Followers

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, October 06, 2015

'அமெரிக்க விசாவை ரத்தாக்கி விடுவேன்' - ஒபாமா (கற்பனை)



'ஒரு முஸ்லிமை மாட்டுக்காக கொன்ற தாத்ரி சம்பவத்தை கண்டித்து அறிக்கை விடாமல் இனியும் மவுனம் காத்தால் மறுபடியும் அமெரிக்கா வருவதற்கான விசாவை ரத்து செய்து விடுவேன்'

ஒபாமா கண்டிப்பு!

Monday, February 23, 2015

என்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு! :-(



என்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு!

ஒரு குடும்பத்திலேயே பல பிரிவுகளை பல பிரச்னைகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். மொழி, இனம், கலாசாரம் எல்லாம் முற்றிலும் மாறுபட்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேசத்து நபர்கள் ஒரே அறையில் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு பல ஆண்டுகள் குடும்பம் போல சகோதர வாஞ்சையோடு வாழ்ந்து வருவதை வளைகுடா நாடுகளில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். பிரச்னையில்லாமல் சென்று கொண்டிருந்தாலும் எப்போதாவது சண்டைகள் வருவதும் உண்டு.

எனது கம்பெனி ஆட்களில் அவ்வாறு சண்டைகள், பிரச்னைகள் என்று ஏதாவது ஏற்பட்டால் அலுவலகத்துக்கு எங்களுடைய பாஸ் வரவழைத்து அவர்களை கண்டித்து அனுப்புவது வழக்கம். மொழிப் பிரச்னை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த பஞ்சாயத்துகளில் நான் அவசியம் இருப்பேன். :-)

அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு ஒரு விசித்திரமான வழக்கொன்று சபைக்கு வந்தது. :-) பங்களாதேசத்தைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கும் நம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உஸ்மான் அலிக்கும் அடிதடி தகராறு. இதற்கான பஞ்சாயத்துக்காக அந்த இருவரையும் அலுவலகத்தக்கு அழைத்திருந்தார் எங்கள் பாஸ். நான் உட்பட நால்வரும் பாஸின் அலுவலகத்தில் அமர்ந்தோம். பஞ்சாயத்து தொடங்கியது. வந்தவர்களுக்கு அரபி சரியாக தெரியாததால் என்னைப் பார்த்து பாஸ் கேட்டார்....

'நஜீர்.... என்ன பிரச்னை என்று இவர்களிடம் கேள்'

'என்னப்பா உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை?' ஹிந்தியில் அவர்களிடம் கேட்டேன்.

பங்களாதேஷியான ஜியா சொல்ல ஆரம்பித்தான்... 'நஜீர் பாய்! நானும் இன்னும் மூன்று பேரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் உஸ்மான் அலி அறைக்குள் நுழைந்தான். நுழைந்தவுடன் வேகமாக சப்தத்தோடு காற்றை பிரிய விட்டான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இது போல் செய்தால் கொசியாக சாப்பிட முடியுமா? எனவே எனக்கு கோபம் அதிகமாகவே எழுந்து அவனை அடித்து விட்டேன்'

இதைக் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு 'இதற்காக அவனை அடிப்பதா?' என்று கேட்டேன்.

'இது முதல் முறை அல்ல. சிரிப்பு காட்டுவதற்காக வேண்டுமென்றே வரவழைத்து செய்தால் மனிதனுக்கு கோபம் வருமா? வராதா?' என்றான் ஜியா.

நான் சிரித்ததை கவனித்த பாஸ் 'ஏன் சிரிக்கிறே.... என்ன நடந்தது. விபரமாக சொல்' என்றார்.

அரபியில் இதற்கு என்ன வார்த்தை என்பதும் தெரியவில்லை. யோசித்து "சாப்பிட்ட உஸ்மானுக்கு கேஸ் பிரச்னை. அதனால் எழுந்தது இந்த சண்டை' என்று ஒருவாறாக சமாளித்து அனைத்தையும் அரபியில் சொல்லி முடித்தேன். இதை பொறுமையாக கேட்ட எனது பாஸ் சப்தமிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார். நாங்களும் சேர்ந்து சிரித்து விட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு பாஸ் உஸ்மானை பார்த்து பேச ஆரம்பித்தார்...

'உஸ்மான்! நாம் எல்லாம் முஸ்லிம்கள். ஒரு இஸ்லாமியனுக்கு நாணம் மிக மிக அவசியம். வெட்கம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்று நமது நபி கூறியது உனக்கு தெரியாதா? சிரிப்பு காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. சாப்பிடும் போது இவ்வாறு நீ செய்தது தவறு. ஒத்துக் கொள்கிறாயா?'

'ஆம். நான் செய்தது தவறுதான்'

உடன் ஜியாவை நோக்கிய பாஸ்...

'இதோ பார் ஜியா! அவன் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவனை அடித்தது பெரும் தவறு. நான் எதற்கு இருக்கிறேன். என்னிடம் அந்த விஷயத்தை கொண்டு வராமல் அடித்தது பெரும் தவறு. நீ அடித்ததில் தவறுதலாக எங்கும் பட்டு அவனது உயிர் போனால் அதற்கு யார் பொறுப்பு?'

'தவறுதான் சார். இனி அவ்வாறு நான் செய்ய மாட்டேன்' - ஜியா

'உஸ்மான்! அடித்ததற்காக பணம் ஏதும் வேண்டுமா?' என்று பாஸ் உஸ்மானைப் பார்த்து கேட்டார். ஏனெனில் இவ்வாறு முதலில் யார் அடிக்கிறாரோ அவர் அடி வாங்கியவருக்கு தனது சம்பளத்தின் பாதியைக் கொடுக்க வேண்டும் என்பது கம்பெனி சட்டம்.

'எனக்கு பணம் வேண்டாம்! தவறு என்னிடமும் இருக்கிறது' - உஸ்மான்

'சரி! அப்படி என்றால் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு கை கொடுத்துக் கொள்ளுங்கள்' - பாஸ்

பாஸின் கட்டளைக்கு இணங்க இரண்டு பேரும் கை கொடுத்துக் கொண்டு சிரித்தனர்.

'உஸ்மான் இனி உனக்கு ஏதும் வயிற்று பிரச்னை என்றால் கழிவறை பக்கம் சென்று விட வேண்டும். புரிகிறதா?' என்று பாஸ் சொன்னவுடன் எல்லோரும் சிரித்து விட்டோம். அன்றைய வழக்காடு மன்றம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. எல்லோரையும் சிரிக்க வைக்கிறேன் என்று பலரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நபர்கள் இந்த பதிவை படித்த பிறகாவது தங்களை சரி செய்து கொள்வார்களாக!

--------------------------------------------

"இறைநம்பிக்கை என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்" என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்" என நபித் தோழர் அபூ ஹுரைரா அறிவித்தார்.

- ஆதார நூல்: ஸஹீஹூல் புஹாரி 9.


Thursday, February 05, 2015

கேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்பா! :-)



ஜோக் புரியாதவர்களுக்காக!

வாகனங்களில் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றிலிருந்து ஐந்து கியர்கள் இருக்கும். ஆறாவதாக வாகனம் பின்னோக்கி செல்வதற்காக ரிவர்ஸ் கியர் இருக்கும். இதனை குறிக்க R என்ற ஆங்கில எழுத்தை எழுதியிருப்பார்கள். இதனை நம்ம கேப்டன் வழக்கம் போல் தவறாக புரிந்து கொண்டதைத்தான் இந்த படம் விளக்குகிறது.

Sunday, January 25, 2015

செண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே!



கார்ட்டூன் வரைந்தது சுந்தர்.

