Post by बुटवल अनलाइन.
பங்களா தேசத்து நாட்டவர் எப்பவுமே முன் கோபம் அதிகம் உள்ளவர்கள். எடுத்ததற்கெல்லாம் அடிதடியில் இறங்கி விடுவர். துபாயில் ஒரு கடையில் இந்த பெங்காளி ஒரு பிலிப்பைன் டெக்னீஷியனிடம் ஒரு டிவிடியை ரிப்பேருக்காக தருகிறார். மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த பிலிப்பைனி சொல்கிறான். அதன்படி மறுநாள் வருகிறார். அந்த கடையின் முதலாளியும் கடையில் இருக்கிறார்.
பெங்காளி: எனது டிவிடி வேலை முடிந்ததா?
அரபி: என்ன வேணும்?
பெங்காளி: நேற்று ரிப்பேர் பண்ண வேண்டி எனது டிவிடியை கொடுத்தேன். அதைத்தான் கேட்கிறேன்.
அரபி: அந்த பிலிப்பைனி உன்னைத் தெரியாது என்கிறானே? எப்படி உனக்கு டிவிடியை தருவது?
பெங்காளி: (பிலிப்பைனியை பார்த்து) ஏய் என்னைத் தெரியாது?
பிலிப்பைனி: ஊஹூம்..... உன்னை நான் பார்த்ததே இல்லை.
பெங்காளி: அந்த பிலிப்பைனி மிருகம்.... பொய் சொல்கிறான். (வேகமாக கத்துகிறார்)
அந்த அரபி ஒரு சிறிய ரிமோட்டை எடுத்து கொடுத்து 'இந்தா இதை வைத்துக் கொள்' என்று பெங்காளியின் சட்டைப் பையில் திணிக்கிறார். கோபத்தோடு வீசி எறிகிறான் அந்த பெங்காளி. அரபியை நோக்கி....
'உனக்கு என்ன பைத்தியமா? நான் கொடுத்தது பெரிய டிவிடி' கைகளால் காண்பிக்கிறார்.
அரபி: டிவிடி எவ்வளவு பெறும்?
பெங்காளி: 2000 திர்ஹம்
அரபி: 2000 திர்ஹம் ஒரு டிவிடியா... இந்த கடையில் உள்ள மொத்த சாமான்களும் 2000 திர்ஹம்தான் வரும்.
பெங்காளி: எனது டிவிடியை திரும்ப கொடுக்கிறாயா இல்லையா?
அரபி: இல்லை.... இந்த கடையில் உனது டிவிடி இல்லை.
பெங்காளி: ஹபீபி...(அன்பிற்குரியவரே)! நான் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த காசில் வாங்கியது அந்த டிவிடி... தயவு செய்து கொடுத்து விடு...
அரபி: அதெல்லாம் எனக்கு தெரியாது... உன்னை தெரியாது என்கிறான் இந்த பிலிப்பைனி..
பெங்காளி: நான் போலீஸூக்கு போகட்டுமா?
அரபி: ஏய் உனக்கு இந்த ஆளை தெரியுமா?
பிலிப்பைனி: நான் இந்த ஆளை பார்த்ததே இல்லை.
பெங்காளி: அவன் ஒரு மிருகம்...ஊ..... ஆ...... (வேகமாக சத்தம் போட்டு மேசையை ஓங்கி அடிக்கிறார்) என்னை தெரியாது?
பிலிப்பைனி: MAD... பைத்தியம்... MAD..... பைத்தியம்.....
பெங்காளி: நானா பைத்தியம்.... உன்னை விட மாட்டேன்டா... (என்று சொல்லி பிலிப்பைனியை அடிக்க ஓடுகிறார். அரபி இருவரையும் தடுக்கிறார். பெங்காளி கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.)
அரபி: 2000 திர்ஹம் டிவிடிக்காக உயிரையே விட்டு விடுவாயா? பொறுமை... அமைதியாய் இரு.
அந்த பெங்காளியை அன்பாக பிடித்து கடையை சுற்றிக் காண்பிக்கிறார்.
பெங்காளி: என்னோடு என்ன விளையாடுகிறாயா?
அரபி: ஆம்... அதோ பார் கேமரா... இது கேண்டிட் கேமரா ஹாஸ்ய நிகழ்ச்சி. விளையாட்டுக்காக செய்தோம்.
பெங்காளிக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னை மையமாக வைத்து நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை புரிந்து கொண்டு தனது டிவிடியை வாங்கிக் கொண்டு வெளியேறுகிறார்.
No comments:
Post a Comment