Followers

Tuesday, April 27, 2021

இது தான் தமிழ்நாடு

 


இது தான் தமிழ்நாடு

 

சவுதி அரேபியாவில் நான் பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் பல மாநில தொழிலாளர்களும் இந்துக்கள், முஸ்லீம்கள் என என்னுடன் பணியாற்றினர்... தமிழர்கள் ஜாதி மதம் பார்க்காமல் பழகும் இனக்கமான குணம் உடையவர்கள். அப்படிப்பட்ட சூழலை வட மாநிலத்தவர்களிடம் காண்பது அரிதிலும் அரிது

வட மாநில இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஆகவே ஆகாது. போனால் போகட்டும் என்று மேம்போக்காக சும்மா சிரித்து வைப்பார்கள். ஆனால் இருவருக்குள்ளும் உள்ளுக்குள் சைத்தான் சைக்கிளில் வந்து கொண்டே இருப்பான். சைவமோ, அசைவமோ அவர் சமைக்கும் உணவை இவர் சாப்பிட மாட்டார், இவர் சமைக்கும் உணவை அவர் சாப்பிட மாட்டார்.

 

அந்த தொழிலாளர் குடியிருப்பு முழுக்க அது தான் நிலை .ஆனால் தமிழர்கள் மத்தியில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவன், என்ற வேறுபாட்டையோ அது போன்ற சிந்தனையையோ பார்ப்பது அரிதிலும் அரிது. மாமா, மச்சான் என்று ஒரு இனிமையான குடும்ப சூழல் எப்போதும் நிலவும்.

 

நாங்கள் இருந்த அறையில் (5 பேர் தங்க வசதியான அறை) ஒருவர் வெளியேறிய பின்னர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் வந்து சேர்ந்தார். கம்பெனி குவாட்ரஸ் என்பதால் நிறுவனம் யாரை நமது அறையில் நியமித்தாலும் அவரோடு குப்பை கொட்டித்தான் ஆக வேண்டும்.

வந்தவர் பேர் கேட்டவுடன் அவர் இஸ்லாமியர் என்பதை தெரிந்து கொண்டேன். ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக் கொண்டோம், எனது எதிர் அறையில் நாராயணன் என்ற தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் இருந்தார், மாமா , மாப்பிள்ளை என்று தான் உறவு முறை கூறி அழைத்துக் கொள்ளுவோம். அன்பானவர் , அவரும் வந்து அறிமுகமாகி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த உபி பாய் என்னை எச்சரித்தார், அவர்களோடு (இந்துக்கள்) அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளாதே என்று அதன் பிறகு என்னை அடிக்கடி எச்சரிக்க ஆரம்பித்து விட்டார். நானும் அவரிடம் ஒவ்வொரு முறையும் 'உன்னோட வட நாடு போல கிடையதுடா தமிழ்நாடு ' என்று கூறி எவ்வளவு விளக்கினாலும் , காதில் ஏறவே ஏறாது, நான் நம்பவே மாட்டேன் என்பார்

 

இப்போது போல அது ஒரு நோன்பு காலம். காலை மூன்றரை மணிக்கு உணவருந்த எழ வேண்டும், இரவு பத்து மணிக்கு உணவு தயார் செய்து வைத்து விட்டு , தூங்க போய்விடுவோம், 3.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து உணவை மீண்டும் ஒருமுறை சூடு செய்து சாப்பிடுவோம், சில நாட்களில் வேளை அசதி காரணமாக சிறிது அசந்து தூங்கி விடுவோம், பெரும்பாலும் திருட்டு பயம் இல்லை என்பதால் கதவுகள் திறந்தே இருக்கும், (தொழிலாளிகளிடம் எதுவும் இருக்கவும் செய்யாது) மூன்றறை மணியை தாண்டி 5, அல்லது பத்து நிமிடம் தாமதம் ஆனால் போதும் , நம்ம நாராயணன் மாமா வந்து விடுவார். 'மாமா எழுந்திருங்க , நோன்பு வைக்க நேரமாச்சி ' என சிரித்துக் கொண்டே எழுப்புவார்.

 

போகப் போக அலாரம் அடிப்பதற்க்கு ஐந்து நிமிடம் முன்பே நாராயணன் மாமா வந்து எழுப்பி விடுவார். 'ஏன் மாமா நீங்க போய் தூங்குங்க' என்றாலும், இல்ல மாப்ள இருக்கட்டும் நீங்க சாப்பிடுங்க என்று நாங்கள் சாப்பிட்டு முடியும் வரை அமர்ந்திருப்பார். சில நேரங்களில் எங்களை எழுப்புவதற்கு முன்பே சாப்பாட்டை அடுப்பில் சூடு செய்து வைத்து விடுவார். நாராயணன் மாமாவின் அன்பு, கரிசனம் அந்த உபி பாய்க்கு உள்ளுக்குள் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தது, நாராயணன் மாமாவுக்கு ஹிந்தி அவ்வளவாக வராவிட்டாலும் அந்த உபி பாயும் ,மாமாவும் நெருங்கிய நண்பர்கள் போல பழக ஆரம்பித்து விட்டனர். இப்படியாக இரண்டு வருடம் ஒடி விட்டது

 

அந்த உத்தர பிரதேச நபருக்கு விசா முடிந்து நாடு திரும்பும் காலம் வந்து, கிளம்ப வேண்டிய பிளைட் டிக்கெட்டும் வந்தது .அன்று கிளம்ப வேண்டிய நாள், நம்ம நாராயணன் மாமாவை கட்டி அனைத்து கண்ணீர் விட்டு அழுதார் அந்த உபி பாய். மாமாவும் கண் கலங்கி விட்டார்,

 

கடைசியில்தான் அந்த ஹைலைட் நடந்தது, அந்த உபி பாய் என்னிடம் வந்தார் 'அப்துல்லா நீங்க சொன்னப்ப நான் நம்பல, உங்க தமிழ்நாடு பூராம் இப்படித்தான் இந்து, முஸ்லீம் பாகுபாடு இல்லாமல் பழகுவாங்களா' என மீண்டும் கேட்டார். ஆமா பாய் ஆமா இது தான் எங்கள் தமிழர் பண்பாடு என்றேன். உங்களுக்காக நான் அல்லாகிட்ட துவா செய்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்... எனக்கு அப்போ 'நம்ம தமிழ்நாடுடா' என காலரை தூக்கி விட்டுக்கிடனும் போல இருந்தது... நன்றி நாராயணன் மாமா , மச்சான்களே.

 

சவுதியில் பணியாற்றும் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். சிறு சம்பவமாக இருந்தாலும் மதவாத சக்திகள் தமிழகத்தையும் வடநாடு போல சின்னாபின்னமாக்க வரிந்து கட்டி நிற்கும் இந்த சூழலில் இதனை எழுத்து வடிவில் பதிய வேண்டும், என்பதற்காக எழுதி முகநூலில் பதிவிட்டேன்.

 

அஹமத்

 

2 comments:

Dr.Anburaj said...

இது ஒரு நாடகம்.

உண்மையில் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் ஹிந்துக்களை

”காபீர்கள்” காட்டுமிராண்டிகள், நாகரீகம் தெரியாதவர்கள், அல்லாவின் எதிரிகள் , நபியின் எதிரிகள் , உண்மை வேதத்தை நிராகரிக்கும் பாவிகள்

என்றுதான் நினைக்கின்றார்கள்.இந்த அவலட்சண்த்தில் ஹிந்துக்களை மதித்து நடத்துகிறோம் என்று முஸ்லீம்கள் சொன்னால் அது பச்சை ஏமாற்று வேலை. அறுப்பதற்கு நாள் கிடைக்காமல் வீட்டில் இருக்கும் கிடா.

Dr.Anburaj said...

இன்று பாலிமா் செய்தி -29.4.2021

கோவை ESI மருத்துவமனை முற்றிலும் ஏசி செய்யப்பட்டது.எனவே மின்விசிறிகள் பொருத்தப்படவில்லை. கொரானா நோயாளிகள் நிறைய சிகிச்சை பெற்றதனால் ஏசியை போடவில்லை.மின்விசிறி இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். தடுப்பு ஊசி போட வந்த தம்பதி- இந்து தம்பதிகள் தங்கள் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து 100 மின்விசிறி வாங்கிக் கொடுத்துள்ளாா்கள்.
1. 100 மின்விசிறி ஏற்றிக்கொண்டு மினவேன் மருத்துவமனை சென்றது. தம்பதியா் செல்லவில்லை.
2.படம் எடுக்க பத்திரிகையாளா்கள் தொலைக்காட்சி முகவர்கள் என்று யாரிடமும் தகவல் சொல்லவி்ல்லை.
3.மின் விசிறி கொண்ட மினி வேனை படம் எடுக்கவில்லை.
4. வலக்கரம் செய்வது இடக்கரம் அறியக் கூடாது என்று அடக்கமாக உதவி செய்தாா்கள்.
5.மின்விசிறி 100 வந்ததை பார்த்து ஆச்சரியப்பட்ட தலைமை மருத்துவா் தம்பதியரிடம் தொடா்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளாா்.
6. விசயம் அறிந்து மாவட்ட ஆட்சியரும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு நன்றி தெரிவித்து பாராட்டியிருக்கின்றாா்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
குறள் எண்:322)

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திருகுறள் எண்:215)

இந்த தம்பதியரகள் ... ஹிந்து தம்பதியர்கள் அந்தணா்கள்... தலை மகன் ..மகள் ... பேரறிவாளா்கள்.

இவர்களும் காபீர்கள்தானே ....அப்படித்தானே குரான் சொல்கிறது.