பிரியாணியின் மகிமையை உணர்ந்தவர்கள்! :-)



பிரியாணியின் சுவையை தேடிச் சென்று

விருந்தில் ஓசியில் கிடைக்கிறதே என்று

ஏகத்துக்கும் உள்ளே தள்ளி விட்டு மேலே

செரிக்க இரண்டு மாத்திரைகளையும் தள்ளி

மருத்துவருக்கு கணக்கின்றி வாரி வழங்கும்

வள்ளலாகித்தான் போனோம் நாமெல்லாம்!

வயிற்றை மூன்றாக்கி ஒன்றை உணவாகவும்

மற்றதை தண்ணீராகவும் மூன்றாவதை காற்றுமாக

வைக்கச் சொல்லி நமது நபிகள் நாயகம்

நமக்கு அறிவுறுத்தியதை மறந்ததும் ஏனோ?

உலகத்து வியாதிகளையும் தெரிந்தே சுமக்கும்

சில மனிதர்களைப் பார்தால் குணங்குடி மஸ்தான்

சாகிபின் பாடல் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது.

'வேட்டை பெரிதென்றே

வெறி நாயைக் கைப்பிடித்தே...

காட்டில் புகலாமோ....

கண்னே... ரகுமானே....."

------------------------------------------

ஹஜ்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.
(நூல் : திர்மிதி)

ஹஜ்ரத் உமர் அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் “நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்காதவரை அவன் அழியமாட்டான்” என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானம் : பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.
1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)
2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)
3. E.N.T. Diseases (காது. மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)
4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)
5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)
6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)
7. Diabetese (நீரழிவு நோய்)
8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)
9. Depression (மன அழுத்தம்)

ட்விட்டரில் மோடு முட்டி :-)

"நீர்யானைக்கு ஆங்கிலத்தில் வாட்டர் எலிபண்ட்(WATER ELEPHANT) ன்னு குழந்தைக்குசொல்லி கொடுத்தது ஒரு குற்றமாயா?
பேரன்ட் மீட்டிங்ல டீச்சரமா என்மானத்தா வாங்கிருச்சு" - ட்விட்டரில் மோடு முட்டி



Tuesday, January 20, 2015

என்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா! :-)



எதிரும் புதிருமாய் எல்லாவற்றிலும்

இருக்கும் மாமியாரும் மருமகளும்

சீரியல் பார்த்து விட்டு சோகத்தில்

ஒன்றாக மூக்கை சிந்துவதில் மட்டும்

ஒன்றிணைந்து விடுகின்றீர்களே! எப்படி?

என்னம்மா நீங்க..... இப்டி பண்றீங்களேம்மா!

Monday, January 05, 2015

'உன் பேரை மாத்தப் போறேன்' - கார்ட்டூன்



கணவன்:-'இனி உன் பேரு மலர்விழி இல்லே! கூகுள்'

மனைவி:-'என் பேரை எதுக்கு மாத்துரீங்க!'

கணவன்:-'நான் எங்கே போனாலும் கண்டுபிடிச்சுடுரியே! அதான்.'

------------------------------------------

கணவன்:- என்னடி இது... பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி:- கட்டிக்க போறது நாந்தானே

கணவன்:- அதை துவைக்கிறது நான்தானே! எனக்குல்லே வலி தெரியும?

Tuesday, December 30, 2014

'ஐயோ.... டாக்டர்! என்னைக் காப்பாத்துங்க....



'நர்ஸ் கொடுத்த மருந்தை மட்டும் சாப்பிடாம ஸ்பூனையும் சேர்த்து ஏன்யா முழுங்குனே! கொஞ்சம் இருய்யா! எடுத்துர்ரேன்'

'ஐயோ டாக்டர்'

Friday, December 19, 2014

'பிசாசு'.... படம் பார்க்க நாளைக்கு போகலாமா? :-)




கணவன்: 'பிசாசு'.... படம் பார்க்க நாளைக்கு போகலாமா?

மனைவி: எந்த படத்துக்கு? படத்து பேரைச் சொல்லுங்கோ!

கணவன்: ? ... ?..... ?

Saturday, December 06, 2014

சுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி! :-)

சுப்ரமணியம் சுவாமியின் அடுத்த காமெடி! :-)



'காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டுகள் எல்லாம் மோடிஜி நம் நாட்டின் புராதன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசினால் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனா பாருங்கோ! பஹவான் புண்ணியத்துலே கிமு 3500 க்கு முன்பே குஜராத்தில் கம்ப்யுட்டர் உபயோகப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய ஃப்ளாஸ் மெமரி ஒன்று சமீபத்தில் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ளாஸ் மெமரியில் நமது நாட்டின் புராதன அறிவியல் ஆய்வுகள் எல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் காம சூத்ராவும் அடங்கும். :-)

மஹா கம்ப்யூட்டர் அந்த நாளிலேயே குஜராத்தில் உபயோகத்தில் இருந்துள்ளதை இதன் மூலம் நாம் உறுதிபடுத்திக் கொள்கிறோம். ஆனால் பின்னால் வந்த மொகலாய முல்லாக்கள் அந்த கணிணியை சிதைத்து விட்டனர். ஃப்ளாஸ் மெமரி மட்டுமே தற்போது நமக்கு கிடைத்துள்ளது. நமது சங் பரிவாரங்கள் இழந்த தகவல்கள் அத்தனையையும் மீட்க ஆயத்தமாகி உள்ளனர். அந்த ரகசியங்கள் மட்டும் கிடைக்கப் பெற்றால் செக்யூலரிஸ்டுகள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியே தூக்கி எறிவோம் என்று சொல்லிக் கொள்கிறேன்.'

-சுப்ரமணியம் சுவாமி தனது முகநூல் பக்கத்தில்.

This is a tight slap to AAPTARDS, KHANGRESS and Sickulars who made fun of Modi ji when he claimed that our ancestors were advanced in the field of Science and Medicine.

Below is the image of a 3500 BC Flash Drive that has been unearthed in Gujarat.

The size of this Flash Drive has shuck the whole world. It is believed that this Drive contains Documents of our ancestoral details, yes including Kama Sutra.

The Maha supercomputer on which this was operated was destroyed by Mulla Mughals ShankPaad team is trying to recover all the documents. Once we discover, I'll make sure every Sickulars will be thrown out of India.

https://www.facebook.com/SusuSwamy

தகவல் உதவி:
மில்லி கெஜட்
07-12-2016
https://www.facebook.com/milligazette

Thursday, December 04, 2014

திருப்பி திருப்பி ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கேட்பியா - கார்ட்டூன்



மனைவி: 'பெண்கள் பதிவுகளாக பார்த்து பார்த்து இனி தேவையில்லாம லைக் போடுவியா?

கணவன்: மாட்டேன்... மாட்டேன்...

மனைவி: 'அவுங்க இன்பாக்ஸ்ல போய் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பி இனி கடலை போடுவியா?

கணவன்: 'மாட்டேன்....மாட்டேன்'

மனைவி: 'அவுங்க விரும்பாவிட்டாலும் திருப்பி திருப்பி ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கேட்பியா'

கணவன்: ஐயோ.... இனி நான் ஃபேஸ் புக்கையே திறக்க மாட்டேன். இது சத்தியம். இனி அடிக்காதே!....

Saturday, November 22, 2014

பெங்காளியும், பிலிப்பைனியும் ஒரு அரபியும்!



பங்களா தேசத்து நாட்டவர் எப்பவுமே முன் கோபம் அதிகம் உள்ளவர்கள். எடுத்ததற்கெல்லாம் அடிதடியில் இறங்கி விடுவர். துபாயில் ஒரு கடையில் இந்த பெங்காளி ஒரு பிலிப்பைன் டெக்னீஷியனிடம் ஒரு டிவிடியை ரிப்பேருக்காக தருகிறார். மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த பிலிப்பைனி சொல்கிறான். அதன்படி மறுநாள் வருகிறார். அந்த கடையின் முதலாளியும் கடையில் இருக்கிறார்.

பெங்காளி: எனது டிவிடி வேலை முடிந்ததா?

அரபி: என்ன வேணும்?

பெங்காளி: நேற்று ரிப்பேர் பண்ண வேண்டி எனது டிவிடியை கொடுத்தேன். அதைத்தான் கேட்கிறேன்.

அரபி: அந்த பிலிப்பைனி உன்னைத் தெரியாது என்கிறானே? எப்படி உனக்கு டிவிடியை தருவது?

பெங்காளி: (பிலிப்பைனியை பார்த்து) ஏய் என்னைத் தெரியாது?

பிலிப்பைனி: ஊஹூம்..... உன்னை நான் பார்த்ததே இல்லை.

பெங்காளி: அந்த பிலிப்பைனி மிருகம்.... பொய் சொல்கிறான். (வேகமாக கத்துகிறார்)

அந்த அரபி ஒரு சிறிய ரிமோட்டை எடுத்து கொடுத்து 'இந்தா இதை வைத்துக் கொள்' என்று பெங்காளியின் சட்டைப் பையில் திணிக்கிறார். கோபத்தோடு வீசி எறிகிறான் அந்த பெங்காளி. அரபியை நோக்கி....

'உனக்கு என்ன பைத்தியமா? நான் கொடுத்தது பெரிய டிவிடி' கைகளால் காண்பிக்கிறார்.

அரபி: டிவிடி எவ்வளவு பெறும்?

பெங்காளி: 2000 திர்ஹம்

அரபி: 2000 திர்ஹம் ஒரு டிவிடியா... இந்த கடையில் உள்ள மொத்த சாமான்களும் 2000 திர்ஹம்தான் வரும்.

பெங்காளி: எனது டிவிடியை திரும்ப கொடுக்கிறாயா இல்லையா?

அரபி: இல்லை.... இந்த கடையில் உனது டிவிடி இல்லை.

பெங்காளி: ஹபீபி...(அன்பிற்குரியவரே)! நான் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த காசில் வாங்கியது அந்த டிவிடி... தயவு செய்து கொடுத்து விடு...

அரபி: அதெல்லாம் எனக்கு தெரியாது... உன்னை தெரியாது என்கிறான் இந்த பிலிப்பைனி..

பெங்காளி: நான் போலீஸூக்கு போகட்டுமா?

அரபி: ஏய் உனக்கு இந்த ஆளை தெரியுமா?

பிலிப்பைனி: நான் இந்த ஆளை பார்த்ததே இல்லை.

பெங்காளி: அவன் ஒரு மிருகம்...ஊ..... ஆ...... (வேகமாக சத்தம் போட்டு மேசையை ஓங்கி அடிக்கிறார்) என்னை தெரியாது?

பிலிப்பைனி: MAD... பைத்தியம்... MAD..... பைத்தியம்.....

பெங்காளி: நானா பைத்தியம்.... உன்னை விட மாட்டேன்டா... (என்று சொல்லி பிலிப்பைனியை அடிக்க ஓடுகிறார். அரபி இருவரையும் தடுக்கிறார். பெங்காளி கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.)

அரபி: 2000 திர்ஹம் டிவிடிக்காக உயிரையே விட்டு விடுவாயா? பொறுமை... அமைதியாய் இரு.

அந்த பெங்காளியை அன்பாக பிடித்து கடையை சுற்றிக் காண்பிக்கிறார்.

பெங்காளி: என்னோடு என்ன விளையாடுகிறாயா?

அரபி: ஆம்... அதோ பார் கேமரா... இது கேண்டிட் கேமரா ஹாஸ்ய நிகழ்ச்சி. விளையாட்டுக்காக செய்தோம்.

பெங்காளிக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னை மையமாக வைத்து நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை புரிந்து கொண்டு தனது டிவிடியை வாங்கிக் கொண்டு வெளியேறுகிறார்.




Wednesday, August 27, 2014

முகநூலில் புதுசா ஒரு request வந்தது.!



புதுசா ஒரு request வந்தது.

நானும் கன்பார்ம் பண்ணியதும் ,

நன்றினு ஒரு mgs inbox. கு வந்தது...

உடனே அடுத்த mgs உம் வந்தது நீங்க பாய் ஆனு

நானும் s னு அனுப்பினேன் ...

உடனே அப்டினா பிரியாணி எங்கனு ....கேட்குது…….

டேய் அந்த பாய் அ சொல்லுலடா .... நான் பையன்னு சொன்னேன் ..

கொல்ராங்களே!

-படித்ததில் பிடித்தது :-)

--------------------------------------------------------------

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்

- (அல்குர்ஆன் 4:38)

வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.

-(அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

-(அல்குர்ஆன்7:31)


'வறுமையை நினைத்தா அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக வருங்காலத்தில் இந்த உலகத்துச் செல்வம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை நல்வழியை விட்டும் ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி அவர்கள் கூறியதாக அபுதர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:இப்னுமாஜா)


Saturday, March 15, 2014

மோடியின் குஜராத்தில் மட்டுமே இது சாத்தியம்!



1. மோடியின் குஜராத்தில் மட்டுமே கோழிகள் பெரும் பெரும் முட்டைகளை இடுகின்றன.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் சப்ளை செய்து ராம ராஜ்யம் அமைப்போம்.

2. மோடியின் குஜராத்தில் மட்டுமே இது போன்ற தேங்காய்களை பார்க்க முடியும்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் ஏன் முழு உலகுக்குமே தேங்காய்களை நாங்கள் சப்ளை செய்வோம்.

3. மோடியின் குஜராத்தில் மட்டுமே இது போன்ற செங்கல் சூளைகளை பார்க்க முடியும்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் செங்கல் சப்ளை செய்வோம். ராமர் கோயில் கட்ட இங்கிருந்து செங்கல்லை அனுப்புவோம்.

4. மோடியின் குஜராத்தில் மட்டுமே கட்டப்பட்டுள்ள உலக பெருஞ்சுவர்.

இதைக் கொண்டு இனி எந்த பாகிஸ்தானிகளும் பங்களாதேசிகளும் குஜராத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்வோம்.

5. மோடியின் குஜராத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மின்சார கோபுரங்கள்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் தேர்தலுக்கு பிறகு குஜராத் மின்சார சப்ளை செய்யும்.

டிஸ்கி: இப்படியான ஒரு செய்தியை பணத்தை வாங்கிக் கொண்டு நமது இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிடலாம். இது வரை மோடியைப் பற்றி இவ்வாறான செய்திகளைத்தான் ஒட்டு மொத்த ஊடகங்களும் தந்து வருகினறன. தேர்தல் தேதி வேறு அறிவிக்கப்பட்டு விட்டன. இது போன்ற செய்திகள் இனி நிறைய வரும். வருங்காலங்களில் யாரும் அதிர்ச்சியடைந்து விடாமல் இருக்க முன் கூட்டியே அந்த செய்திகளை தற்போது நாம் தந்து விட்டோம். :-)

Friday, January 24, 2014

நரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்! :-)



நரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்! :-)

'இந்திய அரசியலின் ஐடம் கேர்ள் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை விட ஐடம் கேர்ள் ராக்கி சாவன் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியும்' -உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரிக்கையில் எழுதிய கருத்து.

அதற்கு பதிலளித்த ராக்கி சாவன் 'உத்தவ் தாக்கரேக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். அரவிந்த் கெஜ்ரிவாலை விட சிறந்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். டீக் கடையில் டீ விற்ற ஒருவர் குஜராத் முதல் மந்திரியாக ஆகி இன்று பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடும் போது ராக்கி சாவன் டான்ஸ் பண்ணி ஏன் அரசியல் பண்ண முடியாது?'

ஆஹா... மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்க போய் நாற்காலி ஆசை ராக்கி சாவனுக்கும் வந்து விட்டது.மோடிக்கு சரியான போட்டி ராக்கி சாவன்.:-) பிஜேபியினர் இனி ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=B_EouhIehgI