'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, June 04, 2014
இந்தியர்கள் என்று சொல்ல நாம் வெட்கப்பட வேண்டும்!
குழந்தைகளை பிரிந்த அந்த தாயின் ஒப்பாரி ஓசை
காமுகர்களே உங்கள் காதில் விழவில்லையா?
தலித் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?
உனது இந்து மதத்தின் ஒரு பிரிவல்லவா அந்த பெண்கள்?
தொட்டால் தீட்டு என்கிறாய்: இங்கு தொடாமல்தான் அந்த காரியத்தை செய்தாயா?
பெண்ணின் தந்தை அந்த காமுகர்களின் பெயரை சொல்லியும்
காவல் துறை கண்டும் காணாமல் இன்று வரை உள்ளது:
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அவலங்கள்:
மோடி தலைமை ஏற்று விட்டால் இந்த நாடே புனிதமாகி விடும்
என்று ஓலமிட்ட அந்த இந்துத்வாவாதிகள் இன்று எங்கே!
இந்து மதத்தை புணருத்தானம் செய்யப் போகிறோம்
என்று புலம்பித் திரிந்தவர்கள் இன்று எங்கே?
டெல்லியில் ஒரு மேல்சாதி பெண் கற்பழித்து கொல்லப்பட்டபோது
டெல்லியையும் நமது நாட்டையும் உலுக்கிய அந்த வீரர்கள் இன்று எங்கே?
அம்பேத்கார் இது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசும் போது சொல்வார்:
"இந்துக்கள் பொதுவாக மிகவும் மென்மையான சாதுவான மக்கள். முஸ்லீம்களிடம் தென்படும் உக்கிரம், மூர்க்கத்தனம் இவற்றில் எந்தக் குணமும் இந்துக்களிடம் காணப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது இவ்வளவு மென்மையான மக்கள் கூச்சநாச்சமின்றி அகச் சான்றின் உறுத்தலின்றி தீண்டப்படாத மக்களின் குடியிறுப்புகள் மீது தீ வைப்பதிலும், கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகிறார்கள் என்றால் அதற்கு ஓர் ஆழமான காரணம் இருக்க வேண்டும். இந்துக்கள் இவ்விதம் விபரீதமான முறையில் மனிதாபிமானமற்ற முறையில் நெஞ்சுரமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு பின்னணி இருக்க வேண்டும். அந்தப் பின்னணி என்ன? ஆதிக்க சாதியின் ஆளுமை தான் அதன் பின்னணி."
ஆம் நான் உயர்ந்தவன்: நீ சூத்திரன்: நீ தாழ்ந்தவன்: காலாகாலத்துக்கும் எனக்கு நீ அடங்கி ஒடுங்கியே நடக்க வேண்டும்: இல்லை என்றால் அடக்கி ஒடுக்கப்படுவாய் என்று சொல்லாமல் சொல்கிறது இது போன்ற சம்பவங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மேகாலயாவில் 35 வயது பழங் குடியின பெண் ஒருவர், பாலியல் பலாத்கார முயற்சியின்போது, எதிர்ப்பு தெரிவித்ததால் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேகாலயாவின் தெற்கு காரோ ஹில்ஸ் மாவட்டம், ராஜா ரோங்கத் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. காரோ தேசிய விடுதலைப் படை (ஜி.என்.எல்.ஏ) தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இப்பெண் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜி.என்.எல்.ஏ. தீவிரவாதிகள் நான்கைந்து பேர், அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் அப்பெண்ணை வெளியில் இழுத்துச் சென்றுள்னர். முதலில் அவரை அடித்து உதைத்த அவர்கள், அவரிடம் அத்துமீறி நடந்துள்ளனர். பின்னர் அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், அப்பெண்ணின் தலையில் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அப்பெண் தலை பிளவுபட்டு இறந்ததாக மாநில போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது.
கடந்த 2012 ஜனவரியில் ஜிஎன்எல்ஏ அமைப்பை மத்திய அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. தடை விதிக்கப்பட்ட இந்த அமைப்பு மேகாலயாவின் 3 காரோ ஹிலஸ் மாவட்டங்களில் கொலை, ஆள்கடத்தல், பணம் பறித் தல் போன்ற வன்செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் கண்டனம்
“மேகாலயாவில் குழந்தைகள் முன்னிலையில் பெண் பலாத் காரம் செய்யப்பட்டது மற்றும் கொல்லப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது” என்று காங்கிரஸ் கட்சியின் ஷோபா ஓசா கூறியுள்ளார்.
காரோ ஹில்ஸ் பகுதியின் எம்.பி.பி.ஏ. சங்மா கூறுகையில், “இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். காரோ ஹில்ஸ் பகுதியில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிலை இருந்ததில்லை. அங்கு நிலைமையை சமாளிக்க மாநில அரசு தவறிவிட்டது. எனது தலைமையிலான தேசிய மக் கள் கட்சியின் பிரதிநிதிகள் மத்திய உள்துறை இணை அமைச் சர் கிரெண் ரிஜ்ஜுவை சந்தித்து இங்குள்ள நிலவரத்தை விவரிப் பார்கள்” என்றார். -the hindu daily
Post a Comment