Followers

Showing posts with label காப்பி பேஸ்ட் :-). Show all posts
Showing posts with label காப்பி பேஸ்ட் :-). Show all posts

Tuesday, October 10, 2017

ஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு?



ஆரியர்கள் நம் நாட்டின் பூர்வ குடிகள் அல்ல என்பதை அவர்களின் தோற்றங்களையும் பேசும் முறைகளையும் வைத்தே நம்மால் ஊகித்து விட முடியும். இது பற்றிய பல செய்திகளை ஆதாரங்களோடு 'வழிப்போக்கன்' என்ற பதிவர் தனது தளத்தில் பதிவுகளாக பதிந்துள்ளார். அதனை இனி பார்போம்.

அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத்தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்"
என்றே "பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்" என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

Saturday, June 27, 2015

கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்



தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற்கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்...

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)


Thursday, June 11, 2015

இந்து மத வேதத்தில் சாதியை காட்ட முடியுமா?

//இந்து மத வேதத்துல சாதிபேதம் இருக்கிற ஒரேயொரு வரியை காட்டுங்க எசமான்.... இராஜாராம் மோகன்ராய்ல ஆரம்பிச்சு, விவேகானந்தர், காந்திக்கு அப்புறமா, அம்பேத்கரையும் தாண்டி இப்போ நானும் கேக்கேன்.....//

-Ram nivas

இதற்கு சற்று விரிவான பதிலையே காப்பி பேஸ்டாக தருகிறேன் :-)

இந்து மதம் என்று இன்று முன்னிருத்தப்படுகிற வேதங்களை ஒத்துக்கொள்ளும் எந்த தத்துவப்பிரிவும் மனிதனுக்கு எதிரானது. பெண்களையும் உள்ளடக்கியே! இதில் யோனி-லிங்க வழிபாடுகள், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் சித்தரிக்கும் வழிபாடுகள் போன்றவை வேத மதங்களுக்கு எதிரானதாக உண்மையில் தோன்றிய தந்திரா வகை தத்துவங்களை சேர்ந்தவை. அதே போன்று வேத மதங்களை எதிர்த்தே 2300 ஆண்டுகளுக்கு முன்னேயே புத்தரும் தோன்றி இந்தத் துணைக்கண்டமெங்கும் மனித விரோத வேத மதங்களை (இன்றைய இந்து மதமாக முன் வைக்கப்படும் உள்ளீட்டை) வீழ்த்தி அப்புறப்படுத்தினார். இதற்காக அவர் மேற்கொண்ட விவாதங்கள், எதிர்கொண்ட சதிகள் போன்றவைகளை பெளத்த- சமண தத்துவங்களில் பரிச்சயம் கொள்ள முனையும் யாவரும் அறியலாம். தென்னிந்தியாவில் தோன்றி இருந்த உலகாயத்தை முன்வைத்த தத்துவப்பிரிவுகள் மிக எளிதாக பெளத்தத்தோடு இணங்கி, பரவிவந்த வேத அடிப்படை கருத்துக்களை எதிர்கொண்டதற்கான குரலை திருக்குறளிலும், மற்ற காப்பியங்களிலும் காணலாம். புத்தரின் இந்த வெற்றியைத் தொடர்ந்தே கர்ம காண்டமாகிய வேதமதங்கள் யாகம் போன்ற சுரண்டல் வழிகளை குறைத்துக்கொண்டன. சாதி என்ற வருண அமைப்பின் மீதான அதன் பிடி தகர்ந்துபோனது.

புத்த மத்தின் தாக்கங்களாலேயே ஞானமார்க்கங்கள் தளிர்விடத்துவங்கி உபநிடதங்கள் தோன்ற ஆரம்பித்தன. பெளத்த நெறிகளை வேராகவும் தந்திரா போன்ற வழிபாட்டு முறைகளை தனது உடலாகவும் கொண்ட சன்மதங்களை ‘பிரசன்ன பெளத்தராகிய‘ சங்கரர் ஸ்தாபித்து அவற்றின் மூலம் வேத மேலாண்மையை மீளக்கொண்ர்ந்தார். அதற்காக பிராமணீயம் அவருக்கு தீராத கடன்பட்டிருக்கிறது. வேத தத்துவங்களை அதன் மனித விரோத தன்மைக்காக புத்தர் தொடங்கி (புத்தருக்கு முன்பாகவே செயினர், சார்வாகர்கள், சாக்கியம், லோகாயத்தின் பலபிரிவுகளும் இந்த எதிர்ப்பைச் செய்திருந்தாலும்) பல நூற்றாண்டுகளாக பல ஞானிகளாலும், சித்தர்களாலும் எதிர்க்கப்பட்ட உழைக்கும் சமூக விரோத, ஆணாதிக்கச் சிந்தனைகள் என அடையாளங்காட்டப்பட்ட ஒன்றை அம்பேத்காரும், பெரியாரும் ஒழிக்க நினைத்தது, முயன்றது ஏதோ நேற்று நடந்த சமூக மாற்றமோ, ஒரு சாதிக்கு எதிரானதோ அல்ல. பாரத தேசத்திலே புத்தமதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும் படி செய்தது என்கிறார் பாரதி (பாரதியின் பகவத்கீதை). சாஸ்திரங்கள், இதிகாசங்களை முற்றாகப் புறக்கணித்து உபநிடதங்களின் மேலாக சாதி/ வருண மறுப்பைத் தொடர நினைத்த ஆரியசமாஜம் போன்ற செயல்பாடுகளும் வேதக்கொடுமைகளை ஒழிக்கக் கிளைத்தவையே. இந்த சீர்திருத்தங்களும் ஏனைய வேத மதங்களின் உள்ளேயே நடந்த மற்ற சீர்த்திருத்தங்களை (இராமனுஜர் போன்ற) போல வருணாஸ்ரமத்தையும், மனுவையும் தாங்கி நிற்கும் பகுதியினரால் வெற்றிகொள்ளப்பட்டன. இப்போது இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? 2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு (அதைக்காப்பற்ற முனைகிறவ்ர்களுக்கு) வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா?இவைகளைப் பார்ப்போம்.

1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன.

மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10).

இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது.

brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: |

ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 ||

(asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:)
the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:)
Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were
made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet
(shoodro) were the servants (ajAyata) born.

அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழிகளின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் பரிணாமவளர்ச்சியில் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும் புரிந்துகொள்ள முடியும். இதனால் தான் வர்ணாசிரமத்தை இத்தனை ஆழமாகவும், ஆண்டுகளாகவும் இந்திய சமூகத்தில் காப்பாற்ற முடிந்தது. சமயச் சீர்திருத்தக்காரர்களால் (இராமானுஜர் போன்ற) நிலையான எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமும் அவர்கள் வருணாசிரமத்தின் வேராகிய வேதத்தை மறுக்காததுதான்; ஒழிக்காததுதான். சரி, இந்த வேதமும், மனுவும் ஒழியட்டும். பதிலாக இன்று இந்துக்களின் புனித நூலாக காட்டப்படும் பகவத் கீதையாவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் வருணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாயும், சாதிக்கலப்பு நடந்துவிடக்கூடாதென பதைப்பதாகவும் இருக்கிறது. பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலேயே பிறப்பதாக பெண்களைப்பற்றிய கருத்தை விதைக்கிறது. இது தொடர்பான ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், அதைத்தொடர்ந்து நான் எனது பதிவில் எழுதிய கீதையின் பெயரில் சில கட்டுரைகளும் படிக்கத் தக்கன. தவிர வேதமும், மனுவும் சொல்லும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தையும், மற்ற நீச பாசைகளைப்பற்றிய குறிப்புகளையும் அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்:

வைணவத்திலும் சரி… சைவத்திலும் சரி… தமிழ் இப்படி தள்ளிவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.

சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.
“தஸ்மாது ப்ராம்மணேன
நம்லேச்சித வை
நம அபபாஷித வை…”

இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை.
அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை… அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மை யற்ற பாஷை… என்கிறது வேதம். இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார்.

“…தயோ ரேவ அந்ததம் கிரியோஹா
தேவ நதியோஹா யதந்தரம்
தம்தேவ நிர்மிதம் தேசம்
ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…”

அதாவது… விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத்தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்… இந்த பகுதியை தவிர… மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை….

2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா? இந்தகேள்விதான் முதல் கேள்வியைவிட முக்கியமானது. இதற்கான பதிலே இந்துமதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என சொல்லவைக்கிறது. இந்து மதமென்ற இன்றைய நிறுவனம் பலம் பெறும்போது அது வருணாசிரமத்தை, சாதிய படிநிலையை, பெண் அடிமைத்தனத்தை கண்டிப்பாக முன்னெடுக்கும், வலியுறுத்தும். வருணாசிரமத்தை நடைமுறைப்படுத்த அது எந்த வழிமுறையையும் கையாளத் தயங்காது என்பது பலமுறை நிரூபனமான ஒன்று. சமூக வரலாற்றை கூர்ந்து நோக்கும் எவரும் இன்றைய நவீன உலகில் கூட இதைச் செய்யத்தயங்காத இந்துத்துவ சக்திகளின் செய்லபாடுகளை அறியலாம். இது எங்கெங்கே எந்த விதத்தில் நடந்தது? பட்டியல் போட்டுக்காட்டுக என்று நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்கள் அக்கறையின் பேரில் கொஞ்சம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்துக்கு வருணாசிரமத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய கடமையும் இருந்தது, அதற்காக மறைந்த சந்திரசேகர சரஸ்வதியின் தலைமையில் அது இந்திய துணைக்கண்ட (பாகிஸ்தானை உள்ளடக்கிய) அளவில் பாரிய முயற்சியை முன்னெடுத்தது என்பதை இங்கு சொல்லவிரும்புகிறேன். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காரணத்தால் தான் அது நடக்காமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவில் வருணாசிரமம் சட்டபூர்வமாக (இன்று மட்டுமென்ன வாழுகிறது!) ஆக்கப்பட்டு சாதியச் சுரண்டலும் பெண்ணடிமைத்தனமும் செய்யபட்டிருக்கும். இதை வெகு முனைப்போடு செய்ய இந்திய அளவில் தமது திறனனைத்தையும் பயன்படுத்தியதால் தான் அவரை ‘மகா பெரியவர்‘ என்று அழைக்கிறார்கள் போலும். இதை யாரோ திகவில் இருந்தவரோ, பெரியார் அடிப்பொடியோ சொல்லவில்லை. வருணாசிரமத்தை சட்டப்பூர்வமாக்க மகாபெரியவரின் ஆக்ஞையை ஏற்று உழைத்த அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் நக்கீரனில் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற கட்டுரைத் தொடரிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். (அது இப்போது நூலாக வெளிவந்துள்ளது). வருணாசிரத்தை சட்டப்பூர்வமாக்க ஆடுதுறையில் நள்ளிரவில் அந்தணர்களைக் கூட்டி மீட்டிங் போட்டு செயல்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘மகா பெரியவர்‘. தாத்தாச்சாரியார் எழுதுகிறார்…

இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்.

“ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க… சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர். ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்…`தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார்.

என்ன ஸ்வாமீ?… என்றேன்.

“நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும்.

அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?… நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும். ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும். `பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம். இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்… அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன். தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்… அதை நீர்தான் பண்ணணும்’ என்றார்.

அப்போது… `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங் களுக்கெல்லாம் விஜயம் செய்து… ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன. அந்த வகையில்… சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது. இதையறிந்த மகாபெரியவர்… உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அப்போது… `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று.

டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.

நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். ‘oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்… ‘We meet tonight’ என்றார்.
அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.

சோரன்சன்: Welcome. What do you want?

நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”.

சோரன்சன்: Oh… it is very serious matter… give me a memorandam and meet me in Delhi என்றார்.

நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு… “வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்… மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்துவிட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.

`வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

இதன் பிறகு… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம். அவர்களோ “உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள். சரி… என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்… மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு… “சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை.
முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்…’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல். நான்… `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்… பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மகாபெரியவரிடம் சொன்னபோது… `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். ……………

ஏதோ நேரு உறுதியாக இருந்ததால் பிழைத்தோம். அப்புறமும் இந்து மடங்களின் உரிமைகளைக் காக்க (அதாவது வருணாசிரமத்தை அவை வலியுறுத்த இருக்கும் சுதந்திரத்தை, அதிகாரத்தை காக்க) அவர் நாடளாவிய மடாதிபதிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு விழித்துக்கொள்ளாத வடநாட்டைச் சேர்ந்த மற்ற மடாதிபதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி நிறைவேறாமல் போன வருணாசிரமத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றத்தான் பஜகவும் RSS உயிரைக்கொடுத்து (எடுத்து) உழைக்கின்றன.

உயிரைக் கொடுத்து எடுத்து உழைக்கின்றன***

நண்பர்களே இந்தவிசயமாக குறைந்தது 2500 வருடங்களாக வேலைகள் நடக்கின்றன. கண்ணைத் திறந்து பார்க்கவேண்டியதுதான் தேவை. அதே சமயம் இந்து சமயத்தில் அப்படி எதுவுமே இல்லை; அதைப்பற்றிய தவறான பிரச்சாரங்கள் பெரியாரின் சாதிய துவேசம் என்று சாதிப்பது புதியவர்களின் கண்ணைக்கட்டும் உத்திகளுள் ஒன்று. பெரியாருக்கு சாதித் துவேசம்? அம்பேத்காருக்கு? பாரதிக்கு? தயானந்த சரஸ்வதிக்கு (ஆர்யசமாஜம்)? சித்தர்களுக்கு? புத்தருக்கு? இன்னும் இன்னும் சமநீதி வேண்டிய போரில் கொல்லப்பட்ட உயிரோடு எரிக்கப்பட்ட, கழுவில் ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பெயரற்ற, முகமற்றவர்களுக்கு? ***


சுட்டிகள்:

http://www.hindubook...riti/index.html
http://www.ramanuja....ukta-intro.html
http://balasthoguppu.blogspot.com/
நன்றி: http://www.yarl.com/forum3/index.php?/topic/15430-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/

Sunday, April 26, 2015

மேகாலயாவில் அமீத்ஷாவுக்கு மாட்டுக் கறியோடு வரவேற்பு!



பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர சங் பரிவாரங்களின் இந்துத்துவ பாசிச தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதில் தமிழகம் தனித்து இல்லை என்பதற்கு சான்று பகர்கிறது மேகாலயா மாநிலத்தில் நடந்திருக்கும் போராட்டம்.

பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித் ஷா வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மேகாலயா மாநிலத்திற்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சென்றார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைநீயூவ்ட்ரெப் தேசிய விடுதலை இயக்கம் – Hynniewtrep National Liberation Council (HNLC) 12 மணிநேர பந்த்-க்கு அழைப்பு விடுத்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நிகழ்த்தப்பட்டு வருகின்ற தாக்குதல்களை கண்டித்து இந்த பந்த் நடத்தப்பட்டது.

HNLC, த்மா யூ ரங்க்லி-ஜுகி (TUR) என்ற அமைப்பு, மற்றும் காசி தேசிய ஒன்றியம் ஆகிய அமைப்புகள் மாட்டுக்கறி விருந்தை பா.ஜ.க.வின் மாநில தலைமையகத்திற்கு முன்பாக நடத்தியது.

“இது வெறுமனே மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் மட்டும் அல்ல; சங் பரிவார அமைப்புகள் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்” என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ரிங்காட் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க கட்சியினரை “வெறுப்பின் தூதர்கள்” என்று அழைக்கும் ஏஞ்சலா, “கர் வாபஸி, நில கையகப்படுத்தல் சட்டம், மேக் இன் இந்தியா திட்டம் போன்ற நம்மை அடிமைப்படுத்தும் வெறுப்பு பிரச்சாரம் அனைத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார். இந்தப் போராட்டத்தை உரிமைக்கான விருந்து (Feast for Right) அவர் அழைக்கிறார்.

வெவ்வேறு பின்னணி கொண்ட பல்வேறு தரப்பு மக்கள் இந்த போராட்டத்துக்கு அணிதிரண்டனர். மேலும், பந்த் அழைப்பை மதித்து பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அனைத்தும் அமித்ஷா வருகை புரிந்த அன்று மூடப்பட்டிருந்தன.

அமித்ஷாவின் நிகழ்ச்சி நடந்த அரங்கத்திற்கு முன் செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததால், ஷில்லாங்கில் கவர்னர் மாளிகை மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைமையகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தனது உரையில் காங்கிரஸ் கட்சியை மட்டும் குறை கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார், அமித்ஷா.

மாநில பா.ஜ.க தலைவர் க்லுர் சிங் லிங்டோ மாட்டுக்கறி உண்பதை ஆதரித்து ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியிருந்தார். அது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தமிழிசை சவுந்தரராஜன் வடிக்கும் முதலைக் கண்ணீரை போன்றது.

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதாக மேற்கொண்டிருக்கும் பயணத்தில் மூன்றில் மட்டும் தான் தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார் அமித்ஷா. மற்ற மாநிலங்களில் அமித்ஷா சந்திக்கப் போகும் எதிர்ப்பின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

A 'beef party' and a bandh greeted BJP president Amit Shah who visited the Meghalaya on Wednesday as part of his north-east tour seeking to strengthen party base and urging workers to make public the alleged corruption by ruling Congress party in Meghalaya.

While the beef party was organised by the Thma U Rangli Juki (TUR), a pressure group, the bandh was imposed by the proscribed militant group, the Hynniewtrep National Liberation Council.

Leaders of the TUR and the Hynniewtrep National People's Front (HNPF), Khasi National Union (KNU) organised the beef party near the party's office in the city as the BJP president arrived to address party workers and to hold meeting with regional political parties.


Security personnel were seen having a tough time trying to stop the members of the NGOs who attempted to take out a protest march to the state's Conventional Hall, where Shah was convening a party meeting.

தகவல் உதவி
இந்தியா டுடே
வினவு தளம்

பிஜேபி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மாட்டுக் கறி சாப்பிடாதவர்களும் தற்போது சாப்பிட ஆரம்பித்துள்ளனர். மோடி பதவி ஏற்றவுடன் ஏற்பட்ட மாற்றங்களுல் தலையாய மாற்றம் இது. இது போன்ற தடைகளை நிறைய போட்டு மாட்டுக் கறி விற்பனையை பிஜேபியினர் மேலும் அதிகப்படுத்துவார்களாக!!

http://indiatoday.intoday.in/story/amit-shah-welcomed-with-a-beef-party-in-meghalaya/1/431640.html

http://www.vinavu.com/2015/04/24/amit-shah-welcomed-with-a-beef-party-in-meghalaya/

Friday, April 17, 2015

புரோட்டா பிரியர்களுக்கு சில பகீர் தகவல்கள்!



சிலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். இதையே பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பரோட்டா பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

பரோட்டாவுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது பரோட்டா வரலாறு அல்ல. அதை செய்யப் பயன்படும் மைதாவுக்கான வரலாறு. மைதா என்றொரு பொருள் ஆங்கிலேயர்களால்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இந்தியாவில் கோதுமை பயன்பாடுதான். அதில்தான் ரொட்டி சுடுவது, சப்பாத்தி சுடுவது எல்லாம். தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் கோதுமை கோலோச்சிக் கொண்டிருந்தபோது அதற்கு ஆப்பு வைத்தது இரண்டாம் உலகப்போர். போர் வீரர்களுக்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. இதனால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அப்போது அறிமுகமானதுதான் மைதா. அதாவது மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவுடன் சில ரசாயனங்களையும் சேர்மானங்களையும் சேர்த்து தயாரிப்பதுதான் மைதா. இந்த மைதா மிக எளிதாக உருட்டவும் மாவு பிசையவும் வந்தது. கோதுமையைக் காட்டிலும் விலை குறைவாக இருந்தது. இதனால் மக்களிடம் எளிதில் மைதா புகழ் பெறத் தொடங்கியது. குறிப்பாக ஏழை மக்களின் உணவுப் பொருளாக மைதா பிரபலமானது. அதுவே படிப்படியாக வளர்ச்சி பெற்று நாகரீக உணவு பொருளாகியது.

இதுதான் மைதா அரக்கனின் வரலாறு. மைதாவின் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு மாவு என்பது சற்று பழுப்பு நிறம் கொண்டது. இதை வெளுக்க வைத்து வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில், பெராக்சைடு கலக்கப்படுகிறது. சாதாரணமாக சொன்னால் ரசாயனம். இதை இன்னும் மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைமுடிக்கு அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் என்று கூறினால் நன்கு விளங்கும். இந்த ரசாயனத்தால் சில அரிப்பு ஒவ்வாமை ஏற்படுகிறது. தலைமுடிக்கு இந்த நிலைமை என்றால் உடலில் சென்றால் சொல்ல வேண்டியதே இல்லை. மெல்லக் கொல்லும் விஷமாக பல பாதிப்புகளை இது செய்து வருகிறது. நீரிழிவு என சொல்லப்படும் டயாப்டீஸ் நோய்க்கு அடிக்கல் நாட்டும் விழாவாக மைதா ஆகிவிடும்.

‘அலாக்ஸான்’ எனும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. வெண்மை என்றால் சாதாரண வெண்மையா என்ன? மைதாவின் வெண்மையை ஊரே போற்ற வேண்டும் என்பதற்காக அதில் செயற்கை வண்ணப்பொடியும் கலக்கப்படுகிறது. பரோட்டாவுக்கு சுவை சேர்க்க வேண்டாமா? இதற்காக உணவு எண்ணெய்கள், சுவை கூட்டிகள் எனப்படும் டேஸ்ட் மேக்கர்ஸ், மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையான ரசாயனங்கள் (பிரசர் வேடீவ்ஸ்) அஜினோ மோட்டோ, இனிப்பு பொருட்களில் சாக்ரின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கடைகளில் விற்கப்படுகின்ற பரோட்டா மாவாகப் பிசைந்து சில மணி நேரங்கள் எண்ணெயில் ஊற வைக்கப்படுகிறது. அது எந்தவகையான எண்ணெய் என்பது மாஸ்டருக்கு மட்டுமே தெரியும். பின்னர் அதை எடுத்து உருண்டைகளை சுற்றி தட்டும்போதும் எண்ணெய் ஊற்றப்படுகிறது. அவ்வாறு எண்ணெயில் குளிப்பாட்டிய பரோட்டாவை எடுத்து சுடும்போது ஊற்றப்படும் எண்ணெய்க்கு அளவே இல்லை. இதில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் மட்ட ரகமான நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கப்படும் பரோட்டாவை சாப்பிட்டால் ஏற்படுகின்ற தீங்கான விளைவுகளை சொல்லவே அச்சமாக உள்ளது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் படியும் கொழுப்பாக மாறி ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர், டயாபடீஸ் என்று விதவிதமான நோய்களை வரவழைக்கும் மைதாவில் எவ்வித பயனும் இல்லை என்பதால்தான் ஐரோப்பிய யூனியனும், கனடாவும் இதற்கு தடை விதித்துள்ளது.

இந்த பரோட்டாவுக்கு சைட் டிஸ் என்ன தெரியுமா? கோழி குருமா, சிக்கன் 65! முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி கறி சமைத்து உண்பார்கள். அதில் நல்ல சத்தும் இருந்தது. இப்போது பிராய்லர் சிக்கன் வந்துவிட்டது. பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னை மருத்துவ ஆய்வுக் குழு ஒன்றின் குடல் நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அதற்குள் எடை கூட்டி வளர்க்க பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள், மனிதர்களுக்கு புற்றுநோயை ஊக்குவிக்கும் தன்மை வாய்ந்தவை. கோழிகளுக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள், கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி விடுகின்றன. சிக்கன் 65 தயாரிக்கப் பயன்படும் சிவப்பு நிற கலர் பவுடர் புற்று நோயினை ஏற்படுத்தும். வேதியப் பொருள்களும் இதய நோய்க்கு வித்திடுகின்றன. இத்தகைய அபாயகரமான நோய்களை ஏற்படுத்தும் பரோட்டாவையும், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 ஆகியவற்றினை சாப்பிட்டு நோயினை விலைக்கு வாங்க வேண்டுமா?

நன்றி : நர்கிஸ் – மார்ச் 2015

Monday, April 13, 2015

தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?



தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும்ää பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவேää கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதுவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல் 14 ஆம் திகதி இந்துää சிங்கள புதுவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிரு~;ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடப்படுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் இந்த 60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும் 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வரும் அல்லவா?

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தி;ல் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

ஆனால் சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன்ää தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும்ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள் செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவைஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் வியாழன் வெள்ளி காரி என்பனவாகும். புதனும் சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன் காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும் பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும் 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும் நாகரிகமற்ற தன்மையும் தமிழ்ப் புத்தாண்டு விடயத்தையும் அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டிருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும். தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டென அரசாணை பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் தி.மு.க. அரசு என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கப் பிறகு ஆட்சிக்கு வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் அந்த அரசாணையை மாற்றி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என தீர்மானம் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்பது கலைஞர் கருணாநிதியின் தீர்மானம் அல்ல. கலைஞர் பிறப்பதற்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் சார்பாகத் தமிழ்ப் புலவர்களாலும்அறிஞர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு அது. இதனை நன்கறிந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்சியிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது எடுத்துச்சொல்லும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்!
யாரும் அறிவுரை சொல்லப் பயப்படுகின்ற நிலைமையைத் தமிழ் தலைமைகள் பேணிவந்தமையும் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையும்தான் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவை என்பதுதானே வரலாறு. அந்த நிலை இன்னும்தான் நீடிக்கிறது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்ää தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும் பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.


பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.

புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், க~;டங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.

நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள் முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள். அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள். கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும்,பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.

காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும்ää பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.


பிற்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களின் முன்னிலையில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

-சு.சிறீகந்தராசா

http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_8.html

Monday, April 06, 2015

குடியால் குடும்பமே அழிந்தது!

அபிராமபுரத்தில் மனைவி தீக்குளித்தும், கணவன் மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை அபிராமபுரம் வாரன் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிப்பவர் துர்க்ரு(40). கொத்தனார் வேலை செய்தார். இவரது மனைவி விஜயா(35). துர்க்ருவுக்கு குடிப் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதேபோல தகராறு ஏற்படவே விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார் விஜயா.

குடும்பத்தினர் சமாதானப் படுத்தி மீண்டும் விஜயாவை அழைத்து வந்து அபிராமபுரத்தில் விட்டுச்சென்றனர். சில நாட்கள் ஒழுங்காக இருந்த துர்க்ரு, நேற்று பிற்பகலிலும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, விஜயாவிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற துர்க்ரு, அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நின்று கொண்டிருந்தார்.

கணவன் தொடர்ந்து மது குடித்து தகராறு செய்ததால் மன வேதனை அடைந்த விஜயா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்களும், துர்க்ருவும் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் விஜயா முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

விஜயாவின் உடலை பார்த்துகதறி அழுத துர்க்ரு, 3-வது தளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திடீரென கீழே குதித்து விட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார். மதுப்பழக்கம் ஒரு குடும்பத் தையே தற்கொலை செய்ய வைத்துள்ளது. கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸார் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
06-04-2015

------------------------------------------------------------------------


மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

Friday, March 13, 2015

நெல்லையில் 10 மாதத்தில் சாதி வெறியால் 25 பேர் பலி!



தாமிரவருணியின் பாசன பூமியான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், ஜாதிய மோதல் களால் ரத்தக் கறை தோய்ந்திருக் கின்றன.

கடந்த 10 மாதங்களில் சுமார் 100 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதும், அதில் 25 பேர் வரை ஜாதி வெறிக்குப் பலியாகி இருப் பதும் தென்பாண்டி சீமைக்கு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எங்கு கொலை நிகழ்ந்தாலும் அதில் ஈடுபட்டவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற அவப்பெயர் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலின்படி 16,502 ரவுடிகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில், முதலிடம் சென்னைக்கு (3,175 ரவுடிகள்), 2-வது இடம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 334 ரவுடிகளும், புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் 90 கொலைகள், 2008-ல் 89, 2009-ல் 95, 2010-ல் 83, 2011-ல் 97, 2012-ல் 93, 2013-ல் 98 கொலைகள் நடைபெற்றதாக காவல் துறை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூலிப் படையினராலும், 25 சதவீத கொலைகள் ஜாதிய மோதல் பின்னணியிலும் நிகழ்ந்தவை.

கடந்த 10 மாதங்களில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 100 கொலைகள் நடைபெற்றுள்ளன. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீத கொலைகள் நடை பெற்றுள்ளன. மீதமுள்ளவை இந்த மாவட்டங்களில் புரையோடி யிருக்கும் ஜாதி மோதலின் வெளிப்பாடுகள். அந்த வகையில் 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

தயங்கும் போலீஸார்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை குறிவைக்கும் சமூகவிரோத கும்பல், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. அந்த கூலிப் படையினரை ஏவும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீஸார் தயங்குவதாலேயே பிரச்சினை முடிவுறாமல் தொடர்கிறது. ஜாதி மோதல்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு இந்த மாவட்டங்களில் உளவுப் பிரிவு போலீஸார் செயல்படவில்லை.

`ஜாதி மோதல்களை தூண்டி விடும் அளவுக்கு முக்கிய ஜாதிகளை சேர்ந்த சாதாரண போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை செயல்படுவதும் பிரச்சினைக்கு தூபம்போடுவதாக இருக்கிறது’ என்று இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே தெற்கு கரந்தானேரியில் ஆயுதங்களை தாங்கிய கும்பலால் இரு அப்பாவிகள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலை யாளிகளுக்கு முக்கிய ஜாதி தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருந்தார். இதனால், கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். கடைசியில் அந்த ஜாதி தலைவரிடம் போலீஸார் கெஞ்சி- கூத்தாடி ஒரு சிலரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

`குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர் களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது.

ஆனால், அதிலிருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட்டதால் ஜாதி மோதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன’ என்றார் ஓய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரி.

ஜாதிய பின்னணி போலீஸார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில் குறிப்பிட்ட பெரிய ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது. நேர்மையான இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்’ என்றார் அவர்.

‘குண்டர் சட்டத்தை அதிகளவில் பிரயோகம் செய்வதன்மூலம் போலீஸார் தங்கள் தரப்பு இயலாமையை மறைக்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் கைது செய்யப்படுவோர் முழுநேர குற்றவாளிகளாக மாறுவது போலீஸாரின் நடவடிக்கை களால்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயுத வன்முறையாளர்கள் குறித்த கணக்கெடுப்பும், குற்றவாளிகளின் ஜாதி சார்ந்த கணக்கெடுப்பும், இளங்குற்றவாளிகள் குறித்த ஆய்வும் அவசியம். அதன் தொடர்ச்சியாக ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
12-03-2015

மற்ற நாடுகளில் இல்லாத சாதி வெறி நமது நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். ஒரே மதமான இந்து மதத்தில் இத்தனை வன்மம் ஏன்? நமது நாட்டை ஆண்ட நமது முன்னால் அரசர்களும் ஒரு வகையில் இதற்கு காரணமாகிறார்கள்.

உதாரணத்துக்கு தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் ராஜராஜனைச் சொல்லலாம். காஷ்மீரம் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலில் இருந்தெல்லாம் பார்பனர்களை அழைத்து வந்து அவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினான். 'ராஜ குரு' என்ற புது பதவியை அவர்களுக்காக உருவாக்கினான். இன்று மோடி அரசாங்கம் நில அபகரிப்பு திட்டம் கொண்டு வரத் துடிக்கிறதே அதற்கு மூல காரணம் ராஜ ராஜனின் ஆட்சி என்றால் மிகையாகாது..

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.

இவ்வாறாக படிப்படியாக நிலத்தை இழந்த உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் நில உடமையாளர்கள் ஆதிக்க சாதியினராகவும் மாற்றப்பட்டனர். அதற்கு தோதாக தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத மனுஸ்ருமிதி மக்களின் மனதில் ஏற்றப்பட்டது. அது இன்று வாழையடி வாழையடி ஜீன்கள் மூலம் பரம்பரையாக கடத்தப்படுகிறது. எனவே தான் படித்து பட்டம் பெற்ற அரசு உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இந்துக்களில் பலர் தங்களின் சாதி வெறியை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்வதில்லை. அதற்காக வெட்கப்படுவதும் இல்லை.

Tuesday, March 10, 2015

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

நெகிழ வைத்த நிகழ்வு - இந்து மத நன்மக்கள்

முகநூலில் ஒரு இந்து நண்பர் பதிந்த பதிவும், அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும்....

நான் எனது பள்ளிப்படிப்பை பழனி அருகில் உள்ள கீரனூர் எனும் அழகிய ஊரில் படித்தேன். கிட்டத்தட்ட பாதிக்கு மேல் என் பள்ளித்தோழர்கள் இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள். லுங்கி அணிந்தே பள்ளிக்கூடம் வருவதும் ஒரு சில சமயங்களில் அனுமதிக்கப்பட்டே இருக்கும். பிஸ்மில்லாஹிரஹ்மானிரஹீம் என்று பள்ளியில் என் நண்பன் பஜ்ஜுலூர் ரஹ்மான் மைக்கில் ஓதுவான். இன்னொரு நண்பன் இஸ்மாயில் பள்ளிக்கூட பாட்டுப்போட்டியில் முதலிடம் வாங்குவான் . . . இன்றும் அவனது நாகூர் ஹனீபா குரலில் பாடும் . . . "பாங்கோசை கேட்டபின்பும்... பள்ளி செல்ல மனம் வல்லையோ . . .. படைத்தவன் நினைவில்லையோ" பாடல் ஒலிக்கிறது !

அப்போதே இரண்டு பிரிவுகள் . . .. ஒன்று நாகூர் அனீபா பாட்டுக்கச்சேரி நடத்தும் திமுக சார்பு அணி . . . இன்னொன்று சேக்முகமது (என்று ஞாபகம்) அவர்களை அழைத்து கச்சேரிகள் நடத்தும் ஏடிஎம்கே அணி. அன்றெல்லாம் பாய்மார்கள் எல்லாம் மாமன் மச்சான் உறவோடு பழகிய காலம் !

கோவையில் இனமோதல்களை பார்த்தபோது எனக்கு ஒன்றுமே விளங்கியதில்லை . . .. புரிபடவும் இல்லை. உள்ளூர் கலாச்சாரங்களை உலக கலாச்சாரங்கள் முழுங்கியபோதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று மட்டும் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் லைலத்துல் கத்ர் அன்று காலை கூட உணவு உண்ணாமல் பல ஆண்டுகள் நோம்பு இருந்தேன். காந்திபுரம் வாட்ச் பாய் ஷனாவுல்லா உடன். உண்மையில் ரமலான் அவர்களுக்கு ஒரு இறையுணர்வுடன் கூடிய ஒரு புனித காலம் என்பது மட்டும் எனக்கும் அவர்களோடு பழகியதில் புரிந்தது. அவரவர்கள் வழியில் பயணிக்காமல் அடுத்தவர்களின் வழியை குறைசொல்ல தொடங்கும்போதுதான் மார்க்கங்கள் மரணங்களில் முடிகின்றன. எனக்கு தக்கலையில் ஒரு முதியவர் ஒருவர் நண்பராக இருந்தார். அவர் சொல்வார் . . . "நான் என் அளவுக்கு அல்லாவுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறேன் என்பதை மட்டுமே பார்க்கிறேன் தம்பி. மற்றவர்களின் தீர்ப்பை அல்லாதான் முடிவு செய்வார் .. அதில் எனக்கு ஒரு பங்கும் இல்லை" என்று சொல்லுவார். அனைவருக்கும் ஷியா, சன்னி என்ற இரு பிரிவுகள் மட்டுமே தெரிந்திருக்கும்போது எனக்கு இன்னொரு பிரிவான இபாதி இசுலாம் பற்றியும் படித்து வந்திருக்கிறேன். இன்றும் அவ்வப்போது நபிகளின் போதனைகளை படிப்பதும் உண்டு.

அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் !

-ஓசை செல்லா

----------------------------------------

Alangiam pallivasalil dhinandhorum kalai 5.45 paadum baangosai engalukku puthunarvu tharum ......

-Shanmuga Sundar

----------------------------------------

நான் சென்னை பாரிமுனைக்கு அருகே ஒரு கான்வென்ட் இல் lkg. -2nd STD படித்து போது, என் அம்மா வேறொரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார் .அவர் வீடு திரும்பும் முன்னரே நாங்கள் வந்துவிடுவோம் ஆகையால் நானும் என் அக்காவும் என் தோழி தமீம் பாத்திமா வீட்டில் தான் காத்துக்கொண்டிருப்போம்.... அவர்கள் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும... அவர்கள் வீட்டில் நான் சுவைத்த ஏலக்காய் டீபோல் வாழ்க்கையில் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை..... என் குழந்தைப் பருவத்தின் பல பசுமையான நியாபகங்களின் களமாக திகழ்ந்தது அவர்களின் வீடு... பகிர்ந்து உண்ண நான் கற்றுக் கொண்டது அங்கே தான்....

இசுலாம் நல்ல மதம் ...இசுலாமியர்கள் நல்லவர்கள் ....கெட்டவர்கள் இசுலாமியர்களே இல்லை !

இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

-Iswarya Raghupathy

---------------------------------------

இதுதான் தமிழகம்..... இந்த எண்ணங்கள் தான் தமிழர்களின் பெரும்பான்மையோருடையது. ஒரு சில ராம கோபாலன்களும், தெகோடியாக்களும், நரேந்திர மோடிக்களும் இந்த அமைதியை குலைத்து விட முடியாது. என்றும் எங்களது தமிழகம் அமைதிப் பூங்காவே என்று மார்தட்டி சொல்லுவோம்.

மாட்டிறைச்சிக்குத் தடை: கோவையில் ஆர்ப்பாட்டம்



மாட்டிறைச்சிக்குத் தடை: மகாராஷ்டிர அரசைக் கண்டித்து கோவையில் நூதன ஆர்ப்பாட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து கோவையில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு ஆதித் தமிழர் விடுதலை இயக்கம் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விடுதலை மணி தலைமை வகித்தார்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மகாராஷ்டிர மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் இந்த இறைச்சி பயன்பாட்டுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் தலித், சிறுபான்மை மக்கள் பாதிப்படுவார்கள். இந்த தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விடுதலை மணி தெரிவித்தார்.

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
10-03-2015


Thursday, January 22, 2015

எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா!

எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா



எங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ?

இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.

வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.
“ஐயனார் கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.
“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்கன்னு" சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.

ஊருகுள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.

எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.

எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.

தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.

வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.

வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.

வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.

வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.

இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.

“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.

துக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.

“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.

வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.

அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.

பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.

-சரசம்மா
(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)

நன்றி: வினவு தளம்


Tuesday, January 06, 2015

கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்!

கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்!



கண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில் கண்ட அனுபவம்.
கடந்த 01.12.2014 அன்று நானும் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் அவர்களும் சென்னையில் இருந்து இலங்கை வரும் வழியில், சென்னை விமான நிலையத்தில் சோதனை பகுதியில் விசாரனைக்காக நான் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

நமது ஜமாத் (SLTJ) வக்கீல் சகோ. ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்குத் தேவையான சில மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அதன் மொத்தப் பெருமதி 25,000ம் இந்திய ரூபாய்கள். இதற்காகவே நான் சோதனை பகுதியில் தமிழ் பேசும் ஓர் அதிகாரியினால் நிறுத்தப்பட்டு விசாரிக்கப் பட்டேன்.

அப்போது, மேலதிக விசாரணைக்காக உயர் அதிகாரி ஒருவர் வந்து என்னை அழைத்து சென்றார். மாலை 4.00 மணி ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வர வேண்டும். சரியாக 2.00 மணிக்கெல்லாம் என்னை விசாரிக்க குறித்த உயர் அதிகாரி அழைத்து சென்றார்.

நான் வாங்கிய மருந்துகளுக்கான அனைத்து ரிசிப்ட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் கையில் இருந்ததினால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஆனால் அது எனக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் என்றே நினைக்கின்றேன். - அல்ஹம்து லில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே!). ஆம் குறித்த அதிகாரி என்னை விசாரிக்க அழைத்து சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்தார்.

# எதற்காக தமிழகம் வந்தீர்கள்?

# யாரை சந்தித்தீர்கள்?

# எங்கு தங்கினீர்கள்?

# இலங்கையில் என்ன செய்கின்றீர்கள்?

இப்படி பல விதமான அடிப்படையான கேள்விகளை அவர் கேட்கும் போது யாரை சந்தித்தீர்கள்? எங்கு தங்கினீர்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்குமான எனது பதில் அவருடைய விசாரனையை நட்பு ரீதியிலான சந்திப்பாக மாற்றியது.

அதிகாரி : ‪#‎யாரை‬ சந்தித்தீர்கள்?

