Followers

Thursday, August 02, 2012

சவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக!

இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்களுக்கு மட்டுமே உதவிகள் செய்து வந்துள்ளோம். ஆனால் இது சற்று மாறுதலான உதவி கோறும் மடல்...
கடந்த மாதம் ஒருநாள் ரியாத் மலாஸ் சிறைச்சாலையில் இருந்து உதவித்தேடி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார், அவரின் குரல் கேட்க பரிதாபமாக இருந்தது. இரண்டுவருடங்களாக செய்யாத தவறுக்காக சிறையில் வாடுவதாகவும், கேரள அமைப்புகளில் ஒன்று எனது தொலைபேசியைக் கொடுத்து தமிழ்ச்சங்கத்தின் ஆதரவைக் கேட்கும்படி கூறினார்கள் என்றும் கூறினார்.

அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை என்ற கிராமத்தைச் சேர்ந்த கமருதீன் என்றும் பெரும் பொருட்செலவு செய்து டிரக் டிரைவராக சவூதிக்கு வேலைக்கு வந்ததாகவும் வந்த இடத்தில் வீட்டு டிரைவராக வேலைபார்க்க வைத்துவிட்டதாகவும், வேறுவழியின்றி 6 மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் அவரின் அலுவலகத்தில் 36000ம் ரியால் திருட்டு போய்விட்டதாகவும் அதுசமயம் அவருடன் வேலைசெய்த எகிப்திய நாட்டு அலுவலக நிர்வாகி இவரை கட்டிவைத்து அடித்ததாகவும் அடிதாங்காமல் இரவோடு இரவாக தப்பி அவரின் மாமா வீட்டுக்கு சென்றதாகவும், அவரோ ஓடிவந்தால் உன்மீதுள்ள குற்றம் உறுதியாகிவிடும் திரும்பவும் சென்று உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல் என்று திருப்பி அனுப்பியுள்ளார்.

திரும்ப வந்தவரை நீதான் பணத்தை கொண்டுபோய் யாரிடமோ கொடுத்து வந்துவிட்டாய் என்று காவல்நிலையத்தில் ஒப்படைத்து முழுப்பணத்தையும் ஒப்படைத்தால்தான் ரிலீசாகமுடியும் என்று அடைத்துவைத்துவிட்டார்களாம், இரண்டுவருடமாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனைக் கேள்வியுற்ற கேரள அமைப்புகள் சமுதாய சேவகர் ஷிஹாப் கொட்டுக்காடு மூலமாக இந்தியத்தூதரகத்தை அனுகியுள்ளார்கள், பின்னர் இந்தியத்தூதரகம் சார்பில் தொடர்பு கொண்டு அவரின் கபீலிடம் பேசியதில் இந்த திருட்டில் எகிப்து நாட்டு நிர்வாகியும் இவரும் பங்காளிகள், அவரிடம் பாதிப்பணம் வசூலித்து அவரை அனுப்பிவிட்டேன், இவரிடமிருந்து பாதித்தொகை வந்தால் ஒழிய நான் இரக்கம் காட்டமாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாராம்.

கமருதீனின் குடும்ப சூழ்நிலையில் அவரால் எதுவுமே செய்யமுடியாது என்று கூறுகிறார், என்னிடம் பணம் இருந்திருந்தால் எகிப்தியரைப்போல் கொடுத்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகியிருந்திருப்பேன், என் தாயாரும், மனைவியும் தினமும் வேலைக்குச் சென்றுதான் பிள்ளைகள் வயிறு நிறைக்கிறார்கள், நான் வருவதற்காக வாங்கிய கடன்களே இன்னும் அடைக்கப்படவில்லை என்று கூறுகிறார். இந்த சூழ்நிலயில் திரு. ஷிஹாப் கொட்டுக்காடு அவர்கள் தமிழ்ச் சங்கம் உதவிசெய்தால் கேரள அமைப்புகளும் உதவிசெய்து அவரை வெளியில் கொண்டுவந்து உடன் இந்தியாவிற்கு அனுப்பிவிடலாம் என்று கூறுகிறார்.

அவரைப்பற்றி நமக்கு அறிமுகம் இல்லை என்பதால், அவர் கிராமத்தில் இருந்து அவரைப்பற்றிய நற்சான்றிதழ் அனுப்பிவைக்குமாறு கூறினேன், அவர்கள் அனுப்பிய மடல் இத்துடன் உள்ளது. இதில் நாம் தலையிட்டு அவரை வெளியில் கொண்டுவரலாமா? வேண்டாமா? என்று (ரியாத் தமிழ்ச் சங்கம், சவூதி தமிழ்ச் சங்கம், தஃபரஜ்) செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டதில் மனிதாபிமான முறையில் உதவிசெய்யலாம், அவரை சிறையில் நேரில் சென்று சந்திக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்கள், தங்களால் இயன்ற உதவிகளை செய்தால் கேரள சமுதாய அமைப்புகளுடன் சேர்ந்து அவரை குடும்பத்துடன் ஒன்று சேர்க்க வாய்ப்புள்ளது. விருப்பமுள்ளவர்கள் வழமைபோல் உதவலாமே!

அன்புடன்,
இம்தியாஸ்
செயலாளர்,
ரியாத் / சவூதி தமிழ்ச் சங்கம்
imthias@imthias.com
+966540753261
------------------------------------------------------------------------------------மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு 11

24 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

அந்த சகோ சிறை மீள துவா செய்கிறேன் சகோ...நல்ல முயற்சி...

suvanappiriyan said...

//அந்த சகோ சிறை மீள துவா செய்கிறேன் சகோ...நல்ல முயற்சி...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஹாஜா மைதீன்.

வவ்வால் said...

திரு சு.பி,

"கமரூதீன்" என்ற தமிழருக்கு உதவலாமே :-))

கந்தசாமி ,கருப்பசாமி ,ஆரோக்கியசாமி, அல்போன்ஸ் என்ற பெயரில் தமிழர்கள் யாரும் சிறையில் இல்லையா?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//கந்தசாமி ,கருப்பசாமி ,ஆரோக்கியசாமி, அல்போன்ஸ் என்ற பெயரில் தமிழர்கள் யாரும் சிறையில் இல்லையா?//

தவறு செய்யாமல் சூழ்நிலையால் தண்டனை அனுபவிக்கும் அப்படி யாராவது நீங்கள் குறிப்பிடும் சமூகத்தில் இருந்தால் அறியத் தாருங்கள். கண்டிப்பாக வசூல் செய்து நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைப்போம். இது போன்ற விஷயங்களில் மதம் முன்னிலைப் படுத்தப் பட மாட்டாது. மனித நேயம்தான் முன்னுக்கு வரும்.

http://vanjoor-vanjoor.blogspot.sg/2012/04/blog-post.html

இந்த தளத்துக்கு சென்று மனித நேய முறையில் உழைத்த தமிழ் முஸ்லிம்களின் கடமை உணர்வை பார்த்துக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

திரு சார்வாகன்!

//1. "இந்தியர்கள் காஃபிர்கள் இல்லை" என்று சொல்லலாமா?//

2. நான் காஃபிர் என்று மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.குழப்பி விட்டீடிர்களே!!!!


நான் யார்???????????//

நீங்கள் யார் என்பதை என்னை விட உங்கள் உள்ளம்தான் நன்கு அறியும்..

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 –குர்ஆன்

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:62)


இறைவனே உண்மையை அறிந்தவன்.

suvanappiriyan said...

//ஸாபியீன்கள் என்போர் யார்?//

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:62)

ஸாபியீன்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் நபியின் காலத்திற்கு முன்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆனால் நபியவர்கள் எந்தக் கொள்கையை சொன்னால்களோ அந்தக் கொள்கைக்கு ஒப்பானவர்களாகத் தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போது தெரிய வரும் உண்மையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபியவர்களுக்கு ஸாபிஇ என்றே பெயர் வைத்து அழைத்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)

ஒரு குறிப்பிட்ட தூதரைப் பின் பற்றியவர்கள் என்று ஆதாரமான ஹதீதுகளோ குர்ஆன் வசனங்களோ ஸாபியீன்களைப் பற்றி கிடைக்கவில்லை. கிடைக்கும் செய்திகள் எல்லாம் ஒரு அனுமானமாக செவி வழிச் செய்தியாகவே கிடைக்கின்றன.

இறைவனே உண்மையை அறிந்தவன்.

Anonymous said...

சவுதி ஜெயில்ல நம்மூர் மாதிரி வாரவாரம் சிக்கன் போடுவாங்களா?

suvanappiriyan said...

//smitha says:
August 1, 2012 at 8:48 am
Only brahmins should become archakas.
No other community has the commitment, discipline or the dedication required towards this profession.//

Kavya says:
August 2, 2012 at 6:27 am

ஆர்வம், ஒழுக்கம், முனைப்பு. ஒருமனது போன்ற குணங்களையுடைவர்களை உங்கள் ஜாதியில் எப்படி கண்டுபிடிப்பது? எப்படி உங்கள் ஜாதியினர் அனைவருமே இகவாழ்க்கைச் சுகங்களை (பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, ஐம்புலசுகங்கள்) நிராகரித்து, சிறுகக்கட்டிப் பெருக வாழ்வோர் என்று சொல்லமுடியும்? எந்த அர்ச்சகர், தன் மகளையோ அல்லது மகனையோ பொறியியல் வல்லுனராக்கி அமெரிக்காவிற்கு அனுப்பி டாலர்களாக சம்பாத்தியம் பண்ண ஆசைப்படவில்லை? ஒருவரை உங்களால் காட்டமுடியுமா?
இங்கே இரண்டைச்சுட்டிக்காட்டுகிறேன். அவற்றிற்கு நிரூபணங்கள உங்களால் காட்ட முடியுமா?

1. நீங்கள் காட்டிய அனைத்துக்குணங்களையும் கொண்டவர்கள் உங்கள் ஜாதியில் மட்டுமே உண்டு.

2. பிறஜாதியில் அப்படிப்பட்டோர் கிடையவே கிடையாது.

(இரண்டாவதைச்சரியென்றால், பிறஜாதியினர் கீழ்மையுடைய மாக்கள் என்றும் உங்கள் ஜாதியினர் மட்டுமே உயர்குணமுடைய மக்கள் என்றும் வரும்! உண்மையெனில், ஆழ்வார்களில் 5 பேர் அவுட்! (நம்மாழ்வார் – சூத்திரர்; திருமழியிசையாழ்வார், திருப்பாணாற்றாழ்வார் – எஸ்.ஸிக்கள், திருமங்கையாழ்வார் – ஓபிசி (கள்ளர்), குலசேகராழ்வார் – சத்திரியர்)’ நாயன்மார்களில் திருநாவுக்கரசர் அவுட்; அருணகிரிநாதர் அவுரட் – பரத்தையர் குலமாதுக்குப்பிறந்தவர்; சித்தர்கள் நிறையபேர் சேரிக்குத்தான் போகவேண்டும்!!) ஆக, எஞ்சியவர்கள் நீங்களே)

ரேசிசம். வெளிநாடென்றால் உங்களை உள்ளே தள்ளிவிடுவார்கள். நானே போலீசுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்.

வவ்வால் said...

திரு.சுபி,

//யாராவது நீங்கள் குறிப்பிடும் சமூகத்தில் இருந்தால் அறியத் தாருங்கள். கண்டிப்பாக வசூல் செய்து நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைப்போம். இது போன்ற விஷயங்களில் மதம் முன்னிலைப் படுத்தப் பட மாட்டாது. மனித நேயம்தான் முன்னுக்கு வரும்.//

கமரூதீன் என்ற தமிழரை நானா அறிய தந்தேன், நீங்களாக அறியப்பெறவில்லையா? அப்படி மற்ற தமிழர்களும் ஏன் அறியப்படவில்லை?

அப்புறம் குற்றம் செய்யாமல் என எப்படி கண்டுப்பிடிச்சிங்க?

Anonymous said...

சகோ சுவனபிரியன், சார்வகன் மற்றும் ஸமிதா உடனான பின்னூட்ட பஞ்சாயித்து எந்த தளத்தில் நடக்கிறது என குறிப்பிட்டால் நாங்களும் கலந்து கொள்வோமே, ஆவன செய்வீர்களா?

Anonymous said...

Saudi la ellam nallangannu sonneengale. Illaya?

Anonymous said...

Suddenly kamaruddin became a Tamilian from being a Muslim.

Dont you realize your "irattai naakku"?

In spite of the fact that I hate you for your "madha sahippu thanmai inmai" I appreciate your efforts. En orae iraivan Karuppasami ungalukku arul puriyattum.

Anonymous said...

//ரேசிசம். வெளிநாடென்றால் உங்களை உள்ளே தள்ளிவிடுவார்கள். நானே போலீசுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்.//

Funny how muslims talk about racism. All recruitment ads from saudi which say "Only muslims" are racist ads.

Namakku vantha raththam, matha aalukku vantha thakkali chutney ah? :)

suvanappiriyan said...

வவ்வால்!

//கமரூதீன் என்ற தமிழரை நானா அறிய தந்தேன், நீங்களாக அறியப்பெறவில்லையா? அப்படி மற்ற தமிழர்களும் ஏன் அறியப்படவில்லை?//

சம்பந்தப்பட்ட கமருதீன் சகோ இம்தியாஸை தொடர்பு கொண்டதால் அவர் எனக்கு மெயிலிட அதை பதிவாக்கினேன். அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் இந்துக்கள் யாராவது எங்களிடம் புகார் செய்து அதை உதாசீனப்படுத்தினால்தான் உங்கள் கேள்வியே எழும்.

//அப்புறம் குற்றம் செய்யாமல் என எப்படி கண்டுப்பிடிச்சிங்க?//

இந்த பணத்தை எடுத்தது எகிப்து நாட்டு காரன் என்பது ஊர்ஜிதப்படுகிறது. ஏனெனில் பாதி பணத்தை எந்த கேள்வியும் இல்லாமல் கொடுத்து விட்டு அவன் எகிப்து சென்று விட்டான். பணத்தை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கும் சென்றிருக்கலாம். அவன் அரபி என்பதால் மொழிப் பிரச்னையும் இல்லை.

மற்றபடி கமருதீன் குடும்பம் முன்பு இருந்த நிலையை விட மிக ஏழ்மையாக உள்ளது. திரடிய பணம் இருந்திருந்தால் அந்த குடும்பம் மேன்மைக்கு வந்திருக்கும். அடுத்து ஓர் பெரியவர்கள் அனைவரும் கமருதீனைப் பற்றி சிறந்த அபிப்ராயம் கொண்டு கடிதம் கொடுத்ததாலேயே இந்த முயற்சியில் இறங்கினோம். அதையும் மீறி கமருதீன் தவறு செய்திரந்தால் அதற்குரிய தண்டனையை இறைவனிடம் இறப்புக்கு பிறகு பெற்றுக் கொள்வார். அவரது உள்ளத்தை பிளந்து நம்மால் பார்க்க முடியாது அல்லவா?

suvanappiriyan said...

//சகோ சுவனபிரியன், சார்வகன் மற்றும் ஸமிதா உடனான பின்னூட்ட பஞ்சாயித்து எந்த தளத்தில் நடக்கிறது என குறிப்பிட்டால் நாங்களும் கலந்து கொள்வோமே, ஆவன செய்வீர்களா?//

http://parvaiyil.blogspot.com/2012/08/blog-post.html

http://puthu.thinnai.com/?p=13363#comment-8170

Anonymous said...

@ சகோ சுவனபிரியன், இணைப்புக்களை தந்தற்கு மிகவும் நன்றி. தாங்கள் பிற தளங்களில் இட்ட பின்னூட்டங்களை பிரசுரிக்கும் போது தளத்தின் முகவரியும் இதேபோல அளித்தால் எமக்கு பயனுள்ளதாக இருக்கும், நன்றி.

@சகோ வவ்வால், சரி முசுலிம் என்பதற்காகதான் சுவனபிரியன் சகோ உதவுகிறார் என வைத்துக்கொள்ளவோம் அதிலென்ன தவறு? உதவு யாருக்குமே கிடைக்காமல் போவதற்கு முசுலிமிற்காகவாவது கிடைக்குதே. அவர் தமிழன் என எப்படி சொல்லாம் எனில் அது மார்கட்டிங் கிமிக் என கொண்டாலும் ஒருத்தனுக்கு கிட்டும் உதவிக்காக மாற்றி சொல்லுவதில் தவறில்லையே, மேலும் அவர் தமிழ் முசுலிம்தானே.

