Followers

Thursday, August 23, 2012

ஆப்கன் முல்லா உமரின் பெருநாள் செய்தி!

ஏழு பக்கங்கள் அடங்கிய பெருநாள் செய்தியை ஆப்கன் மக்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் முல்லா உமர் அனுப்பியுள்ளார். இந்த செய்தி நேடோவின் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி ஏழு அமெரிக்க படையினரை கொன்றதன் மறுநாள் அனுப்பப்பட்டுள்ளது. அதனை பார்ப்போம்!



“ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் அமீரும், தளபதியுமாகிய முல்லா முஹம்மத் உமராகிய நான் இறைவனுக்கு அஞ்சி, அவரின் அடிமையாகிய முகமது நபி அவர்களை நினைவு கூர்ந்து ஆரம்பம் செய்கிறேன். இறைவன் எந்த தேவையும் அற்றவன். நாம் அனைவரும் அவனுக்கு கட்டுப்பட்ட அடிமைகள். எந்த ஒரு சிறு தேவையிலும் அவன் நம்மில் தங்கியுள்ளவன் அல்ல. ஆனால் நாம் அனைத்து தேவைகளிலும் அவனிடமே தங்கியுள்ளோம். அந்த இறைவனை அஞ்சுகிறேன். அவனிடமே எனது அனைத்து காரியங்களையும் ஒப்படைக்கிறேன்.”.

“சாத்தானின் பழிப்புகளில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்”.

“இன்றைய இனிய தினம் நான் ஆப்கானிய முஜாஹித்களுக்கும், தேசத்து மக்களுக்கும், உலகில் நோன்பு நோற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். நோன்பு உங்களுக்கு சாந்தியளித்தது போல புனித பாக்கியங்களும் உங்களை வந்தடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.”

“இஸ்லாத்தின் எதிரிகளின் சிறைகளில் வாடும் முஜாஹித்களின் விடுதலை நெருங்க இறைவனை பிரார்த்தனை புரிகின்றேன். காயப்பட்ட முஜாஹித்களின் வலிகள் குறைவடைய இறைவன் அருள் புரியவும் வேண்டுகிறேன். நாட்டு விடுதலைக்காக உயிரை இழந்த மக்களுக்கு இறைவன் சொர்க்கத்தை தந்தருள்வானாக! போரில் இறந்த முஜாஹித்களின், காயப்பட்ட முஜாஹித்களின், கைது செய்யப்பட்ட முஜாஹித்களின் இழப்பில் அல்லல்படும் அவர்கள் குடும்பத்திற்கு இந்த ரம்ழான் ஆறுதல் அளித்திருக்கும் என நம்புகிறேன்”.

“நான் ஒரு சில முக்கிய விஷயங்களை என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்”:

1) அமெரிக்காவுக்கு எதிரான எங்களது போர் முன்னிலும் வலிமை பெற்றுள்ளது. உறுதி பெற்றுள்ளது. அது தனது பாதையில் வேகமாக பயணிக்கிறது. இதற்கு வீரமிகு ஆப்கானிய மக்கள் தங்கள் பங்களிப்பை மேலும் நல்க வேண்டும்.

2) ஃபரூக் ஆபரேஷன் பூரண வெற்றியளித்துள்ளது. சில பின்னடைவுகளையும் தந்துள்ளது. எதிரி மூச்சு விட அவகாசம் தராது எமது தாக்குதல்கள் அமைந்திருந்தன. எதிரி இனி நிம்மதியாக இருக்க முடியாது. நடக்க முடியாது. தனது சுவாசத்தை நிம்மதியாக இழுத்து விட முடியாத நிலையில்தான் அமெரிக்கர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அது ஆப்கான் முழுவதும் பரந்துபட்ட நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

3) முஜாஹித்கள் கர்சாயின் சிவப்பு ஆப்கானிய படையினுள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் பல தாக்குதல்களை நடத்தியுமுள்ளனர். பல சிவப்பு ஆப்கான் கர்சாயின் படையினர் முஜாஹித்களாக மாற்றப்பட்டும் உள்ளனர். இது ஒரு பெரிய வெற்றி.

4) எமது நாட்டில் நடத்திய போரினால் ஆக்கிரமிப்பாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களின் வீரர்களே தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்வதை பார்க்கிறோம். அந்தந்த நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்தே வருகிறது. தங்கள் நாடு தவறான பாதையில் செல்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். எமது போராட்டம் அமெரிக்க பொருளாதாரம் வரை தாக்கம் செலுத்தியுள்ளது.

5) ஆக்கிரமிப்பாளர்கள் பல அநீதிகளை இழைத்துள்ளனர். இரவில் கைது, இரவில் தேடுதல், குழந்தைகளை துன்புறுத்தல், சித்திரவதை செய்தல், இறந்த உடல்களை அசிங்கப்படுத்தல், பெண்களை வதைத்தல், மானபங்கம் செய்தல் என பற்பல. இத்தனையையும் செய்து விட்டு இவர்கள் உலகுக்கு மனித நேயத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்.

6) பதுஷ்தானில் இருந்து ஹெல்மண்ட் வரை, ஹேரத்தில் இருந்து நங்ககர் வரை முஜாஹித்களை கண்டு பெண்கள் சந்தோஷமடைகின்றனர். இதன் அர்த்தம் எமது கட்டளைகளை இந்த பிராந்தியங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதாகும். இந்த வெற்றிகள் எதிரிகளை நிலைகுலையச செய்துள்ளது.

7) எதிரிகளின் சதிகளை நம்பி எம்மக்கள் பலர் ஏமாந்து போய் விடுகின்றனர். இதனை நாம் இயன்றளவு தடுத்து வருகின்றோம். மீடியாக்களை தன் பக்கம் வைத்திருக்கும் எதிரிகள் முஜாஹிதின்களைப் பற்றி பல பொய்களை தினமும் பொதுவில் வைக்கின்றனர். ஆனால் மக்கள் உண்மையை தெரிந்தே வைத்துள்ளார்கள்.

8) தங்களின் குள்ளநரித்தனமான செயல்களால் நம் மக்களிலேயே பலரை பகடைக் காய்களாக இது வரை பயன் படுத்தி வந்தனர். முன்பு எவ்வாறு 90 களில் கம்யூனிஸ்ட் படைகளை விரட்டினோமோ அது போன்ற நிலையை இறைவன் ஏற்படுத்துவான். ஹமீத் ஹர்சாய்க்கு அவரின் அதிகாரம் குறைந்து வருவது புரிகிறது. அவர் எத்தனை மாநாடுகளை நடத்தினாலும் அதனால் எம்மை கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை.

9) பலஹீனமான ஒரு அரசிடம் பொறுப்பை கொடுத்து தங்களின் தோல்வியை மறைக்கப் பார்க்கினறனர் அமெரிக்கர்கள். நாம் துணிவு கொண்டுள்ளோம். அமெரிக்கா மட்டுமல்ல வேறு எந்த நாடு வந்தாலும் முகம் கொடுக்கும் ஆற்றலையும் நம்பிக்கையையும் இறைவன் எமக்கு தந்துள்ளான்.

10) இந்த நாட்டை வேறு சில சக்திகளுக்கு விற்கும் நாடகமும் நடந்தேறி வருகிறது. ஆப்கானின் உண்மை விசுவாசிகள் இதனை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த நாடகத்துக்கு துணை போகும் கர்சாயின் அரசையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த நோன்பில் எமக்கு இன்னோரு மகிழ்ச்சிகரமான செய்தியொன்றுள்ளது. அது, ஆப்கானிய மக்கள் எம்மை, எமது தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலை காபூல் வரை ஏற்பட்டுள்ளது. எமது பல தாக்குதல்களுக்கு காபூல் மக்களின் பேருதவியே பெரும் காரணமாக அமைந்தது.


12) பல பில்லியன் டாலர்கள் காபூல் அரசால் உதவி என்ற பெயரில் சுரண்டப்படுகிறது. இந்த பணங்கள் அனைத்தும் பலரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன. வெளி நாட்டு உதவி ஆப்கானிய வறிய மக்களை சென்றடைவதில்லை. இவை அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகின்றன. இது எங்களுக்கு தெரியாமல் இல்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் இதனை உணர வேண்டும்.

14) அமெரிக்கர்களோடு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கி பிறகு நின்றது. எங்கள் நாட்டின் இறையாண்மையையும் வளங்களையும் விட்டுக் கொடுத்து எந்த சமரசத்துக்கும் அவர்களோடு கை கோர்க்க மாட்டோம் என்றும் கூறிக் கொள்கிறேன்.

16). கல்வியில் எங்களின் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பெரும் பொருளாதாரம் ஒதுக்கப்படும். அதேபோல் எங்களின் பெண்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தப்படும். அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவை அனைத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமையப் பெறும்.

19) போரால் அழிந்து போயிருக்கும் ரோடுகள், பாலங்கள், மருத்துவமனைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றத்தை இன்ஷா அல்லாஹ் பெறுவோம்.

21)ஆப்கானிஸ்தான் பக்கத்து நாடுகளோடு சுமூகமான உறவை வைக்கவே விரும்புகிறது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம். எங்கள் நாட்டின் உள் விவகாரங்கள் அவர்கள் தலையிடக் கூடாது. அவர்கள் நாட்டின் உள் விவகாரங்களில் நாங்களும் தலையிட மாடடோம். எங்கள் நாட்டை எந்த நாடும் அதிகாரம் செய்ய இயலாது அதற்கு உலக நாடுகளின் சட்டங்களும் இடம் தராது என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

22)சில நாட்களுக்கு முன்பு அரபுலகில் நடந்த இஸ்லாமிய புரட்சிகளை எண்ணி சந்தோஷமடைந்தேன். இறைவனின் சட்டங்கள் இந்த நாடுகளில் கொண்டு வரப்பட்டு அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பர்மாவில் நடந்த அக்கிரமங்களுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுத்து அங்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.

