Followers

Wednesday, November 19, 2014

'மனித தெய்வம்' :-) ராம்பால் கைது!





ஹரியாணா மாநிலம் பர்வாலாவில் சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 43 முறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத நிலையில், பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ராம்பால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது, அவரை கைது செய்ய இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் ராம்பாலின் ஆதரவாளர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீஸாரை தடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஹிஸார் ஆசிரமத்தில் கடந்த சில நாட்களாக வெடி குண்டுகளையும் ஆசிட்களையும் வீசி அரசோடு கிட்டத்தட்ட போரையே பிரகடனப்படுத்திய ராம்பால் முடிவில் இன்று இரவு கைது செய்யப்பட்டார். இன்னும் 4000க்கும் அதிகமான பக்தர்கள் ஆசிரமத்துக்கு உள்ளே உள்ளனர். பல கொலை வழக்குகள் இந்த 'மனித தெய்வத்தின்' :-) மீது பதியப்பட்டுள்ளது. ஆசிரமத்திலிருந்து நான்கு இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இனி வரிசையாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

வறுமையில் உழன்று வரும் இந்திய மதரஸாக்களை கண்காணிக்க வேண்டும் என்று சங் பரிவாரத்தினர் அடிக்கடி கூச்சலிடுவது உண்டு. ஆனால் உண்மையில் இந்து மத ஆசிரமங்கள்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கும் இடங்களாக இருந்து வந்துள்ளன. காஞ்சி சங்கரராமன் கொலை, பிரேமானந்தா விவகாரம், நித்தியானந்தா விவகாரம், ராம்பால் விவகாரம் என்று எங்கு திரும்பினாலும் தேச துரோக செயலில் ஈடுபடுவது அதிகம் ஆசிரமங்களே! எனவே அரசு இந்துத்வாவாதிகளின் ஆசிரமங்கள் அனைத்தையும் கண்காணிக்க போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

'மனித தெய்வம்' :-) ராம் பால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப் படுவாராம். பாவம் கடவுளுக்கே விசாரணையா?

No comments: