Followers

Wednesday, June 23, 2021

'அந்தோ பரிதாபம்'!

 

'அந்தோ பரிதாபம்'!

 



 

ஒருமுறை ஈரோட்டில், 'விஜயராகவாச்சாரியார்' என்ற வழக்கறிஞரைச் சந்திக்க பெரியாரின் தந்தை செல்கிறார். அப்போது 8 வயது சிறுவனாக இருந்த பெரியாரும் உடன் செல்கிறார். அங்கே "வழக்கு ஜெயிச்சிடலாங்களா?" என்று பெரியாரின் தந்தை மீண்டும் மீண்டும் மிகவும் பணிந்து கேட்கிறார்.

 

மிகப்பெரிய செல்வந்தரும் பல திருக்கோயில்களின் தர்மகர்த்தாவுமான தன் தந்தையார், ஒரு வழக்கறிஞரிடம் இவ்வளவு கூனிக்குறுகுவதை, சிறுவனான பெரியார் வியந்து பார்க்கிறார். மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்த பெரியாரின் தந்தையாரிடம், "என்னை என்ன கவுண்டன்னு நெனச்சியா?" என்கிறார் அந்த வழக்கறிஞர். அதாவது அப்போது கவுண்டன் என்றால் படிப்பறிவில்லாதவன், முட்டாள் என்ற அர்த்தத்தில் கூறுகிறார்.

 

1960களில், அந்த கொங்கு சமூகத்தைச் சேர்ந்த Justice KS Palanichamy என்பவர் சமூகநீதியால் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கிறார்.

 

அதற்கான பாராட்டுவிழாவில் பெரியார் அந்தச் சம்பவத்தைக் கூறி, "இப்போ சொல்லுவானா கவுண்டன்னு... My Lord My Lordனு கூப்பிடுவான் .." என்கிறார்.

 

பார்ப்பனரால் இப்படியான இழிநிலைகளில் வைக்கப்பட்டிருந்த இடைநிலைச் சமூகத்தினர், சமூகநீதியாலே சுயமரியாதை பெற்று வாழ்வதையும், தற்போது மத்திய அரசால் மீண்டும் தங்கள் இடஒதுக்கீட்டு உரிமைகள் களவாடப் படுவதையும் உணராமல், 'ஆண்ட பரம்பரை' 'வீர ஷத்ரியர்' என்று டிக்டாக் செய்துகொண்டிருப்பதும், 'கவுண்டச்சி' என்று படமெடுத்து முறுக்கிக் கொண்டிருப்பதும் 'அந்தோ பரிதாபம்'!

4 comments:

Dr.Anburaj said...

அனைத்து சமூகத்தற்குமான சமூக நீதியை காக்க பிறாமணா்கள் மிகப் பெரிய தொண்டுகள் செய்துள்ளாா்கள்.சிறு தவறுகளை பெரிது படுத்தி மகத்தான் அந்த சமூகத்தை மலினப்படுத்துவது பெரும் பாவம்.

Dr.Anburaj said...

அகத்தைத் தேடி 58: முட்டைக்குள் மேவும் சிறுபட்சிமகான் மஹானந்தபாபா முஹம்மது அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் நாயகம் அவர்கள் (1891 – 1959) இஸ்லாமிய சாரத்திலிருந்து மாறாமல், ஒருமையின் அனுபவத்தை, மிக அழகான சந்தத்துடன் மிக எளிமையான பாடல்களாக உருவாக்கி அளித்தவர்.

கீழக்கரையில் பெரும்புகழ் பெற்ற குடும்பத்தில் அபூபக்கர் சித்திக் (ரலி) வம்சாவளி முகம்மது இப்ராஹீம்-ஷெய்கு நாச்சியார் தம்பதியருக்கு நான்காவது மகவாகப் பிறந்தார். அவர் வயிற்றிலிருந்தபோது ஷெய்கு நாச்சியார் ஆகாயத்தில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பு தன்னை நோக்கி வரக்கண்டார். ஆகவே அப்துல் காதிர் என்றே பொருத்தமான பெயரை குழந்தைக்குச் சூட்டினர். அப்துல் காதிர் என்றால் “எல்லாம் வல்ல ஆற்றலுடையோனின் தொண்டன்” என்று பொருள். “நான் பகிரங்கத்தில் அட்சர சொரூபம், அந்தரங்கத்தில் அதன் அர்த்தம்” என்பது போன்ற வாக்கியங்களும் அசரீரியாக ஷெய்கு நாச்சியாருக்குக் கேட்பதுண்டு.நானே நீ, நீயே நான்

அப்துல் காதிர் சிறு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது நானே நீ, நீயே நான் என்று அடிக்கடி கூறுவார். குழந்தைகள் சிரிப்பார்கள். அந்த வழியே சென்ற மகான், “இக்குழந்தையும் நானும் ஒருவரே; உலகிற்கு நன்மை புரியப் பிறந்துள்ள அவதாரமே இவன்” என்றார். அம்மகானின் பெயர் முஹயத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி என்பதாகும். மஹானந்த பாபா, பின்னாளில் தமது எல்லா பாடல்களின் ஈற்றடியிலும், ஜெய்லானியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

முதுகுளத்தூரில் கல்வத்து நாயகம் என்ற ஞானியார் முப்பது ஆண்டுக்காலம் தனியறையில் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்திருந்தார். ஒருநாள், சமாதி நிலையிலி ருந்து விழித்த கல்வத்து நாயகம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் படிக்கட்டில் வீற்றிருந்தார். அவரைக் காண அலைகடல் எனக் கூட்டம் திரண்டது. அக்கூட்டத்தில் மகானந்த பாபாவும் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான்.

கல்வத்து நாயகம், மகானந்த பாபாவை நோக்கி கைகாட்டி அழைத்து தொழுகை நடத்துமாறு பணித்ததைப் பார்த்து ஊரே அதிசயித்தது. தொழுகை முடிந்ததும் கல்வத்து நாயகம், மகானந்த பாபாவை கட்டித் தழுவி முத்தமிட்டார். இதன் மூலம் மஹானந்த பாபா ஒரு ஆத்ம சொரூபி என ஊர்மக்கள் உணர்ந்துகொண்டனர்.......2

Dr.Anburaj said...

பாடல்களாகப் பொங்கிய பக்தி

மகானந்த பாபாவின் உள்ளத்தினின்றும் வெள்ளம்போல் ஞான உபதேசங்கள் இசை நயத்துடன் பொங்கி எழலாயின. ஒலியுல்லா அவர்களின் உள் ஒலியே அவரது அருட்பாடல்கள்.

“வித்துக்குள் மரம் கொப்பு வேருமானேன்-அந்த

வித்தைக் கொடுக்கும் மரம் போலுமானேன்”.

வித்து மரமாவது போல ஆத்மாவிலிருந்து கிளைக்கிறது உலகம் என்பதை புரியவைக்கும் உவமை.

கூட்டிலிருந்து கிளி கோபுரத்தின் மேல் உலவி

நாட்டில் பறப்பது போல் நானே நிரந்தரனே-

ஆத்ம சக்தி சைதன்ய வேகம் எடுத்து உலகெல்லாம் பரவி எல்லாம் தானே என்று உணர்வதை இவ்வரிகள் சுட்டுகின்றன. ஜகத்து மகத்து வினா விடைப் பாடலின் வரியில் ஒரு வெளிச்சத் துகள் இது.

ஆன உடலுயுர் ஆங்கொன்றி நிற்பது

ஏனிது விந்தையன்றோ - மகத்தாய்

ஏனிது விந்தையன்றோ-

விந்தையோர் முட்டைக்குள் மேவும் சிறுபட்சி

வந்ததைப் போன்றிடுமே.

திருவள்ளுவரின் குறள் ஒன்றோடு ஒத்திருப்பது இது.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்பொடு உயிராடு நட்பு.

உடலுக்கும் உயிருக்குமான நட்பு முட்டைக்குள் தனித்திருக்கும் பறவை போன் றது. பருவம் வந்ததும் பறவை பறந்துவிடும்.கொட்டாமல் குளவி ஆக்கும்

‘குளவியோர் புழுவினைக் கூட்டினிற் கொடு வந்து கொட்டாமற் குளவியாக்கும் கொள்கையது போலிந்தக் குவலயம் அனைத்துமே கூடியே என்னுள் நோக்கும்’ குளவியின் ரீங்காரம் ஒலியுல்லா நாயகத்தின் உள்ளத்தில் ஆன்மிக ரீங்காரத்தை எழுப்புகிறது. மற்றொரு பாட்டில்

பணியாரம் தித்திக்கும் பாங்கினிய வெல்லமாம்

பாகிலது சேர்ந்ததாலே - பாராதியண்டமும்.

பார்க்கில் சுவை மதுரமாம் பரனோடு சேர்ந்ததாலே

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதி பாடவில்லையா? பராசக்தி பாரதியின் உள்ளத்தில் குடிகொண்டாள். இந்த உலகம் கோடி கோடி இன்பங்கள் கொட்டிக் கிடக்கும் இடமாகிவிட்டது. மகானந்த கீதம் பாடல்கள் எல்லாமே இனிய, எளிய உபதேசக் களஞ்சியமாக இருக்கின்றன.

ஆன்மிகப் பயணங்கள்

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களோடு கலந்துறவாடி தனது பாடல்களை இசையோடு பாடுவது நாயகம் அவர்களின் வழக்கம். இலங்கை, மலேயா போன்ற தேசங்களிலும் இவருக்கு அன்பர் கூட்டம் பெருகியதால் அங்கும் சென்றார்.

“ஞானம் என்பது வெறும் வார்த்தை. அநுபவமே அதன் அர்த்தம்.”

“சாந்தம் என்பது கண்மூடி இருத்தல் அதாவது ஒன்றுமில்லாதிருத்தல். சாதனம் என்பது பலவற்றையும் ஒன்றாய்க் காணுதல். அதாவது கண் விழித்திருத்தல்”.

“சத்தியம் என்பது கண்மூடல், கண் விழித்தல் இவை இரண்டுமே மறைந்து தோன்றுதல். அதாவது தன்னில் எல்லாப் பொருள்களையும் தன்னை எல்லாப் பொருள்களிலும் காணுதல்”

இவை அவரது அருள் மொழிகளில் ஒரு சில.

அவரது வாழ்வின் நிறைவுப் பகுதி மதுரையில் கழிந்தது. 18 ஆண்டுக் காலம் மதுரையில் தவ நிலையில் இருந்து 1959-ல் இறைவனோடு ஐக்கியமானார். அவரது திருமேனி, கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டது.

‘மஹானந்த கீதம்’ என்ற பெயரில் பாபாவின் பாடல்கள் பல்வேறு இடங்களில் பாடப்பட்டு வந்தன. அப்பாடல்களைத் திரட்டி முழு நூலாக்கி முதற்பதிப்பு 1958-ல் வந்திருக்கிறது. அதற்கு முன்னுரை வழங்கியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். “மஹானந்த பாபாவின் மஹானந்த கீதம் வேதாந்த வீணையின் அறிவு முழக்கம்! ஆனந்தக் கூத்து!” என்று அவரது முன்னுரையில் புகழ்ந்திருக்கிறார்.கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com நன்றி இந்து தமிழ் ஆனந்த ஜோதி நாள்.24.6.2021

Dr.Anburaj said...

முதுகுளத்தூரில் கல்வத்து நாயகம் என்ற ஞானியார் முப்பது ஆண்டுக்காலம் தனியறையில் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்திருந்தார்.

...ஆன இசுலாம் ஏற்கனவே இந்து யோகசக்தியின் வீச்சுக்குள் வந்து விட்டது.
நிா்விகல்ப சாமாதியில் . ..
நிா்விகல்ப சமாதி என்பது குரானில் உள்ளதா?
முஹம்மதின் சுன்னாவில் உள்ளதா?

சாட்சாத் ஹிந்துமதம்தான்.