உலக மக்களே! அமெரிக்கா சொல்லும் பொய்களை நம்பிக் கொண்டிருக்காதீர்கள். மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதை குவாண்டனாமோ சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நாய்களை விட்டு மனிதர்களை கடிக்க சொல்வதும், சிறுநீர் பெய்து தங்கள் வக்கிரத்தை தீர்த்துக் கொள்ளும் அமெரிக்கர்களை முதலில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பெண்களை கற்பழிப்பதும், இறந்த உடல்களை அவமானப்படுத்துவதும் போன்ற அநாகரிக செயல்களை செய்பவர்கள் அமெரிக்கர்களே! எங்கள் நாட்டை ஆக்கிரமிப்பவர்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் பல இழப்புகளை பெற்றும் அதனை தங்கள் நாட்டுக்கு தெரிவிக்காமல் மறைக்கின்றனர். இவர்கள் எங்களின் கலாசாரத்தை அழிக்கின்றனர். மேற்கத்திய நாகரிகத்தை கொண்டு வர முயற்ச்சிக்கின்றனர். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

அன்பின் ஆப்கான் தாய் மார்களே!, வீரர்களின் தந்தைகளே!, போராட துடிக்கும் வருங்கால போராளிகளே, குழந்தைகளே. இது உங்கள் மண். இதற்காகவே நாம் போராடுகிறோம். எதிரியை வெளியேற்றி ஷரியாவை ஆட்சியாக மாற்றவே எமது போராட்டம் நடைபெறுகிறது. தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள். எமது வெற்றிகளை கண்டால் இறைவனை இறைஞ்சுங்கள். அவனுக்கு வழிப்படுங்கள். அவன்பால் உங்களை ஈடுபடுத்துங்கள். போராட்டத்தை வழி நடத்துவது நான் அல்ல. நம்முடைய இறை நம்பிக்கை. அந்த இறை நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் ஏற்படல் வேண்டும். உங்கள் அனைவரின் சந்தோஷத்திற்காக பிரார்த்திக்கின்றேன். இந்த ஈத் எமக்கு அடுத்த ஈத் வரை அடுக்கடுக்கான வெற்றிகளை தர வேண்டும் என்பது எனது ஆசை. பிரார்திப்போமாக.......

இப்படிக்கு
இறைவனின் அடிமை
Mullah Mohammad Omar Mujahid
The Servant of Islam

Amirul Mukminin Mullah Muhammad Umar, Commander of Mujahid
Khadimul Islam
Ditulis pada: 16 Agustus 2012/ 28 Ramadhan 1433 H
Imarah Islam Afghanistan

இந்த கடிதம் நீளம் கருதி சுருக்கி தரப்பட்டுள்ளது.

முழு செய்தியையும் ஆங்கிலத்தில் படிக்க

http://www.uruknet.de/?p=m90397&hd=&size=1&l=e


The message came a day after a NATO Black Hawk helicopter came down in southern Afghanistan, killing seven American soldiers and four Afghans, the military said, as Taliban fighters claimed responsibility.

In a message to the Afghan people ahead of the Eid al-Fitr festival ending the holy Ramadan fasting month, the one-eyed leader said insurgents should “employ tactics that do not cause harm to life and property of the common countrymen”.

“The instructions given to you for the protection of civilian losses are, on you, a religious obligation to observe,” Mullah Omar said in a seven page statement released late on Thursday and translated into five languages.

“Any violation readily incurs loss in this world and in the world to come. Therefore, I urge you emphatically to be careful about the civilian losses and take this on yourselves as an explicit responsibility,” he said.

Qari Yusuf Ahmadi,a Taliban spokesman, said: "Our mujahideen shot down an ISAF helicopter in Chenarto area of Shah Wali Kot district in Kandahar province at around 11:00am [06:30 GMT]."

http://www.aaj.tv/2012/08/taliban-chief-mullah-omar-sends-eid-message/
http://www.aljazeera.com/news/asia/2012/08/201281765122731439.html
http://tolonews.com/en/afghanistan/7303-mullah-omars-eid-message-read-in-nangarhar-mosques-mp
---------------------------------------------------------
அன்புள்ள முல்லா உமர் அவர்களுக்கு!

சுவனப்பிரியன் எழுதிக் கொள்வது!

