

ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நாடு சியோரா லினோஸ். லைபீரியாவுக்கும் கென்யாவுக்கும் இடையில் இந்த நாடு அமைந்துள்ளது. இங்கு 'லஸ்ஸா' என்ற பெயருடைய தொற்று நோய் மிக வேகமாக பரவியது. கிட்டத் தட்ட 10000 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர். இதில் 2000 பேர் வரை மரணத்தை தழுவினர். அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்பட்டாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.
'கெனோமா அரசு மருத்துவ மனை' யில் லஸ்ஸா நோயைக் கட்டுப்படுத்த மருத்துவ குழு ஒன்று அரசால் நியமிக்கப்பட்டது. அந்த குழுவுக்கு டாக்டர் ஷேக் உமர் கான் தலைமை மருத்துவராக பணியமர்த்தப்பட்டார். இரவும் பகலும் அயராது உழைத்து பல உயிர்களை மருத்துவ குழு காப்பாற்றியது. ஷேக் உமர் கான் 100 நோயாளிகளை இறப்பிலிருந்து காப்பாற்றினார்.
மற்ற எல்லோரையும் விட ஆர்வ மிகுதியால் நோயாளிகளோடு நெருங்கி பழகியதால் நோய் இவரையும் தாக்கியது. நோயின் தாக்கம் கடுமையாகவே சிகிச்சை பலனின்றி ஷேக் உமர் கான் இறப்பை எய்தினார். இவர் இறந்தது ஜூலை 29 2014. நூற்றுக்கு மேற்பட்ட உயிர்களை காத்து தனது உயிரை இழந்துள்ளார் உமர் கான்.
'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு உண்மையான இலக்கணத்தை டாக்டர் ஷேக் உமர் கானின் மரணம் நமக்கு உணர்த்தும். இன்று 'ஜிஹாத்' என்ற பெயரில் அப்பாவிகளின் கழுத்தை அறுத்து அதனை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய எதிரிகள் உமர் கானின் மரணத்தின் மூலம் 'ஜிஹாத்' என்ற சொல்லின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளட்டும்.
'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32
தகவல் உதவி
பிபிசி
30-07-2014
