Followers

Showing posts with label ஏர் இந்தியா. Show all posts
Showing posts with label ஏர் இந்தியா. Show all posts

Wednesday, March 18, 2015

மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்



மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்

இஸ்லாம் 'ஜகாத்' என்ற ஒரு கடமையை இஸ்லாமியருக்கு கட்டாய கடமையாக்கியிருக்கிறது. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள நகை, விளை நிலங்கள், வாடகை வீடுகள், வாகனங்கள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு அதனை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. தொழுகையை எங்கெல்லாம் குர்ஆன் குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் ஜகாத்தையும் கொடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

நபிகள் நாயகம் காலத்தில் 'பைத்துல் மால்' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அனைத்து ஜகாத்துகளையும் வசூலிக்க ஆட்களையே சம்பளத்துக்கு நியமித்திருந்தனர். அன்றைய அரபு சமூகத்தின் வறுமையை இந்த திட்டமானது முற்றிலும் ஒழித்துக் காட்டியது.

'பைத்துல் மால்' என்ற இந்த அமைப்பை தனி ஒரு மனிதனாக ஆரம்பித்து இன்று பல லட்சக்கணக்கான ஏழை இஸ்லாமிய மாணவ மாணவிகள் பலன் பெற காரணமாக உள்ளார் கியாஸூதீன் பாஸூ கான்! கட்டுமான துறையில் உள்ள இவர் இஸ்லாமியர்களின் ஜகாத் பணத்தை வசூலித்து கல்விப் பணிக்கு செலவிட திட்டமிட்டார். 25 வருடங்களுக்கு முன்னால் தனது சொந்தங்களிடமிருந்து ஜகாத் தொகைகளை வசூலித்தார். இது பற்றி அவர் கூறுவதாவது....

'ஜகாத் பணத்தை தனி மனிதனாக செலவிடுவதை விட அதனை பொதுவானதாக்கி அனைவரையும் பங்கு பெற வைக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் பலர் இதனை விரும்பவில்லை. சிறிது காலத்துக்கு பிறகு எனது முயற்சிக்கு பல இடங்களிலிருந்தும் ஆதரவு பெருகியது. எனது சொந்தங்கள் நீங்கலாக மற்ற ஆட்களும் பணத்தை தர முன் வந்தனர். ஒரு சிலர் தங்களின் நன்கொடைகளையும் தர ஆரம்பித்தனர். 1992 ல் ஆரம்பித்த இந்த ட்ரஸ்டுக்கு 11 லட்சங்களே மூலதனமாக இருந்தது. பிறகு சொந்தங்கள் நண்பர்கள் மூலமாக பணம் குவியத் தொடங்கியது. Hyderabat Zakat And Charitable Trust (HZCT) என்ற இந்த ட்ரஸ்ட் ஆனது சில மாதங்களிலேயே வருடத்துக்கு 12 கோடி ரூபாயை கையாளும் அமைப்பாக பரிணமித்தது. நாங்கள் ஆரம்பத்தில் பள்ளிகளை ஆலமரத்தடியிலும், பள்ளி வாசல்களின் உபயோகப்படுத்தப் படாத இடங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு நடத்த ஆரம்பித்தோம். வசதி குறைந்த நடுத்தர வர்க்கத்து குழந்தைகள் மிகவும் ஏழைகள் இதனால் கல்விச் சாலையை நெருங்க முடிந்தது.

நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிப்பது கனவாக இருந்த போது எங்கள் ட்ரஸ்ட் அவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வருட உதவித் தொகையாக 25000 ரூபாய் இந்த ட்ரஸ்ட் மூலம் விநியோகித்தோம். இதன் மூலம் 45000 மாணவர்கள் ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநில மாணவ மாணவியர் பெரும் பலனடைந்தனர். 23 வருட காலங்களில் எங்கள் ட்ரஸ்டின் மூலம் 100 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையாக ஏழை மாணவர்களுக்கு அளித்துள்ளோம்.

