Followers

Sunday, May 18, 2014

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்!



(புகைப்படத்தில் இருப்பது இளவரசர் சுல்தான் பின் சல்மான் மற்றும் அனடோலி இவானிஷின்)

ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் 'இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு' வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பெயர்கள் முறையே அனடோலி இவானிஷின் (Anatoly Ivanishin), Andrey Borisenko, Alexander Samokutyaev, Anton Shkaplerov, Boris Meshcherykov (உச்சரிப்புக்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் :-))

அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது 'நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை. சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம். அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்" என்றார்.

PSSO என்ற அமைப்பானது சவுதி அரசால் லாப நோக்கமற்று நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் மக்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும், விண்வெளியின் பல புதிர்களை விடுவித்து மக்களுக்கு அதன் அறிவை சேர்ப்பிக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் சுல்தான் பின் சல்மான் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மதினா நகரத்து மேயர் பேசும் போது 'நீங்கள் ரஷ்ய தேசத்தவராக இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு விண்வெளி வீரர்களான நீங்கள் பொதுவானவர்கள். அது போல் நானும் சவுதிக்கு மட்டும் சொந்தமானவல்ல. உலக மக்களுக்கு பொதுவானவன். நாம் அனைவரும் இந்த உலக மக்களுக்கு சேவையாற்ற படைக்கப்பட்டுள்ளோம். 700 மில்லியன் உலக மக்களில் உங்களைப் போன்ற ஒரு சில விண்வெளி வீரர்களுக்கே விண்வெளிப் பயணம் சாத்தியமானது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இளவரசர் சுல்தான் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட மிகவும் உதவிகரமாக இருக்கிறார். இந்த அமைப்பு ஆரம்பித்த போதும் இந்த வீரர்கள் சவுதி வந்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வந்துள்ளனர். இவர்களின் தொடர்பானது சவுதி இளைஞர்களின் விண்வெளி ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள் எனக்கு விளக்கிய போது மெய் சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால் மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதோடு எனது இதயத்திலும் அந்த நிகழ்வை உள் வாங்கிக் கொண்டேன். மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள் அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும். தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட அதிக ஒளி வெள்ளத்தில் மதிக்கிறது. ஆனால் குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும் புனித நகரங்களாக அறிவிக்கிறான். அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த வீரர்களுக்கும், உலகின் பல கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல இறைவன் ஏற்றுவானாக!' என்ற பிரார்த்தனையோடு முடித்தார்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
18-05-2014

'எல் பிஜான்' என்ற மற்றொரு வளைகுடா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியையும் ஆங்கிலத்தில் தருகிறேன்.

Mecca and Medina are two bright cities on earth. There were Russian cosmonaut, Anatoly Ivanichen, who in an interview with the newspaper "El Bejan" UAE has discovered the phenomenon in question. During the interview Ivanichen among other things, said: "We tried to get pictures from space of some cities that are known for their brightness, such as Paris, some areas of Europe and North America, but the images were unclear when caught . Later, we decided that the ship crew co drejtonim to the Arabian Peninsula to see if it would be possible to assure other view from space. I was surprised when we saw two completely lit cities, images of which are clearly distinguished. Once we determine the country and had taken pictures of money in order to make their control, our surprise grew even more when we learned that carried pictures belonged exactly Mecca and Medina. " "The area on which we focused our lenses of high quality had not yet reached the sunlight, but despite this, we managed to take some photos that were very clear and their views were very beautiful," quoted be expressed in following his story for the newspaper Russian scientist, Anatoly Ivanichen.



--------------------------------------------------------

'ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் தருகாபன் மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்துரை செய்யும்.'
-ரிக் வேதம்: 10:155:3


நலந்த விஷால் ஷப்த்சாகர் அகராதியானது தருகாபன் என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணியஸ்தலம் என்று பொருள் கூறுகிறது. பாலைவனத்திலுள்ள இறை இல்லம் கஃபாவைத்தான் இங்கு குறிப்பிடப்படுகிறது. பவிஸ்ய புராணமும் இதே கருத்தையே கொடுக்கிறது. இந்து மத வேதங்களும் ஏக இறைவனையே வழிபட சொல்கிறது.

