Followers

Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Saturday, January 11, 2020

சாமி கும்பிட வந்தவரின் வாயில் மூத்திரத்தை கொடுத்த கொடூரம்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவனூர் கிராமத்தை சேர்நத தலித் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 20) வெல்டராக பெங்களூரில் பணி புரிந்து வந்தார். சென்ற மார்ச் 2 ந்தேதி தனது கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கருவனூர் வந்துள்ளார் அரவிந்தன். இது பற்றி அரவிந்தன் கூறியதாவது....

'எனது உறவினர் தினேஷை (வயது 20) அழைத்துக் கொண்டு திருவிழா நடக்கும் கோவிலுக்கு சென்றேன். சில உயர் சாதி இந்துக்கள் நாங்கள் கோவிலுக்குள் வந்ததை ஜீரணிக்க முடியவில்லை. உடன் அவர்கள் கும்பலாக எங்களை சூழ்ந்து கொண்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். எங்கள் இருவரையும் கழிவறை இருக்கும் இடம் வரை இழுத்தச் சென்றனர். அங்கும் எங்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர். அடி தாங்காமல் நான் கீழே வீழ்ந்தேன். அப்போது மிகுந்த தண்ணீர் தாகம் எடுத்தது. 'தண்ணீர்... தண்ணீர்' என்று பிதற்றினேன். உடனே உயர் சாதி இளைஞன் ஒருவன் எனது வாயில் மூத்திரத்தை பெய்தான். எனது உறவினர் தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான். பிறகு எனது உறவினர்கள் வந்து என்னை மீட்டனர்' என்கிறார் அரவிந்தன் என்ற தலித் இளைஞர்.

மறுநாள் அரசு ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்படுகிறார். அருகில் உள்ள கல்லாவி காவல் நிலையத்தில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி நீதி கேட்டுள்ளார். ஆனால் காவலர்களோ வன்கொடுமை சட்டத்தில் கேஸை புக் பண்ணாமல் சாதாரண அடிதடி கேஸில் வழக்கு பதிந்துள்ளனர்.

'தமிழ்நாடு குறவர்கள் பழங்குடியின மக்கள் சங்கத்தின்' தலைவர் ரவி சொல்கிறார் 'காவல் துறையைச் சார்ந்த சிலர் என்னிடம் வன் கொடுமை சட்டத்தில் கேஸ் புக் பண்ணாமல் இருப்பதற்காக மேல் சாதியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக சொல்கின்றனர். இதனை நாங்கள் விடப் போவதில்லை. நீதி மன்றத்துக்கு இந்த சம்பவத்தை எடுத்துச் செல்வோம்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
18-03-2015

தான் வணங்கும் சாமியை கும்பிட வந்தது அவ்வளவு பெரிய தவறா? மூத்திரத்தை அந்த இளைஞன் வாயில் ஊற்றும் அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன என்பதை இந்துத்வாவாதிகள் விளக்குவார்களா?

இந்து மதத்தில் உள்ள இது போன்ற தவறுகளை எல்லாம் களைந்தால் ஏன் மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்? இந்து மதத்தை காக்க NRC போன்ற சட்டங்களும் தேவையில்லையே? மோடியும் அமித்ஷாவும் சிந்திப்பார்களா? 
...

Thursday, March 16, 2017

இறந்த முத்துக் கிருஷ்ணனின் முகநூல் பதிவுகள்!





தலைநகர் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கின்றன முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள்.

முத்துக்கிருஷ்ணனின் தந்தை பெயர் ஜீவானந்தம். இந்த பதிவில் 'ஜீவாவின் மகன்' என்று தன்னைப் பற்றி பேசியிருக்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பதிவு:

"அந்த ஆடிட்டோரியத்தின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் திரை ஸ்கிரீன் ஜீவாவின் மகனைச் சற்றுப் பின்னோக்கி நினைவலைகளை அசைபோடச் செய்தது. 70எம்.எம். பெருந்திரையில் பிதாமகன் தமிழ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்தவுடன் மீண்டும் திரையில் வெண்ணிறம். அது அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தைப் பார்த்து முடித்த ஜீவாவின் மகன் கிட்சிப்பாளையத்துக்குச் சென்றார்.. மானா (மாட்டிறைச்சி வாங்க). மானா சந்தையில் வாங்கிய மாட்டிறைச்சியைக் கறுப்பு கேரி பேகில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றார் ஜீவாவின் மகன். அங்கிருந்து வலப்புறம் திரும்பினால் ஓரியன்டல் சக்தி திரையரங்கு. அதற்கு பக்கத்திலேயே லட்சுமி ஐஸ்க்ரீம் கடை. அங்கிருந்த எல்லோரது கண்களும் அந்த கறுப்பு கேரிபேக் மீதுதான். அந்த காலகட்டத்தில் கறுப்பு கேரி பேகில் மானா மட்டுமே பொட்டலம் கட்டப்படுவது வழக்கம். கறுப்பு கேரி பேகை பார்த்தவுடன் அனைவரது கண்களும் சட்டென திரும்பிக்கொள்ளும்.

அசராத ஜீவாவின் மகன், 5 கிலோ மானா அடங்கிய பையுடன் சேலம் பழைய பேருந்து கிளாக் ஹவுஸூக்கு வந்து சேர, சத்திரம், லீ பஜார் வழியில் செல்லும் பஸ்ஸுக்கான காத்திருப்பு ஆரம்பித்தது. அப்போது ஜீவாவின் மகன் பள்ளி நண்பன் ரமணா அவ்வழியாக வர. ஜீவாவின் மகன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ரமணாவுடன் பேசிக்கொண்டு 4 ரோடு நிறுத்தம் செல்லும் பொழுதை போக்கலாம் என்று. ஆனால், ரமணாவோ ஜீவாவின் மகன் கையிலிருந்த மானா பையைப் பார்த்தவுடன் பக்கத்திலேயே வரவில்லை.

6-ஏ பஸ் வர ஜீவாவின் மகன் அதில் ஏறிக்கொள்கிறார். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சேலம் ஆட்சியர் அலுவலக நிறுத்தம் வந்தது. அங்கு வேலைபார்க்கும் அதிகாரி ஒருவர் பேருந்தில் ஏறினார். ஜீவா கையிலிருந்த மானா பை அவரது கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தபின் அவர் ஜீவா அருகே உட்காரவில்லை. இத்தனைக்கும் பஸ்ஸில் வேறு எங்கும் இடமில்லை. அடுத்ததாக கல்பனா தியேட்டர் நிறுத்தம். அங்கு ஒரு தம்பதி 3 வயது குழந்தையுடன் ஏறினர். உட்கார அவர்கள் இடம் தேடினர். ஜீவாவின் மகன் இருக்கையிலிருந்து எழுந்த நிற்க முடிவு செய்திருந்தார். காரணம், பஸ்ஸில் பயணித்த யாரும் ஜீவாவிடம் பேசத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே அந்த தம்பதி உட்கார இடம் தேடியபோது இருக்கையிலிருந்து எழுந்து சென்று ஜீவா இடம் கொடுத்தார். ஆனால், மானா பையை பார்த்த அவர்கள் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அதற்குள் மானா வாசனை பஸ் முழுதும் பரவியிருந்தது. 4 ரோடு வரும்வரை அந்த இருக்கையில் யாருமே அமரவில்லை.

4 ரோடு நிறுத்ததுக்குப் பின் ஜீவாவின் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டார். தம்மன்னன் செட்டி ரோடுவரை படிக்கட்டில் பயணம் நீடித்தது. ஆனால், உடன் நின்றிருந்த பயணிகளுக்கு அவ்வளவு கோபம். மானா பையிலிருந்து வந்த வாசனையால் வந்த கோபம் அது. சிலர் ஜீவாவின் காலை (வேண்டுமென்றே) மிதித்தனர். சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிய ஜீவா லீ பஜாரை நோக்கி நடையைக் கட்டினார். சிலர் மானா பையைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் விலகி நடந்தனர். சிலர் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்துக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் காலத்தில் மானாவுக்கு சமத்துவம் இல்லை. இப்போது மானாவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதும், எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது"

இப்படி அந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு கறுப்பு கேரி பேக் சாதிய அடையாளமாக இருப்பதை விவரித்திருக்கிறது.

'நான் இளவரசனாக விரும்பவில்லை'

இது முத்துக்கிருஷ்ணனின் முகநூலில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பகிரப்பட்ட நிலைத்தகவல். "தாஜ்மகால் முன்னால் காதலி இல்லாமல். கல்லூரியில் நான் கொண்ட ஒருதலை காதல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நானும் எல்லாவற்றையும் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில், நான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கருக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் காதல் கொண்ட பெண்ணைவிட சிறந்த பெண் இந்த உலகத்தில் எனக்குக் கிடைப்பாள்.

இப்போது என் எண்ணமெல்லாம் எனது ஆயா செல்லம்மாள் பற்றியே இருக்கிறது. செல்லம்மாள்தான் என் ஆயா" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கணிதமே வரலாறு'

எம்.ஃபில்., பி.எச்.டி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என யுஜிசி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தன. அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு நிலைத்தகவலை தனது ஃபேஸ்புக்கில் பதிந்தார்.

"எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்"

இவ்வாறாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து.. தமிழில்: பாரதி ஆனந்த்.

-----------------------------------------------------

மாட்டுக் கறி தின்பது ஏதோ மிகப் பெரிய குற்றம் என்பதை வர்ணாசிரம தர்மம் மிக ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. அதனை மாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றால் அது மிகையில்லை.

