Followers

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, December 06, 2017

சிறு வயதில் என்னவொரு பக்குவம்?

சிறு வயதில் என்னவொரு பக்குவம்?

முஹம்மது அல் ஜூன்தே தனது 12 வது வயதில் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை பார்க்கிறான். வீடுகளை இழந்து உடமைகளை இழந்து அனாதரவாக பல நூறு குடும்பங்கள் கூடாரங்களில் தங்கி சிரமப்படுவதை பார்க்கிறான். அவன் வயதையொத்த சிறுவர் சிறுமிகள் கல்வி கற்காமல் சுற்றித் திரிவதை கண்டு மனம் வெதும்புகிறான். நாம் ஏன் ஒரு பள்ளியை ஆரம்பிக்கக் கூடாது என்று யோசிக்கிறான்.

தனது உறவினர்களிடமும் தனது நண்பர்களிடமும் தனது எண்ணத்தை பகிர்கிறான். முதலில் தயங்கிய அனைவரும் பிறகு தோள் கொடுத்தனர். பலரிடமிருந்து கிடைத்த உதவிகளைக் கொண்டு அகதிகள் முகாமுக்கு அருகில் ஒரு பள்ளியை துவக்கினான். ஆங்கிலமும், கணக்கும் முதல் பாடமாக அந்த சிறார்களுக்கு போதிக்க தொடங்கினான். அகதி முகாமில் இருந்த பல படித்தவர்கள் ஆசிரியர்களாக மாறி பாடம் எடுக்க தொடங்கினர். கடந்த மூன்று வருடங்களுக்குள் பள்ளியில் படிப்போரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

'நான் ஆசிரியனாக அல்ல... அவர்களின் தோழனாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களாக அவர்களோடு பழகுகிறேன். 11 வருடங்களாக உள் நாட்டுப் போரில் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே வருங்கால சிரியாவை உருவாக்கும் சிற்பிகளாக இவர்கள் திகழ வேண்டும் என்று நினைக்கிறேன்.' என்கிறான் இந்த சிறுவன்.

2017 ஆம் ஆண்டுக்கான 'அகில உலக சிறுவர்களுக்கான அமைதிப் பரிசு' முஹம்மது அல் ஜூன்தேவுக்கு கிடைத்துள்ளது. இந்த சிறுவனைப் போல் பாதிக்கப்படும் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் இளைஞர்கள் உருவாக வேண்டும்.

தகவல் உதவி
சவுதி கெஜட்

05-12-2017


Wednesday, September 23, 2015

பாபர் அலி: தலைமை ஆசிரியர்களில் தனி ஒருவர்!



நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் அடங்கிய குழுவொன்று, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஆசிரியர்களின் நிலையை உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர், சாதாரண சட்டை அணிந்து அங்கிருந்த சூழ்நிலையில் இருந்து சற்றே விலகி அமர்ந்திருக்கிறார்.

சில நிமிடங்களுக்குள்ளாகவே, மேடைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகின் இளம் வயது தலைமை ஆசிரியர் என்று அறியப்படும் 22 வயதான பாபர் அலி, அங்கிருக்கும் கல்வியாளர்களால் சூழப்படுகிறார். பாபருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் முண்டியடிக்கின்றனர். யார் அந்த பாபர் அலி?

மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத் நகரில் பாப்தா என்னும் பின்தங்கிய கிராமத்தில், எட்டு மாணவர்களுடன் ஒரு பள்ளியை ஆரம்பித்தபோது பாபருக்கு வயது ஒன்பது. இப்போது அதே பள்ளி 10 ஆசிரியர்கள் மற்றும் 300 மாணவர்களுடன், வெற்றி நடைபோடுகிறது. ஆனந்த சிக்‌ஷா நிகேதன் என்ற பெயரின் மேற்கு வங்க அரசின் ஆதரவோடு பள்ளி செயல்பட்டு வருகிறது.

காலையில் மாணவராக பெர்காம்பூர் கிருஷானத் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் பாபர் அலி, மதியம் ஆசிரியராய் பள்ளியில் பாடம் எடுக்கிறார். கல்வியின் தரம் குறித்த தேசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாபர், கற்பித்தலை உன்னதமான தொழிலாகவும், ஈடுபாடாகவும் பார்க்கிறார். விழாவில் அவர் பேசியது

"பள்ளியை ஆரம்பித்தது ஏதோ ஒரு விளையாட்டு போலத்தான் இருக்கிறது. அப்போது எனது சகோதரிக்குக் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து என்னுடைய கிராமத்தில் இருக்கும் சில குழந்தைகளும் கற்றுக்கொள்ள வந்தனர். அப்படித்தான் பள்ளி தொடங்கப்பட்டது.

இப்போது என்னிடம் படித்த ஆறு மாணவர்கள், தங்கள் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு எங்கள் பள்ளியிலேயே வகுப்பெடுக்கின்றனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எனக்கு பெரிதும் உதவிவருகின்றனர். நன்கொடையாளர்களின் உதவியால், எங்கள் பள்ளிக்கான கனவுக் கட்டிடம் நனவாகப் போகிறது.

கர்நாடக அரசின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பாடப்புத்தகத்தில், என்னைப் பற்றிய பாடம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 90 சதவீதம், கர்நாடகத்தில் இருந்து எனக்கு ஈமெயிலில் வந்த பாராட்டுக் கடிதங்களே" என்றார்.

மாநாட்டில், எல்லோரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றாலும், பாபர் திருப்தி கொள்ளவில்லை. குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் பலர் அவரின் கிராமத்திலேயே இருப்பதாகவும், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்னும் இலக்குக்கு தான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்கிறார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்
23-09-2015

சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்ஷ

Wednesday, July 15, 2015

திருக்குறளின் கடவுள் வாழ்த்து இஸ்லாத்தை நோக்கி செல்கிறதே!

நீங்கள் திருவள்ளுவரை இந்து என்று சொல்கிறீர்கள். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இசுலாமும் கிருத்துவமும் தமிழ்நாட்டில் நுழையவில்லை. உண்மைதான். ஆனால், இவ்விரு மதத்தவரும் கிருத்துவ மதக்கொள்கைகள் காணப்படுவதாகச் சொல்லலாம். அல்லது ஓரிறைக் கொள்கையைக் காட்டலாம்.

அதே சமயம், நீங்கள் வள்ளுவரை இந்துவாக்க முனைவது அவரைச் சமணர்கள் தங்கள் ஆச்சாரியராகக் கொண்டு வழிபடுவது பொய் என்று சொல்லத்தான். வள்ளுவர் கொந்தகொந்த சமணாச்சாரியாராக வழிபடப்ப‌டுகிறார் தமிழ்நாட்டில் என்பது உண்மை என்று நன்கு உங்களுக்குத் தெரியும். சமணர்கள் கூற்றுப்படி அவர் யாத்த நூல்களுள் ஒன்றேயொன்றுதான் தமிழ்நூல் – அது திருக்குறள். மற்றவை வடமொழி சமண சமய நூல்கள் என்றும் அந்நூல்கள் பெயரகளையும் குறிப்பிடுகிறார்கள் சமணர்கள்.

சமண வாதத்தை எதிர்க்க வைக்கப்பட்டதே வள்ளுவர் ஓர் இந்து என்ற இந்துத்வா பிரச்சாரமாகும். இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் எதிராக அன்று. உங்கள் பிரச்சாரம் இங்கே அதுதான். ஆதி பகவன் என்பதற்கு ஆதி பராசக்தி + சிவன் என்று விளக்கம் நீங்கள் கொடுக்கலாம. உஙகளாசை. சமணர்கள் ஏற்கவில்லை. மற்றவரகள் அச்சொல் அனைத்தையும் கடந்த உள் (கடவுள்) எனபதையே குறிக்கிறதென்கிறார்கள். ஆதி என்பது தொடக்கம். தொடக்கத்திலிருந்து வந்தது என்றுதான் பொருள் படும். ஆதி என்றால் ஆதிபராசக்தி என்று சொல்ல ஆதிக்குப்பின் ஒரு சொல் பராசக்தி என்று குறிக்க வேண்டும். ஆதி என்பது அட்ஜக்டிவ் – பண்புப்பெயர். நவுன் கிடையாது. பகவன் என்பது நவுன் – பெயர்ச்சொல். அதாவது காமன் நவுன். பொதுப் பெயர். எக்கடவுளையுமே குறிக்கும். ஈஸ்வர், இறைவன், கடவுள் என்பன போல.

நன்னெறி பற்றியெல்லாம் பேசாதீர்கள். அஃதெல்லோருக்குமே தெரியும். நன்னெறி என்று போனால் மருத்துவர் ஜாண்சன் சொன்னதைத்தான் ஏற்க வேண்டும். இந்த சச்சரவெல்லாம் ஏன்? கடவுள் வாழ்த்து கடவுளைப்பற்றி; எக்கடவுள் என்று அவர் சொல்லவில்லை என்று மருத்துவர் முடித்துவிட, நீங்களோ, அது சிவ பார்வதியைக்குறிக்குமென்று வள்ளுவரை இந்து என்று மீண்டும் நிலைநாட்டுகிறீர்கள். நன்னெறி என்று விட்டீர்களா? வீண்வாதம் உங்களிடமிருந்தும் வருகிறது. ஓரிறைக்கொள்கையை வள்ளுவர் கொள்கை என்று முடித்துவிட தயக்கமேன்?
ஓரிறைக்கொள்கை இந்து சமயத்துக்குப் புதியன்று. ஓகே. அதே சமயம், அக்கொள்கையுடனே ஷாலி சொன்ன முப்பது முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒன்றையே பலவற்றையோ தொழலாமென்றும் இந்துமதம் சொல்கிறது. அப்படியே மக்களும் செய்கிறார்கள். நீங்கள் அண்ணாமலையாரையும் முருகனையும் வெங்கடாஜலபதியையும் தொழுகிறீர்கள். வைணவர்கள் உங்கள் சிவ பாரவதி, முருகன் எனறு தொழவதில்லை. ஆக, என்ன புலனாகிறது இதில்? இந்துமதத்தில் ஓரிறைக்கொள்கை உண்டு; அதே சமயம், இன்னொரு கொள்கையாக பலகடவுளர் வணக்கமும் இருக்கிறது. இல்லையா?

இசுலாமில் அப்படி இல்லவே இல்லை.

//இறைவன் ஒருவனே; அவன் நாமம் அல்லா. அவனைத்தவிர இறையேதும் இல்லை//. God is Only One. His name is Allah. There is no God but Allah//

இதைத்தான் அவர்கள் நித்தம்நித்தம் ஓதுகிறார்கள். தொழுகைக்கு அழைப்பாகவும் விடுக்கிறார்கள். அதாவது அவர்கள் கொள்கை ஒன்றே.
எனவே ஓரிறைக்கொள்கையென்றால் இசுலாமே. ஒருவர் ஓரிறைக்கொள்கையைப்பற்றி சிலாகித்து எழுதுகிறரென்றால், இன்று அவரைக் கண்டிப்பாக இசுலாமியர் எனலாம். வள்ளுவர் காலத்தில் அக்கொள்கையைக் கொண்டு வாழ்பவர் எனலாம். வள்ளுவர் அப்படி வருவார். இல்லையா?

-BS

Thursday, July 02, 2015

ரமலான் இரவு நேர (சஹர் நேர) மார்க்க விளக்க நிகழ்ச்சி!





ரமலான் இரவு நேர (சஹர் நேர) மார்க்க விளக்க நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சால்மியா கிளை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!

இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் "நன்றிக்கெட்டோர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்கள்.

குவைத்தில் நிகழும் அசாதாரண சூழலிலும் நள்ளிரவு வேளையிலும் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தங்களின் வேலைகளை முடித்து விட்டு இந்த வெயில் காலங்களில் சற்று ஓய்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களே அதிகம். அந்த ஓய்வு நேரங்களையும் தியாகம் செய்து மார்க்கத்தை அதன் தூய்மையான வழியில் அறிந்து கொள்ள வேண்டும் என்று பெருந் திரளாக கூடியுள்ள இந்த ஆண்களையும் பெண்களையும் தொடர்ந்து நேரான வழியில் செல்ல பிரார்த்திப்போம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, June 02, 2015

ஐ ஏ எஸ் இலவச பயிற்சி முகாம் இஸ்லாமியருக்கு!



ஐ.ஏ.எஸ்- தேர்வு எழுதுவதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த ‪#‎முஸ்லிம்‬ ‪#‎ஆண்‬-‪#‎பெண்‬ பட்டதாரிகளுக்கு உறைவிடம், உணவு, பயிற்சிக் கட்டணம் ஆகியன ஸ்பான்ஷர்ஷிப் மூலம் இலவசமாக வழங்கப் பெற்றுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதற்கான தகுதித் தேர்வு வரும் 13-06-2015 அன்று காலை சென்னை, திருச்சி, திருநெல்வேலி,ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. கலந்துகொள்ளவிரும்புவோர் விண்ணப்பத்திற்கும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்க:-

E.mail: professorsemumu@gmail.com

Mobile: 0091- 9444165153

Friday, May 01, 2015

பாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்!



எத்தனை கொலைகள்: எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை காயங்கள்: எத்தனை வீடு இடிப்புகள்: அனைத்தையும் தங்களின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி இடிந்த பள்ளி அறையிலும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பாலஸ்தீன மக்களிடம் நமக்கும் பாடம் இருக்கிறது. இத்தனை தோல்விகள் கண்டும், அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பாவும் வஞ்சகமாக பாலஸ்தீனியர்களை பழி வாங்கினாலும் கிடைக்கும் சந்தர்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் பாலஸ்தீனியர்கள்.

தோற்றத்திலும் நிறத்திலும் நம் ஊர் பார்பனர்களை ஒத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எப்பாடு பட்டாவது ஒரு டிகிரி எடுத்து விடுவார்கள். கல்வி கற்பதை அந்த அளவு நேசிப்பர். அதிகமாக அலுவலக வேலைகளையே விரும்புவர். சவுதியில் பல பாலஸ்தீனியர்களை நண்பனாக பெற்றவன். பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். மிக தைரியசாலிகள்: பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் போட்டி போடுவர். அதே வேகத்தில் தொழுகையிலும் மிக கவனமாக இருப்பர்.

தோல்விகளையும் சிரமங்களையுமே வாழ்க்கையாக கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச நம்முடைய பிரார்த்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!

குர்ஆன் 20:114

Wednesday, April 15, 2015

மகள் டாக்டர்- மகன் விமானி- தந்தையோ ஆட்டோ டிரைவர்!



மது ராதா என்ற பெண்மணி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

'நான் ஆட்டோவில் ஏறினால் அந்த டிரைவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. சில நாட்களுக்கு முன் எனது தாயாரோடு கரூரில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டோவில் அவரது பிள்ளைகள் ஒருவர் மருத்துவராகவும் மற்றவர் விமானியாக வேலை செய்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது எனக்கும் எனது தாயாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதனை படித்த எனது தாயார் அந்த ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

எனது தாயார்: உங்களின் மகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணிபுரிவதாக எழுதியுள்ளீர்களே? அவர் எங்கு படித்தார்?

ஆட்டோ டிரைவர்: எனது மகள் அரசு பள்ளியில் எங்களது கிராமத்தில் படித்தாள். அனால் கடுமையாக உழைத்தாள். சென்ற மாதம் ஒரு மருத்துவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். என்னுடைய மற்றொரு மகன் விமானியாக லண்டனில் வேலை செய்து வருகிறார். அவரும் திருமணம் முடித்து தனது குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

எனது தாயார்: தவறாக எண்ண வேண்டாம்! உங்களின் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கும் போது இன்னும் ஏன் ஆட்டோ ஓட்டி வருகிறீர்கள்?

ஆட்டோ டிரைவர்: இந்த வேலைதான் எனது பிள்ளைகளுக்கு இவ்வளவு சிறந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. எந்த காலத்திலும் இந்த தொழிலை நான் மறக்க மாட்டேன். தற்போது எனது பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. தற்பொது ஆட்டோ ஓட்டுதலை எனது ஹாபியாக செய்து வருகிறேன். வறியர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு உதவும் வகையில் எனது தொழிலை செய்து வருகிறேன். இதில் எனக்கு பூரண திருப்தி கிடைக்கிறது.

ஆட்டோ டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்து போனேன். வருங்காலத்தில் எனது பொருளாதார நிலை உயர்ந்தாலும் எனது பழைய வேலையையும் அங்கு பணியாற்றியவர்களையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது என்ற படிப்பினையையும் பெற்றுக் கொண்டேன்."

-மது ராதா

தமிழில் மொழி பெயர்த்தது
சுவனப்பிரியன்

Wednesday, March 18, 2015

மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்



மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்

இஸ்லாம் 'ஜகாத்' என்ற ஒரு கடமையை இஸ்லாமியருக்கு கட்டாய கடமையாக்கியிருக்கிறது. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள நகை, விளை நிலங்கள், வாடகை வீடுகள், வாகனங்கள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு அதனை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. தொழுகையை எங்கெல்லாம் குர்ஆன் குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் ஜகாத்தையும் கொடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

நபிகள் நாயகம் காலத்தில் 'பைத்துல் மால்' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அனைத்து ஜகாத்துகளையும் வசூலிக்க ஆட்களையே சம்பளத்துக்கு நியமித்திருந்தனர். அன்றைய அரபு சமூகத்தின் வறுமையை இந்த திட்டமானது முற்றிலும் ஒழித்துக் காட்டியது.

'பைத்துல் மால்' என்ற இந்த அமைப்பை தனி ஒரு மனிதனாக ஆரம்பித்து இன்று பல லட்சக்கணக்கான ஏழை இஸ்லாமிய மாணவ மாணவிகள் பலன் பெற காரணமாக உள்ளார் கியாஸூதீன் பாஸூ கான்! கட்டுமான துறையில் உள்ள இவர் இஸ்லாமியர்களின் ஜகாத் பணத்தை வசூலித்து கல்விப் பணிக்கு செலவிட திட்டமிட்டார். 25 வருடங்களுக்கு முன்னால் தனது சொந்தங்களிடமிருந்து ஜகாத் தொகைகளை வசூலித்தார். இது பற்றி அவர் கூறுவதாவது....

'ஜகாத் பணத்தை தனி மனிதனாக செலவிடுவதை விட அதனை பொதுவானதாக்கி அனைவரையும் பங்கு பெற வைக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் பலர் இதனை விரும்பவில்லை. சிறிது காலத்துக்கு பிறகு எனது முயற்சிக்கு பல இடங்களிலிருந்தும் ஆதரவு பெருகியது. எனது சொந்தங்கள் நீங்கலாக மற்ற ஆட்களும் பணத்தை தர முன் வந்தனர். ஒரு சிலர் தங்களின் நன்கொடைகளையும் தர ஆரம்பித்தனர். 1992 ல் ஆரம்பித்த இந்த ட்ரஸ்டுக்கு 11 லட்சங்களே மூலதனமாக இருந்தது. பிறகு சொந்தங்கள் நண்பர்கள் மூலமாக பணம் குவியத் தொடங்கியது. Hyderabat Zakat And Charitable Trust (HZCT) என்ற இந்த ட்ரஸ்ட் ஆனது சில மாதங்களிலேயே வருடத்துக்கு 12 கோடி ரூபாயை கையாளும் அமைப்பாக பரிணமித்தது. நாங்கள் ஆரம்பத்தில் பள்ளிகளை ஆலமரத்தடியிலும், பள்ளி வாசல்களின் உபயோகப்படுத்தப் படாத இடங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு நடத்த ஆரம்பித்தோம். வசதி குறைந்த நடுத்தர வர்க்கத்து குழந்தைகள் மிகவும் ஏழைகள் இதனால் கல்விச் சாலையை நெருங்க முடிந்தது.

நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிப்பது கனவாக இருந்த போது எங்கள் ட்ரஸ்ட் அவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வருட உதவித் தொகையாக 25000 ரூபாய் இந்த ட்ரஸ்ட் மூலம் விநியோகித்தோம். இதன் மூலம் 45000 மாணவர்கள் ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநில மாணவ மாணவியர் பெரும் பலனடைந்தனர். 23 வருட காலங்களில் எங்கள் ட்ரஸ்டின் மூலம் 100 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையாக ஏழை மாணவர்களுக்கு அளித்துள்ளோம்.

இது மட்டுமல்ல நல்ல ரேங்கில் வரக் கூடிய மாணவ மாணவிகளை பொருக்கி எடுத்து 'நாளைய தலைவர்கள்' என்ற திட்டத்தின் கீழ் அவர்களை சிவில் சர்வீஸ் பரீட்சைகள் எழுத இலவச பயிற்சியும் கொடுத்து வருகிறோம். வெற்றிலை பாக்கு கடை வைத்துள்ள தொழிலாளியின் மகன் ஷேக் இம்ரான், வாட்ச் கடை வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளியின் மகன் தவ்ஃபீக், விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள வண்ணூர் வள்ளி போன்ற ஏழைகளையும் பெரும் படிப்புகளின் வாசலை மிதிக்க வைத்துள்ளோம். 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே திறமையானவர்களாக பார்த்து பொருக்கி எடுத்து விடுகிறோம். மேல் படிப்புக்காக அவர்களை முதல் வருடத்திலிருந்தே தயார் படுத்துகிறோம். முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் அரசு வேலைகளில் போதிய விருப்பம் இல்லாமல் இருந்தனர். தற்போது நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. கூலி வேலை செய்து பென்ஷன் பெற்று வரும் ஒரு ஏழைத்தாய் தனது குழந்தையை கல்லூரி வரை அனுப்ப பாடுபடுகிறாள். இது வரவேற்கத்தக்க மாற்றம். ஒரு மாணவனுக்கு கல்லூரி படிப்பு இருந்து விட்டால் அவன் சமூகத்தில் எங்கும் சென்று தனது முத்திரையை பதித்து விட முடியும்.

பலரும் என்னிடம் கேட்கின்றனர் 'வருமானத்தை அதிகம் விரும்பாத இந்த துறையை கட்டிக் கொண்டு எத்தனை காலம் ஓட்டுவீர்கள்' என்று. ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து இதை விட அதிக லாபம் எங்களால் ஈட்ட முடியும். ஆனால் ஏழைகளை தூக்கி விடும் இந்த கல்விப் பணியில் எங்களுக்கு மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது. லாபம் இங்கு கிடைக்கா விட்டாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இதை விட அதிகமான வெகுமதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உண்டு' என்று முடித்தார்.

இவரை போன்ற செல்வந்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து விட்டால் அந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகமாக மாறியிருக்கும் என்று நினைத்துப் பார்தேன். நம் தமிழக கிராமங்களும் இது போன்ற கல்விப் புரட்சியை நோக்கி பயனிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோமாக!

இஸ்லாமிய கிராமங்களில் ஊருக்கு இரண்டு அரபி மதரஸாக்கள் உலக கல்வியை புறந்தள்ளி அந்த மாணவர்களை 10க்கும் 20க்கும் ஃபாத்திஹா ஓதும் மட முல்லாக்களாக மாற்றும் போக்கை ஒதுக்கி மார்க்க கல்வியோடு இணைந்த உலகக் கல்வியை கொடுக்க முனைவோமாக! சிஎம்என் சலீம், பிஜே போன்றவர்களின் ஆலோசனையில் அமைந்த கல்வித் திட்டத்தை நமது மாணவ மாணவிகளுக்கு கொடுக்க முயல்வோமாக!

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'
-(குர்ஆன் - 2:219)




Wednesday, February 25, 2015

மதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்!



மதரஸாக்களில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது 'ஜம்யத்துல் அன்ஸார்' என்ற அரபி மதரஸா. இந்த மதரஸாவில் 14 இந்து மாணவர்கள் தாங்களாகவே விரும்பி சேர்ந்து கல்வி பயில்கின்றனர். இது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

இந்த மதரஸாவில் முன்பு வெறும் இஸ்லாமிய பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு என்று பலதரப்பட்ட கல்விகளையும் இந்த மதரஸா போதிக்கிறது. இந்த மதரஸாவின் முதல்வர் காலித் அன்சாரி சொல்கிறார் 'இந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உருது மற்றும் அரபி மொழியையும், இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கின்றனர். அதோடு உலக கல்வியும் சேர்ந்து கிடைப்பதால் இவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கல்வியும் கிடைத்து விடுகின்றது. இது அவர்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்கி வைக்கும் என்று இந்த மாணவர்களின் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.' என்கிறார்.

ஸ்ரீவாத்ஸவ் என்ற வைதீக இந்து சொல்கிறார் 'பலரும் என்னிடம் உனது குழந்தையை ஏன் மத்ரஸாவில் சேர்த்துள்ளாய் என்று கேட்கின்றனர். தரமான கல்வி, சிறந்த ஆசிரியர்கள், ஒழுக்கம் பேணுதல் என்று அனைத்தும் ஓரிடத்தில் எனது மகனுக்கு கிடைக்கும் போது அவனை அங்கு சேர்ப்பதில் என்ன தவறு?' என்று கேட்கிறார்.

இதே போல் இந்துக்கள் நடத்தும் வித்யா மந்திர் என்ற கல்வி ஸ்தாபனத்தில் சில இஸ்லாமிய மாணவர்களும் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படித்த இஸ்லாமியர்கள் பலர் பல நல்ல அரசு உத்தியோகங்களில் வேலை கிடைக்கப் பெற்றுள்ளனர். முன்பு கலவரம் நடந்து 50 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்த முஸாஃபர் நகருக்கு பக்கத்தில்தான் இந்த அதிசயம் நடந்து வருகிறது.

இந்துக்களையும் முஸ்லிம்களையும் மோத விட்டு அதன் மூலம் ஓட்டு அறுவடை செய்தது இந்துத்வா. தற்போது உண்மையை உணர்ந்த இரு தரப்பும் அன்பினால் நெருங்கி வருகிறது. இந்துத்வாவின் பிரித்தாளும் சூழ்ச்சி நெடு நாளைக்கு நீடிக்கவில்லை.

