Followers

Thursday, April 08, 2021

இறப்பிலும் ஒன்றாக இணைந்த நண்பர்கள் - இதுதான் தமிழ்நாடு

 இறப்பிலும் ஒன்றாக இணைந்த நண்பர்கள் - இதுதான் தமிழ்நாடு

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கோவிலின் பூசாரி மகாலிங்கம்.  அதே கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருபவர் ஜெய்னுல்லாபுதீன். இருவரும் பள்ளி காலம் முதலே இணை பிரியாத நண்பர்கள். இரண்டு குடும்பங்களும் மிகவும் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளது.

 

இந்நிலையில் மகாலிங்கத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லை என ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று சேர்த்தனர் அப்போது மருத்துவமனையில் இருவரும் எதிர் எதிரே உள்ள இருக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

 

இதனை எதிர் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மகாலிங்கமும் இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களும் கொண்டுவந்து அவரவர்கள் வீட்டில் அவர் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இரு நண்பர்களும் இறந்தது இரு மதத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது








2 comments:

vara vijay said...

But Allah will not give paradise for Mahalingam. He will be in hell forever afterall prophets parents, his uncle Abu thalib dont deserve heaven.

Dr.Anburaj said...

இன்றும் முஸ்லீம் மௌலானாக்கள் முஸ்லீம் லீக் மதவெறியர்களின் பொல்லாத பரப்புரைகளை பின்னுக்கு தள்ளி சமூக ஒற்றுமை வலிமையாக உள்ளது.இதற்கு காரணம் குரானின் விஷ போதனைகளை இந்துக்கள் அறிய மாட்டார்கள். இந்துமதம் பிற மதங்களை மதிக்கும் குணம் கொண்டது. ஆக சமூக ஒற்றுமைக்கு காரணம் ஹிந்து வேதங்கள்தான்.அரேபிய மத நூல்கள் அல்ல.