Friday, January 22, 2016

சாதிக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்!



1.மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 - இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை

2.அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு

3.ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்

4. செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்

5. பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 - முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்

6. ஜி. சுமன், ஜனவரி 2, 2009 – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்

7. அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்

8. டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009 – முதலாம் ஆண்டு பி.டெக், சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்

9. எஸ். அமராவதி, நவ 4, 2009 – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர், சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்

10. பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்

11. புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010 – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு

12. சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 - இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ

13. பால்முகுந்த் பாரதி, மார்ச் 3, 2010 – இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், எய்ம்ஸ், புது தில்லி

14. ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 - இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்

15. ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு, விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்

16. மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி

17. லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி

18. அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி

பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.

(தகவல்: இன்சைட் அறக்கட்டளை) நன்றி: ஆனந்த், அவுட்லுக்

Monday, January 18, 2016

தலித் மாணவர் தற்கொலை - பிஜேபி அமைச்சர் மீது வழக்குப் பதிவு







ஹைதரபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட ரோஹித் வெமுலாவின் உடல் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக எரியூட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அவசரமாக உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? இது தற்கொலையா? அல்லது கொலையா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

மாணவர்களின் புகார் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஜேபியின் மத்திய துணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ், மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாணவர்கள் சுஷீல் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித்தாக பிறந்து விட்டால் இந்த நாட்டில் அந்த உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஆள்வோரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை....



ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலித் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் வன்முறையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த ரோஹித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2-ம் தேதியன்று ரோஹித் உள்ளிட்ட 5 பேரும் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் (ASA) சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், ரோஹித் வெமுலா விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு எனக் கூறிய அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அறையில் இருந்து ரோஹித் உடலை அப்புறப்படுத்தவிடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீஸார், மாணவர்கள் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பதற்றத்தை தணிக்கை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இடைநீக்கத்தின் பின்னணி:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தில் முசாபர்நகர் பாக்கி ஹை ‘Muzzafarnagar Baqi Hai’ என்ற விளக்கப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. இத்திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (ASA) சேர்ந்தவர்களிடையே மோதல் வெடித்தது.

இதனையடுத்து அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி விடுதியில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஐவரும் கல்லூரி வளாக்த்திலேயே கூடாரம் அமைத்து தங்கி வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

துணை வேந்தர் ராஜினாமா செய்ய கோரிக்கை:

பல்கலைக்கழகத்தில் இருந்தும், தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டதாலேயே ரோஹித் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் பல்வேறு மாணவ கூட்டமைப்பினர், இதற்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பா ராவ், தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு:

தலித் மாணவர்கள் 5 பேரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

செகந்தராபாத் தொகுதியில் மக்களவை எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில், "ஹைதராபாத் பல்கலைக்கழக வளாக தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் 5 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தலித் மாணவர்கள் ஐவரும் நீக்கப்பட்டனர் என மாணவ தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

தற்கொலை குறிப்பு:

ரோஹித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான (JRF) உதவித்தொகையை பெற்றுவந்தார்.

அவர் எழுதிய 5 பக்க தற்கொலைக் குறிப்பில், "என் கண்கள் எப்போதும் நட்சத்திரங்களையே கண்டு கொண்டிருந்தன. ஒரு நாள் எழுத்தாளராக, பெயர்பெற்ற கல்வியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக எனக்கு ஜெ.ஆர்.எஃப் உதவித்தொகைகூட வழங்கப்படவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

144 தடை உத்தரவு அமல்:

ரோஹித் தற்கொலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

Keywords: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், தலித் மாணவர் தற்கொலை, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஜாதி, அரசியல், பாஜக

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016

காதல் தோல்வியால் இந்த மாணவர் இறந்தார் என்று வழக்கை மூடி விடுவார்கள். இந்த தற்கொலைக்கு ஸ்மிருதிராணியும் பிஜேபியும் பொறுப்பேற்க வேண்டும். ஐந்து மாணலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டால்தான் கல்லூரியின் தரம் உயரும் என்று அறிக்கை ஸ்மிருதிராணிக்கு அனுப்பப்பட்டு அந்த அமைச்சகத்தின் உத்தரவிலேயே ஐந்து மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்து மதத்தில் எந்த உரிமையையும் கொடுக்காமல் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்கென்றே தலித்களை சேர்த்து வைக்கும் காலமெல்லாம் இது போன்ற கொடுமைகளுக்கு பஞ்சமிருக்காது.

Wednesday, January 13, 2016

பெரியார்தாசன் இஸ்லாத்தை சொல்லும் அழகைப் பாருங்கள்!

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்த...

Posted by Nazeer Ahamed on Wednesday, January 13, 2016

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!

'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்து என்றுதான் சொல்றாங்க: எங்கள தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லி கோவிலுக்குள்ள வர வேண்டாங்கறாங்க... நாங்க செஞ்ச செருப்பை அவங்க போடறாங்க: ஆனா.. எங்கள போடக் கூடாதுங்கறாங்க: எங்க எருமை மாடு குளிக்குதுங்க குளத்துல... எங்கள குளிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே... இதெல்லாம் இஸ்லாத்துல சேர்ந்துட்டா போயுடுமா... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க... '

அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!





அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!...

திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!

அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!

இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
—————————-

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…

”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.

”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
—————————

மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.

மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.

”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”

தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.

”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. ‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், ‘ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!” என்கிறார் ஆறுமுகச் சாமி.

மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி :ஆனந்த விகடன்

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100456

Thursday, January 07, 2016

முதியவரின் பிணத்தை தெரு வழியாக அனுமதிக்காத சாதி இந்துக்கள்!



நேற்று மயிலாடுதுறை அருகே திருநாள் கொண்டச் சேரியில் ஒரு முதியவர் இறந்து விட்டார். இறந்த முதியவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தங்கள் தெரு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. அங்கு பெரும் பதட்டம் நிலவியது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காவலர்கள் தாழ்த்தப்பட்டவர்களை விரட்டி விட்டு பிணத்தை தாங்களே வேறு மார்க்கமாக (வடுவூர் வழியாக) வேறு வழியின்றி எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு அந்த காவலர்களே சுடுகாட்டில் பிணத்தை புதைத்துள்ளனர்.

'நாமெல்லாம் இந்துக்கள்' என்று வழியும் மோடி, அமீத்ஷா, இல கணேசன், இராம கோபாலன் எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டார்கள்?

மண்ணின் மைந்தனின் பிணத்தை அவனது நாட்டு தெருக்களில் எடுத்துச் செல்வதையே அனுமதிக்காத சமூகங்களின் மத்தியில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

Thursday, December 31, 2015

தலித் என்பதால் பாஜக ஒதுக்கியது! இன்று இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துள்ளார்!



ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக பதவி உயர்வுக்கு தன்னை பரிசீலிக்காத காரணத்தினால் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான உம்ராவ் சலோதியா தான் விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்ததோடு இஸ்லாம் மதத்தையும் தழுவினார்.

உம்ராவ் சலோதியா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் 1978-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் சீனியாரிட்டியின் படி இன்று (வியாழக்கிழமை) மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசுந்தரா ராஜே அரசு ஏற்கெனவே உள்ள தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜன் என்பவரின் பதவிக்காலத்தை 2016 மார்ச் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் தான் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக சாதிப்பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய உம்ராவ் சலோதியா, இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எழுதிய கடிதத்தில், “நாடு விடுதலையடைந்த பிறகு SC/ST பிரிவைச் சேர்ந்த நான் முதல் முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வியாழக்கிழமையான இன்று சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நடப்பு தலைமைச் செயலாளர் சி.எஸ்.ராஜனின் பதவிக்காலம் 2016 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக்கான வாய்ப்பை மறுப்பதாகும்.

ஆகவே 3 மாதகால நோட்டீஸ் அடிப்படையில் நான் அனைத்திந்திய பணி அலுவல் விதிமுறைகளின் படி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும், ஏனெனில் ஜூனியர் அதிகாரியின் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

இதனினும் ஒருபடி மேலே போய் உம்ராவ் சலோதியா இஸ்லாம் மதத்தையும் இன்று தழுவுவதாக அறிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, இந்து மதம் சாதி அடிப்படையில் பாகுபாடு உடையது. மதம் மாறிய பிறகு எனது பெயர் உம்ராவ் கான்.” என்றார்.

ராஜஸ்தான் மாநில அரசு மறுப்பு:

இவரது அதிரடி அறிவிப்பை அடுத்து ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர ராத்தோர், கூறும்போது, “சலோதியா அரசுக்கு எதிராக பேசியதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ராஜஸ்தான் அரசு சாதிப்பாகுபாடு அடிப்படையில் செயல்பட்டிருந்தால் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தலைவராக SC/ST பிரிவைச் சேர்ந்த கைலாஷ் மேக்வால் இருந்திருக்க முடியாது.

இது குறித்து ராஜஸ்தான் அரசு விசாரணை செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் சலோதியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

பாஜக அரசு மீது காங்கிரஸ் தாக்கு:

தலித் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறிய சச்சின் பைலட், “சலோதியா விருப்ப ஓய்வு கேட்டுள்ளது ராஜஸ்தான் ஆளும் கட்சியான பாஜக-வின் செயல்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பாஜக அரசின் அலட்சியப்போக்கினால் மூத்த அதிகாரி இஸ்லாம் மதத்தை தழுவ நேரிட்டுள்ளது வருந்தத்தக்கது” என்றார்.

உம்ராவ் சலோதியா ராஜஸ்தான் மாநில போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2015

பிஜேபி என்பது பார்பனர்களின் நலனை தக்க வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு என்பது இதிலிருந்தும் விளங்குகிறது. வசுந்தராவின் பிஜேபி கட்சி என்றுமே தலித்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. 'உம்ராவ் கான்' ஆக மாறிய இவரை இஸ்லாம் இரு கரம் நீட்டி வரவேற்கிறது. இனி நீங்கள் உலக முஸ்லிம்களின் சகோதரராக மாறி விட்டீர்கள். பிறக்கின்ற இந்த புது வருடம் உங்களை புது மனிதனாக உருவாக்கும். சூத்திரன் என்ற இழி சொல்லும் இன்றிலிருந்து உங்களுக்கு நீங்குகிறது.

Tuesday, December 29, 2015

தலித் மக்கள் மீதான தாக்குதலில் 7 பேர் கைது:



கர்நாடகத்தில் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியதில் கர்ப்பிணி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந் தனர். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 22 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் துர்விஹால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் தலித் அமைப்பினர் வைத்திருந்த பேன‌ர் மீது, கடந்த 24-ம் தேதி வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தினார். மேலும் அந்த பேனரில் இருந்த அம்பேத்கரின் படத்தையும் அவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலித் அமைப்பை சேர்ந்த‌ இளைஞர்கள் மறுநாள் விசாரித்தபோது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, “ஊருக்கு நடுவில் அம்பேத்கரின் பேனரை வைக்கக்கூடாது. மீறி வைத்தால் தலித் மக்களை ஊரை விட்டே விரட்டுவோம்” ஆதிக்க சாதியினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலித் மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கு மாறு துர்விஹால் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, அங்குள்ள தலித் காலனிக்குள் நுழைந்து, தலித் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 3 மாத கர்ப்பிணி உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து 29 பேர் மீது துர்விஹால் போலீஸார் 5 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 பேரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரெய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், காவல் கண்காணிப்பாளர் சேத்தன் சிங் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பீர் பாஷா தலைமையிலான உண்மை ஆராயும் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-12-2015

ஒரு சுதந்திர நாட்டில் தனக்கு பிடித்தமான தலைவரின் படத்தை வைக்கக்கூட அனுமதி இல்லை என்றால் ஆதிக்க சாதியினரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

Wednesday, December 09, 2015

நிவாரணத்திலும் சாதி பாகுபாடு! 'உங்க சாதி வெறியில கொள்ளி வைக்க...'



கடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையேயான பாகுபாடு இயற்கைப் பேரிடர் வேளையிலும் எதிரொலிக்கிறது. இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நிவாரணப் பொருட்கள் சரிவரக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து தி இந்து (ஆங்கில நாளிதழ்) செய்தியாளர் மேற்கொண்ட கள ஆய்வில் தலித் மக்கள் பலர் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை விவரித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை இடைமறிக்கும் உயர் வகுப்பினர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவிடாமல் தடுப்பதாக தலித்துகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2012 தருமபுரி சம்பவத்துக்குப் பிறகு கடலூரின் பல பகுதிகளிலும் சாதி இடைவெளி மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த கடலூரின் உள் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் தன்னார்வலர்களும் தாங்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாகக் கூறினர்.

இக்கட்டான சூழலில் சாதி பாகுபாடு தலைவிரித்தாடுவதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது ஓனான்குப்பம் மக்களின் குமுறல்.

ஆம், குறிஞ்சிப்பாடியின் ஓனான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நிவாரணப் பொருட்களுக்காக மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. காரணம், நிவாரணப் பொருட்கள் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட பின்னரே உள் பகுதிகளுக்கு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. பல நேரங்களில் தங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு சொற்ப அளவிலான பொருட்களையே தங்கள் பகுதிக்கு உயர் சாதியினர் அனுப்பி வைப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ முகாம்களிலும் பாகுபாடு:

ராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை உயர் சாதியினர் அவர்களது பகுதியிலேயே ஒருங்கிணைத்தனர். இதனால் தலித்துகள் அப்பகுதிக்குச் சென்று மருத்துவ சேவையைப் பெறுவதில் பெருமளவில் தயக்கம் காட்டியுள்ளனர்.

உயர் சமூகத்தினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெயர் குறிப்பிட விரும்பாத தலித் பெண் ஒருவர் கூறும்போது, "ஒவ்வொரு முறை நிவாரணப் பொருட்களுடன் வாகனங்கள் வரும்போது அதை உயர் சாதியினர் வழிமறித்து அப்படியே அவர்கள் இருக்கும் பகுதிக்கு திருப்பிவிட்டு விடுகின்றனர்" என்றார்.

