Followers

Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Wednesday, September 03, 2014

விநாயக சதுர்த்தியும் முஹர்ரம் பண்டிகையும்!



//முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.//

-ஆதி சேஷன்!

ஆதி சேஷன் அழகிய பதிவை இட்டுள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஷியாக்கள் குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளில் இருந்தோ ஆதாரம் காட்ட முடியாது. அன்றைய பாரசீகர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். நம் இந்திய கலாச்சாரத்தையும் ஒத்தவர்களாக இருந்தனர். பார்பனர்களின் பல பழக்க வழக்கங்கள் ஈரானியர்களை ஒத்தே இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். தம் மூதாதையரின் பழக்க வழக்கத்தில் பற்று கொண்ட ஈரானிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏற்றிய புதிய பழக்கங்களே ஆதி சேஷன் சுட்டிக்காட்டிய பிரச்னைகள். இந்த பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய பாசம் இன்னும் இருப்பதால் தானோ எண்ணவோ சுப்ரமணியம் சுவாமி போன்ற பார்பனர்கள் ஷியாக்களை ஏகத்துக்கும் ஆதரிப்பர். சுவாமி தனது மகளைக் கூட ஒரு ஷியா முஸ்லிமுக்குத்தான் கட்டிக் கொடுத்துள்ளார்.

'இறைவனையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து அந்த இறைவனை வணங்குவது போல் மற்ற தெய்வங்களை வணங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கைக் கொண்டோர் அவர்களை விட இறைவனை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் இறைவனுக்கே என்பதையும் இறைவன் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.'
-குர்ஆன் 2 : 165

'இறைவன் அருளியதைப் பின் பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின் பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
-குரஆன் 2 : 170

'அவர்களே நேர்வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது?'
-குர்ஆன் 2 : 175

ஏக இறைவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள். தங்களது மார்க்கத்தைப் பிரிந்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்ப்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
-குர்ஆன் 30 : 31,32

இந்து மதத்தின் பெருமைகளை குலைக்கும் விதமாக விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுவதை பார்க்கிறோம். அதே போல் இஸ்லாத்தில் முஹர்ரம் பண்டிகையில் வழிகளை மறித்து உடலை கீறிக் கொண்டு ஆக்ரோஷமாக வருவதும் இஸ்லாத்தின் பெருமைகளை குலைப்பதாகவே உள்ளது. இறைவனின் வழி காட்டுதல் இல்லாது இறை வணக்கம் இருந்தால் அது மனித குலத்துக்கு எத்தகைய கேட்டை விளைவிக்கும் என்பதற்கு இந்த இரண்டு பண்டிகைகளே சாட்சி.

Saturday, September 29, 2012

அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!

அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!



ஐநாவில் அஹ்மத் நஜாதின் அழகிய உரை:

தனது நாட்டை மட்டும் நினைக்காமல் உலக மக்களின் பொருளாதாரத்தையும் அவ்வப்போது தனது பேச்சினுடையே சொல்லி வரும் இந்த தலைவரைப் பற்றியும் இவரது எளிமையைப் பற்றியும் சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவரிடம் உள்ள ஒரே குறை இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். அந்த காலத்தில் தகவல் வசதியற்ற காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷியா, சன்னி என்று இரு பிரிவாக பிரிந்து விட்டார்கள். தற்போது இணைய வசதியினால் யார் தவறு செய்தது? எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது? என்ற உண்மை பலருக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இவர் முயற்சி செய்தால் இவரது காலத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாகி முகமது நபி காலத்தில் எவ்வாறு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தோமோ அது போன்ற நிலையை அடையலாம். அதற்கான முயற்சியை இந்த தலைவர் எடுப்பார் என்று நம்புவோம். இனி அவரது எளிய வாழ்வை சற்று பார்ப்போம்.


அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

• •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

• •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

• •படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog)

• • இவரது வங்கி நிலுவை 0

• •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்

• • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

• • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

• •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்

இந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே!


'உன்னை விட மாட்டேன்'

அஹமத் நஜாத் ஹீரோவாக நடிக்க ஒரு படம் எடுக்கலாம் என்ற ஐடியா! படத்தின் பெயர் 'உன்னை விட மாட்டேன்'.

அமெரிக்காவைப் பார்த்து சொல்றது மாதிரி இருக்குல்ல.....:-)

------------------------------------------------






Saturday, August 18, 2012

ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!

ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..

அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.

ஷியாக்கள் எவ்வாறு உருவானார்கள் எவ்வாறெல்லாம் குரஆன் ஹதீஸ்களை வளைத்து பொருள் கொண்டார்கள் என்ற நீண்ட வரலாறை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.

இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.

//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans //
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'

'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'

'No, we are not Muslims,' she exclaimed.

'Then what are you?' I inquired.

'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.

On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'

Then she told me about the ritual carried out on the birth of every child in her family.

She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//

இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உயர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.

ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..

'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...

கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....

குடியரசு சாய்ந்ததம்மா.....'

என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.



http://www.tamilbrahmins.com/general-discussions/6310-hussaini-brahmins.html
http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm
http://www.imamreza.net/eng/imamreza.php?id=6530
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

-----------------------------------------------------
மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 24



-----------------------------------------------------

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


Wednesday, June 08, 2011

கால்பந்தாட்டம் விளையாட தலை திறந்திருக்க வேண்டுமா?


கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதுதான் தகுதியாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது ஃபிஃபாவின் ஒரு அறிவிப்பு பெரும் கண்டனத்துக்கு உள்ளாயிருக்கிறது. கால்பந்தாட்டம் ஆடுபவர்கள் இனி தலையை மூடாமல் திறந்தவாறு விளையாட வேண்டும். இந்த சட்டத்தை கடை பிடிக்காதவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். தலையில் முக்காடிட்டு விளையாடுவது வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதே பிரதான காரணம்' என்கின்றனர் ஃபிஃபா அமைப்பினர்.

2012ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜோர்டான் அணியோடு மோத விடாமல் ஈரான் பெண்கள் அணியை திருப்பி அனுப்பியுள்ளது ஃபிஃபா அமைப்பு. திறமையிருந்தும் போட்டியிலிருந்து விலக்கியதால் அந்த வீராங்கனைகள் மனம் உடைந்து கலங்குவதைத்தான் மேலே நாம் பார்க்கிறோம். இது எந்த வகை நியாயம்? உடையை தேர்ந்தெடுப்பது சம்பந்தப்பட்டவரின் உரிமையல்லவா? வீராங்கனைகளின் உயிருக்கு இதனால் ஆபத்து என்று எந்த மருத்துவராவது விளக்கியுள்ளனரா? ஒன்றும் இல்லை. விளையாட்டில் ஈடுபடும் வீராங்கனைகள் யாரிடமாவது வந்து 'எங்களுக்கு முக்காடு அணிவது விளையாட்டுக்கு சிரமமாக இருக்கிறது' என்ற கோரிக்கையாவது வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. கிரிக்கெட்டில் நமது நாட்டில் ஹர்பஜன் சிங் தலையை மறைத்து விளையாடியதில் ஏதும் சிரமம் இருப்பதாக சொல்லியிருக்கிறாரா. இல்லை.

இஸ்லாத்தை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தைத் தவிர இவர்களுக்கு வேறு காரணங்கள் இல்லை.

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் செய்தியாளர்களிடம் கூறும்போது 'எங்கள் நாட்டு பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆபாசமான உடையை மற்றவர்களின் மீது திணிக்கும் சர்வாதிகார நடவடிக்கை என்றே இதனை பார்க்கிறேன். சட்டப்படி இதனை கொண்டு சென்று எங்கள் நாட்டு வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்' என்கிறார்.

'எங்களை போட்டியிலிருந்து விலக்கினாலும் எங்களின் குர்ஆன் கூறும் கட்டளைக்கு முன்னால் உங்களின் கட்டளை எங்களின் கால் தூசுக்கு சமானம்' என்று கூறும் இந்த வீராங்கனைகள் கண்டிப்பாக பாராட்டத்தக்கவர்கள். இதனால் ஒலிம்பிக்கில் மெடல் கிடைக்கும் சந்தர்ப்பம் வீணாணாலும் சொர்க்கத்தில் நிச்சயம் இவர்களுக்கு இதைவிட சிறந்த பரிசை இறைவன் தந்தருள்வான்.

சானியாமிர்ஸா முதற் கொண்டு பல வீராங்கனைகள் விளையாடும்போது விளையாட்டை விட அவர்களின் உடலை ரசிக்கத்தான் கூட்டம் கூடுகிறது. இதை இந்த ஆர்வலர்களின் வக்கிரத்தை யுடியூபில் எந்த மாதிரி போஸ்களை வெளியிடுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

உடலை கவர்ச்சியாக காட்டினால்தான் விளையாட அனுமதிப்பேன் என்பது போட்டி நடத்துபவர்களின் வக்கிரபுத்தியையும் காட்டுகிறது. வழக்கில் வென்று ஈரானிய பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள நாமும் வாழ்த்துவோம்.

'உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'

-குர்ஆன் 3:120