16 comments:

suvanappiriyan said...

திரு ஜடாயு!

//இந்தியா முழுவதிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பல தொதிகளில், முஸ்லிம் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தொகுதி வாரியாக, வாக்குச்சாவடி வாரியாக விழுந்துள்ள வாக்கு எண்ணிக்கை விவரங்களைப் பார்க்கையில் தெரிய வருகிறது.//

முஸ்லிம்களின் ஆதரவை மோடி பெற்றிருந்தால் அது பற்றி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தன்னை நம்பி ஓட்டளித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது ஒரு பிரதமரின் கடமை. அதனை சரி வர செய்ய வேண்டும் என்பதே என் போன்றோரின் எதிர்பார்ப்பு.

//மூளைச்சலவையிலிருந்தும், மூடிய குறுகலான கண்ணோட்டங்களிலும் இருந்து வெளியே வந்து கண்ணைத் திறந்து பார்க்கட்டும். உங்கள் பம்மாத்து வேலைகளையும் பூச்சாண்டி காட்டுதலையும் விட்டு விட்டு, உருப்படியாக ஒன்றிணைந்து தேசத்தை முன்னெடுத்துச் செல்வதில் கைகொடுங்கள்.//

எந்த ஒரு மனிதனும் தனது நாடு வன்முறையை நோக்கி செல்வதை விரும்ப மாட்டான். எல்லா மக்களும் எல்லா இன்பமும் பெற்று சுகமாக வாழ வேண்டும் என்பதே என் போன்றோரின் ஆசை. பம்மாத்து வேலைகளுக்கோ, பூச்சாண்டி காட்டுதலுக்கோ எந்த ஒரு அவசியமும் என்னைப் பொன்றவர்களுக்கு எந்நாளும் ஏற்படப் போவதில்லை. எனது மார்க்கம் எனக்கு அதனை போதிக்கவும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//இந்து மத வேதங்களும் ஏக இறைவனையே வழிபட சொல்கிறது. //

ஒரே கடவுளைத்தான் பல வடிவங்களில் ஹிந்துக்கள் வணங்குகின்றனர். ஏகத்துவத்தை உண்மையாக புரிந்துகொண்டவர்கள் ஹிந்துக்களே. ஒரே கடவுள்தான் எண்ணற்ற வடிவங்களாக, படைப்புகளாக காட்சி தருகின்றது. இதை ஹிந்துக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர்.

yalali1956 said...

If Hindus accept monotheism then there is no question of attributing different ideas to the one and only creator of this universe. According to vedas the characteristic of the almighty god is clearly indicated and he is stated as the unique. If so where did u get u r gods for region, community, family, and individual are not the same and that unique one stated in your vedas.
I suggest you please go to your own original vedas and with the help of a learned pundit in San skirt study and research to understand the truth.

suvanappiriyan said...

//I suggest you please go to your own original vedas and with the help of a learned pundit in San skirt study and research to understand the truth.//

Thanks for your comments Mr Yalali.

suvanappiriyan said...

பவிஷ்ய புராணா

வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.

- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.

மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.

'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

ரிக் வேதம்

'மா சிதான்யாத்வி சன்ஷதா'

'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'

ரிக் வேதம் 8 : 1: 1

'யா எகா இத்தாமுஸ்துதி'

'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'

ரிக் வேதம் 6 : 45 : 16

ஆனந்த் சாகர் said...