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

கடிதம் எல்லாம் நல்லாதான் எழுதுறீங்க உமர் அண்ணே! ஆனால் உங்களிடம் சரியான தொலை தொடர்பு வசதி இல்லாததால் அமெரிக்கா எதை சொல்கிறதோ அதையே உலகமும் நம்புகிறது. தற்போது உங்கள் நாடு பல ஆண்டுகள் போரினால் சின்னா பின்னப்பட்டுள்ளது. வயோதிகர்கள், சிறுவர்கள், பெண்கள் என்று எவருமே இதில் தப்பவில்லை. பல பெண்களை நீங்கள் சுட்டுக் கொல்வதாக அமெரிக்க பத்திரிக்கைகள் உலகுக்கு செய்தியை தருகின்றன. இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஷரிய ஆட்சி நடந்து வரும் சவுதியில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று சற்று இணையம் மூலம் பார்த்து தெளிவு பெறுங்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கும், கல்விக்கும் இஸ்லாம் மிக உயரிய இடத்தை தந்துள்ளது. பல ஆப்கன் நண்பர்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எங்கள் நாட்டில் எப்போது அமைதி திரும்பும் என்று என்னிடம் தங்கள் சோகங்களை சொல்லும் போது மனது கனக்கும். எனவே எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரமே எடுத்து நீங்களோ அல்லது கர்சாயியோ யாராக இருந்தாலும் மக்கள் அமைதியாக வாழ ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுங்கள்.

உங்கள் பெயரால் இன்று உலகம் முழுக்க இஸ்லாமிய ஆட்சி என்றாலே 'தாலிபானிய ஆட்சியா' என்று கேட்கின்றனர். அந்த அளவு அமெரிக்கா தனது செய்தியால் மக்களை குழப்பி வைத்துள்ளது.

அடுத்து போதைப் பொருள்கள் மூலம் நீங்கள் ஆயுதங்களை பண்டமாற்று செய்து கொள்வதாக செய்திகள் வருகிறது. ஆனால் அமெரிக்க நேட்டோ படையினர் போதைப் பொருள் தொழிலில் கோடிக் கணக்கில் மாதாமாதம் சம்பாதிப்பதாக வேறொரு செய்தி கூறுகிறது. உண்மை நிலையை இறைவனே அறிவான்.

ஒரு உண்மையான முஸ்லிம் போதை பொருள் வியாபாரத்தை தொட மாட்டான்: பெண்களை மதிப்பான்: கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பான்: தனது நாட்டில் வாழும் மற்ற மதத்தவர்களை மதித்து நடப்பான்:

எங்கள் தமிழகத்தில் அரசாங்கமே டாஸ்மார்க் கடையை நடத்தி குடி மக்களை கெடுக்கிறது. குடித்து குடல் புண்ணாகி இறக்கும் எத்தனையோ தமிழ் சகோதரர்களை எண்ணி வருந்துவேன். உங்கள் ஆட்கள் போரில் வெளி நாட்டுக்காரனை எதிர்த்து அதில் இறந்தால் அவருக்கு சொர்க்கமாவது கிடைக்கும். டாஸ்மார்க் சாராயத்தால் இறந்த என் இன சகோதரனுக்கு என்ன கிடைக்கும்? நீங்களே சொல்லுங்கள். இதற்காக பதிவுகள் எழுதி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறோம். ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள பதிவர் மாநாடு எந்த சிக்கலும் இல்லாமல் தமிழர்கள் வாழ்வில் முன்னேற பல சீரிய முடிவுகளை எடுக்கும் வகையில் அமைய நானும் பிரார்த்திக்கிறேன். நீங்களும் பிரார்த்தியுங்கள். சில சகோதரர்கள் நம்மை தவறாக எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள்.

மனித நேயத்தோடு நடந்த நமது முன்னால் ஜனாதிபதி உமரின் பெயரை பெற்றிருக்கிறீர்கள். அவர் எவ்வாறு ஆட்சி செய்தார் என்பதை அறியாதவர் அல்ல நீங்கள். அத்தகைய ஒரு ஆட்சியை உங்கள் தலைமையில் உங்கள் நாட்டுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அத்தகைய ஒரு ஆட்சியை வெகு சீக்கிரம் ஆப்கனில் அமைத்து தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் எழுதிய இந்த கடிதத்தை உங்கள் உள்ளங்களில் இறைவன் கொண்டு சேர்ப்பானாக என்றும் பிரார்த்திக்கிறேன்.

உங்களுக்கு இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!

இப்படிக்கு
சுவனப்பிரியன்.

15 comments:

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
முல்லா உமரின் கடிதம் படித்தேன் மிக தெளிவாக இருக்கிறார். அமெரிக்காவின் எண்ணம் இனி ஒரு புதிய இஸ்லாமிய நாடு உருவாவமல் தடுப்பது. எனக்கு தெரிந்து ஆப்கானிகள் நல்ல உழைப்பாளிகள் இங்கு பாகிஸ்தானிகள் கூட பிச்சை எடுப்பது பார்த்திருக்கிறேன் ஆனால் ஆப்கானிகள் பிச்சை எடுத்து பார்த்த்ததில்லை. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அருள் புரிவானாக(ஆமின்).

இன்ஷாஅல்லாஹ் உங்கள் அல்ல எங்கள் யாவரின் வேண்டுகோளையும் ஏற்று நம் சகோதரர்கள் யாவரும் குடிப்பதை நிறுத்தி நலமுல்ல , தெளிவுள்ள மனிதராக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக (ஆமின்)

suvanappiriyan said...

சலாம் சகோ அஜீம் பாஸா!

//எனக்கு தெரிந்து ஆப்கானிகள் நல்ல உழைப்பாளிகள் இங்கு பாகிஸ்தானிகள் கூட பிச்சை எடுப்பது பார்த்திருக்கிறேன் ஆனால் ஆப்கானிகள் பிச்சை எடுத்து பார்த்த்ததில்லை. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அருள் புரிவானாக(ஆமின்).//

உண்மைதான் கடின உழைப்பாளிகள். மார்க்கத்தை எந்த நிலையிலும் பேணுபவர்கள். தாலிபான்களைப் பற்றி எதிர் மறையான செய்திகளே ஊடகங்களை சென்றடைகிறது. இதற்கு யார் காரணம் ன்பதை நாம் அறியாதவர்கள் அல்ல.

//இன்ஷாஅல்லாஹ் உங்கள் அல்ல எங்கள் யாவரின் வேண்டுகோளையும் ஏற்று நம் சகோதரர்கள் யாவரும் குடிப்பதை நிறுத்தி நலமுல்ல , தெளிவுள்ள மனிதராக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக (ஆமின்)//

ஆம். இதனால் ஒரு சகோதரராவது குடியை விட்டு திருந்தினால் அது நமக்கு வெற்றிதானே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ,
முல்லாஹ் உமரின் கடிதம் என் நெஞ்சை நெகிழ செய்கிறது...
பல ஆக்கிரமிப்புகளை சந்தித்துள்ள ஆப்கான் மண் உண்மையிலேயே வீரம் செறிந்த மண், ஆப்கானியர்களும் அட்டக் கத்தி வீரர்கள் அல்ல என்பதை நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகளே சாட்சி......
ஒரு சரியான தலைவன் இருந்திருந்தால், அரபு நாடுகளைப்போல் ஆப்கானும் எப்போதோ மாறியிருக்கும் . ஆப்கான் பூமியில் செல்வங்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறது ஒரு நாள் வெளியே அவைகள் வரும் போது IMF கே லோன் தருவார்கள்....

Anonymous said...

////இன்ஷாஅல்லாஹ் உங்கள் அல்ல எங்கள் யாவரின் வேண்டுகோளையும் ஏற்று நம் சகோதரர்கள் யாவரும் குடிப்பதை நிறுத்தி நலமுல்ல , தெளிவுள்ள மனிதராக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக (ஆமின்)// ஆம். இதனால் ஒரு சகோதரராவது குடியை விட்டு திருந்தினால் அது நமக்கு வெற்றிதானே!//

ஆம்? இம்மையில் குடிப்பதை விட்டுவிட்டு எல்லாரும் நல்ல மனிதர்களாக வாழ்ந்து மறுமையில் சுவனத்தில் உல்லாசமாக இருக்கலாம்.

suvanappiriyan said...

Aug 24: டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள காந்தி ஈத்கா திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை பெருநாள் தினத்தில் மழை பெய்து மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.

இதை அறிந்த சீக்கியர்கள் தங்கள் குருத்வாராவில் வந்து தொழுகை நடத்துமாறு முஸ்லிம்களை அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்ற முஸ்லிம்கள் ஜோஷிமத்தில் உள்ள குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்தினர். அதன் பிறகு முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஈத் பெருநாள் கொண்டாட்டத்தில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.

ஒருபுறம் இந்த கிராமத்து மக்கள் இந்திய மதசார்பின்மைக்கு உறுதுணையாகவும், மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாகவும் விளங்கியுள்ளார்கள். ஆனால் மறுபுறம் பாசிச வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்று தவறான பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி அதன் மூலம் மதக்கலவரங்களை உருவாக்கி நாட்டை சுடுகாடாக மாற்றி வருகின்றார்கள்.

http://www.sinthikkavum.net/2012/08/blog-post_23.html

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//இதை ஏன் வளைகுடா பெட்ரோலுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடாது ? பெட்ரோல் தீர்ந்தபிறகு இலங்கை, இந்தியா, பங்களா மற்றும் பாகிக்கு வளைகுடா அரசுகள் தான் வேலைகொடுக்கிறது என்று நீங்களும் மார்த்தட்ட ஒன்றும் இருக்காது.//

சிங்கப்பூருக்கும் அதே நிலைதான். அரபு நாடுகளிலாவது இன்னும் 50 வருடத்துக்கு பெட்ரோல் ஸ்டாக் இருக்கிறதாம். இதுவும் எப்போ விரட்டுவான் என்று சொல்ல முடியாது. சிங்கபூரில் பூமிக்கு அடியில் அப்படி விசேஷமாக ஒன்றும் இல்லை என்றே அறிகிறேன். சைனாக்காரன் ரொம்ப டேஞ்சரானவன். எதற்கும் முன்னெச்செரிக்கையாக பூர்வீக சொத்துக்களை விற்காமல் இருப்பது நல்லது.:-)

suvanappiriyan said...

நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் உட்டோயா தீவு தாக்குதல் கொலையாளி ஆண்டெர்ஸ் பிரேய்விக்கிற்கு 21 வருட கால சிறைத்தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், மருத்துவ பராமரிப்பின் கீழ் தடுத்து வைக்குமாறு தண்டனை வழங்கப்படவிருந்தது. எனினும் அவர் நல்ல அறிவாற்றலுடன் (Sane) இருப்பதாக மருத்துவ பரிசோதனை ஆதாரங்கள் நிரூபித்துள்ளதால் அவருக்கு 21 வருட சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டுவந்த ஐந்து நீதிபதிகள் தமது தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

மேலும் 21 வருடங்களுக்கு பிறகும் அவர் சமூகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடியவராக இணங்காணப்பட்டால் இத்தண்டனைக்காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த போது பிரேய்விக் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் மனநல மருத்துவர்கள் குழு ஒன்றை பரிந்துரைத்து பிரேய்விக்கை ஆராயுமாறு பணித்தது. முதலாவது மருத்துவ குழு, பிரேய்விக் சித்தப்பிரமை (Paranoid Schizophrenic) பிடித்தவர் எனக்கூறி தனது அறிக்கையை சமர்ப்பித்த போதும் மறுபடியும் ஆய்வுகளை மேற்கொண்ட இரண்டாவது மருத்துவ குழு பிரேய்விக் நல்ல அறிவாற்றலுடன் இருப்பதாக பரிந்துரை செய்தது.

இன்று தீர்ப்பு வெளியாக முன்னர் பிரேய்விக் கருத்து தெரிவிக்கையில், தான் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்படுவது, மரண தண்டனையிலும் பார்க்க மோசமானது என கூறியிருந்தார்.

தற்போது தீர்ப்பு வெளியானதை அடுத்து, சந்தர்ப்பம் இருந்தும் இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்ய போவதில்லை என பிரேய்விக் கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம், காவற்துறையினரின் போலியான சீருடை அணிந்து நோர்வேயின் உட்டோயா தீவில் பிரேய்விக் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். ஒஸ்லோவில் அவர் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்தே பிரேய்விக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதேவேளை இன்று தீர்ப்பு வெளியாகிய போது நீதிமன்றத்தில் தடுப்புக்கண்ணாடி சுவர்களுக்கு வெளிப்புறமாக பிரேய்விக்கின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வழகின் தீர்ப்பை நேரடியாக கேட்டுக்கொண்டிருந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்ட போது பிரேய்விக் புன்னகையுடன் அதை கேட்டு தலை அசைத்தது குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/world/7704-breivik-ruled-sane-gets-21-years?utm_source=feedburner&utm_medium=feed

Nizam said...

சகோதரே அருமையான பகிர்வுக்கு ஜெஸக்கல்லாஹ் ஹைர்.

மாஷா அல்லாஹ், முல்லா உமரின் கடிதம் படித்து கண்கள் கலங்கிவிட்டான. எந்த ஒரு தகவல் தொடர் இல்லாமல். நவின டெக்கினிலாஜியும் எதுவும் இல்லாமல் அமெரிக்கவை எதிர்த்து போர் செய்கின்றார். ஈமானின் உறுதி இருக்கும் வரை அல்லாஹ் உதவி அவர்களுக்கு என்என்றும் இருக்கும். (ஆமின்)

கோவி.கண்ணன் said...

//இதுவும் எப்போ விரட்டுவான் என்று சொல்ல முடியாது.//

அதெல்லாம் பாலாறும் தேனாறும் ஓடும் சவுதியில் நடக்கலாம், அங்க மாதிரி படித்தவர்களிடம் கூட அறிவு மற்றும் உடல் உழைப்பை உறிஞ்சுவிட்டு துறத்தமாட்டாரகள். நாங்க விரும்பினால் இங்கேயே கூட இருந்துவிடுவோம், இந்த நிமிடம் வரையிலும் கூட தமிழகம் திரும்பிச் செல்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. எங்களுக்கு இங்கே தாய்மொழி உரிமை, தாய்மொழிக் கல்வி எல்லாமே தமிழகத்தைவிட சிறப்பாகக் கிடக்கிறது.

உங்களுக்கெல்லாம் சவுதியில் குடியுரிமை கேட்டால் பின்னாடி அடிச்சுத் துறத்துவான், எனவே நீங்க சிங்கப்பூரை ஒப்பிட ஒன்றுமே இல்லை.

//சிங்கபூரில் பூமிக்கு அடியில் அப்படி விசேஷமாக ஒன்றும் இல்லை என்றே அறிகிறேன். //

சிங்கப்பூர் பூமியே விசேசமானது தான், மலேசியாவைவிட 500 மடங்கு சிறிய நாடு, மலேசியாவைவிட பண மதிப்பு 2.5 மடங்கு, பூமிக்கு தான் இங்கே மதிப்பும் கூடுதல், இது ஒன்றும் பாலைவனம் இல்லையே.

ஒண்ணுமே இல்லை என்றாலும் கப்பல் கட்டும் தொழில், அனைத்துல விமான இணைப்புச் சேவை மற்றும் சுற்றுலாவில் பணம் பார்த்துடுவாங்க. பெட்ரோல் இல்லை என்றால் அங்கே என்ன ஆகும் என்று நான் சொல்லத் தேவை இல்லை, ஒரு வேளை பழையபடி நாடுபிடிப்பு, குதிரை வியாபாரம் என்று போனால் தான் உண்டு.

கோவி.கண்ணன் said...

நண்பர் சுவன பி(ரி)யர் அவர்களே,

நீங்க இரண்டு ஆண்டுக்கு முன்பே பின்லேடனுக்கு கடிதம் எழுதி இருந்தால் அவர் அமெரிக்கப் படையிடம் சரணடைந்திருப்பார், இப்ப தேவை இல்லாமல் அமெரிக்கபடையால் கொலை செய்யப்பட்டு உடலை கடலில் தூக்கிப் போட்டுவிட்டார்கள், முல்லா ஓமருக்கு உங்க கடித பாக்கியம் கிட்டிருக்கு, அவராவது நீங்கச் சொன்னதைக் கேட்கனும்,

தாவூத் இப்ராஹிம் என்று ஒரு கொள்ளை/கொலை/மதவெறியர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளாராம், அவருக்கும் கடிதம் எழுதி மார்க்கத்துக்கு திருப்புங்க.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//தாவூத் இப்ராஹிம் என்று ஒரு கொள்ளை/கொலை/மதவெறியர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளாராம், அவருக்கும் கடிதம் எழுதி மார்க்கத்துக்கு திருப்புங்க.//

தாவூத் இப்றாஹிமுக்கும் இஸ்லாத்துக்கும் ரொம்ப தூரம. எந்த நேரமும் சினிமா தொடர்பு, நிழல் உலக வருமானம் என்று வழி மாறி சென்றவருக்கு இறைவன் தான் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். இது போன்ற பிரார்த்தனைகளை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.

ஒரு சிறந்த இன்ஜினியரை, உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான லேடன் குடும்பத்தில் பிறந்த ஒசாமாவை இந்த நிலைக்கு தள்ளியது யார்? அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு சதி அல்லவா? பணம் பண்ணுவதற்காக தேவையற்ற குற்றச்சாட்டுகளை பல முஸ்லிம் நாடுகள் மேல் போட்டு பிறகு அங்கேயே நிரந்தர ராணுவ தளங்களை அமைத்து இன்று வரை பிரச்னை பண்ணுவது யார்? இவ்வளவு நயவஞ்சன தனத்துக்கு பிறகும் அமெரிக்காவில் வறுமை தாண்டவமாடுகிறது. பலரது வயிற்றெரிச்சல் அந்த மக்களை எவ்வாறு நிம்மதியாக வாழ வைக்கும்? நிரந்தர அமைதிக்கு நீங்கள் தான் ஒபாமாவுக்கு கடிதம் எழுத வேண்டும். :-)

suvanappiriyan said...

சகோ நிஜாம்!

//மாஷா அல்லாஹ், முல்லா உமரின் கடிதம் படித்து கண்கள் கலங்கிவிட்டான. எந்த ஒரு தகவல் தொடர் இல்லாமல். நவின டெக்கினிலாஜியும் எதுவும் இல்லாமல் அமெரிக்கவை எதிர்த்து போர் செய்கின்றார். ஈமானின் உறுதி இருக்கும் வரை அல்லாஹ் உதவி அவர்களுக்கு என்என்றும் இருக்கும். (ஆமின்)//

அவரது முழு கடிதத்தையும் படித்து பாருங்கள். மிகச் சிறந்த நிர்வாகியாக தெரிகிறார். பக்கத்து நாடுகளுக்கும் எந்த சிக்கலும் இருக்காது என்பதே எனது கணிப்பு. தற்போது பல இழப்புகளை அமெரிக்க ராணுவம் சந்தித்து வருகிறது. தேர்தல் வரை ராணுவத்தை திரும்ப அழைக்க மாட்டார் ஒபாமா. தேர்தலுக்கு பிறகு ஒருகால் வெளியேறலாம.

