Followers

Friday, November 28, 2014

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?



யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் எழுதிய ஒரு பின்னூட்டம்.

// Dear yuvan sir,
I'm ur diehard fan... We have initiated a plan for all ur fans to message about their opinion about ur name change...pleasemy dear yuvan..ur name is really very very very cute....i say yuvan yuvan yuvan everyday...and I cannot say Abdul anymore...i don't want these name change as ur every diehard fan...please for us don't change ur name thalaiva...neenga illana nanga illa...yuvan is youth icon of Tamil music...it should stay as it is...please don't let it to change thalaiva....i know U r not going to change ur name...but some fake news are spreading about this...so please confirm soon about ur name change...thank you in advance thalaiva...as ur sister said U r gonna get married, I wish U from my heart to have a successful life thalaiva...go ahead...u r hearts winner...millions of ur fans are here to support U for any cause...once again a request from ur follower please don't change ur name...//
- Sãñdîàr Múthù Kúmãr

'ஆமா.... காலங் கெடக்கிற கெடப்புல உலகத்துக்கு இது ரொம்ப முக்கியம்' என்று நீங்க அலுத்துக்கிறது தெரிகிறது. இருந்தாலும் இதிலும் சில விளக்கங்கள் படிப்பினைகள் நம்மால் பெற முடியும். முதலில் சண்டியர் முத்துக் குமாருடைய பின்னூட்டத்தைப் படிக்கவும். யுவனுடைய முகநூல் பக்கத்தில் அவருக்கு எழுதியது இந்த பின்னூட்டம். ஒரு அளவுக்கு மீறி போனால் இசை ஒரு மனிதனை எந்த அளவு பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு சிறந்த உதாரணம். 'நீங்க இல்லேன்னா நாங்க இல்ல' என்று சொல்கிறார். யுவன் ஒரு மியூசிக் டைரக்டர். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவர் தங்கள் இசையால் மக்களை மகிழ்விப்பர். முன்பு எம்எஸ்வி, நேற்று இளைய ராஜா, இன்று ஏ ஆர் ரஹ்மான் நாளை அனிருத்தோ, யுவனோ யாராவது இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் தொழில். அதை விடுத்து அவருக்கு ஆயிரம் பேர் என்றும் இவருக்கு ஆயிரம் பேர் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டத்தில் வசை மாறி பொழிந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.

அடுத்து யுவனின் தங்கை பவதாரிணி காட்டமாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். அவர் கூறுவதாவது 'என் சகோதரன் யுவன் சிகரெட் பிடித்தது கிடையாது. மது அருந்தியது கிடையாது. வேறு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. சிறு வயது முதலே மிக நேர்மையாக வாழ்ந்து வருபவர். ஆம். அவர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை? இந்த வருட டிசம்பரில் அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணோடு திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்துள்ளோம். அவருடைய எந்த முடிவுக்கும் குடும்பத்தார் நாங்கள் உறுதுணையாக இருப்போம். ரசிகர்கள் என்ற பெயரில் அவருக்கு தயவு செய்து யாரும் தொந்தரவு கொடுக்காதீர்கள்' என்கிறார். அந்த அளவு அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது மற்றவர்களுக்கு கசப்பாக இருக்கிறது. ஏன் இந்த நிலை? ஏனென்றால் மற்ற மதங்களுக்கு மாறினால் பெயர் மட்டுமே மாறும். கலாசாரம் மாறாது. இஸ்லாத்துக்கு மாறினால் பெயர் மட்டும் அல்ல. கலாசாரமும் வணக்க வழிபாடுகளும் முற்றிலும் மாறுபடும். பார்பனியத்தின் பிடி முற்றிலுமாக உடைத்தெறியப்படும். எனவே தான் பார்பனர்கள் ஏகத்துக்கும் குதிக்கிறார்கள். பல போலி பெயர்களில் வந்து இது போன்று இஸ்லாத்தை ஏற்றவர்களின் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய சட்டப்படி அவர் யுவனாகவே தொடரலாம். அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் சாதி வேரூன்றிய இந்த சமூகத்தில் அதே பெயரில் அவர் தொடர்ந்தால் 'அவர் சாதி எது?' என்ற கேள்வி வரும். எனவே தான் பழகிய தங்கள் பெயரை இஸ்லாத்தை ஏற்பவர்கள் முதலில் மாற்றி விடுகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் முன்பு எந்த சாதி என்பது 99 சதவீதமானவருக்கு தெரிந்திருக்காது. அடுத்த தலைமுறையில் அந்த சதமும் மாறி விடும். ஆனால் யுவன் தனது சொந்த பெயரிலேயே இருந்தால் அவரது சாதி மறைய வெகு காலம் ஆகும். எனவே பெயர் மாற்றம் என்பது அவரது சொந்த விருப்பம். அதில் ரசிகர்கள் என்ற பெயரில் பலர் மூக்கை நுழைத்து அவருக்கு ஆலோசனை வழங்குவது அதிகப்பிரசங்கித் தனம் இல்லையா? இதை ஏன் இவரது ரசிகர்கள் உணர மாட்டேன் என்கின்றனர்? இஸ்லாமிய பெயரை தேர்ந்தெடுப்பதால் அவரது இசைப்பிரியர்களுக்கு இசையை ரசிக்கும் தொனியில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வந்து விடுமா? எனக்கு விளங்கவில்லை!

1 comment:

mohamedali jinnah said...


யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?
http://nidurseasons.blogspot.in/2014/11/blog-post_29.html
by சுவனப் பிரியன்
நன்றி Source: http://suvanappiriyan.blogspot.in