நீங்கள் பெட்னாவிடம் இந்த மாதிரி உதவி பற்றி சொன்னீர்கள் ஏதாவது நடந்ததா? மற்றவரிடம் கேட்டால் உதவி கோருபவன் தமிழனா, திராவிடனா, பார்ப்பானா, நம்ம சாதிதானா, நம்மூரா இல்லை வெளியூரா, காசு இருப்பவனா இல்லை வக்கத்தவனா என ஆராய்ச்சி பண்ணி முடிப்பதற்குள் ஆட்காலியே ஆகிவிடுவான். விடுங்கள் அவர்களாவது ஒற்றுமையாக இருக்கட்டும்!

UNMAIKAL said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ? PART 1

உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது.

இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கத்திய (அ)நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தகங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது.

முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக் என்ற புத்தகத்திலும்,

அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள ”பட் ஆஃப்” என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும்,

மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம்,


The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever?

Athletes will receive 15 condoms each for the 17-day festival

'I've seen athletes having sex out in the open, getting down and dirty on grass between buildings,' says U.S. women's goalie
Victoria Pendleton among the glamorous female stars offered condoms


Read more:CLICK >>> The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever? <<<<< TO READ


அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம்.

அப்பொழுது 8500 காண்டமும்,
1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும்,
2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும்,

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம்

விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு

இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம்

தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).

இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு.

இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர்.

வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்,

ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

UNMAIKAL said...

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?
PART 2


சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம்.

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன்.

கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன்.

ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர்.

மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும்.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர்.

இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர்.

வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால் (காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது.

இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம்.

ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது.

இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம்.

அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம்.

அதேபோல கண்டிப்பதும் இல்லையாம்.

கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம்.

அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள்.

வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?.

இந்த கூத்தில் இஸ்லாமிய நாடான கத்தார் 2022ம் வருட உலக கால்பந்து போட்டியை நடத்த உள்ளது.

எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பரபடுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும்,

பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

எனக்கு பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன்.

“கல்வி குறைந்து போய் விடுவது, அறியாமை வெளிப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும்,

ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வமிக்கும் ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவது ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்” என்று இறைத்தூதர்(ஸல்) கூற கேட்டிருக்கிறேன் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (நூல் புகாரி- அத்தியாயம்-1- ஹதீஸ்-81)


-நௌஷாத் அலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்


http://elitedaily.com/elite/2012/anonymous-olympic-athlete-tells-partying-butt-waking-random-beds-games-village/

UNMAIKAL said...

U.S. Olympic Athlete Tells Of ‘Partying Her Butt Off, Waking Up In Random Beds In Games Village

One of the most titillating stories surrounding every Olympics is the insane amount of sex that takes place in the athletes’ village.

Olympians are charged up with hormones (some natural, some unnatural) and tight with tension.

Many are looking to let loose before their big event, or at least as soon as it’s over.

They are surrounded by toned, attractive athletes from around the world and they are all living together in tight quarters.

It’s not hard to see why so many of them get it on with each other.

A record 150,000 condoms will be delivered to athletes at the 2012 Summer Olympics, in anticipation of record levels of athlete sex.

That equates to a staggering 15 condoms per athlete–a 50 per cent increase over the number that were handed out in Beijing.

Durex has even said that it is prepared to ship in emergency backups if the initial supply runs out.

At the 2000 Sydney Olympics, organizers famously had to place a rush order for 20,000 extra condoms because the initial supply of 70,000 ran out.

Hope Solo, goalkeeper for the US women’s Olympic soccer team, has spoken in the past about all the sex that happens at the Olympics.

“I’ve seen people having sex out in the open, getting down and dirty on grass between buildings,” she said.

“I may have snuck a celebrity into my Beijing room without anybody knowing and snuck him back out. But that’s my Olympic secret.”

Many athletes cheat on their spouses at the games, but it doesn’t seem to be a big deal in that culture. They take sort of a “what happens at the Olympics stays at the Olympics” perspective on things.

SOURCE: http://www.manolith.com/2012/07/20/150000-olympic-condoms-thats-15-per-athlete-to-be-handed-out-at-london-2012/

தமிழ்சேட்டுபையன் said...

சகோ சுவனப்பிரியன் தங்களின் பணி பாரட்டுக்குறியது! இலங்கை தமிழருக்காக..தமிழக மீனவனுக்காக நீங்கள் எழுதிய பதிவைப் படித்து இந்திய அரசு உதவியதே....அதுபோல் இதற்கும் உதவும்.....கவலை கொள்ளவேண்டாம்....

Anonymous said...

கமருதீன் என்ற தமிழரின் நிலை பரிதாபமாகவே உள்ளது ...

முதலில் கமருதீன் உண்மையிலேயே குற்றமற்றவரா இல்லை திருடினாரா ....

அப்படி குற்றமற்றவர் என்ற நிலையில் ஏன் சௌதி அரசு இவரை சிறையிலிட்டுள்ளது ...

சந்தர்ப்ப சூழல்களால் அப்பாவிகள் சிக்கிக் கொள்வது இயல்பே ஆனாலும், எல்லாம் வல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டத்தை பூரணமாக ஏற்று நடத்திவரும் சௌதியால் உண்மையான குற்றவாளியை கண்டுப் பிடிக்க முடியவில்லையா .. இரண்டு ஆண்டுகளாக என்ன நடக்குது அங்கே ... !!!

கமருதீன் என்ற தமிழர் குற்றமற்றவர் என்பது உண்மை எனில் இங்கு கேள்விக்கு உள்ளாகி இருப்பது சௌதியின் சட்டமே ...

ஒன்று சட்டத்தில் குறை இருக்க வேண்டும் .. !!! அல்லது கமருதீன் தவறு செய்திருக்க வேண்டும் ... !!! கமருதீன் திருடியமைக்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில் என்ன ம...க்கு அவரை இவ்ளோ காலம் சிறையில் வைத்துள்ளார்கள் .. இதுவரைக் காலமும் அங்கிருக்கும் இந்தியர்கள் - சாரி - தமிழர்கள் என்னத்தைப் பி..கி கொண்டு இருக்கின்றார்கள் .. இன்று காசு கட்டி இவரை வெளியே எடுத்துவிடலாம் ..

360,000 ரூபாய் எல்லாம் பிஸ்கோத்து காசு ஆயிரம் தமிழர்கள் கிள்ளிக் கொடுத்தாலும் சேர்ந்துவிடும் .. !!! தவ்வீத் ஜமாத்தில் உள்ளோரே போதும் .. !!!

ஆனால் இன்று அப்பாவியான ஒரு தமிழனுக்கு திருட்டுப் பட்டம் கிடைக்கின்றது, ஆதாரம் இல்லாத பட்சத்திலும் அவனே குற்றவாளி.. நாளை அங்கிருக்கும் லட்சக் கணக்கான தமிழர்கள் மீதும் குற்றம் சுமத்துவார்கள் .. எல்லாருக்கும் காசு சேர்த்துக் கொண்டிருக்க முடியுமா ..

குற்றம் செய்யாத ( அப்படியே நான் எடுத்துக் கொள்கிறேன் ) ஒருவனுக்கே இந்த நிலை .. அந்நிலைக்கு கொண்டு வந்த சட்டத்தை கேள்விக் கேட்காமல் அங்குள்ள தமிழர்கள் மூடிக் கொண்டு இருப்பது நியாயமே இல்லை ..

ஒரு முஸ்லிமுக்கே இந்த நிலை எனில் வேற்று மதத்தவருக்கு இச்சட்டம் எப்படி நியாயம் தரும் சொல்லுங்கள் ..

குரானை மட்டும் படித்து அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது அநியாயம் நடக்கும் இடத்தில் அவன் நம் மதமே ஆனாலும் தட்டிக் கேட்க துணிச்சல் வேண்டும் ..

இந்த ஒரு நல்ல விடயத்தையாவது முகமதுவிடம் இருந்துக் கற்றுக் கொள்ளுக்கங்கள் தோழர்களே !!! அவருக்கு அந்தக் காலத்தில் இருந்த தைரியம் கூட அவரை தினமும் ஜபிக்கும் நம்மவர்களுக்கு இல்லை ... !!!