ஆனால் ஆப்கனின் பூமிக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் பெருமளவில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகிறது. இதனை அபகரிக்க அமெரிக்கா நிரந்தரமாக தங்கினாலும் ஆச்சரியதில்லை. ஆனால் தாலிபான்கள் அவர்களை அவ்வளவு இலகுவாக கொள்ளையடிக்க விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். பார்ப்போம்.....

suvanappiriyan said...

சகோ ஸ்மிதா!

//Pls get the facts right. Majority of the muslims were in favour of a separate state. Many muslims who went to pakistan were driven abck to India & it was Nehru who allowed them back.//

அவ்வாறு இரு தரப்பிலும் மக்கள் சென்று வந்தனர். அவர்கள் அனைவரும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள். தமிழகத்திலிருந்தோ, மற்ற தென் மாநிலங்களிலிருந்தோ எவரும் செல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பிரிவினை முஸ்லிம்களை இந்தியாவில் சிறுபான்மையினராக மாற்ற ஜின்னாவை வைத்து மேலும் சில முஸ்லிம்களை வைத்து இந்துத்வ வாதிகளால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் வரலாறு மாற்றி எழுதப்பட்டது.
உங்கள் தலைவர் அத்வானியின் பூர்வீகமே பாகிஸ்தான்தான்.
//Also, Rajaji warned Gandhi as early as in 1942 that partition is inevitable. Gandhi did not agree. Rajaji was branded anti national & he kept away from active politics.//

பிரச்னை என்றவுடன் ராஜாஜியை அம்போ என்று கழட்டி விடுகிறீர்களே பார்த்தீர்களா?

//3 lakh kashmiri pundits have been mercilessly driven out of Jammu & they live in camps in delhi.//

அவர்கள் காஷ்மீரில் இருந்ததை விட சகல சௌகரியங்களோடு வாழ்ந்து வருகின்றனர் அரசு உதவியோடு. எனவே தான் நிலைமை சீராகியும் அங்கு செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. ஆனால் அவர்கள் திரும்பவும் அங்கு குடியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

//In assam today, hindus are being tortured, killed & driven away because of illegal muslim bangladesh immigrants.//

கலவரத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள். அந்நியர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் வெளியேற்றுவதுதான் நேர்மையான செயல். ஆனால் பிஜேபி யோ இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்து முஸ்லிம்களை மட்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அங்கு குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது.

சமீபத்தில் அங்கிருந்து அனுப்பிய அனைத்து எஸ்எம்எஸ்களும் இந்துத்வா வாதிகளுடையது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கொடுத்த செய்தியை பார்க்கவில்லையா?

//Please face the facts & do not rub salt into the wounds of the hindus.//

வெள்ளைக்காரன் முஸ்லிம்களை அரசு உத்தியோகம் கொடுத்து சிறப்பாகவே வைத்திருந்தான். எங்களின் முன்னோர்களுக்கு தேசபக்தி முற்றிபோய் அரசு வேலைகளை உதறினார்கள். ஆங்கில மொழியை வெறுத்தார்கள். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம். நாங்களும் பிராமணர்களைப் போல வெள்ளையனுக்கு சேவகம் செய்திருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமூகமாக முஸ்லிம்கள் இருந்திருப்பர்.

So please face the fact & do not rub salt and chilly in the wounds of the Muslims..

சிராஜ் said...

சலாம் அண்ணன்..

// ஆனால் ஆப்கனின் பூமிக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் பெருமளவில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகிறது. இதனை அபகரிக்க அமெரிக்கா நிரந்தரமாக தங்கினாலும் ஆச்சரியதில்லை. //

இந்த போறே ஆப்கனின் கனிம வளங்களை கொள்ளை அடிக்க ஏற்படுத்தப்பட்டது தான்... தாலிபன்கள் அமெரிக்காவிற்க்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்... அமெரிக்கா மட்டும் அல்ல, எந்த ஒரு நாடும் ஆப்கனில் நெடுங்காலம் தங்க முடியாது என்பதே எதார்த்தம்.. வரலாறு நெடுகிலும் இதற்க்கான சான்றுகள் அடுக்கடுக்காய் கிடைக்கும்...

சிராஜ் said...

தலிபான்கள் முன்னால் அமெரிக்காவெல்லாம் ஜுஜுபி... இதை படிக்கும் பலர் சிரிக்கலாம்.. ஆனால் இருவருக்கும் சம அளவில் ஆயுதம் கொடுத்து போரிடச் சொன்னால் அமெரிக்காவால் ஒரு வாரம் தாங்குவதே கஷ்டம்.... பந்தாடிவிடுவார்கள்..

இன்றைய நிலையிலும் அமெரிக்க படைகள் வாபஸ் ஆனால் அடுத்த நாள் ஆப்கன் முழுதும் தலிபான்கள் வசம் வந்துவிடும்... அந்த அளவு பரந்து எங்கெங்கும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அவர்கள்...