கடலூரில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள ஆய்வு செய்த 'தி இந்து' செய்தியாளரிடம் முன் வைக்கப்பட்ட ஒரே புகார் சாதி பாகுபாடு பற்றியதுதான்.

இருப்பினும் நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட பிறகு தங்களுக்கும் உதவிகள் வந்து சேர்வதாகக் கூறுகின்றனர் ஏழை மக்கள்.

குடிசைப் பகுதிகளுக்கே முன்னுரிமை:

கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறும்போது, "ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளிலேயே நிவாரணப் பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
10-12-2015

டிஎன்டிஜே சகோதரர்கள் இதனை கருத்தில் கொண்டு தலித்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி வகுப்பார்களாக!

Monday, November 23, 2015

சாமி சிலையை தொட்டதால் தலித்களுக்கு அடி உதை....



உபியின் சித்ராகூட் மாவட்டத்தில் கோவிலின் உள்ளே சென்று சாமி சிலைகளை தொட்டு வணங்கியதற்காக தலித் குடும்பத்தை கடுமையாக தாக்கியுள்ளது இந்துத்வா கூட்டம்.

தர்மலால் குப்பை கூட்டும் தொழிலாளியாவார், அவரது மனைவி ஆஷா தேவி, மகன் ராம்பாலி(15) மற்றும் அவரது உறவினர்கள் சாதி வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டவும் செய்துள்ளனர். சாமி தீட்டாகி விட்டதாம் :-)

காவல் துறையினரும் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் வேண்டா வெறுப்பாக வழக்கு பதிவு செய்துள்ளது காவி கறை படிந்த காவல்துறை.

தலித்களே... இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன,?

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
21-11-2015

Friday, November 13, 2015

சாதி வெறியர்களே! எப்போது திருந்தப் போகிறீர்கள்?



உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப் படுத்தலாமா? பொது மக்களில் மற்ற சாதிகள் வரலாம், மற்ற மதங்கள், மார்க்கங்கள் வரலாம். ஆனால் தலித் மட்டும் வந்து விடக் கூடாது இல்லையா? இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை.

Monday, October 26, 2015

தலித் எழுத்தாளர் கைகளை வெட்ட இந்துத்வாவாதிகள் முயற்சி!



கர்நாடக மாநிலம் தாவணகெரே வில் ஹூச்சங்கி பிரசாத் (23) 'ஒடல கிச்சு' (உள்ளுக்குள் நெருப்பு) என்ற நூலை கடந்த ஆண்டு வெளியிட்டார். இதில் இந்து மதத்தில் இருந்து உருவான சாதி படிநிலையும், அதன் கட்டமைப்பையும், சமகாலத்தில் நிலவும் சாதி கொடுமைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் இந்து மத அடிப்படை வாதத்தையும், தீண்டாமை கொடுமைகளையும், இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் வலியுறு த்தி பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதி வந்தார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அதிகாலை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹூச்சங்கி பிரசாத் மீது தாக்குதல் நடத்தியது. அவரது முகத்தில் குங்குமத்தை பூசி, சாதிக்கு எதிராக எழுதும் விரல்களை வெட்டவும் முயற்சித்தனர்.

கடுமையான தாக்குதலுக் குள்ளான ஹூச்சங்கி பிரசாத் அவர்களிடம் இருந்து தப்பி தாவணகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த போலீஸார் மர்ம நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும், தலித் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பிரசாத்தின் நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராம் சேனா அமைப்பினரிடம் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுதவிர சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பிரசாத் தாக்கப்பட்ட இடத்தில் கிடந்த தடயங்களை கைப்பற்றியும், அருகில் இருந்தவர்களுடமும் விசாரித்து தகவல்களை திரட்டியுள்ளனர். இதையடுத்து தாவணகெரே, தார்வாடு, ஹூப்ளி ஆகிய பகுதிகளில் உள்ள சிவசேனா, நவநிர்மாண் சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறும்போது, “எழுத்தாளர் ஹூச்சங்கி பிரசாத் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தாவணகெரே போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக் கப்படுவார்கள். எழுத்தாளர்கள் மீது தாக்குத‌ல் நடத்துவோர் மீது கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலை செய் யப்பட்டதை தொடர்ந்து, கர்நாட காவில் மற்றொரு எழுத்தாளர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்டித்து கர்நாடகா வில் பல்வேறு இடங்களில் எழுத்தாளர்களும், தலித் அமைப் பினரும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-10-2015

Friday, October 23, 2015

ஹரியானாவில் மற்றொரு தலித் சிறுவன் அடித்து கொலை!



ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஹானா கிராமத்தில் 14 வயதே ஆன ஒரு தலித் சிறுவன் புறா திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் சாதி காவல்துறை கயவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளான். கோவிந்த் என்ற இந்த சிறுவனை அடித்து கொன்று பிறகு தூக்கில் ஏற்றியுள்ளது காவல்துறை.

புறா திருடியதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கு கோவிந்த் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அவனை மீட்க அவனது தாய் காவல் நிலையம் சென்றபோது லஞ்சம் கேட்டுள்ளது காவல்துறை. கேட்ட பணத்தையும் கொண்டு வந்துள்ளார் கோவிந்தின் தாய். ஆனால் 'எங்கள் காவலில் இருந்து தப்பி விட்டான்' என்று காவல் துறை சொல்லியுள்ளது. ஒரு சிறுவன் போலீஸ் காவலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அவனை அடித்து கொன்று விட்டு நாடகமாடுகிறது காவல் துறை.

மாட்டுக் கறியை புனிதமாக்கி அதனை சாப்பிடுபவர்களை எல்லாம் எதிரிகளாக்கினர் இந்துத்வவாதிகள். அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறது நமது நாடு. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இரண்டு தலித் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்தினர் இந்துத்வாவாதிகள். நேற்று கோவிந்த் என்ற இளைஞன் அடித்து கொல்லப்பட்டுள்ளான்.

அன்றே இந்தத்வாவாதிகளை இந்துக்கள் கடுமையாக தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இனியாவது நடுநிiலை இந்துக்கள் இந்துத்வாவாதிகளுக்கு எதிராக கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். அதற்கு இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இனியும் தாமதித்தால் நமது இந்தியாவை இந்த இந்துத்வாவாதிகள் சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

தகவல் உதவி
NDTV
23-10-2015

Wednesday, October 21, 2015

தீயில் பொசுங்கிய இளம் தளிர்கள்! சாதி வெறியின் கோரம்!





உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலம் சன்பெட் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தின் உறவினர்கள் நீதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் சன்பெட் கிராமத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இச்சம்பம் நடந்தது. ஜிதேந்தர் (31), அவரது மனைவி ரேகா (28), அவர்களின் இரண்டரை வயது குழந்தை வைபவ், 11 மாத குழந்தை திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த சிலர் ஜிதேந்தரின் வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த னர். ரேகா படுகாயமடைந்தார். ஜிதேந்தருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2-ல் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இறந்த குழந்தைகளின் சடலுங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-1-2015

அடப் பாவிகளா! அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னடா செய்தது உங்களை! இந்துத்வ வெறிக்கு ஒரு அளவில்லையா? மோடி இதற்கும் வாய் திறக்க மாட்டாரா? வெளி நாட்டினர் இந்த செய்தியை கேள்விப் பட்டால் மூஞ்சியிலேயே காறி துப்ப மாட்டார்களா? அந்த தலித்தும் உனது இந்து மதத்தை சேர்ந்தவன்தானே! அப்படி என்ன வன்மம் உனக்கு உழைக்கும் மக்களின் மேல்? இன்னும் நான்கு ஆண்டுகளில் எனது தாய் நாட்டை இந்துத்வ வெறிக் கும்பல் சுடுகாடாக ஆக்கி விட்டுத்தான் ஓயும் போல் இருக்கிறது.

Sunday, September 20, 2015

தலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை!




புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலத்தின் பிஜேபி எம் எல் ஏ வாக உள்ளவர் காசினாத் மல்லிக்....

ஜீலை 20 ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி சம்பந்தமான ஒரு கூட்டத்துக்கு எம்எல்ஏ என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து மேலும் மூன்று எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் மாவட்ட ஆட்சியரும் அழைக்கப்பட்டிருந்தனர். மதியம் அரசு செலவில் உணவு பரிமாறப்படும் நேரமும் வந்தது. அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை பிடிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு காசிநாத் மல்லிக் கொடுத்த பேட்டியை பார்போம்:

'மற்ற மூன்று எம்எல்ஏக்கள், கண்டமால் எம்பி, மாவட்ட ஆட்சியர் என்று இந்த ஐந்து பேருக்கும் அறையின் உள்ளே கவுரமாக உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அறைக்கு வெளியே தனியாக எனக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு தொடர்ச்சியாக ஆளும் வர்க்கத்தால் அவமானம் ஏற்படுத்தப்படுகிறது' என்று பரிதாபமாக கேட்டார்.

தகவல் உதவி
NDTV.com
23-07-2015


பாவம் அந்த எம்எல்ஏ! எதனால் இவருக்கு மட்டும் இப்படி அவமானம் ஏற்படுகிறது என்பதை இன்னும் விளங்காமல் இருக்கிறார். அவர் தலித்தாக பிறந்து விட்டார் அல்லவா? அதுதான் காரணம்.

படிப்பு, ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தால் தீண்டாமை காணாமல் போய் விடும் என்று சொல்பவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? ஒட்டு மொத்த மக்களின் மனதில் மாற்றம் முழுவதுமாக ஏற்படாதவரை நமது நாட்டுக்கு தீண்டாமையிலிருந்து விடுபட எந்த முகாந்திரமும் இல்லை. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறப் போவதில்லை.

இங்கு இரண்டே நிலைப்பாடுதான் இருக்கிறது. ஒன்று தீண்டாமை என்ற இழிவை சுமந்து கொண்டு இந்து மதத்திலேயே இருப்பது.

மற்றது ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாம், கிருத்தவம், பவுத்தம் போன்ற மதங்களில் ஐக்கியமாகி விடுவது. இதைத் தவிர வேறு மூன்றாவது வழி இல்லை.

http://www.ndtv.com/bhubaneshwar-news/dalit-orissa-mla-served-food-separately-alleges-caste-discrimination-462586?site=full

Thursday, September 10, 2015

சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம் - அம்பேத்கர்



ஒருவேளை கிறிஸ்த்துவ மிசனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவனால் அதைச் செய்ய முடியாதா?

முடியாது என்றே பனிவுடன் கூறுவேன்.

காரணம் இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்த வேண்டும். அவர்களுள் ஒருவராக வாழ வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும். ஓர் இந்து இவற்றை எல்லாம் செய்வது சாத்தியப்படுமா?

தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து; எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும். வேதகாலத்து ஆரியரல்லாதவர்களின் வழிவந்த பழங்குடிமக்களோடு தொடர்பு கொள்வதன் மூலம் சாதி என்னும் உடைமையை இழக்க எந்த இந்துவாலும் முடியாது..

பாபாசாகேப் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
தொகுதி 1, பக்கம் 76-77.
(நன்றிஅம்பேத் ரங்கா.
கீழா100 பகுஜன் சமாஜ் கட்சி.)

Monday, August 17, 2015

தலித் பாதிக்கப்பட்டால் இந்துத்வாவாதிகள் மவுனம் காப்பதேன்!



வீடு கொளுத்தப்பட்டு பாத்திரம் பண்டங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடும் இந்த இளைஞன் நம் தமிழகத்தை சேர்ந்தவர்தான். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரத்தை சேர்ந்தவர். சாதி என்ற வெறியால் எழுந்த கோர தாண்டவமே இது.

நரேந்திர மோடி, அமீத் ஷா, ராமா கோபாலன், அர்ஜூன் சம்பத், தமிழிசை சவுந்தர்ராஜன், பொன் ராதா கிருஷ்ணன், ஹெச். ராஜா போன்ற இந்து மத காவலர்களெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள். பூணூல் அறுத்ததற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் இன்று மண்ணின் மைந்தன் வாழ்வாதாரம் இன்றி அழுது புலம்புகிறான். அவனது கண்ணீரை துடைக்க மாட்டீர்களா? ஓ.... அவன் தலித் சமூகத்தை சேர்ந்தவனோ? அவனுக்காகவெல்லாம் நீங்கள் குரல் கொடுக்க மாட்டீர்களோ?

இஸ்லாமியர்களை ஒழிப்பதற்கு பல இடங்களில் இந்துத்வாவாதிகள் பயன்படுத்திக் கொள்வது தலித் மக்களைத்தான். இன்று அந்த தலித் பாதிக்கப்படும் போது இந்துத்வாவாதிகள் யாரும் வாய் திறப்பதில்லை. இனியாவது உங்களின் சகோதரன் இஸ்லாமியன் என்பதை தலித் சகோதரர்கள் புரிந்து கொண்டு முஸ்லிம்களை தங்கள் சகோதரர்களாக பாவிப்பார்களாக! இந்துத்வாவாதிகளின் சதி வலையில் வீழாதிருப்பார்களாக!

Thursday, June 25, 2015

சாதி மாறி காதலித்ததற்காக தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை!



திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த கோகுல் ராஜ் வேறொரு வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் உதவி
ஜூனியர் விகடன்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. காதலிப்பது குற்றம் என்றால் சட்டம் போட்டு அதனை தடை செய்யுங்கள். அல்லது காதலர்களை பிரித்து விடுங்கள். கொலை செய்வது எந்த வகையில் நியாயம்? அந்த தலித் இளைஞன் பெரிய ஆளாகி வயதான காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுவான் என்ற எதிர் பார்பில் இருந்த பெற்றோருக்கு என்ன பதிலை இந்த சமூகம் வைத்துள்ளது?

சாதி வெறி என்று ஒழியும் நமது சமூகத்தில்?