UNMAIKAL said...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு

ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும்.

அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார்.

கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.

நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை.

அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம்.

அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/08/02/world-nris-angry-at-reintroduction-decades-old-gold-customs-158888.html

suvanappiriyan said...

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

அறிவிப்பு கொடுத்த ஒரே நாளில் 2600 ரியால் உதவி செய்த நல்லுள்ளங்களின் உதவியால், இறைவன் நாடினால் விரைவில் சிறையில் வாடும் திரு. கமர்தீன் அவர்களை தாயகம் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கைத் தளிர் விட்டுள்ளது.

இன்று ஷிஹாப் கொட்டுக்காடு அவர்களிடம் பேசி அவரின் கபீலை நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன், நம்மில் சிலர் சென்று பேசினால் ஒருவேளை மனம் இரங்கலாம்... முயற்சிப்போமே...

இம்தியாஸ்

என்ன...கோவிக் கண்ணன். நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு பதிவெல்லாம் எழுதியும் ஒரே நாளில் இவ்வளவு தொகையை நல்ல உள்ளங்கள் அள்ளித் தந்துள்ளதே! நல்லது எங்கும் நடந்தால் பொறுக்காதோ....

தமிழில் ஒரு பழமொழி உண்டு...


'உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கவும்'

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

suvanappiriyan said...

புதுடில்லி: ஆறு பேர் மீது, காரை மோதி விட்டு, தப்பி ஓடிய வழக்கில், கடற்படை முன்னாள் தளபதி எஸ்.எம்.நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா, இரண்டு ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், "விபத்து ஏற்பட்ட பின், தப்பி ஓடாமல் கருணையுடன் செயல்பட்டிருந்தால், ஆறு பேரின் உயிர் காப்பற்றப்பட்டு இருக்கும்' என்றும், நந்தாவின் செயல் குறித்து, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடற்படை முன்னாள் தளபதி எஸ்.எம்.நந்தா. இவரது பேரன் சஞ்சீவ் நந்தா, 34. இவர், 1999ல், டில்லியில், தனக்குச் சொந்தமான பி.எம். டபிள்யூ., காரை ஓட்டிச் சென்றார். அவரது நண்பர்களும் அதில் இருந்தனர். அப்போது, சாலையில் சென்ற ஆறு பேர் மீது, நந்தா ஓட்டி வந்த கார் மோதியது. அவர்கள் படுகாயமடைந்ததும், நந்தா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தண்டனை குறைப்பு: இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம், நந்தாவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டது. நந்தாவின் கவனக்குறைவே இதற்கு காரணம். விபத்து நிகழ்ந்தது, அவருக்கு தெரியவில்லை' எனக் கூறி, தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, கடந்த 2009ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டில்லி போலீசார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நந்தாவின் செயலால், ஆறு உயிர்கள் பறிபோய் விட்டன. மரணம் ஏற்படுத்தக் கூடிய குற்றத்தைச் செய்தது தொடர்பான சட்டத்தின் கீழ், அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீபக் வர்மா, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.

பொறுப்பற்ற செயல்: அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: மரணம் ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை நந்தா செய்துள்ளார். இதில், எந்த சந்தேகமும் இல்லை. விபத்து நிகழ்ந்தவுடன், அங்கிருந்து தப்பி ஓடாமல், காயமடைந்தவர்கள் மீது கருணை காட்டியிருந்தால், ஆறு உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த செயல், அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக உள்ளது. சாதாரண வழக்கின் கீழ், நந்தாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல. இந்த தீர்ப்பு, மக்களுக்கு தவறான தகவலை தருவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். ஆனாலும், இந்த வழக்கின் கீழ், ஏற்கனவே அவர், இரண்டு ஆண்டு தண்டனை அனுபவித்துள்ளார். இதனால், மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக, இரண்டு ஆண்டுகள் சமூக சேவை செய்வதோடு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும். இந்தத் தொகையை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக, பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

-Dinamalar
04-08-2012