இது மட்டுமல்ல நல்ல ரேங்கில் வரக் கூடிய மாணவ மாணவிகளை பொருக்கி எடுத்து 'நாளைய தலைவர்கள்' என்ற திட்டத்தின் கீழ் அவர்களை சிவில் சர்வீஸ் பரீட்சைகள் எழுத இலவச பயிற்சியும் கொடுத்து வருகிறோம். வெற்றிலை பாக்கு கடை வைத்துள்ள தொழிலாளியின் மகன் ஷேக் இம்ரான், வாட்ச் கடை வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளியின் மகன் தவ்ஃபீக், விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள வண்ணூர் வள்ளி போன்ற ஏழைகளையும் பெரும் படிப்புகளின் வாசலை மிதிக்க வைத்துள்ளோம். 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே திறமையானவர்களாக பார்த்து பொருக்கி எடுத்து விடுகிறோம். மேல் படிப்புக்காக அவர்களை முதல் வருடத்திலிருந்தே தயார் படுத்துகிறோம். முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் அரசு வேலைகளில் போதிய விருப்பம் இல்லாமல் இருந்தனர். தற்போது நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. கூலி வேலை செய்து பென்ஷன் பெற்று வரும் ஒரு ஏழைத்தாய் தனது குழந்தையை கல்லூரி வரை அனுப்ப பாடுபடுகிறாள். இது வரவேற்கத்தக்க மாற்றம். ஒரு மாணவனுக்கு கல்லூரி படிப்பு இருந்து விட்டால் அவன் சமூகத்தில் எங்கும் சென்று தனது முத்திரையை பதித்து விட முடியும்.

பலரும் என்னிடம் கேட்கின்றனர் 'வருமானத்தை அதிகம் விரும்பாத இந்த துறையை கட்டிக் கொண்டு எத்தனை காலம் ஓட்டுவீர்கள்' என்று. ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து இதை விட அதிக லாபம் எங்களால் ஈட்ட முடியும். ஆனால் ஏழைகளை தூக்கி விடும் இந்த கல்விப் பணியில் எங்களுக்கு மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது. லாபம் இங்கு கிடைக்கா விட்டாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இதை விட அதிகமான வெகுமதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உண்டு' என்று முடித்தார்.

இவரை போன்ற செல்வந்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து விட்டால் அந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகமாக மாறியிருக்கும் என்று நினைத்துப் பார்தேன். நம் தமிழக கிராமங்களும் இது போன்ற கல்விப் புரட்சியை நோக்கி பயனிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோமாக!

இஸ்லாமிய கிராமங்களில் ஊருக்கு இரண்டு அரபி மதரஸாக்கள் உலக கல்வியை புறந்தள்ளி அந்த மாணவர்களை 10க்கும் 20க்கும் ஃபாத்திஹா ஓதும் மட முல்லாக்களாக மாற்றும் போக்கை ஒதுக்கி மார்க்க கல்வியோடு இணைந்த உலகக் கல்வியை கொடுக்க முனைவோமாக! சிஎம்என் சலீம், பிஜே போன்றவர்களின் ஆலோசனையில் அமைந்த கல்வித் திட்டத்தை நமது மாணவ மாணவிகளுக்கு கொடுக்க முயல்வோமாக!

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'
-(குர்ஆன் - 2:219)




Thursday, June 12, 2014

தமிழில் தொழாதவர்க்கு நரகமா? - ஐயாரப்பன்!

ஹானஸ்ட் மேன்!

//“அல்லாவே மிகபெரியவன் தொழுகை நோக்கி விரைந்து வாருங்கள். அல்லாவை தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. முகமது (ஸல்) அவர்கள் அல்லாவின் தூதர் என்று சான்று பகர்கிறேன்” என்று சொன்னால் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு புரியாதோ? முஸ்லிம்கள் தமிழ் ஆர்வலர்கள் இல்லையா? அல்லது நீங்கள் தமிழர்களே இல்லையா?//

இஸ்லாமிய மார்க்கமானது உலகலாவிய மதம். ஒரு அமெரிக்கனோ, ஒரு ஆப்ரிக்கனோ இஸ்லாத்தை ஏற்றவர்கள் தமிழகத்துக்கு வந்தால் அங்கிருந்து ஒலி பெருக்கியில் 'அல்லாஹ் அக்பர்' என்ற சப்தம் வந்தால் உடனே அந்த பள்ளியை நோக்கி யாரும் சொல்லாமலேயே தொழுகைக்கு வந்து விடுவர். எந்த மொழியை பேசுபவராக இருந்தாலும் அவர் உலகில் நடக்கும் இஸ்லாமிய தொழுகைகளில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தனது வணக்கத்தை செய்து விட முடியும். இந்த உலக ஒற்றுமைக்காகத்தான் பள்ளிகளில் அரபி அழைப்பும் தொழுகையும் நடத்தப்படுகிறது. அரபி மொழி தேவ மொழி என்று குர்ஆனும் சொல்லவில்லை. உலக மூல மொழிகள் அனைத்தையும் படைத்தவன் இறைவனே என்கிறது குர்ஆன். எனவே மொழிகளுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிப்பதும் இஸ்லாமிய அடிப்படையில் தவறு.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதியின் தலைநகர் ரியாத்தில் மிக பிரமாண்டமான பள்ளிவாசலில் தலைவராக நின்று தொழுகை நடத்தியுள்ளேன். என்னை பின் பற்றி ஆப்ரிக்கனும், ஐரோப்பியனும், பாகிஸ்தான், பங்களாதேஷ், என்று உலக நாடுகள் அனைத்திலுமிருந்தும் வந்தவர்கள் எனது கட்டளைக்கு பணிந்து நான் குனிந்தால் அவர்களும் குனிகிறார்கள்: எனது சிரத்தை இறைவனுக்காக தரையில் வைத்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தங்கள் தலைகளை வைக்கிறார்கள். யாரும் யாருக்கும் இங்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஒரு தமிழனைப் பின் பற்றி ஒரு ஐரோப்பியன் தொழுவதா? என்று அவர்கள் நினைக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் சம அளவில் பாவிப்பதால்தான் இது போன்ற அழகிய சம்பவங்கள் நடக்கின்றது.

------------------------------------------------------------

திரு ஐயாரப்பன்!

//நம் தாய்மொழி தமிழில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது என்பது சோற்றிலே உப்பிட்டு உண்ணுபவர்கள் மட்டுமே செய்வார்கள்.//

அப்படி பார்த்தால் தமிழகத்தில் 90 சதவீதமான நபர்கள் உப்பு போடாமல்தான் சாப்பிட வேண்டி வரும். :-) ஏனெனில் குறிப்பிட்ட சில கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் சமஸ்கிரதம்தான் ஆட்சி செய்கிறது. சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட இன்று வரை அனுமதி மறுக்கப்படுவதை நீங்களும் படித்திருப்பீர்கள். அங்கு இதே வாதத்தை உங்களால் ஏன் வைக்க முடியவில்லை? இந்து மதமானது இந்தியர்கள் மட்டுமே பின்பற்றக் கூடிய ஒரு மதம். எனவே தமிழில் பாடுவதால் எந்த சிக்கலும் வரப் போவதில்லை. இருந்தாலும் உங்களால் அந்த முயற்சியை செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம்.

//வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்துவிட்டு, இங்கேயே தங்கி விட்டவர்கள். கடவுளை வணங்க தன் தாய் மொழியை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு இறைவன் அருள் நிச்சயம் கிடைக்காது. ஆபிரகாமியர்கள் பாணியில் சொல்வதென்றால், இத்தகைய வஞ்சகர்களுக்கு மீளா முழு நரகம் மட்டுமே கிடைக்கும்..//

இங்குள்ள முஸ்லிம்களை வெளி நாட்டு இறக்குமதி என்று சொன்னால் உங்கள் அருகில் இருக்கும் இந்து நண்பர்களே முதலில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு என்று தான் சொல்வார்கள்.

அடுத்து கூட்டு இறை வழிபாடு முடிந்து பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. அதாவது தனது தேவைகளை இறைவனிடம் இரைந்து கேட்பது. இந்த இடத்தில் அவரவர் சொந்த மொழியிலேயேதான் கேட்பார்கள். தொழுகையின் கடைசி இருப்பில் அமர்ந்திருக்கும் போது இறைவனிடம் தனது தேவைகளை தனது தாய் மொழியில்தான் கேட்கின்றனர். ஏனெனில் இறைவனுக்கு தமிழ் மொழியும் தெரியும்: உலக மொழிகள் அனைத்தும் தெரியும்.

மேலும் மெக்காவில் கஃபாவை வலம் வரும் போது உலக மக்கள் தங்கள் தாய்மொழியில் தங்களின் தேவைகளை இறைவனிடம் மிக சத்தமாக கோரஸாக சொல்லிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம். அரபியில் பிரார்த்தனை செய்து கொண்டுதான் வலம் வர வேண்டும் என்று எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே நீங்கள் சொல்வது போல் எவருக்கும் மீளா நரகம் கிடைக்க வாய்ப்பே இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் தருவது நம்மை படைத்த இறைவன் கையில்தான் உள்ளது. நம் கையில் இல்லை நண்பரே!

தாய் மொழிப் பற்று என்பதற்கும், தாய்மொழி வெறி என்பதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. அதனை விளங்காதனால் பல குழப்பங்களை நீங்கள் சந்திக்கிறீர்கள். கூடிய விரைவிலேயே தெளிவடைவீர்கள்!





Saturday, January 25, 2014

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.

இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(


Sunday, October 21, 2012

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!



இந்திய பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில்(கூத்தாடிகளில்) ஒருவரான அமீர்கான் இந்த வருடம் தனது ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக மெக்கா நோக்கி தனது தாயாரோடு(ஜீனத் ஹூசைன்) புறப்பட்டார். ஹஜ் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை தனது தாய்க்கு இருந்ததாகவும் அவருக்கு துணையாகவும் தானும் முதன் முதல் ஹஜ் செய்ய வேண்டியும் இந்த வருடம் மெக்கா செல்வதாக பத்திரிக்கையாளர்களிடம் அமீர் கான் கூறினார்.






மும்பையில் தனது தாயாரோடு.....

ஹஜ்ஜூக்கு செல்வோர் கட்டாயம் அணிய வேண்டிய 'இஹ்ராம்' என்ற வெள்ளைத் துணியை உடுத்திக் கொண்டு மும்பை ஏர்போர்ட் வந்தபோது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஹஜ் முடித்தவுடன் இதற்கு முன் செய்த பாவங்கள் (இணை வைப்பு மற்றும் மனிதர்களுக்கு செய்த துரோகங்கள் நீங்கலாக) அனைத்தும் மன்னிக்கப்பட்டு புது மனிதனாகிறான்.

எனவே ஹஜ்ஜூக்கு பிறகு இனி படங்களில் நடித்தால் ஆபாசங்களை தவிர்த்து நாட்டு மக்களுக்கு நன்மை தரும் விதமாக கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 'சத்யமேவ ஜெயதே' போன்ற அருமையான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தலாம். ஏழை பணக்காரன், வெள்ளையன் கருப்பன், ஐரோப்பியன் ஆப்ரிக்கன் என்ற பேதமையை மறந்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பரந்த மனப்பானமைக்கு வர வழைக்கும் இந்த அழகிய வழி முறை கண்டிப்பாக அமீர்கானை மாற்றும்.



ஜெத்தா ஏர்போர்டில் அமீர்கான்.

நமது இணைய பதிவர்களில் பலரும் இந்த வருடம் ஹஜ் பயணத்துக்காக உலகமெங்குமிருந்தும் வந்துள்ளார்கள். பலரிடம் நானும் அலை பேசியில் பேசி விசாரித்தேன். சகோதர சகோதரிகள் அனைவரின் புனிதப் பயணமும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற நாமும் பிரார்த்திப்போம்.



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அஃப்ரிதியுடன் அமீர்கான் மெக்காவில்

'அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் ஏக இறைவனை மறுத்தால் இறைவன் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்'
-குர்ஆன் 3:97


--------------------------------------------------------


சௌதி அரேபியாவுக்கு ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படும் 170க்கும் மேற்பட்ட நைஜீரியப் பெண்களை சௌதி அரேபியா நாட்டை விட்டு வெளியேற்றியதை அடுத்து, சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் நைஜீரியா இடை நிறுத்தியிருக்கிறது.

நைஜீரிய ஹஜ் பயணிகள் இவ்வாறு நடத்தப்படுவதைப் பற்றி புகார் செய்ய சௌதி அரேபியாவுக்கு நைஜீரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் ஒரு குழு செல்லவிருக்கிறது.

தாங்கள் தடுத்துவைக்கப்பட்டபோது, தங்களுக்கு உணவு எதுவும் தரப்படவில்லை என்றும், ஒரே ஒரு கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியப் பெண்களில் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ஹஜ் புனிதப் பயணம் முடிந்த பிறகு பல ஆப்ரிக்கர்கள் சௌதி அரேபியாவிலேயே தங்கி, அங்கு பிச்சையெடுப்பதன் மூலமும், விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.

நன்றி:பிபிசி

-----------------------------------------------------------

சென்னை விமானநிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக் குள்ளானது.இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து சவூதி அரேபியா ஜித்தாவிற்கு, செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் ஹஜ் பயணிகள் 421 பேர், சோதனை முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது இதனால் விமானம் குலுங்கியது, மேலும் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிலிருந்த ஹஜ் பயணிகள் அனைவரும் உடனே விமானத்திலிருந்து இறக்கப் பட்டு விமான நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.

இதேபோன்று பல தடவை சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதிய விபத்துகள் நடைபெற்றது குறிப்பித்தக்கது,

www.inneram.com

நல்ல நிர்வாகம் பண்றாங்கப்பா! டிராக்டர் இடித்தது இது முதல் முறை அல்லவாம். பல முறை நடந்தும் திருத்திக் கொள்வதாக இல்லை. :-).

Tuesday, May 15, 2012

ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா!

ஏர் இண்டியா பண்ணும் ரவுசு தாங்க முடியலப்பா!


இரண்டு நாட்கள் முன்பு முஜிபுர் ரஹ்மான் என்ற பெங்களூர் ஆளுக்கு ஏர்இண்டியாவில் புக் செய்து அனுப்பினேன். புக் பண்ணும் போதே 'சவுதியாவில் புக் பண்ணு பாய்! அது தான் வசதி' என்று சொன்னவரிடம் 'நம் நாட்டு ஏர் இந்தியாவை நாம் பயன் படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவது' என்று தேசப் பற்றை ஊட்டியவுடன் அவரும் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கணக்கையும் முடித்துக் கொண்டு சென்று விட்டார். ஊழியர்களுக்கு விமான டிக்கெட் எடுப்பது மற்றும் அவர்களின் கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதும் எனது வேலைகளில் ஒன்று.(ஸ்...ஸ்...ஸ் ஒரே ஆள் எத்தனை வேலையை பார்க்கிறது) :-)

மறு நாள் ஏர்போர்டிலிருந்து முஜிபுடைய போன்:

'க்யா பாய்! ஃபஸாதியேனா முஜே! அப் மே கஹா ஜாவும்? மே பைலா சவுதியா ஃபிளைட் ஆப் சே மாங்கா! ஏர்இந்தியா வாலா கொய் ரெஸ்பான்ஸ் நய்கர்ராஹே'

'என்ன பாய்! பிரச்னையிலே மாட்டி விட்டுடீங்களே! நான் அப்பவே சவுதியா பிளைட் கேட்டேன்! இப்போ ஏர் இந்தியா பிளைட் ஸ்ட்ரைக்காம். இத்தனை லக்கேஜீகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஏர் இந்தியா ஆட்கள் எந்த வித உதவியும் செய்யவில்லை".

என்று சற்று கோபத்தோடு கத்தினார். இரண்டு வருடத்துக்கு பிறகு ஊர் செல்லும் போது இது போன்ற தடங்கல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? பிறகு ஏர்லைன் ஆபிஸூக்கு போன் செய்து ரூம் கொடுத்து சாப்பாடும் கொடுத்து மறுநாள் அனுப்பி வைத்தது ஏர் இந்தியா நிர்வாகம்.

ஸ்ட்ரைக் பண்ணப் போகிறார்கள் என்று தெரிந்தும் இவர்கள் டிக்கெட்டை ஏன் இஸ்யூ பண்ண வேண்டும்? இது எத்தனை பேருக்கு பிரச்னை? முதல் நாளே டிக்கெட்டை நிர்வாகம் கேன்ஸல் செய்திருந்தால் பயணிகள் வேறு விமானத்தை நாடியிருப்பார்கள் அல்லவா? இந்த ஸ்ட்ரைக் எழவை நம் நாட்டில் வைத்துக் கொள்ளக் கூடாதா? எல்லா ஏர்லைன்ஸூகளும் தங்கள் பாஸஞ்சர்களை பிரச்னையில்லாமல் கொண்டு சேர்க்க ஏர் இந்தியா பாசஞ்சர்கள் கவலையோடு ஏர்போட்டில் அமர்ந்திருப்பது எவ்வளவு இழுக்கு? டிக்கெட் ஓகே செய்தவர்களை நாட்டில் இறக்கி விட்டு அதன் பிறகு உங்கள் ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்ளக் கூடாதா?

ஏற்கெனவே பல கோடிகள் நஷ்டத்தில் இயங்குகிறது ஏர் இந்தியா நிறுவனம். இதில் இவர்களுக்கு இன்னும் வசதிகளை செய்து கொடுக்க நிர்வாகத்திடம் பணம் ஏது? மற்ற அரசு ஊழியர்களோடு ஒப்பிடும் போது சிறந்த சம்பளத்தையே பெறுகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த நிறுவனத்துக்கு இந்த ஸ்ட்ரைக்கால் இன்னும் பல கோடி நட்டம். இதை எல்லாம் நானோ நீங்களோதான் வரியாக அரசுக்குக் கட்டித் தொலைக்க வேண்டும். சாமான்யன் வரிப் பணம் எந்த அளவு சீரழிக்கப்படுகிறது என்பதற்கு இது வெல்லாம் ஒரு உதாரணம்.






வேலைக்கு வராத பைலட்டுகள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்ற பொய்யான காரணத்தை வேறு நிர்வாகத்துக்கு சொல்லியிருக்கின்றனர். எந்த பைலட்டுமே வீட்டில் இல்லை. எந்த டாக்டரையும் சென்று சந்திக்கவும் இல்லை. இவர்கள் மேல் இப்போது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்ட்ரைக்கால் நம் நாட்டு தொழிலாளர்களின் எத்தனை விசா கேன்சல் ஆனதோ தெரியவில்லை. பல வருடங்கள் வேலை செய்தவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டுமே என்று சில கம்பெனிகள் வந்த வரை லாபம் என்று திரும்ப விசாவையும் அனுப்ப மாட்டார்கள். இந்த நஷ்டத்தை எல்லாம யார் ஈடு கட்டுவது?.

இங்கு சவுதியா பிளைட் இதுவரை ஒரு நாள் கூட ஸ்ட்ரைக் ஆனதாகவோ லேட்டானதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. ஸ்ட்ரைக் செய்வதும் இங்கு தடை செய்யப்பட்டது. சம்பளப் பிரச்னை என்று எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்கும் செல்லலாம். நிர்வாகத்தோடும் பேசலாம். அனைத்தும் வேலை நடந்து கொண்டிருக்கும் போதே செயல்பாட்டுக்கு வரும். இதை ஏன் நம் அரசாங்கம் பின் பற்றக் கூடாது.

இன்னொரு முறையும் உள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தை தொடங்கும் போதே ஊழியர்களையும் 10 சதவீதம் அல்லது 20 சதவீதம லாபத்தில் பங்கு என்று அவர்களையும் பங்குதாரர்களாக்கி விட்டால் பிரச்னை முடிந்தது. லாபம் நஷ்டம் இந்த இரண்டிலும் நிறுவனமும் ஊழியர்களும் பங்கு கொள்வதால் தேவையற்ற ஸ்ட்ரைக்குகள் தொழிலாளர்களாலேயே முடக்கப்படும். சம்பளத்தையும் தொழிலாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி கேட்டுவிட முடியாது. ஏனெனில் லாபத்தை அனுசரித்தே சம்பளமும் உயரும். இதை ஏன் ஏர் இந்தியா நிர்வாகம் செயல்படுத்திப் பார்க்கக் கூடாது?. ஊழியர்களை வேலையில் சேர்க்கும் போதே ஸ்ட்ரைக் செய்ய மாட்டோம் என்ற உறுதி மொழியையும் அவர்களை பங்குதாரர்களாக ஆக்கும் ஆவணமும் பெற்றுக் கொண்டால் பிறகு எங்கிருந்து முளைக்கும் ஸ்ட்ரைக்?

தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த கம்யூனிஸ சித்தாந்தம் இன்று பல தொழிலாளிகளின் வயிறு காய்வதற்கு உலகம் முழுக்க காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. எனது கேரள நண்பர் ஜார்ஜ் என்னிடம் 'தமிழகத்தில் சேர்ந்து தொழில் பண்ணலாமா?' என்று முன்பு கேட்டார். 'ஏன் கேரளாவில் காடுகள் அதிகம். அங்கு தொடங்குவதுதானே நல்லது' என்றேன். 'மனுஷன் அங்க தொழில் பண்ண முடியுமா? ஒரு வருடம் நன்றாக நிறுவனம் ஓடினால் மறுவாரமே கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்வார்கள். பணம் போட்ட நானும் நீயும் வயிறு எரிந்து முளையில் உட்கார வேண்டியதுதான்' என்றார். பல மலையாளிகள் நம் தமிழகத்தில் தொழில் தொடங்குவதின் சூட்சுமம் தற்போது விளங்குகிறதல்லவா? கம்யூனிஸ்டுகளான இவர்கள் தாங்களும் வாழ மாட்டார்கள். மற்றவர்களையும் வாழவும் விட மாட்டார்கள்.

தற்போது பள்ளி விடுமுறை நாள். அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளோடு தாயகத்துக்கு திரும்பும் நேரம். அடுத்து உம்ராவுக்காக மெக்கா வருவதற்கு பல ஆயிரம் பேர் தங்களின் சேமிப்புகளோடு காத்திருப்பர். இவை எதையும் கணக்கில் எடுக்காது சிறு பிள்ளைத்தனமான இந்த ஸ்டிரைக்கினால் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். அரசால் சமாளிக்க முடியவில்லை என்றால் உடன் தனியார் வசம் கொடுப்பதே சிறந்தது. இதற்கு வழக்கம்போல் கம்யூனிஸ்டுகளும் எதிர்கட்சிகளும் கிடைக்கும் தேர்தல் கால ஓட்டை கணக்கு செய்து எதிராக திரும்புவர். இதுதான் நடக்கும்.

யஹ்யா பின் சுல்தான் என்ற அரபி நம் ஏர் இந்தியாவைப் பற்றி சொல்வதைப் பார்ப்போம்.
"This is the worst Airlines. No passenger prefers this airlines, when no other flights are available then only people choose Air India, its punctuality and service both are low and poor standard".-Arab News comment.

ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த அரபுகள் இன்று ஏர் இந்தியாவைப் பார்த்து கமெண்ட் அடிக்கும் நிலைக்கு நமது நாட்டு நிர்வாகம் சென்று விட்டது.

Times of India comments:

gail_dj (kuwait)
14 May, 2012 06:36 PM
When Air India had wet-leased air crafts long ago they were doing well. After is merged it was more misery, who is to be blamed for all this P.P. So many days strike and flights cancelled, see the amount of revenew lost. Wet-lease aircrafts and start operations is a better option. This can't go on for so long. What are you waiting for,There is a limit to everything ,the longer the delay, the worse it will get. People will soon loose faith in Air India and business will be hampered. Show them how nobody is indispensible. Wake up and start a new leaf.

Muskan (Andheri, Mumbai)
14 May, 2012 06:20 PM
what is the prime minister doing?? our flights are being cancelled and they are just sitting cool!!!!! and what is the strike for..... the pm should take a big action against them ....THEY SHOULD FIRE THOSE PILOTS WHO ARE ON ASTRIKE AND HIRE NEW AND GOOD PILOTS... they should sign a contract before hiring pilots that the cant go on a strike or take holidays unless the have a big and major reason............The PM should sew the pilots for taking a strike on such a stupid topic..........

Anna T (Hyderabad)
14 May, 2012 12:38 PM
What a fiasco? Everybody is taking people for ransom. How long should we tolerate this kind of nonsense? what is the Prime Minister doing or thinking on this subject? Can we get some response from him ? What kind of leadership is this? Silence and inaction is not good. It is time to take some responsible action.
.



.
.