ஹிந்தி பேசும் மாநிலங்களெல்லாம் இன்று மதரஸா கல்வியை நவீனமயமாக்கி முஸ்லிம்கள் மத்தியில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நமது தமிழக மதரஸாக்களோ இன்னும் மத்ஹப் என்ற பெயரில் பல குப்பைகளை பாடங்களாக வைத்து போதித்து வருகின்றன. ஏழு வருடம் தனது வாழ்வை மதரஸாவில் தொலைத்த மாணவன் வெளியேறும் பொது உண்மையான இஸ்லாமிய கல்வியும் இல்லாமல் உலக கல்வியும் இல்லாமல் வருகிறான். போட்டி அதிகமுள்ள இந்த காலத்தில் மத்ஹப் பாடங்களை வைத்து அவனால் என்ன செய்ய முடியும்? இதனால் முடிவில் தட்டு, தாயத்து, ஃபாத்திஹா, தர்ஹா என்று போய் மூடப் பழக்கங்களில் மூழ்கி நஷ்டவாளிகளாக மாறிய பலரைப் பார்கிறோம்.

மதரஸாவை நடத்தும் செல்வந்தர்கள் இனியாவது உலக கல்வியை பாடமாக வைக்க முயற்சி செய்யுங்கள். சிஎம்என் சலீம் போன்றவர்கள் பல நல்ல திட்டங்களை வைத்துள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு அரசு அங்கீகாரத்தோடு மதரஸாக்களை நடத்த முயற்சி எடுங்கள். வீணாக ஏழை மாணவர்களை ஏழு வருடம் மத்ஹப் குப்பைகளை படிக்கவைத்து அவர்களை படு குழியில் தள்ள வெண்டாம்.

பணமும், அறிவும் கொடுக்கப்பட்ட மக்கள் அதனை சரியாக பயன்படுத்தாவிட்டால் அதற்கும் இறைவனிடம் பதில் சொல்ல கடமைபட்டுள்ளனர் என்ற நபி மொழியை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து நடவடிக்கை எடுப்பார்களாக! குர்ஆன், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், கணிணி, விளையாட்டு, என்று வகைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் முக்கால் மணி நேரம் ஒதுக்கி சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை எடுங்கள். நபிகள் நாயகம் காட்டித்தந்த அந்த 'முன் மாதிரி சமுதாயமாக' இளைஞர்களை மாற்ற இனியாவது முயற்சியுங்கள்.

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்'
-குர்ஆன் 39:9


தகவல் உதவி
என்டிடிவி
26-02-2015

Thursday, February 05, 2015

மெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்!



எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அப்துல் சமது என்ற மாணவன் தனது சொந்த முயற்சியில் மெட்ரோ ரயிலின் மாடலை புதுமையாக உருவாக்கியுள்ளார். உத்தர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காய்தி என்ற கிராமத்தை சேர்ந்தவன் இந்த மாணவன்.

மரம் மற்றும் இரும்பின் துணை கொண்டு பேட்டரியில் இயங்கும் மெட்ரோ ரயில் மாடலை புதுமையான முறையில் உண்டாக்கியுள்ளான் அப்துல் சமது. 40 அடி தூரத்தை எட்டு வினாடியில் இந்த ரயில் கடக்கிறது. மாணவனின் திறமையை பாராட்டி முதல்வர் அகிலேஷ் யாதவ் 03-02-2015 அன்று 5 லட்சம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். காய்தி கிராமத்தில் தொழிற் கல்விக் கூடம் ஒன்றையும் உருவாக்க ஆணை இட்டுள்ளார்.

ஷாம்லி மாவட்ட நீதிபதி என்.பி.சிங் சொல்கிறார் 'மாணவன் அப்துல் சமதின் திறமையை பாராட்ட அவனை சென்று சந்தித்தேன். அப்போது அவன் தான் ஒரு இன்ஜினீயர் மாணவனாக மாற வேண்டும் என்ற ஆசையை கூறினான். அவனது குடும்பம் வறுமையானது. எனவே இன்ஜினீயரிங் படிப்பு முடியும் வரை ஆகும் செலவுகளை நான் எடுத்துக் கொண்டுள்ளேன்' என்று பெருமை பட சொல்கிறார்.

மாணவன் அப்துல் சமது 'எனது அப்பா டெல்லியில் ஒரு கூலி தொழிலாளி. வறுமையான குடும்ப சூழல். டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆய்வுகள் என்னை வெகுவாக ஈர்த்தன. அவரைப் பொல நாமும் வர வேண்டும் என்று உறுதி பூண்டேன். அதன் தொடர்ச்சியே இந்த மெட்ரோ ரயில். டெல்லி சஹாதாரா ரெயில்வே ஸ்டேஷன்தான் இந்த மாடலை உருவாக்க உதவியது.' என்கிறார்.

குடும்ப சூழலை பார்த்து பின் வாங்காமல் இந்த வறுமையிலும் சாதித்துக் காட்டியிருக்கும் அப்துல் சமதுக்கு நமது பாராட்டுதல்களை தெரிவிப்போம். இவரைப் போன்ற திறமைமிக்க ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்பு செலவுகளை வசதி படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வோம்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
04-02-2015

Wednesday, December 10, 2014

நோபல் பரிசு பெற்ற மலாலாவின் உணர்ச்சி மிகு உரை!



நார்வே நாட்டின் ஆஸ்லோவில் இன்று அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தான் பெண் யூசப்சாய் மலாலா 'இப்போதே சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.. இப்போதே.. என்று தனது உரையில் தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில் கூறியதின் சுருக்கம்::

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்......

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு வாழ்த்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலாலா என்றால் ’துயரம் தோய்ந்த’ என்று பொருள், ஆனால் மகிழ்ச்சிகரமான ஒரு பெண்ணாக இன்று நான் இருக்கிறேன். எனது பெற்றோரின் நிபந்தனையற்ற அன்புக்கு நான் நன்றி செலுத்துகிறேன். குறிப்பாக என் தந்தை எனது இறகுகளை ஒடுக்காமல் என்னை பறக்க அனுமதித்ததற்கு நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன். எனது பொறுமைக்கும், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்பதற்கும் தூண்டுகோலாக இருக்கும் என் தாயாருக்கும் நன்றி. இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு தெளிவாக விளக்கிய எனது தாயாருக்கு என் நன்றி. இதுதான் இஸ்லாமின் உண்மையான செய்தி என்று நாங்கள் பலமாக நம்புகிறோம்.

சகோதர சகோதரிகளே, பலமான நாடுகள் என்று நாம் அழைக்கும் நாடுகள் ஏன் போர்களை உருவாக்குவதில் பலமாக உள்ளன, அமைதியை உருவாக்குவதில் பலவீனமாக உள்ளன? ஏன் துப்பாக்கிகள் அளிப்பது எளிதாக இருக்கிறது, புத்தகங்கள் அளிப்பது கடினமாக இருக்கிறது? போருக்கான டாங்கிகளை உருவாக்குவது சுலபமாக உள்ளது பள்ளிக்கூடங்கள் கட்டுவது கடினமாக உள்ளது? இப்படிப்பட்ட கேள்விகளை பெரியோர்கள் என்று கூறப்படுவர்களுக்குப் புரியும், ஆனால் சிறுவர்களான நமக்கு புரியாது.

நாம் நவீன உலகில் வாழ்கிறோம், இந்த 21ஆம் நூற்றாண்டில் நம்மால் முடியாதது எதுவுமல்ல என்று நாம் நம்புகிறோம். செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டோம், ஏற்கெனவே சந்திர மண்டலத்தை அடைந்து விட்டோம், பின்பு அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி என்பதை மட்டும் சாதிக்க முடியாதா என்ன? இதுவும் உண்மையாகும்.

கல்வி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம் தலைவர்களுக்கு கூற வேண்டிய நேரம் அல்ல இது. அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவர்களது குழந்தைகள் நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். இப்போது அனைவருக்கும் அத்தகையது தகைய வேண்டும், நடவடிக்கை எடுங்கள் என்/று அவர்களை வலியுறுத்துவோம். உலகத் தலைவர்களே ஒன்று கூடுங்கள், கல்வியை முன்னுரிமையாக்குங்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தலைவர்கள் சில இலக்குகளை நிர்ணயித்தனர். இதனையடுத்து வந்த ஆண்டுகளில் கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் முதன்மைக் கல்வி மட்டுமே விரிவடைந்தது. முன்னேற்றம் அனைவரையும் சென்றடையவில்லை.

நமது குழந்தைகளின் கல்விக்காக நாம் போராடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம். நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டால் இதனை சாதிக்க முடியும்.

ஏற்கெனவே இதனை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து சென்று கொண்டிருக்கிறோம், ஆனால் தாண்டிச்செல்ல இப்போது நேரம் வந்துள்ளது.

மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, ஆங் சாங் சூசி ஆகிய பெரியவர்கள் பெரிய மாற்றங்களை சாதித்துள்ளனர். அவர்கள் இந்த மேடையில் இருந்திருக்கிறார்கள். கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் நானும் எடுத்துள்ள வழிமுறைகள் மாற்றங்களைக் கொண்டுவரும். நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

என்னுடைய கிராமத்தில் இன்னமும் பெண்களுக்கு உயர்கல்வி இல்லை. நான் இதனை மாற்ற விரும்புகிறேன், இதன் மூலம் அவர்கள் கனவுகளை நிறைவேற்ற விரும்புகிறேன்.

இங்குதான் நான் தொடங்குகிறேன், ஆனால் இதோடு மட்டும் நிறுத்திவிடப்போவதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருப்பதை பார்க்கும் வரை நான் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நான் தாக்கப்பட்ட பிறகு இதில் மேலும் பலமானவளாகிவிட்டேன். ஏனெனில் யாரும் என்னை தடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். இப்போது நாம் லட்சக்கணக்கானவர்கள் ஆகிவிட்டோம், ஒருவரும் நம்மை தடுத்து விட முடியாது.

எனது சொந்த ஊரான ஸ்வாட் இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகிய நகரம். கல்வி பயில வேண்டும் என்ற தாகத்தால் கல்விச் சாலைகளில் ஆனந்தமாக சுற்றித் திரிந்தோம். ஸ்வாட் நகரம் சுற்றுலாவுக்கு பிரசித்திப் பெற்றது. திடீரென்று ஒருநாள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. 400 பள்ளிக் கூடங்கள் நிர்மூலமாயின. எங்களின் கனவுகள் தகர்ந்தது. எங்கும் பிரச்னை. பெண்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர். எனது உலகம் தீவிரவாதிகளால் மாற்றப்பட்டது. எனக்கு முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அமைதியாக வீட்டில் முடங்கி விடுவது. இரண்டாவது அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுப்பது. நான் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன்.

(பயங்கர கை தட்டல்)

என்னுடைய மிகச்சிறந்த பள்ளி தோழிகளில் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் தைரியமானவர். ஆனால் அவரது மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு வெறும் கனவாகவே முடிந்தது. 12 வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். உடனே குழந்தையும் பிறந்தது. அவரே ஒரு 14 வயது குழந்தை ஆனால் அவருக்கு ஒரு குழந்தை...அவர் சிறந்த மருத்துவராகியிருப்பார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவரால் முடியவில்லை, காரணம் அவர் ஒரு பெண், அவரது உடைந்த கனவுதான் எனது நோபல் பரிசு தொகையை மலாலா நிதியத்திற்கு அளிக்கச் செய்துள்ளது.

இதன் முதல் தொகை எனது இருதயம் எங்கு உள்ளதோ அங்குதான் செல்ல வேண்டும். அதாவது பாகிஸ்தானில் கல்விச்சாலைகளைக் கட்ட வேண்டும், குறிப்பாக எனது சொந்த ஊரான ஸ்வாட் மற்றும் சங்லாவில் கல்விசாலைகள் கட்டப்பட வேண்டும்.

இதை எல்லாம் எடுத்துச் சொன்னதற்காக சிலரால் நான் சுடப்பட்டேன். என்னை சுட்டவர்கள் அதற்கு இஸ்லாத்தையும் காரணமாக காட்டுகின்றனர். இஸ்லாம் அப்பாவி பொது மக்களை சுடச் சொல்கிறதா? கல்வி கற்கச் செல்லும் சிறுமிகளை சுடச் சொல்கிறதா? குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை விளங்கித்தான் அவர்கள் இந்த அராஜகத்தை நிகழ்த்துகிறார்களா?

'ஒரு மனிதனை அநியாயமாகக் கொல்வது ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொல்வதற்கு ஒப்பாகும்' என்ற குர்ஆன் வசனத்தை தாலிபான்கள் பார்க்கவில்லையா? அதனைப் பற்றிய விளக்கம் அவர்களுக்கு கிடைக்கவில்லையா?

புனித குரானின் முதல் இரண்டு அத்தியாயத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது இதைத்தான், அதில் வரும் ’இக்ரா’(Iqra) என்ற சொல், இதன் பொருள் படி அல்லது வாசி. படிப்பதற்கு இறைவன் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றால் அதனை தடுக்க இவர்கள் யார்? எனவே, நான் கடந்த ஆண்டு ஐ.நா.வில் கூறியது போல், ‘ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா போதும் உலகை மாற்ற’.

இன்று பாதி உலகம் விரைவு கதியில் முன்னேற்றம் அடையும் அதே தருணத்தில், பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் பசி, பட்டினி, அநீதீ என்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்றும் பல அப்பாவி மக்கள் போரினால் உயிரிழந்து வருகின்றனர். சிரியா, காஸா, இராக்கில் இன்னும் குடும்பங்கள் அகதிகளாக மாறிவருகின்றன. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் இன்னமும் பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் அப்பாவி மக்கள் பலர் தற்கொலை தாக்குதல்களில் பலியாகிவருகின்றனர்.

இன்று நான் ஒரு பெண்ணாக தெரியலாம். என்னுடைய குரல் தனித்த குரல் அல்ல. நான் பலவாகவுள்ளேன்.

ஆகவே நாம் பணியாற்றுவோம், காத்திருக்கத் தேவையில்லை.

Friday, November 21, 2014

இந்து சாமியார்களால் சீரழியும் தமிழக மாணவர்கள்!

அந்தச் சிறுவனுக்கு வயது 16 இருக்கும். ஓரிடத்தில் நிற்க முடியாமல் எம்பிக் குதித்துக்கொண்டிருந்தான். கை கால்களை உதறினான். கை கால்களில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதுபோல வழித்துவிட்டான். கொசுவை அடிப்பதுபோல உடலெங்கும் அடித்துக்கொண்டான். கன்னத்தில் நகத்தால் கீறி, பிய்த்துப்போட்டான். ரத்தம் வழிந்தது. வலி தாங்காமல் கதறி அழுதான். அருகில் இருந்த அவனது பெற்றோர் அவனை ஆற்ற முடியாமல் தவித்தனர்.


“ஒரு மாசமா இப்படித்தாங்க பண்றான். பாலிடெக்னிக் படிக்க அனுப்பினோம்ங்க. அங்க குடிக்கக் கத்துக்கிட்டான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலைங்க. இப்பெல்லாம் வீட்டுக்கே வாங்கிட்டு வந்துடறான். அது பிராந்தி மாதிரியும் தெரியலை. கருப்பா, கலங்கலா இருக்கு. அவன் ரூம்ல தேடிப் பார்த்தோம். அங்கங்க ஒளிச்சி வெச்சிருக்கிற பிராந்தி பாட்டிலுக்குள்ள எதையோ ஊறப்போட்டு வெச்சிருக்கான். எங்களுக்கு ஒண்ணுமே புரியலைங்க” என்றார்கள். எனக்குப் புரிந்தது. அது கஞ்சா. சமீப காலமாக குடிநோயாளிகளிடம் அதிகரித்துவரும் புதுவிதப் பழக்கம் இது.

குடிநோயாளிகள் தொடர்ந்து மது அருந்தும்போது அவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு கணிசமாகக் கூடிப்போயிருக்கும். ஒரு கட்டத்தில் வழக்கமான அளவில் மது அருந்தும்போது அவர்களுக்குப் போதை ஏறாது. சிலருக்குக் கூடுதலாக மது அருந்தினாலும் போதை ஏறாது. ‘அடுத்து என்ன?’ என்று தேடுவார்கள். பெரும்பாலும் அவர்களுக்குக் கிடைப்பது கஞ்சா அல்லது சில வகையான மாத்திரைகள்.

‘மம்மி’ வண்டுகள்

டாக்டரிடமிருந்து அழைப்பு வந்ததும் ஓடோடிச் சென்றான் அந்தச் சிறுவன். மணிக்கட்டிலிருந்து ஏதோ ஒன்றைப் பிடித்து, “இந்தப் பூச்சிதான் டாக்டர், உடம்பெல்லாம் ஊருது. தோலுக்குள்ள குடையுது” என்று டேபிள் மீது வைத்தான். அங்கு ஒன்றும் இல்லை. ஆனால், மறுபடியும் மறுபடியும் பிடித்துப் பிடித்து வைத்தான். டாக்டர் ஊசி போட்ட பின்புதான் ஆசுவாசம் அடைந்தான்.

திண்டுக்கல் அருகே வட மதுரையில் மது மீட்புச் சிகிச்சை மையம் நடத்திவருகிறார்கள் மருத்துவத் தம்பதியர் பாலகுரு - ஷர்மிளா. அங்குதான் இந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. “ஹாலிவுட் படமான ‘மம்மி’யில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். வண்டுகள் மனிதனின் தோலில் ஊடுருவிச் சென்று கொன்றுவிடும். பார்க்கப் படுபயங்கரமாக இருக்கும். அப்படியான ஒரு வியாதிதான் இது. உண்மையில் பூச்சிகள் எதுவும் தோலுக்குள் இருக்காது. ஆனால், அப்படியான மனப்பிரமை ஏற்படும். சமீப காலமாக திண்டுக்கல்லில் இதுபோன்ற கேஸ்கள் அதிகம் வருகின்றன. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு வருவதுதான் அதிர்ச்சி. மாணவர்கள் மதுவுடன் கஞ்சாவையும் கலந்து குடிக்கப் பழகிவிட்டார்கள். அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இந்தச் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சிறுவனுக்குத் தோலுக்கு அடியில் ஏதோ ஊர்வதுபோல இருக்கும். நேரமாக நேரமாக இந்த நமைச்சல் அதிகரிக்கும். தோலுக்குள் ஒரு பூச்சி துளைத்துக்கொண்டு ஊடுருவினால் எப்படி இருக்குமோ அப்படி வலிக்கும். பாதிப்பைப் பொறுத்துச் சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் இது ஏற்படும். சிலருக்கு உடல் முழுவதும் ஏற்படும். கண்ணுக்கு எதிரே ஏதோ உருவம் தெரியும் விஷுவல் ஹாலுசினேஷன் போல, காதுக்குள் குரல் கேட்கும் ஆடிட்டோரி ஹாலுசினேஷன் போல. இந்தப் பையனுக்கு இருப்பது டேக்டைல் ஹாலுசினேஷன் (Tactile hallucination). இதனை நாங்கள் ‘பக்ஸ் அண்டர் ஸ்கின்’(Bugs under skin) என்போம்.

இந்த நோயின் முற்றிய நிலையில் எப்போதும் கை, கால்களிலிருந்து எதையோ பிய்த்துப்போட்டபடி இருப்பார்கள். சிலர் உடலில் இருக்கும் ரோமங்களை எல்லாம் பிய்த்துப்போட்டிருப்பார்கள். ரத்தம் வருவதுகூட அவர்களுக்குத் தெரியாது. உடலெங்கும் புண்கள் காணப்படும். அவர்கள் அப்படிப் பிய்த்துப்போடும்போது அவர்களின் கண்களுக்கு மட்டும் உண்மையிலேயே பூச்சி தெரிவது போலிருக்கும். அதனை நசுக்கிக் கொல்லவும் செய்வார்கள். கஞ்சாவுக்கே உரிய பிரத்யேக வியாதி இது. அதிலும் மதுவுடன் கஞ்சாவைக் கலந்து குடிக்கும்போது குறுகிய காலத்திலேயே இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். மூளை, நரம்பு மண்டலத்தை மிகவும் சேதமாக்கிவிடும் இது” என்றார் பாலகுரு.

நான் கடவுள்!

திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மதுவுக்கு இணையாகத் தாராளமாகக் கிடைக்கிறது கஞ்சா. முள்ளிப்பாடி, மூணாண்டிப்பட்டி, வத்தலக்குண்டு, வடமதுரை ஆகிய இடங்களில் கணிசமான அளவு கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. டாக்டர் ஷர்மிளா சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை. “ஒட்டன்சத்திரம் அருகே விழுப்பாச்சி அருவியில் ஒரு கோயில் இருக்கிறது. காட்டுப் பகுதியான அங்கு நிறைய சாமியார்கள் உலவுகின்றனர். அவர்களிடையே கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. திண்டுக்கல்லில் ஒருசாரார் ஆன்மிகத்தையும் போதையையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இதற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுபோல நிறைய கேஸ்கள் எங்களிடம் வருகின்றன.

ஒரு கல்லூரி மாணவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ஒரு சாமியாரிடம் சென்றிருக்கிறார். தன்னை மறந்தால்தான் கடவுளைக் காண முடியும் என்று மாணவரை சாமியார் கஞ்சாவுக்குப் பழக்கியிருக்கிறார். கூடவே, மதுவும். வீட்டை விட்டுச் சென்ற அந்த மாணவரை இரண்டு மாதங்கள் கழித்துத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். அவரை இங்கு அழைத்து வந்தபோது ‘நானே கடவுள்! எனக்கே சிகிச்சை அளிக்கிறீர்களா? அற்ப மானிடப் பிறவிகளா...’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மாதம் கடவுளை வைத்திருந்து சிகிச்சை அளித்து மனிதனாக அனுப்பி வைத்தோம்” என்று சிரித்தார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

21-11-2014

Friday, September 05, 2014

சூன்யம் சம்பந்தமாக ஒரு இந்து நண்பரின் மனக் குமுறல்!



'தலச்சன் பிள்ளை மண்டை ஓடு, மனித மூத்திரம், மனித வியர்வை, எலுமிச்சைபழம், தேங்காய் என்று எல்லாம் இருந்தும் சூன்யம் பலிக்கவில்லையே! நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறதே! நம்ம சக்தி அவ்வளவுதானா?"

--------------------------------------------------------------------



இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் நாத்திகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய ஒரு விஷயம் உண்டென்றால் அது சூன்யம்தான். இதன் மூலம் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடலாம். மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும், நாத்தனார் அண்ணன் மனைவிக்கும் செய்வினை செய்துள்ளதாக கதை கட்டி விடுவர் பலர். இந்த செய்வினையை எடுக்கிறேன் பேர்வழி என்று முழு சொத்தையும் அழித்த குடும்பங்கள் எத்தனையோ! சூன்யம் ஒருவன் தனக்கு செய்திருப்பதாக ஒருவன் நம்பி விட்டால் அது ஒன்றே போதும் அவனது வாழ்வை சீர்குலைக்க.

இந்த கொடிய நோயை எப்படியாவது தமிழகத்தை விட்டு விரட்டி விடலாம் என்று தனது உயிரையே பணயம் வைத்து பிஜே சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். சம்சுதீன் காசிமியிலிருந்து நேற்று புதிதாக முளைத்த அலீம் புகாரி வரை எத்தனை எதிர்ப்புகள்? மதக்கலவரம் உண்டாகி விடும், முட்டாள், அயோக்கியன் என்று வாயில் வந்ததை எல்லாம் அடித்து விட்டு பிஜே க்கு நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை சில நாட்களாக பார்க்கிறோம். பிஜே என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் உள்ள காழ்ப்புணர்வை இப்படியா காட்டுவது? ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் பிஜேயை எதிர்த்து சவால் விட்டால் பிரபலாகி விடுவோம் என்று எண்ணி வரிசையாக வருகின்றனர்.

சூன்யம் இருக்கிறதா? நபிகள் நாயகத்துக்கு சூன்யம் வைக்கப்பட்டதா? இறைவன் இதைப் பற்றி குர்ஆனில் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். அதற்கு என்றுமே பிஜே தயாராகவே இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க சூன்யம் என்ற பெயரில் பலரது வாழ்வை நாசமாக்கும் இந்த கொடிய நோயை தமிழகத்திலிருந்து விரட்டி விட நம்மால் ஆன ஆதரவையும் நல்குவோம்.

இது போன்ற சூன்ய நம்பிக்கையினால் நிம்மதியைத் தொலைத்த ராகவா என்ற இந்து இளைஞர் மனம் வெதும்பி இந்த காணொளியில் எதிர்ப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறார். இஸ்லாத்தைப் பற்றியோ மற்ற உலக அறிவோ அதிகம் இல்லாத இவருக்கு இருக்கும் தெளிவு கூட 7 வருடம் மதரஸாவில் ஓதிய சம்சுதீன் காசிமிக்கும், அலீம் புகாரிக்கும் இல்லையே என்று நினைக்கும் போது நமக்கும் வருத்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இறைவன் நேர்வழிக் காட்டுவானாக!

காணொளியைக் கேளுங்கள்.

Monday, July 28, 2014

'சமஸ்கிரதம் ஒரு செத்த மொழி' என்று சொல்வது உண்மையா?



சமஸ்கிரத மொழி என்றோ மரணத்தை தழுவி விட்டது என்கிறார் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய். இந்த வாக்கியம் சொல்லப்பட்ட ஆண்டு. 1857.

All the feasts and great donations
King Bhoja gave the Brahmans
were obsequies he made on finding
the language of the gods had died.
Seated in state Bajirao performed
its after-death rite with great pomp.
And today, the best of kings across the land
observe its yearly memorial

குஜராத்திக் கவி தல்பத்ராம் :தாஹ்யாபாயின் கவிதையை தமிழில் இப்படி மொழி பெயர்க்கலாம்:

"போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,
பெருநிதிக் குவியங்கள் எல்லாமும்
தேவ பாஷையின் சாவைக் கண்டு
அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்...
ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான்.
இன்றும் கூட வழி வழி வரும் ஆட்சியாளர்கள்
ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை.."


இந்த கவியின் கூற்று தற்போது மெய்யாகியுள்ளது. ஆம்.... இப்போது மோடியின் பா.ஜ.க அரசு அந்த வருடாந்திரத் திவசத்தை துவக்கியுள்ளது.

இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன். ஏன் இவ்வாறு ஒரு மொழியை இந்த அளவு வெறுக்கிறார்கள் என்று சிந்திப்பேன். உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கையை உடையவன் நான். இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு இழிநிலைகளை தாங்குவதற்கு காரணமே சமஸ்கிரத மொழிகளில் அமைந்த இந்து மதத்தின் ஸ்மிருதிகளே! அதனை எழுதியவர்கள் இன்று நம்மோடு இல்லை. எனவே குறைந்த பட்சம் அந்த மொழியையாவது வெறுப்போம் என்ற நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவேதான் பெரும்பான்மையான இந்து மக்களின் நினைப்பு இவ்வாறாக இருக்கிறது: 'நீ உருது பேசுகிறாயா பேசிக் கொள்: ஆங்கிலம் பேசுகிறாயா பேசிக் கொள்: அரபியில் பேசிக் கொள்கிறாயா பேசிக் கொள்: ஹிந்தியில் பேசிக் கொள்கிறாயா... பேசிக் கொள் எனக்கு ஒரு இழிவோ பிரச்னையோ இல்லை: ஆனால் வழக்கொழிந்து போன சமஸ்கிரதத்தை மட்டும் மீண்டும் உயிர்ப்பித்து விடாதே! இப்பொழுதுதான் பல போராட்டங்களுக்குப் பிறகு வர்ணாசிரமம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. சமஸ்கிரதத்துக்கு உயிரூட்டினால் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும் வர்ணாசிரமம்' என்ற நினைப்பே அந்த இந்து மக்களை சமஸ்கிரத மொழியைப் பார்த்து பயம் கொள்ள வைக்கிறதோ என்று நினைக்கிறேன்..

http://www.columbia.edu/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf

Saturday, July 26, 2014

பெற்ற தாயை விட மேலானவன் இறைவன் - திருவாசகம்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

-திருவாசகம்



பொருள்:குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நேரமறிந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனையொத்த அறிவினைத் தந்து , வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே,

விளக்கம்:இந்த பாடலில் நம்மை படைத்த இறைவன் தாயை விட ஒரு படி மேல் என்று பாடப்படுகிறது. ஒரு தாய் தனது குழந்தைக்கு பசித்தால் தாய்ப்பாலை புகட்ட முடியும். சிறிது பெரியவனானாலும் அவனுக்கு உணவு வழங்க முடியும். ஆனால் அறிவை வழங்க முடியாது. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அந்த வற்றாத அறிவை எனக்கு தந்த இறைவா! என்னை இந்த உலகில் எல்லா செல்வங்களையும் குறைவின்றி தந்து கௌரவமாக வாழச் செய்திருக்கிறாயே! உன்னை நான் வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! என்கிறார் மணி வாசகர்.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இறை பக்தி பாடல்கள் இதுபோல் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அதனை எல்லாம் மறைத்து விட்டு எதற்கும் உதவாத வருணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கிற பார்பனர்களின் ராமாயணம் வலிந்து முன்னிறுத்தப்பட்டு இன்று இந்து வேதங்களின் தரத்தில் பார்க்கப்படுகிறது. வட நாட்டை ஆண்ட ஒரு அரசனின் மகனின் வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை மேலும் கற்பனையில் மெருகூட்டி ஒரு அவதார புருஷனாக காட்டப்பட்டு அந்த ராமனின் பெயரால் பல ஆயிரம் உயிர்களையும் காவு கொண்டு விட்டது இந்துத்வா. இது இனி மேலும் தொடராமல் இருக்க வட மொழி நூல்களை தூரமாக்கி திருவாசகம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் நூல்கள் இந்து மக்களை சென்று அடைய வேண்டும். இந்து மதத்தின் மறுமலர்ச்சியை உண்மையிலேயே விரும்பும் இந்து இயக்கங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்து மதத்தை அழியாமல் காக்க முடியும்.

Wednesday, July 09, 2014

பவிஷ்ய புராணத்திலிருந்து நபிகள் நாயகத்தைப் பற்றி......

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் சுஜாதா, தமிழ்வாணன், புஷ்பா தங்கதுரை, அகிலன்,ஜோதிர்லதா கிரிஜா போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை நூலகத்திலும், வார இதழ்களிலும் தினமும் படித்து வருவேன். அவர்களில் ஒரு எழுத்தாளரான ஜோதிர்லதா கிரிஜா என்ற எழுத்தாளர் சமீபத்தில் திண்ணையில் பதிந்த பதிவை உங்களுக்கும் தருகிறேன். படித்து பயன் பெறுவீர்களாக!.......

10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை இன்றளவும் மறக்கவே முடியவில்லை.

பத்திரப்படுத்தியிருந்த அதை இன்றுதான் தேடி எடுக்க முடிந்தது. அதன் சில பகுதிகளை அப்படியே இதில் தருகிறேன்.

அவரது கட்டுரை: “ எங்கோ அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றியிருப்பினும், அவரது வருகை பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிக்கை செய்யப்பட்டிருக்கிறது என்று பெரியவர் ஒருவர் கூறிய போது அதை ஆராய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

குறிப்புகளைப் பார்க்கிற போது பெருமளவு உண்மை இருப்பதைக் கண்டு நானே வியப்புற்றேன். மகரிஷி வியாச முனிவரால் எழுதப் பட்ட பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய புராணத்தில் கீழ்க்காணும் சூத்திரம் வருகிறது:

“ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச

ஆச்சார்யண ஸமன்வித

மஹாமத் இதிக்கியாத

சிஷ்ய சாகா ஸமன்வித

நிரூபஷ்சேவ மஹாதேவ

மருஸ்தல நிவாஸினம் “

(பவிஷ்ய புராணம் – பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5.8)

ஒரு மிலேச்ச – அதாவது அந்நிய – நாட்டிலே ஒரு ஆச்சாரியர் தன் சீடர்களுடன் வருவார். அவரது பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.

மஹாமத் - முஹம்மது



மிக மிகத் தெளிவாகப் பெயரும் இடமும் குறிக்கப்பட்டிருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

அந்த ஆச்சாரியரின் இனம் அவர்களுடைய தோற்றம், பற்றியும் அதே புராணம் கூறுகிறது.

“ லிங்க சேதி சிகாஹீன

சுமச்சுறுதாரி ஸதாஷக

உச்சலாபி ஸர்வபக்ஷி

பனிஷ்யகி ஆனோமம

முசலை நைஸ்மஸ்கார

(பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3)

“அவர்கள் – லிங்க சேதி – அதாவது, சுன்னத்து -செய்துகொண்டிருப்பார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தம் போட்டு அழைப்பார்கள். முசலை என்று அறியப்படுவார்கள்.” என்று அந்தப் புராணம் கூறுகிறது.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். மிகத் தெளிவான ஒரு காட்சி புலப்படும்!

லிங்க சேதி – சுன்னத் – என்பது இந்து மதத்தில் இல்லாதது. குடுமி என்பது இனந்து மதத்துக்குத் தேவையானது. ஆனால், சிகாஹீனம் – மயிரைக் களைவது – என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதை விட வியப்புத் தருவது முசலை என்ற சொல்.

முஸ்லிம் – முசல்மான் என்பவற்றோடு “முஸலை” என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்!

இம்மட்டோ? நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றியது கூறப்பட்டதோ என நினைக்கும் வண்ணம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிறது.

“ இதம் ஜன இபக்ருத

நாரா சம் ஸஸத விஷியதே

ஷஷ்பீம் சஹஸ்ர நவனீதம்

சசௌரம் அருவ மேஷு தன்மஹே

உஷடி ருயங்லம் பிறவாஹிணோ

வநூ மந்தோஹிர் தசா

வத மர ரத் தஸாயனீ

ஜீ ஹிவுதே திவ

ஈஷ்மான உபஸ்மிறுத

ஏவந் தர்ஷயே மாமஹே

சதம் நிஷ்காந்த சஸரஜ

ஸ்ரீ ணி சதான்னியவதாம்

ஸ்ஹஸ்ரா தசகோ நாம்

(அதர்வ வேதம், 20 ஆம் காண்டம்)

“ ஏ, பக்தர்களே! இதைக் கவுரவத்துடன் கேட்பீர்களாக! புகழக் கூடிய, புகழ் பெறக்கூடிய அந்த மா மஹரிஷி 60,090 மக்கள் மத்தியிலே தோன்றுவார். (முகம்மது என்றாலே, புகழப்பட்டவர், புகழுக்குரியவர் என்று பொருள். அவர் தோன்றிய போது, மக்கா மாநகரின் மக்கள் தொகை 60,000!)

அவர் 20 ஆண்-பெண் ஒட்டகங்களில் சவாரி செய்வார். அவரது மகத்துவம் சுவர்க்க லோகம் வரை செல்லும். அந்த மகரிஷிக்கு 100 தங்க நாணயங்கள் இருக்கும்,-

(ஒட்டகத்தில் தோன்றும் மகரிஷியை நாம் இந்தியாவில் காணவில்லை. ஆகவே இது நபிகளைப் பற்றிக் குறிப்பதே ஆகும்.)

10 முத்து மாலைகளும் 100 தங்க நாணயங்களும் அரேபியாவைத் துறந்து அபிசீனியா சென்ற 100 நபி தோழர்களைக் கூறும்.

10 முத்து மாலைகளும், 300 அரபிக் குதிரைகளும், 10 ஆயிரம் பசுமாடுகளும் இருக்கும்.

(நபிகள் நாயகத்தால் சொர்க்கத்தின் வாரிசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 10 பக்தர்களைக் குறிக்கும் சொல்தான் 10 முத்து மாலை. நபிப் பெருமானாருடன் முதற் போர்க்களத்தில் இருந்த 313 பேர் குதிரைகளாகவும் மக்கா வரை சென்ற போது அவருடன் இருந்த 10 ஆயிரம் பேர் 10 ஆயிரம் பசுமாடுகள் எனும் செல்வங்களாகச் சித்திரிக்கப்பட்டதாகவும் மவுல்வி முகம்மது உமர் கூறுவார்.)

நபிகள் நாயகத்தை உலகத்தின் அருட்கொடை என்றே அல் குர் ஆன் ஷரீபு கூறும்.

ரிக்வேதத்தில் உலக அருட்கொடையாக 10 ஆயிரம் பேருடன் தோன்றிப் புகழ் பெறுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

“அன ஸவந்தா ஸக்பதிர் மாமஹே

மேகாவா சேதிஷ்ஷடா

அசுரோ பகோன

திரை விஷ்னோ அஞேத காப்பி

ஸஹஸ்னரா வைச்சுவாரை

திறையம் ருணாஷிகேத

(ரிக்வேதம் மந்திரம் 5, சூக்தம் 28)

ஆக, வேத மொழியிலும் “மாமஹே” என்றும், மஹாமத் என்றும் கூறப்பட்டிருப்பதும் தொடர்புடைய செய்திகள். சரியாகவே சொல்லப்பட்டிருப்பதும் பெரிய வியப்புக்குரியவையாக இருக்கின்றன.

அதுத்து வரும் கட்டுரைகளில் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளைப் போக்குவதற்கு முயல்கிறேன். (தொடரும்)

…….. மேலே உள்ளது முரசொலி அடியாரின் கட்டுரையாகும். “நான் காதலிக்கும் இஸ்லாம்” என்கிற தலைப்பில் நீரோட்டம் நாளிதழில் அவர் எழுதிவந்த தொடரின் ஓர் அத்தியாயமே மேற்காணும் கட்டுரை. இந்த அத்தியாயத்துக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு “வியப்பு: ஆனால் உண்மை! – இந்து மத வேதங்களால் முன் கூட்டிச் சொல்லப்பட்டவர் நபிகள் நாயகம்” என்பதாகும். இந்தக் கட்டுரையைப் படித்து நான் அடைந்த வியப்பை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே நினைவில் நின்ற இதை இங்கே எழுதியுள்ளேன்.

வியப்படைபவர்கள் வியப்படையலாம். இந்திய மூதாதையர்கள் சொன்னது எதுவானாலும் அதைத் துளியேனும் ஆராயத் தயாராக இல்லாமல், எள்ளி நகையாடுவதையே இயல்பாகக் கொண்டவர்கள் கேலி செய்யலாம். இது அவர்களுக்காக எழுதப்படவில்லை! அவர்கள் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கட்டும். அதனால் யாருக்கும் இழப்பு இல்லை! எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே நம்புவதும் சரி, நம்பாமல் கேலிசெய்வதும் சரி, இரண்டுமே தவறு என்பதே நமது கருத்தாகும்.

-ஜோதிர்லதா கிரிஜா

Saturday, June 14, 2014

அமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி



அமீரகத்தின் முதல் பெண் பைலட் என்ற பெருமையை மரியம் ஹஸன் மன்சூரி பெற்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதன் முதலாக ஒரு பெண் விமான படையில் அங்கம் வகிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதான மன்சூரி 2007ல் முதன் முதலாக விமானப் படையில் நுழைந்து படிப்படியாக முன்னேறி தற்போது ஒரு சிறந்த விமானியாக தேர்வு பெற்றுள்ளார். அமீரகத்தின் சிறந்த விருதான 'முஹம்மது பின் ரஷீத்' விருதையும் மன்னரிடமிருந்து பெற்றுள்ளார். சகோதரி பல வெற்றிகள் பெற்று நாட்டுக்கு சேவையாற்ற நாமும் வாழ்த்துவோம். அதோடு நமது குடும்பத்து பெண்களையும் இஸ்லாம் சொல்லும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிறந்த கல்வியைக் கொடுத்து வீட்டுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றும் சிறந்த சமூக சேவகிகளாக மாற்றிக் காட்டுவோம்.

தகவல் உதவி
அல்அரபியா
12-06-2014

உலக சாதனை படைத்த மாணவர் முகமது சுஹைல்



மிகக்குறைந்த வயதில் எம்.சி.ஏ. படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பிஹெச்.டி. படிப்பில் சேர்ந்துள்ளார்.

முகமது சுஹைல் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து தனது 17-வது வயதிலேயே எம்.சி.ஏ. (மாஸ்டர்ஸ் இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) படித்து 78.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்புமிக்க எம்.சி.டி.எஸ். மற்றும் எம்.சி.பி.டி. ஆகிய சான்றிதழ் தேர்வுகளிலும் வெற்றிபெற்று உலகிலேயே மிக இளம் வயதில் இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரை தங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்த்துக்கொள்ள உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் சுஹைல் எந்த நிறுவனத்திலும் பணியில் சேராமல் சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பிஹெச்.டி. என்ற ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு இலவச உணவு, தங்கும் வசதி ஆகியவற்றுடன் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

தகவல் உதவி

ஹிந்து தமிழ் நாளிதழ்
14-06-2014

Saturday, May 24, 2014

தாஹிரா பானு, ஹலீமா அஃப்ரோஸ் வாழ்த்துக்கள் சகோதரிகளே!





பல ஆயிரம் மொனேஷன்: கசக்கி பிழியும் அதிகார வர்க்கம்: என்ற எந்த தொந்தரவும் இல்லாமல் அரசு பள்ளியில் படித்து இன்று தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பெற்ற இந்த மாணவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில், சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்த தேர்ச்சி விகிதம் 85.87% ஆக உள்ளது. மாணவர்கள் 81.75% பேரும், மாணவிகள் 89.72% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவி பஹிரா பானு சாதனை

சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பஹிரா பானு, 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம்: பஹிரா

"மாநில அளவில் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றிக்கு என் பள்ளி ஆசிரியர்களே காரணம். அவர்கள் கடினமாக உழைத்தனர். சனி, ஞாயிறுகளில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்தினர். அவர்களது கற்பித்தல் முறையாலும், அர்ப்பணிப்பு பணியாலும்தான் இது சாத்தியமானது.

நான் இதே பள்ளியில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பேன். மருத்துவராக வேண்டும் என்பதே என் லட்சியம்" என்றார் பஹிரா பானு.

500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்த 321 பேரில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர் எஸ்.தனசேகர் இடம் பெற்றுள்ளார்.

இதேபோல், கரூர் மாவட்டம் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.சிவகார்த்திகா 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த 125 பேரில் ஒருவர் கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இல்லை.

நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ்

----------------------------------------------------------------



ஹலீமா அப்ரோஸ் 485 out of 500! 14 வயதே ஆன கண்தெரியாத மாணவி எடுத்த மதிப்பெண்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிய வேண்டும் என தன் ஆசையை தெரிவித்துள்ளார். இந்த வயதில் என்ன ஒரு சிறந்த லட்சியம் பாருங்கள். இறைவன் இவரது ஆவலை பூர்த்தி செய்வானாக!