சிறந்த மூளை இருக்கிறது என்பதை இங்கே சிலர் விளங்க வேண்டும்..!//

ஆற்றில் மணல் கொள்ளை போகிறது. வளமான மண்ணும் ஏற்றுமதி ஆகிறது. அளவுக்கதிகமான பூமியின் வளங்கள் சுரண்டப்பட்ட இந்தோனேஷியாவையும் சைனாவையும் பார்த்தும் கூட இன்னும் நாம் படிப்பினை பெறவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

With the arrest of another Hindutva activist on Tuesday in connection with the hoisting of a Pakistani flag in front of the Tahsildar office at Sindagi in Karnataka on January 1, the number of persons held by the police for what they believe was a plot to foment communal strife has increased to seven.

The arrested are members of Sri Ram Sene, a pro-Hindutva outfit. According to the police, they allegedly hoisted the Pakistani flag and then blamed it on the town's Muslim community. The accused were shifted to the Bellary district prison on Sunday morning as other inmates of the Bijapur district jail allegedly attacked them for being involved in “anti-national activities.”
Rakesh Math, the prime accused, was seriously injured in the fracas, and the remaining sustained minor injuries.

Meanwhile, members of the district unit of Sri Ram Sene have said the accused do not belong to their outfit but are members of the Rashtriya Swayamsevak Sangh (RSS).
At a press conference here, they released several pictures to prove their point, alleging that the police had been pressured not to drag the name of the RSS into the issue.

Well-placed police sources, however, told The Hindu that the entire incident was carried out at the behest of an elected representative of the BJP, whose political agenda was to foment communal disturbances in the district. The sources added that the elected representative had instructed his supporters to destroy all evidence of his involvement, including photographs of the protesters and the banners of the organisation.

The Pakistani flag was hoisted in the early hours of January 1. Later in the morning, the accused, led by Rakesh Math, organised a protest in front of the Tahsildar's office, alleging that the Muslim community was behind the incident. The protesters blocked the road and hurled stones at buses before the police enforced order.

The police then formed a special team to investigate the matter.
It concluded that the Sri Ram Sene activists who organised the protests were behind the incident. They arrested the six ringleaders on January 3 under various sections of the Indian Penal Code for sedition and inciting communal disturbance.

As a precautionary measure, the district administration has banned rallies, protests and dharnas in connection with the issue.
The Hindu
11-01-2012

Anonymous said...

//இந்தியா ஆப்கானாக, பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும்.//
PITUITARY சுரபி என்னமா ஒழி தருதுபார்ங்கா அதே சமயத்தில் என்னமா பெரிசு ஆகுது. இவரு மட்டும் இந்தியவில் இருந்தா எங்கோயோ போயிக்கும்.

கால்கரி சிவா said...

எப்படி சார் இருக்கீங்க? சௌக்கியமா? இன்னும் சவூதியில் தானா? :)

suvanappiriyan said...

திரு கால்கரி சிவா!

//எப்படி சார் இருக்கீங்க? சௌக்கியமா? இன்னும் சவூதியில் தானா? :)//

ஓ........இணையத்தில் சந்தித்து வெகு நாட்களாகிறதே! நான் இன்னும சவுதியில் தான் பணி புரிந்து வருகிறேன். நீங்கள் தற்போது கனடாவிலா அல்லது இந்தியாவிலா? உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அதிரைக்காரன் said...

சவூதியில் மஜ்ரா எனப்படும் பாலைவன தோட்டங்களில் நீர்ப்பாசன முறையைக் கண்டு வியந்துள்ளேன். மழை நிரந்தரம் இல்லாத பருவத்தில் தண்ணீரை குழாய் மூலம் மேல்நோக்கி பீச்சியடித்து மழை பொழிவதுபோல் பொழியச்செய்வார்கள். முடிந்தால் அதையும் ஒரு கட்டுரையாக எழுதவும்.

இப்பதிவினால் பொங்கி எழுந்த நண்பர் கோவி.கண்ணன், பொங்கல் குறித்த அவரது பதிவில் பின்னூட்ட வசதியை நிறுத்தியுள்ளார். கவனித்தீர்களா?

வஸ்ஸலாம்

வவ்வால் said...

சுவனப்பிரியன்,

//சரி இனி சவுதிக்கு வருவோம். இவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த பசுமை புரட்சியானது மேலும் மேலும் விரிவடைந்து செல்கிறது. மூலப் பொருளான களி மண்ணை நம் நாட்டிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும் கடல் மார்ககமாக கொண்டு வந்து பாலைவனத்தை சோலைவனமாக்குகிறார்கள்.//

அப்படி பசுமை புரட்சி உண்மையில் பரவி வருகிறது என்றால் ஏன் நீங்கள் 2010-11 ஆண்டுக்கான கோதுமை உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியை தரக்கூடாது. இணையம் இப்போதெல்லாம் உங்களுக்கு வேலை செய்யவில்லையா?

