Followers

Sunday, November 22, 2026

முஸ்லிம்கள் புதிதாக கட்டும் பள்ளிவாசலுக்கு தங்கள் உடல் உழைப்பை தரும் பீஹார் இந்துக்கள்.




 முஸ்லிம்கள் புதிதாக கட்டும் பள்ளிவாசலுக்கு தங்கள் உடல் உழைப்பை தரும் பீஹார் இந்துக்கள்.


பீஹார் மாநிலம் - பேஹிஸிராய் மாவட்டம் - ராஜாபூர்


இந்த கிராமத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழ்கின்றனர். முஸ்லிம்கள் தங்களுக்காக ஒரு பள்ளிவாசல் கட்ட தீர்மானித்தனர். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இந்த கிராமத்தினர். எனவே பொருளாதார சிக்கல் எழுந்தது. உடனே அந்த கிராமத்து இந்துக்கள் 'நாங்கள் இருக்கிறோம் வேலையை ஆரம்பியுங்கள்' என்று களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.


சிறுவர், சிறுமியர், பெண்கள், வயதான ஆண்கள், கார்பெண்டர், மேசன், ப்ளம்பர் என்று அனைவரும் சம்பளம் பெறாமல் பள்ளிவாசல் கட்டுமானத்தில் பங்கு பெற்றனர். 


முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை குறி வைத்து இடித்து தள்ளும் யோகி ஆதித்யநாத், மோடி, அமித்ஷா போன்றோர் இந்த கிராமத்து இந்துக்களின் செயலைப் பார்த்து வெட்கித் தலை குனியட்டும்.


இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.  






No comments: