Followers

Saturday, October 24, 2026

கஃபா என்ற கட்டிடத்தின் உள்ளே என்ன இருக்கிறது?


 



கஃபா என்ற கட்டிடத்தின் உள்ளே என்ன இருக்கிறது?

 

ஒன்றும் இல்லை. அது வெறும் கட்டடிடம் தான். உள்ளே சிலையோ மற்ற வணக்கத்திற்குரிய வேறு பொருட்களோ இல்லை.

 

சவுதி மன்னர், மற்றும் அரச விருந்தினர்களாக வரும் வெளி நாட்டவர் என்று பல தரப்பட்ட மக்களும் உள்ளே சென்று தூய்மைப் பணியில் ஈடுபடுவர்.

 

நமது கேரளாவைச் சேர்ந்த லூலூ அதிபர் மற்றும் ஒரு ஆப்ரிக்கர் உள்ளே செல்வதை பார்க்கிறோம். இன்ன நாடு, இன்ன மொழி, இன்ன சாதி என்று எந்த கட்டுப் பாடும் இல்லை. முஸ்லிமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

 

ஆனால் உள்ளே செல்வதற்கு முன் அங்குள்ள செக்யுரிட்டிகளிடம் முதலில் அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். கூட்டம் நெருக்கித் தள்ளினால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவேதான் இந்த கட்டுப்பாடு.

 

இன்ன நாட்டவர், இந்த சாதிதான் உள்ளே வர வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அப்படி சொன்னால் அது இஸ்லாமிய நடைமுறையும் அல்ல.

 

உலகத்தின் மையம். மற்றும் அந்த செவ்வக வடிவ கட்டிடத்தை முதன் முதலில் இறைத் தூதர் ஆதம் நிர்மாணிக்கிறார். அதன் பிறகு சிதிலமடைகிறது. பிறகு நபி இப்றாஹீமும் அவரது மகனும் சேர்ந்து மேலும் விரிவுபடுத்துகிறார்கள். இடையில் அங்கு சிலை வணக்கம் வந்து விடுகிறது. 365 சிலைகளை வைத்து வணங்கி வந்தனர். நபிகள் நாயகம் அந்த சிலைகளை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கோட்பாட்டை இறைவனின் ஆணைப்படி கொண்டு வருகிறார். அது இன்று வரை மேலும் உலக முடிவு நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

 

https://www.facebook.com/reel/2254750638638512

No comments: