Followers

Monday, June 28, 2021

மலையாளிகளின் மன இறுக்கத்தைப் போக்கும் நம் இசையமைப்பாளர்கள்!

 

மலையாளிகளின் மன இறுக்கத்தைப் போக்கும் நம் இசையமைப்பாளர்கள்!

 

நான் பணிபுரியும் கம்பெனியில் சேல்ஸ் செக்ஷன் தனியாகவும் அலுவலகம் தனியாகவும்  அமைக்கப்பட்டிருக்கும்.. இரண்டுக்கும் இடையில் ஒரு மரக்கதவு.

 

நான் மும்முரமாக அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சேல்ஸில் உள்ள மலையாளி அலுவலகத்தில்  புகுந்து கதவை சாத்திக் கொண்டு அருமையாக  'அடி என்னடி ராக்கம்மா  பல்லாக்கு' 'சொடக்கு மேலே சொடக்கு' என்ற பாடல்களை பாடிக் கொண்டு குத்தாட்டம் போட்டு விட்டு செல்வார்.

 

'என்ன.... திடீர் திடீரென்று அதிர்ச்சி கொடுக்கிறீர்கள்?' என்றால் 'என்ன செய்வது நஜீர் பாய்! கஸ்டமர் டென்ஷன், நமது நாட்டு அரசியல் டென்ஷன், வீட்டு டென்ஷன், கொரோனாவால் இரண்டு வருடமாக ஊருக்கு போகாத டென்ஷன் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஏக டென்ஷன். இது போல் ஜாலியாக ஒரு குத்தாட்டம் போட்டால் கொஞ்சம் டென்ஷன் குறைகிறது' என்கிறார்.

 

'ஐந்து வேளை தொழுகையில் நமக்கு தேவையான நிவாரணி இருக்கிறதே' என்றேன்.

 

'ஐந்து வேளையும் தொழுகிறேன். இடையிடையே இந்த குத்தாட்டமும்' என்கிறார் சிரித்துக் கொண்டே...

 

ஆகவே விஸ்வநாதனும், இளையராஜாவும், ரஹ்மானும் பலரது மன இறுக்கங்களை குறைத்து வருகிறார்கள் ஒரு மருத்துவரைப் போல... :-)

 

என்னதான் வெளியில் ஜாலியாக சுற்றித் திரிந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறியதாக சோகம் இழையோடிக் கொண்டுதான் இருக்கிறது. எந்த நேரமும் சந்தோஷமாகவே இருந்தாலும் வாழ்க்கை சுகிக்காது அல்லவா!




 

 

1 comment:

Dr.Anburaj said...


இந்து பண்பாட்டில் பரதம் சங்கீதமும் வெகு முக்கியமாக உள்ளது. திரைப்படங்கள் திரைப்பாடல்கள் நஞ்சு இலக்கியம்தான். யோகா மிகச்சிறந்த மன இறுக்கத்தை போக்கும் கலையாக உலகம் உணா்ந்துள்ளது. சவுதி அரசம் அதை ஏற்று யோகாவை அங்கிகரித்துள்ளது.யோகா தினம் கொண்டாடப்பட்ட விதம் குறித்து பதிவுகள் செய்யலாமே!