2008 இல் சவுதி அரசு எடுத்த புதிய வேளாண்மை கொள்கை என்ன என அறீவீர்களா?

பொய் சொல்லி என்ன சாதிக்கப்போகிறீர்கள், பொய் சொன்னால் உங்கள் மார்க்கத்தில் ஒன்றும் ஹராம் இல்லையா :-))
எனது இப்பதிவைப்பாருங்கள் உங்கள் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?

suvanappiriyan said...

சகோ அதிரைக்காரன்!

//இப்பதிவினால் பொங்கி எழுந்த நண்பர் கோவி.கண்ணன், பொங்கல் குறித்த அவரது பதிவில் பின்னூட்ட வசதியை நிறுத்தியுள்ளார். கவனித்தீர்களா?//

நானும் உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு பார்த்தேன். அவரிடம் பதிலில்லை. எனவே பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டார். :-(

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//பொய் சொல்லி என்ன சாதிக்கப்போகிறீர்கள், பொய் சொன்னால் உங்கள் மார்க்கத்தில் ஒன்றும் ஹராம் இல்லையா :-))
எனது இப்பதிவைப்பாருங்கள் உங்கள் முகமூடி கிழிந்து தொங்குகிறது.//

பொய் சொல்லி எனக்கு எந்த ஆதாயமும் வந்து விடப் போவதில்லை. புள்ளி விபரங்களை எனவேதான் வருடம் போட்டு குறிப்பிட்டுள்ளேன். கோதுமை பயிருக்கு தண்ணீர் அதிகம் தெவைப்படும். எனவெதான் கொதுமை உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு தண்ணீர் அதிகம் தேவைப் படாத பயிர்களை பயிரிடுகின்றனர். அதே விவசாயிகளைக் கொண்டு சூடானின் நிலங்களை குத்தகை எடுத்து விளைச்சலை இன்னும் அதிகமாக்குகின்றனர்.

ஆனால் நம் நாட்டில் நில வளம் நீர்வளம் அனைத்தும் சிறப்பாக இருந்தும் விளை நிலங்களை எல்லாம் மனைகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தில் வந்த பதிவே இது. கோதுமை உற்பத்தியைக் குறைத்தாலும் அன்று என்ன விலைக்கு கோதுமை கிடைத்ததோ அதே விலையிலேயே சந்தையில் கொதுமையை அரசு பொது மக்களுக்கு கொடுககிறது. இத்தகைய நிர்வாகத் திறன் நமக்கு ஏன் வரவில்லை என்பதுதான் எனது கேள்வி.

//எனது இப்பதிவைப்பாருங்கள் உங்கள் முகமூடி கிழிந்து தொங்குகிறது.//

எனது முகமூடி எப்படியாவது போகட்டும். 'ஒளிரும் இந்தியா' என்று பாமர மக்களை இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள். விளைச்சல் குறைந்து அதனால் மழையும் பொய்த்து விட்டால் நம் நாட்டின் 120 கோடி மக்களின் நிலை என்னவாவது. இதற்கெல்லாம் நீண்டகால திட்டங்கள் நம் அரசிடம் உள்ளதா?

suvanappiriyan said...

http://rsyf.wordpress.com/2012/01/19/punjab-school-students-hungry/

ஒளிரும் இந்தியாவின் சில மாதிரிகள்!

குட்டிபிசாசு said...

//அபயமளிக்கும் புனிதத் தலம்!

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் மக்காவிலுள்ள கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபயத் தலமாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

கஅபா அபயத்தலம் என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயத் தலமாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்த தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

சதாம் முன்பு சவுதியை தாக்க ஏவுகணைகளை வீசிய பொழுது என் முதலாளியும் அவரது உறவினர்களும் சவுதியின் பாதுகாப்பான இடமாக தேர்ந்தெடுத்தது குர்ஆன் கூறும் அபயத் தலமான மக்காவைத்தான்.

இந்த அபயத் தலம் என்ற வார்த்தை இதுவரை காக்கப் படுவதால் குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்படுகிறது.//

http://en.wikipedia.org/wiki/Qarmatians

Under Abu Tahir Al-Jannabi (ruled 923–944) the Qarmaṭians came close to raiding Baghdad in 927 and sacked Mecca and Medina in 930. The assault on Islam's holiest sites saw the Qarmatians desecrate the Well of Zamzam with corpses of Hajj pilgrims and take the Black Stone from Mecca to Al-Hasa.[5] Holding the Black Stone to ransom they forced the Abbasids to pay a huge sum for its return in 952.[6]