ஆன்மீக அறிவு துளிகூட முகம்மதுவுக்கு இருந்ததில்லை. அந்த அறிவிலிக்கு தெரிந்ததெல்லாம் வெறும் பௌதீக உலகம் மட்டுமே. அவர் விவரித்த சொர்க்கமும் நரகமும் கூட பௌதீக உலகம்தான். மற்ற பரிமாணங்களில் உள்ள யதார்த்தங்களை, ஆன்மீக உலகங்களை பற்றி அவருக்கு எந்த அறிவும் அனுபவமும் இருந்ததில்லை. அவர் தன்னை அல்லாஹ்வின் தூதரென்று பொய்யாக கற்பனை செய்துகொண்டு தன் சமூகத்தில் இருந்த அறியாமையில் இருந்த மனிதர்களை நன்றாக ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்தார். அவரை ஏற்காதவர்களை பயங்கரவாத செயல்களின்மூலம் படுகொலை செய்து தன்னுடைய அதிகாரத்தை அரேபியாவில் ஸ்தாபித்தார். ஆன்மீகத்துக்கும் அவர் ஸ்தாபித்த பொய் மதமான இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை.

முஹம்மதுவை கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றுவதால் முஸ்லிம்களுக்கும் உண்மையான ஆன்மீகத்தை பற்றி எதுவுமே தெரியவில்லை, அவர்கள் தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. இதன் காரணமாகத்தான் ஆன்மீக உண்மைகளை எடுத்து சொன்னாலும் முஸ்லிம்களுக்கு புரிவதில்லை. ஆன்மீக அனுபவங்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஆன்மீக உண்மைகள் புரியவேண்டுமென்றால் முஸ்லிம்கள் முஹம்மது போட்டுள்ள விலங்குகளை உடைத்து எறிந்து அவர் ஏற்படுத்திய பொய் உலகிலிருந்து வெளியேற வேண்டும்.

ஆனந்த் சாகர் said...

பாவிஷய புராண கதையெல்லாம் எடுபடாது. உங்களுடைய திரிபு வேலை எந்த பயனும் அளிக்காது.

ஆனந்த் சாகர் said...

//If Hindus accept monotheism then there is no question of attributing different ideas to the one and only creator of this universe.//

இது உங்களுடைய, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அறியாமையை காண்பிக்கிறது. கடவுள் என்பது எது, அது எப்படி பட்டது, நாம் யார், இந்த ஒட்டுமொத்த பிரமாண்ட பிரஞ்சம் என்பது எது, அது எப்படி உருவாகிறது என்பதை பற்றிய ஆன்மீக அறிவியலை உணர்ந்து அனுபவித்து அறிந்து கொள்ளாததால்தான் முஸ்லிம்களாகிய நீங்கள் உலகிலேயே மிகவும் அறியாமைமிக்க மனிதர்களாக இருக்கிறீர்கள்.

// According to vedas the characteristic of the almighty god is clearly indicated and he is stated as the unique.//

கடவுடைய தன்மை தனித்துவமானது என்பதை வேதங்கள் கூறுகின்றன. உண்மைதான். வேதங்கள் முழுமையான ஆன்மிகம் என்பதை நான் ஏற்கவில்லை. வேதங்களில் ஆன்மீக உண்மைகள் இருக்கின்றன. ஆனால் அதையும் தாண்டிய ஆன்மீக உண்மைகள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் வேதங்கள் இறுதி வடிவம் அல்ல. வேதங்களை அந்த கால ரிஷிகளின் அனுபவங்கள் என்றுதான் கூறுகிறோம். குரானை முஸ்லிம்கள் நம்புவதை போல, வேதங்களை கடவுளின் நேரடியான வார்த்தைகள் என்று நாங்கள் நம்புவதில்லை.

// If so where did u get u r gods for region, community, family, and individual are not the same and that unique one stated in your vedas.//

இருப்பது ஒரே ஒரு யதார்த்தம்தான். அதுதான் பிரம்மம், அதாவது கடவுள். அதை தவிர வேறு எதுவுமே இல்லை. இருப்பது எல்லாமே பிரம்மம்தான். அந்த ஒரே கடவுளின் பிரதிபலிப்புதான் எண்ணற்ற பௌதீக பிரபஞ்சங்களும் ஆன்மீக யதார்த்தங்களும். ஒவ்வொரு அணுவும் கடவுளின் பிரதிபலிப்பு. கடவுள் வேறு படைப்பு வேறு அல்ல. கடவுள் படைப்பிலிருந்து பிரிந்து தனியாக இல்லை. ஒவ்வொரு படைப்புக்கு உள்ளும் கடவுள் இருக்கிறது. உயிருள்ளவை உயிரற்றவை அனைத்திலும் கடவுள் இருக்கிறது. ஒரே கடவுள்தான் எண்ணற்ற படைப்புகளாக பிரதிபலிக்கிறது. நாம் வேறு கடவுள் வேறு கிடையாது. நாம் தான் கடவுள். நாம் அனைவரும் ஒரே கடவுளின் அங்கமே. இதுதான் ஆன்மீக உண்மை. இந்த உண்மையை தியானத்தின் மூலம் அனுபவித்து அறிந்து கொள்ளலாம். இதைதான் அத்வைதம் அல்லது மோநிசம்(monism) என்று அழைக்கிறோம். இந்த ஆன்மீக உண்மைகளை இறந்து பிறகு உயிருடன் திரும்பிய லட்ச கணக்கான மனிதர்களின் அனுபவங்களும் (NDE - Near Death Experience) உண்மைபடுதுகின்றன.

மனிதர்களாகிய நாம் எதை வணங்குகிறோம், நாம் யார், நாம் என்ன செய்கிறோம் என்பதை பற்றி கடவுள் பொருட்படுத்துவதே இல்லை. அது எவருக்கும் தீர்ப்பு வழங்குவதும் இல்லை. அது அனைத்தின்மீதும் எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக அன்பு செலுத்துகிறது. அதனுடைய இயல்பு அன்பு செலுத்துவது மட்டுமே. புத்தராகவும், கிரிஷ்ணராகவும் யேசுவாகவும் நானாகவும் நீங்களாகவும் நாம் எதை கடவுளாக நினைக்கிறோமோ அதுவாகவும் அந்த ஒரே கடவுள்தான் இருக்கிறது.

Sabira said...

Pls dont talk about islam without read the quran if you want buy and read it thoroughly then comment here.

ஆனந்த் சாகர் said...

//Pls dont talk about islam without read the quran if you want buy and read it thoroughly then comment here. //

உங்களுக்கு எந்த அளவுக்கு இஸ்லாமிய கொள்கைகளை பற்றி தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். நான் குரானை இறை வேதம் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில் அதை முழுமையாக இரண்டு தடவை படித்திருக்கிறேன். நான் கிட்டதட்ட 20 ஆண்டு காலம் அதனுடன் தொடர்பில் இருந்தவன். மேலும் ஓரளவு ஹதீஸ்களையும் படித்திருக்கிறேன். இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் மூன்று தமிழ் மொழிபெயர்ப்புகளையும் வைத்திருந்தேன். ஒரு சராசரி முஸ்லிமைவிட எனக்கு இஸ்லாத்தை பற்றி நன்கு தெரியும்.

yalali1956 said...

To Mr. Ananda Sahar at 10.03PM, 10.06PM and 10.56PM,

I thought you were a learned Hindu pandit and suggested to read your VEDAS AND UPANISAD .
Unfortunately you are a idiotic idle worshipper who has neither the knowledge of his own path of believe or common knowledge of other religions. So its clear that you are a utter worst person to first yourself and to this world.
You read your statement again, if all what created are the same as the creator there is something seriously wrong in you i mean your brain. For the sake of argument if we accept your theory, why you people don't allow thaliths and low cast people into your temples ( according to you all are god ) why you eat vegetable (according to you, you are eating your god means god eates god) what a fantastic theology.
Hey listen If we don't know or not sufficient knowledge of some thing there is no harm asking learned men.
First of all you are confused in your theology theory and hardly knowledge in your own vedas or sanskrit and last of all so adamant that you won't accept or search the truth. so for you what i can give is this :

https://www.youtube.com/watch?v=UZiG325fD5o

https://www.youtube.com/watch?v=mTUxH_daX7o

If you are wise or really want truth search your self.

ஆனந்த் சாகர் said...

திரு. யலாளி!(சரியா?),

//I thought you were a learned Hindu pandit and suggested to read your VEDAS AND UPANISAD //

நான் வேதங்களையும் உபநிஷத்துகளையும் கரைத்து குடித்த வேத பண்டிதர் என்று எப்பொழுது சொன்னேன்? நீங்களாக தவறாக கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்ய முடியும்? உங்கள் கற்பனை உங்களுக்கு, என்னுடைய கற்பனை எனக்கு!!!(''லக்கும் தீனுக்கும் வலியதீன்'' ஸ்டைலில் படிக்கவும்!!!)

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

திரு.யலாளி,

//Unfortunately you are a idiotic idle worshipper who has neither the knowledge of his own path of believe or common knowledge of other religions. //

அதானே பார்த்தேன்! என்ன கோபம் தலைக்கு ஏறி விட்டதா? உங்கள் வயசுக்கு இவ்வளவு கோபம் கூடாது. அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல! பொறுமை, நிதானம் அவசியம்.

//So its clear that you are a utter worst person to first yourself and to this world.//

அப்படியா? சரி, சரி!!! உங்கள் குழந்தைதனத்தை கடந்து செல்கிறேன்!

//You read your statement again, if all what created are the same as the creator there is something seriously wrong in you i mean your brain. //

உங்களால் இந்த உண்மையையே புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் பல விஷங்களை சொன்னால் தாங்குவீர்களா? பௌதீக உலகில் இருந்துகொண்டு நம்பமுடியாத, ஆனாலும் உண்மையான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த உண்மைகள் உங்களுக்கு புரிய வேண்டும் என்றால், உங்கள் மூளை இன்னும் சிந்தனை முதிர்ச்சி அடைய வேண்டும். உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வரவேண்டும். புதிய விஷயங்களை எவராவது சொன்னால் உடனே கோபப்படக்கூடாது. சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்களை சொல்வேன்!

//For the sake of argument if we accept your theory, why you people don't allow thaliths and low cast people into your temples ( according to you all are god )//

ஆன்மீகத்துக்கும் சாதி அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மதம் வேறு, ஆன்மிகம் வேறு. ஆன்மீக வளர்ச்சி அடையாதவர்கள்தான் சாதியை கடைபிடிக்கிறார்கள். உண்மையான ஆன்மீகத்தில் எந்த சடங்கும் இல்லை, வழிபாடும் இல்லை, எனவே சாதியும் இல்லை. இன்றைய சாதி அமைப்பு ஹிந்து மதத்தில்(தர்மத்தில்) பிற்காலத்தில் ஏற்பட்டுவிட்ட ஒரு சமூக தீமை. ஹிந்துக்களிடம் ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்போது இந்த சாதி என்கிற தீமை தானாகவே ஒழிந்துவிடும்.

// why you eat vegetable (according to you, you are eating your god means god eates god) what a fantastic theology.//

பௌதீக யதார்த்தத்தை(physical reality ) கடவுள் இப்படி அனுபவிக்கிறது. நீங்கள் கேட்டால் விளக்கமாக கூறுகிறேன். மனித அனுபவத்தை கொண்டிருக்கிற கடவுள் நாம்(We are God having human experience ).

Meezan - தராசு said...

Dear Bro Aanada sahar,
it seems you have not waatched the video links which i have provided to you.
nobody is perfect in the knowledge of the creator of this universe, so it is no harm to listen to learned people of the comparative religion.
according to you, it is not necessery to learn sanskrit or vedas. then there is no point of having ddialogue with you.
quran says # Truth has come and falsehood disappeared and verly falsehood will perish # further it says # There is no compulsion in the religion # i pray the almighty to guide you to the true path .

suvanappiriyan said...

சகோ யாழாளி!

// i pray the almighty to guide you to the true path .//

உங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வானாக! உங்களின் பின்னூட்டங்களுக்கும் நன்றி!

ஆனந்த் சாகர் said...

/////சகோ யாழாளி!

// i pray the almighty to guide you to the true path .//

உங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!/////

ஆமென்(ஆமீன்).