Followers

Friday, June 18, 2021

முஹம்மது எர்ஃபான் தனது குடும்பத்தினரும் இணைந்த காட்சி!

 

முஹம்மது எர்ஃபான் தனது குடும்பத்தினரும் இணைந்த காட்சி!

 

லஸ்கர் ஏ தொய்பா என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு படுத்தி 9 வருடம் சிறைவாசம் அனுபவித்து தற்போது நீதி மன்றம் 'ஆதாரமில்லை' என்று கூறி விடுவித்துள்ளது. 9 வருடத்திற்குப் பிறகு தனது குடும்பத்தை கண்ணீர் மல்க சந்தித்த எர்ஃபான்.

 

கட்டிய மனைவியை தூரமாக்கி விட்டு சுற்றித் திரிபவர்களுக்கு எர்ஃபான் போன்ற வர்களின் வலி தெரிய வாய்ப்பில்லை.




 

 

 

 

 

 

1 comment:

Dr.Anburaj said...

எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்♥️
திருப்பூரை சேர்ந்த அருள்செல்வத்தின், 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும், காங்கயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது.
திருமணத்தை எளிமையாக நடத்தியதால், மீதமான பணத்தை நற்பணிகளுக்கு தர முடிவு செய்து திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு - 5 லட்சம்,
பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு - 11 லட்சம்,
புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு - 2 லட்சம் ரூபாய்.
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம்,
மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் என,
மொத்தமாக, 37.66 லட்சம் ரூபாயை வழங்கினர்.
பணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்....
மனம் இருக்க வேண்டும் அல்லவா ❤️❤️
கடவுள் உள்ளம் கொண்ட இந்த மாமனிதர்கள் வம்ச விருத்தியோடு பதினாறு சுகங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்...❤️❤️
வாழ்த்துக்கள்...🙏🏾🙏🏾 வணக்கங்கள்