Followers

Wednesday, June 11, 2014

இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அவர்களை காத்த முஸ்லிம்கள்!



கடந்த வாரம் புனேயில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் முஃஸின் ஷேக் 30 க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பலால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் இன்னும் 2 முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டது. காலையில் தொடங்கிய இந்த வன்முறை மறுநாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
தற்போது அந்த கலவரத்தை ஆராய்ந்த குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது, அதில் சம்பவம் நடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ம் தேதிகளில் குறிப்பிட்ட சில பேக்கரி மற்றும் முடி திருத்தும் கடைகள் சரியாக கலவரம் நடக்கும் நேரத்தில் மூடி இருந்தது, அவர்களுக்கு எப்படி தெரியும் அது மட்டுமல்லாது மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்த கடைகளின் பெயர்கள் உள்ளன, அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.

ஆனால் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து கடைகளும் உருது மொழியில் எழுதப்பட்ட முஸ்லிம்கள் கடைகளாகும், ஆகவே, முன் கூட்டியே இந்துக்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கியதாக, திட்டமிட்ட செயலாகவே உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sources:-

http://timesofindia.indiatimes.com/india/Violence-that-killed-Pune-techie-planned/articleshow/36268460.cms

-----------------------------------------------------------------

புனே: புனே தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின் மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமூகவலைதளமான பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது புனே நகரில் பதட்டத்தை உண்டாக்கியது.

அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, பேஸ்புக் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், ‘அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.

கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அப்பகுதி மக்கள் தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் முதலிய பண்டிகைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/muslims-safeguard-hindus-hadapsar-post-the-pune-muslim-techie-murder-203133.html

இன்னா செய்தாரே ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

No comments: