Followers

Tuesday, May 13, 2014

ஃபாத்திமா சாதனா - முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!




சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி உணவகத்தில் சர்வராக வேலை பார்க்கின்றவர் ஷாஹுல் ஹமீத். வயது 45. இட்லி தோசைகளை சாலையோர தனது கஸ்டமர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த போது தனது மகளிடமிருந்து இப்படி ஒரு இன்பகரமான செய்தி வரும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இவருடைய மூத்த மகள் பாத்திமா சாதனா, உலகின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான IIT-JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.


ஹமீத் காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை செய்து தினம் 300 சம்பாதிக்கிறார். இந்த வறிய குடும்ப சூழ்நிலையிலும் உலகின் சிறந்த இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது தாயார் பஹீரா பேகம் சொல்கிறார் 'என் குழந்தை தேர்வானது மகிழ்ச்சி. ஆனால் பொறியியல் படிக்க வைக்க அதிகம் செலவாகும். அதுதான் எங்களுக்கு கவலையாக இருக்கிறது' என்கிறார். ஆனால் பாத்திமாவின் கவலையே வேறு. அடுத்து IIT-JEE Advanced நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது குறித்துதான் அவருடைய கவலை எல்லாமே.

எத்தனையோ செல்வந்தர்கள் நம்மில் உள்ளனர். ஆடம்பர செலவுகளுக்கு ஒதுக்கும் தொகையை இது போன்ற வறிய மாணவிகளுக்கு ஒதுக்கி இவர்கள் முன்னுக்கு வர உதவலாமே!

தகவல் உதவி

டைம்ஸ் ஆஃப் இந்தியா

---------------------------------------------------------------------------

உலகின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான IIT-JEE நுழைவுத் தேர்வு பற்றிய முழு விபரம் விக்கி பீடியாவிலிருந்து.

இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (வெகுவாக ஐஐடி நுழைவுத்தேர்வு அல்லது நுழைவுத்தேர்வு என அறியப்படும்) இத்தேர்வு ஆண்டுதோறும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. 15 இ.தொ.கழகங்களைத் (பழையன:7;புதியன:8) தவிர தொழில்நுட்பக் கழகம்,பனாரசு இந்து பல்கலைக்கழகம்,வாரணாசி மற்றும் இந்திய சுரங்கவியல் பள்ளி பல்கலைக்கழகம் (Indian School of Mines University,ISMU) தன்பாத் கல்வியகங்களும் தங்கள் கல்லூரிச் சேர்க்கைக்கு இத்தேர்வை மையமாக கொண்டிருக்கின்றன. 2007ஆம் ஆண்டிலிருந்து புதிதாக நிறுவப்பட்ட.....

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கழகங்கள் (Indian Institutes of Science Education and Research),கொல்கொத்தா,புணே,மொகாலி,போபால்,திருவனந்தபுரம்
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Space Science and Technology),திருவனந்தபுரம்
இந்திய கடல்வழி ஆய்வுகள் கழகம் (Indian Institute of Maritime Studies), மும்பை
இராசீவ் காந்தி பாறைநெய் தொழில்நுட்பக் கழகம்(Rajiv Gandhi Institute of Petroleum Technology),ரே பரேலி,உத்திரப் பிரதேசம்

கல்விக்கூடங்களும் இத்தேர்வின் விரிவாக்கப்பட்ட தகுதிப்பட்டியலை (Extended Merit List) தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன.

இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இ.தொ.கவினால் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் இக்கழகங்களில் நடத்தப்படும் இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes),ஒருங்கிணைந்த இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப பட்டங்கள், ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் பாடதிட்டங்களுக்கும் சேர தகுதி பெறுகிறார்கள்.45 பேருக்கு ஒருவர் வெற்றி வாய்ப்பு பெறும் இத்தேர்வு உலகின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டிற்கான தேர்வில் 384,977 பேர் பங்குகொண்டனர்;அவர்களில் 10,035 பேர் தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு-2009 ஏப்ரல் 12,2009 நடத்தப்பட்டது. இதில் மூன்று மணி நேரம் கொண்ட இரு வினாத்தாள்கள் இருந்தன. இரு தாள்களிலுமே கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் வினாக்கள் இருந்தன (2007க்கு முந்தைய ஆண்டுகளில் இவை ஒவ்வொன்றிற்கும் இரண்டு மணி நேர அளவிலான தனி தாள்கள் இருந்தன). வினாக்கள் மத்திய உயர்நிலைப்பள்ளி வாரியம்(CBSE), இந்திய பள்ளிச்சான்றிதழ் வாரியம் (ISC) பாடதிட்டங்கள் அடிப்படையில் அமைந்திருக்கும்.மனனம் செய்து வெற்றி பெறவியலாத வகையில் வினாக்களும் வடிவமும் மாற்றங்களைக் கொண்டிருக்கும்.தற்போது விடைத்தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறை பயன்படுத்தப்பட்டு விடைத்தாளகள் தானியங்கியாக ஒளிமுக அடையாள அறிதல் (Optical mark recognition) முறையில் மதிப்பிடப்படுகின்றன.

மாணவர்களால் இத்தேர்வினுக்குக் கொடுக்கப்படும் சிறப்பிற்கேற்ப இதனை நடத்த மிக கடுமையான செயல்முறையை பின்பற்றுகிறது. பங்குபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களிலிருந்து நியமிக்கப்பட்ட ஒ.நு.தே செயற்குழு இத்தேர்வினை மிகுந்த பாதுகாப்பிற்கிடையே நடத்துகிறது. தயாரிக்கப்படும் பல வினாத்தாளகளில் தேர்வுநாளன்று வரவிருக்கும் வினாத்தாளை மிகக் குறைந்த நபர்களே கையாளுகிறார்கள்.


http://ta.wikipedia.org/wiki/IIT-JEE

No comments: