Followers

Wednesday, June 09, 2021

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

 கீழடியில் தோண்டத் தோண்ட தற்போது இந்துக்கள் வழிபடும் எந்த தெய்வங்களின் உருவங்களும் காணக் கிடைக்கவில்லை. ஏக தெய்வ கொள்கையில் இருந்ததாகவே அறியப்படுகின்றனர்.


ஒன்றே குலம் ஒருவனே தேவன்... யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சொற்றொடர்கள் இதனையே பிரதிபலிக்கின்றன. 


பின்னால் வணிகம் செய்ய வந்த ஆரியர்களினால் புகுத்தப்பட்டவையே தற்போதுள்ள இந்து மத தெய்வங்களின் உருவங்கள் என்பது விளங்கும். இந்த காணொளி அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.




2 comments:

Dr.Anburaj said...

இசுலாமில் பிரச்சனை ஏக இறைவன் அல்ல. முஹம்மது என்ற அரேபியன் மற்றும் அவரது தவறான போதனைதான் பிரச்சனை. அரேபியன் போல் வாழ்ந்தால்தான் அல்லா ஏற்பாா் மற்ற கலாச்சாரங்களை அல்லா ஏற்பதில்லை.. . என்பதும் முஹம்மதுவை நபி என்று ஒப்புக் கொண்டால்தான் என்றால்தான் சொர்க்கத்தின் கதவு திறக்கும் என்பதுதான் முட்டாள்தனமானது.

திருமந்திரத்தை மேற்கோள் காட்டியதற்கு நன்றி

Dr.Anburaj said...

உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
அருவமாய், உணர்ச்சியிலும் படாத பெருமான் தமக்கு உருவமாய், காட்சியிலும் தோற்றமளித்தான் என்பார், ‘உரு நாம் அறியவோர் அந்தணனாய்’ என்றார். தனக்கென வரையறைப்பட்ட வடிவமும், அதற்குரிய பெயரும், தொழிலும் இலானாதலின், இறைவனை, ‘ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லான்’ என்றார். பெயர், வடிவம், தொழில் என்பன ‘நாம ரூபக் கிரியைகள்’ எனப்படும். அவற்றுள், நாமத்தையும் ரூபத்தையும் எடுத்துக் கூறினமையால். ‘ஒன்று’ என்றது தொழிலைக் குறிப்பதாயிற்று. ‘உருவொடு தொழில் பெயர் ஒன்றும் இன்றியே - பரவிய நீ’ என்பது கந்தபுராணம். இனி, அருள் காரணமாகப் பலவகைத் திருமேனிகளையும், பெயர்களையும், தொழில்களையும் இறைவன் தாங்கி நிற்றலின், ‘ஆயிரம் திருநாமம் பாடி’ எனக் கூறினார். ‘பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மான்’ என்றார் திருநாவுக்கரசரும். ஆயிரம் என்பது எண்ணற்ற பொருளில் வந்தது.

‘கொட்டாமோ’ என்பதை, ‘கொட்டுவோம்’ என்பது வகர இடைநிலை தொகப்பெற்று நின்றதாகவும், இரண்டு எதிர்மறை ஓர் உடன்பாட்டினை உணர்த்தியதாகவும் உரைப்பர். இது, பின்வருகின்ற ‘பூவல்லி கொய்யாமோ’ முதலியவற்றிற்கும் பொருந்தும்.

இதனால், இறைவனது திருநாமத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.