நான் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை சந்தித்தேன்.

அதிகாரி : எங்கு தங்கினீர்கள்?

நான் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்தில் தங்கினேன்.

அதிகாரி : அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?

நான் குறித்த அதிகாரிக்கு விபரமாக தெளிவு படுத்த ஆரம்பித்தேன். அப்போது குறுக்கிட்ட அவர், தவ்ஹீத் ஜமாத் தொடர்பில் நான் கடந்த ஒரு மாதமாகவே நன்றாகவே படித்துக் கொண்டேன், அந்த அமைப்பின் தலைவரின் உரைகளை பார்த்திருக்கின்றேன். தமிழகத்தில் நான் மரியாதை வைக்கும் அரசியல் தலைவர்களில் முதலிடம் அவருக்குத்தான் என்று ஜமாத்தை பற்றி பேசலானார்.
நான் வாயடைத்து மௌனமாக அமைதி காத்தேன். நான் அவருக்கு ஜமாத்தைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அதைவிட அதிகமாகவே அவர் என்னிடம் சொல்லிவிட்டார். - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

தொடர்ந்து பேசிய அவர் சொன்ன ஒரு செய்தி கண் கலங்க வைத்தது. “தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கடந்த மாதம் நடத்திய தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை 10 வருடங்களுக்கு முன் நடத்தியிருந்தால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற சிறு எண்ணம் கூட இந்திய அளவில் ஏற்பட்டிருக்காது. - இந்தப் பிரச்சாரத்தை தமிழகத்தினை தாண்டி இந்திய அளவில் அவர்கள் செய்ய வேண்டும் அதுதான் எனது ஆசை.

"நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன்" என்று கூறி தான் வணங்கி வரும் ஒரு நபரின் புகைப்படத்தை காண்பித்தவர் - "தற்போது இவர் விஷயத்தில் சந்தேகம் எனக்குள் உண்டு. நான் இணையதளங்களில் இஸ்லாம் பற்றி படித்து வருகின்றேன். இங்கு கடமையில் இருக்கும் போது நிறைய பாதிரியார்களை சந்தித்திருக்கின்றேன். கிருத்தவம் தொடர்பில் கேட்டிருக்கின்றேன். இன்று தான் இஸ்லாம் மார்க்கம் தொடர்பில் நேரடியாக கேள்வி கேட்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சில கேள்விகள் கேட்கலாமா?" என்று அவருக்கே உரிய பணிவுடன் வினவினார். தாராளமாக கேளுங்கள் என்ற போது, சில கேள்விகளை அடுக்கினார்.

‪"‎ISIS‬ , அல்காயிதா போன்ற இயக்கங்கள் சுவர்க்கம் செல்வார்களா?"

‪"ஜுப்பா‬ அணிந்து கொள்வது ஏன்?"

‪"மார்க்கம்‬ பேசும் நீங்கள் ஜுப்பா அணியவில்லையே அது ஏன்?"

‪"நான்‬ குர்ஆன் படிக்க அனுமதியுண்டா?"

‪"LTTE‬ யினர் இலங்கையில் செய்த யுத்தம் ஜிஹாதாகாதா?"

போன்ற பல கேள்விகளை முன்வைத்தார்.

இவற்றுக்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது.... விமானத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு அதிகாரி உள்ளே வந்து விமானத்திற்கு இவரை அனுப்ப முடியுமா? என்று கேட்டார்.

"நான் இவரை அழைத்து வருகின்றேன். நீங்கள் போகலாம்" என்று பதில் அளித்து குறித்த அதிகாரியை அனுப்பியவர். தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இரத்த தானத்தில் தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 08 வருடங்களாக முதல் இடம் பிடித்துள்ளது என்ற தகவலை சொன்ன போது ஆச்சரியப் பட்டவர் - சிறந்த காரியம், சிறந்த காரியம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். ‪#‎சற்று‬ நேரத்தில் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்” என்று கூறிவிட்டு வெளியில் சென்றவர். இன்னொரு அதிகாரியை அழைத்து வந்தார். அவரை என்னிடம் இவ்வாறு அறிமுகம் செய்தார்.

“இவர் எனது நண்பர், இவர் தான் எனக்கு தவ்ஹீத் ஜமாத் பற்றிய வீடியோக்களை அறிமுகம் செய்தார். அறிஞர் ஜெய்னுலாப்தீன் உரைகளை அடிக்கடி எனக்கு அனுப்பித் தருவார்" என்றார். அப்போது “ஹாய்” என்று கூறி என்னிடம் பேசிய குறித்த அதிகாரி “நாங்கள் உங்களுக்கு ஸலாம் சொல்லலாம் தானே?” என்று கேட்டார். - அப்போது தான் அவரும் ஒரு மாற்று மத சகோதரர் என்று புரிந்தது. - “தாராளமாக நீங்கள் சொல்லலாம், நாங்கள் பதில் சொல்வோம்” என்ற போது, என்னிடம் கை நீட்டி முஸாபஹா செய்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “எனது நண்பர் ஒருவர் எனக்கு இந்த வீடியோக்களை அனுப்பித் தருகின்றார். நான் நினைக்கின்றேன் அவர் தவ்ஹீ்த் ஜமாத் உறுப்பினர்", என்று கூறினார்.

சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் பின் எனது தொலை பேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட குறித்த மேலதிகாரி அவர்கள் "மீண்டும் நீங்கள் சென்னை வரும் போது கண்டிப்பாக என்னை சந்திக்க வேண்டும்". என்று அன்பாய் கோரிக்கை வைத்தவர்.

"வாருங்கள் உங்களை கொண்டு போய் விடுகின்றேன்" என்றார். "வேண்டாம் நான் போகின்றேன்" என்று அவரிடம் கூறிய போது "இல்லை, நானும் கூட வருகின்றேன்" என்று கடைசி செக்கிங் முடிக்கும் வரை கூடவே வந்தார். எந்தவொரு அதிகாரியும் அவரைத் தாண்டி நான் கையில் எடுத்து வந்த மருந்துகளை பற்றி விசாரிக்காத வண்ணம் கடைசி வரை என்னை அழைத்து வந்து விட்டார். மிக அருமையாக நடந்து கொண்ட அந்த அதிகாரிக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தேன்.

தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் யார் காதுகளில் எல்லாம் எட்ட வேண்டும் என்று நினைத்தோமோ அவர்களின் காதுகளில் எல்லாம் தாராளமாக எட்டியுள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

- Rasmin Misc. Sltj Rakwana

Saturday, January 03, 2015

குடிசை தொழிலை எதிர்க்கும் அரசை கண்டிக்கிறோம்! :-)



விழுப்புரம்: அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் போலி மதுபான ஆலை நடத்தி, அந்த மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் உள்ள அவ்வையார்குப்பம் கிராமத்தில் போலி மதுபான ஆலை இயங்கி வருவது குறித்து மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அந்த கிராமத்தினுள் அதிரடியாக நுழைந்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, மாந்தோப்பில் இயங்கிவந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த காவல்துறையினர், மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர். இந்த போலி மதுபான ஆலையை நடத்தி வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் மணிகண்டன், காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மதுபானம் தயாரிக்க வைத்திருந்த எரிசாராயம், எந்திரம், காலி மதுபான பாட்டில் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கவுன்சிலர் மணிகண்டன் தனது மூன்று லாரிகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்பந்த முறையில் இயக்கி வந்துள்ளார். டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றி செல்லும் போது மாந்தோப்பில் நிறுத்தி டாஸ்மாக் மதுபானத்தை திருடிவிட்டு போலி மதுபானத்தை லாரியில் ஏற்றி கடைகளுக்கு அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் கடந்த மூன்று வருடங்களாக கவுன்சிலர் மணிகண்டன் இதை செய்துவந்த நிலையில், மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி பாண்டியன் நேரடியாக களத்தில் இறங்கி போலி மதுபான ஆலையை கண்டுபிடித்துள்ளார்.

நன்றி விகடன்
03-01-2015

Wednesday, December 31, 2014

பிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்?

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம்.

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற ராஹிபாய் பிங்ளி பிற்பாடு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூக ஊழியர் பக்வான் மாதே என்பவரைச் சந்தித்து கடந்த வாரத்தில்தான் நடந்த பயங்கரத்தைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், சட்டத்தின் மூலம் மூடநம்பிக்கையை தடுத்து விட முடியுமா, மூடத்தன பயங்கரவாதத்திற்கு மகாராஷ்டிராவில் பலியாவோருக்கு அரசின் பதில் என்ன? போன்ற கேள்விகள் அங்கு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

Monday, December 29, 2014

"பிகே" திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் தள் தாக்குதல்!



பிகே' திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் தள் தாக்குதல்!

அகமதாபாத்: இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் அமீர்கானின் 'பிகே' படத்தில் இருப்பதாகக் கூறி அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து கடந்த 19 ஆம் தேதி வெளியான பிகே திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தில் உள்ள காட்சிகள் சில இந்து மதக் கடவுள்களையும், இந்துமத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக பிகே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக பேசிய பஜ்ரங் தள் அமைப்பின் பிரதிநிதி தர்மேந்திரா அசோலியா கூறுகையில், அமீர்கா னுக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் பாடல் காட்சிகள் லவ் ஜிகாத் அமைப்பை முன் நிறுத்துவதாக உள்ளன என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிகே படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு கூடிய பஜ்ரங்தள் அமைப்பினர், பிகே படத்தில் இந்து மத நம்பிக்கை இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தியேட்டர்கள் மீது தாக்குதலிலுன் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எந்த காட்சிகளும் நீக்கப்படாது: சென்சார் போர்டு திட்டவட்டம்

இதனிடையே இந்து அமைப்புகளின் கோரிக்கையின்படி பிகே திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும் நீக்கப்படாது என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு படமும் யாரோ சிலரின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும். அதே சமயம் தேவை இல்லாமல் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது. பிகே படத்திற்கு ஏற்கனவே நாங்கள் தணிக்கை சான்று வழங்கிவிட்டோம். பொதுமக்களும் பலர் அதனை கண்டு களித்துவிட்டனர்,எனவே அதில் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது" என மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி
விகடன்
30-12-2014

விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது பொங்கி எழுந்த அதி மேதாவிகள் தற்போது வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கின்றனர். இது தான் இந்தியா! இது தான் தமிழகம். :-(

Saturday, December 27, 2014

நாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்.....



'மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான போராட்டம் நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அந்நாவல் இந்துப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் திருச்செங்கோட்டின் பெருமைக்கு மாசு கற்பிப்பதாகவும் கூறிப் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்புக்களும் சாதிய அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியதாக இன்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

"நாவல் பிரதியை எரித்தும் காலால் மிதித்தும் என் புகைப்படத்தைச் செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்னைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் இட்டுள்ளனர். என் மீதும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.

நாவலில் உள்ள பகுதிகள் குறித்துக் கருத்துரீதியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் எதிர்தரப்பில் அதற்கான நிதானத்துடன் பேசுவோர் இல்லை. மதம், சாதி என்னும் கட்டுக்குள் நின்று மட்டுமே பார்ப்போருடன் எப்படிப் பேசுவது என்றும் தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன். நானும் யோசிக்கிறேன். என்ன செய்யலாம்?"

-பெருமாள் முருகன்

----------------------------------------------------

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பெருமாள் முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010ஆம் ஆண்டில் எழுதிய 'மாதொருபாகன்' என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-----------------------------------------------------

On Friday, more than 50 cadres, led by Tiruchengode town RSS president Mahalingam, raised slogans and tried to take out a march from the foothills of the temple to the police station. But they were stopped by Deputy Superintendent of Police Ramasamy, who asked them to prefer a complaint with the local police station. While initially their attempt to burn copies of the book was thwarted by the police, they later succeeded in doing so in front of the local police station.

In their petition, the BJP, RSS and other Hindu outfits said that in many pages the author had denigrated Lord Shiva and the women devotees who visited the temple during the car festival. The cited the narratives in pages, 87, 116, 117, 118, 129 and 172 of the book were in bad taste. They demanded the arrest of both the author and the publisher.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjp-rss-seek-ban-on-tamil-novel-arrest-of-author/article6729393.ece


Friday, December 26, 2014

கொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்டம்

கொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்டம்




வியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் ரோடு, உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள் ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.

ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள். ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடிஅலைந்து விசாரித்த பின்னரும் அவர் பற்றி தகவல் தெரியாத நிலையில் 27.11.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில், செல்வி ஜெயஸ்ரீ காணாமல் போனது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது பணியில் இருந்த ஏழுகிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மேற்படி புகாரை பெற்றுக்கொள்ளாமல், அவரை கண்டுபிடித்து தருவதாக சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். மேலும், ஜெயஸ்ரீயை அப்பகுதியில் உள்ள பிரான்சிஸ், சங்கர் மற்றும் முரளி ஆகியோர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்த பிறகும் அது பற்றி பின்னர் விசாரிப்பதாக தெரிவித்துவிட்டார்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன். அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க.....


http://www.vinavu.com/2014/12/26/police-complicit-in-rape-and-murder-of-woman/

Sunday, December 21, 2014

தனது வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்!



கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி.

"100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?"

மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலைமை வெறும் மதுரைப் பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்ளப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.

தற்கொலைத் தூண்டுதல் தவறினால் முதியோர் இல்லம்

மேலும் எல்லா வீட்டில் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.

தகவல் உதவி
பிபிசி
12-12-2014

வயதான காலத்தில் தம்மைப் பெற்ற பெற்றோர்களை இவ்வாறு கொல்லும் கல் நெஞ்சக்காரர்கள் தனது மகனாலோ அல்லது தனது மகளாலோ பிற் காலத்தில் இதே முறையால் கொல்லப்படலாம் என்பதை நினைத்துதான் பார்த்தார்களா?

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)