Followers

Showing posts with label ரியாத். Show all posts
Showing posts with label ரியாத். Show all posts

Tuesday, April 07, 2015

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

போன வருடம் கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு செல்ல வேண்டி இருந்தது..... அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று விழித்துக் கொண்டு ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?' ('ஆப் கஹாங் ரேனேவாலா') எனக்குத் தெரிந்த உருதுவில் கேட்டேன் :-)

'ஆந்திரா... கர்நூல்' என்று பதிலளித்தார். அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து ரியாத் பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃப்ரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை கணிணியில் பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

Monday, March 02, 2015

டாக்டர் ஜாகிர் நாயக் 'மன்னர் ஃபைஷல்' விருதைப் பெற்றுக்கொண்டார்!



பல கல்வி நிறுவனங்களை நடத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள உலகமெங்கும் பயணித்து வரும் டாக்டர் ஜாகிர் நாயக்கை சவுதி அரேபியா கவுரவித்து அவருக்கு மன்னர் ஃபைஸல் விருதை வழங்கியது. 37 வது விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக் கிழமை விமரிசையாக நடந்தது. மன்னர் சல்மான் அவர்கள் இந்த விருதினை அனைவருக்கும் வழங்கினார்.

24 கேரட் தங்க மெடலும் 2 லட்சம் ரியாலும் பண முடிப்பாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய அழைப்புப் பணியை தொய்வின்றி செய்து வருவதனை கவுரவிக்கும் முகமாக இந்த விருதினை சவுதி அரசு அளித்துள்ளது. ஜாகிர் நாயக் பிறந்த சொந்த நாடு கவனிக்கா விட்டாலும் இவரின் அருமையை உணர்ந்த சவுதி அரசு கண்ணியப்படுத்தியுள்ளது. சவுதியின் இந்த செயலை நாம் பாராட்டுவோம்.

இறந்து போன 'மண்ணுருண்டை மாளவியா' வை எல்லாம் தேடி பிடித்து விருது வழங்கும் மோடி அரசு வருங்காலத்தில் ஜாகிர் நாயக் போன்ற வாழும் சாதனையாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முயற்சிக்குமா? அந்த அளவு பரந்த மனப்பான்மையினை எல்லாம் இந்துத்வாவிடம் நாம் எதிர் பார்க கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான் :-)

டாக்டர் ஜாகிர் நாயக்கின் மாற்று மதத்தவருடனான கலந்துரையாடலை ரியாத்தில் இரண்டு முறை நேரிலேயே கேட்டுள்ளேன். எந்த புத்தகங்களின் உதவி இல்லாமல் இந்து இஸ்லாம் கிறித்தவ வேதங்களின் வசன எண் முதற்கொண்டு ஞாபகத்தில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துபவர். இறைவன் இவருக்கு உடல் நலத்தை கொடுத்து மேலும் பல்லாண்டு காலம் இறைப் பணியை தொடர்ந்து செய்ய நாமும் பிரார்த்திப்போம்.

This year’s award winners are Dr. Zakir Naik for Services to Islam, Dr. Abdulaziz Bin Abdulrahman Kaki for Islamic Studies, Prof. Jeffrey Ivan Gordon for Medicine, and Prof. Michael Grätzel and Prof. Omar Mwannes Yaghi, who were jointly recognized for Science.

No prize was awarded in the Arabic Language and Literature category this year.

Dr. Zakir Naik is the president of the Islamic Research Foundation in India and one of the world’s most renowned non-Arabic speaking Islamic scholars. He was awarded the KFIP for Services to Islam for a lifetime’s teaching about Islam, his work on comparative religion, and for founding the Peace Channel, the world’s comparative religion TV channel.

Winner of the Islamic Studies category is Dr. Abdulaziz Bin Abdulrahman Kaki, a consultant at Al-Madinah Al-Munawwarah Development Commission, who was recognized for his research on the cultural heritage of Madinah.

தகவல் உதவி
சவுதி கெஜட்
02-03-2015


Saturday, January 31, 2015

ரியாத்தில் அழகிய சொற்பொழிவு!

ரியாத்தில் அழகிய சொற்பொழிவு!





நேற்று ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் கிளையில் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் மரணம் என்ற தலைப்பில் மிக அழகிய உரையை நிகழ்த்தினார்கள். மதினாவிலிருந்து அவர் பேச வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அந்த அழகிய பேச்சை நாங்கள் கேட்டோம். அறிவியல் முன்னேற்றத்தை இது போன்ற ஆக்க பூர்வ காரியங்களுக்கு பயன் படுத்துவோம்.

பொழுது போக்கு சாதனங்கள் நிறைந்து விட்ட இந்த உலகில் இறைவனின் மார்க்கத்தைப் பற்றி கேட்க தங்களின் நேரத்தை செலவழித்து வந்தமர்ந்து இறைவனின் பொருத்தத்தை பெற்றுக் கொள்ளும் சகோதரர்களைப் போன்று நாமும் நமது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க உறுதிபூணுவோமாக!

Thursday, August 28, 2014

மாற்று மதத்தவர்களுக்கான நிகழ்ச்சி - ரியாத்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால்.... எதிர் வரும் 29/8/2014 அன்று இரவு 7 மணிக்கு மேல் பத்தாஹ் ரமாத் ஹோட்டலில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்குத் தெரிந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களை உடன் அழைத்து, தாங்களும் வந்து கலந்து சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.