'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'
-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.
'படைக்கப்பட்டவற்றிற்க்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.
ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: தப்ரானி.
தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.
இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
-குர்ஆன்: 53: 62
இனி இன்றைய தினமலரில் வந்துள்ள ஒரு செய்தியையும் பார்ப்போம்.
லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்ற, பா.ஜ., பார்லிமென்ட் கட்சிக் கூட்டம், பார்லி., மைய மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:என்னை சந்திக்கும், புதிய எம்.பி.,க்கள் பலர், என் காலைத் தொட்டு வணங்குகின்றனர். இனி, எம்.பி.,க்கள் யாரும் என் காலிலோ, இதர பா.ஜ., தலைவர்களின் காலிலோ விழக் கூடாது. 'காக்கா' பிடிக்கும், முகஸ்துதி பாடும் வேலைகளில் ஈடுபடக் கூடாது.எம்.பி.,க்கள் எல்லாம் கடுமையாக பணியாற்ற வேண்டும். அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். லோக்சபா நடவடிக்கைகளில் சிறப்பாக பங்கேற்று, சிறந்த பார்லிமென்ட்வாதி என, பெயர் எடுக்க வேண்டும்.அத்துடன், அவரவர் தொகுதிகளில், சிறப்பாக மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மெத்தனமாக இருக்கக் கூடாது. கீழ்மட்ட அளவில் உள்ள மக்களை அடிக்கடி சந்தித்து, அவர்கள் உடனான தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலில், பா.ஜ.க, பெருவெற்றி பெற, மக்களின் அமோக ஆதரவே காரணம். அந்த ஆதரவை, எந்த வகையிலும் இழந்து விடக்கூடாது.பா.ஜ.க, இப்போது எதிர்க்கட்சி அல்ல; ஆளும் கட்சி. அதனால், அரசின் திட்டங்களை, கீழ்மட்ட அளவில் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, எம்.பி.,க்களுக்கு உள்ளது.
இவ்வாறு நரேந்திர மோடி கூறியதாக தின மலர் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு. தன்னைப் போன்ற ஒரு மனிதனின் காலில் தலையை கொண்டு வைப்பது என்பது ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு பேரிழப்பு. நரேந்திர மோடியின் மற்ற செயல்களில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் ஒருவர் செய்யும் நல்ல காரியத்தை நாம் பாராட்டியே தீர வேண்டும். அந்த வகையில் மோடியின் செயலை நான் பாராட்டுகிறேன். அப்படியே உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதாவுக்கும் இதே ஆலோசனையை வழங்கினால் நல்லது. ஏனெனில் சில வாரங்களுக்கு முன் ஜெயலலிதா பறந்த ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடு போட்டுக் கொண்டு நின்றனர் நமது அமைச்சர்கள். அந்த அளவு சுய மரியாதை இழந்து நிற்கின்றனர் தமிழக அமைச்சர்கள். நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் ஆலோசனை வழங்குவீர்களா?..... வழங்குவீர்களா?.....தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றுவீர்களா?... காப்பாற்றுவீர்களா?
5 comments:
.
//இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
-குர்ஆன்: 53: 62//
ஆதமுக்கு சிரம் பணியுங்கள்(சஜ்தா) என்று வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இட்டதாக குரான் கூறுகிறது. தனக்கு மட்டுமே எல்லோரும் சிரம் பணிய வேண்டும் என்று கூறுகிற அல்லாஹ் ஏன் இப்படி ஆதமுக்கு சிரம் பணியும்படி கூறி தனக்கு தானே முரண்படுகிறான்?
இப்ராஹிம் தன்னை சந்திக்க வந்த வானவர்களை சிரம் பணிந்து வணங்கியதாக குரான் கூறுகிறது. அதனை அல்லாஹ் ஏன் தவறென்று கூறவில்லை?
யூசுப் 11 நட்சத்திரங்கள்(சகோதரர்கள்) மற்றும் இரண்டு கதிர் கட்டுகள்(பெற்றோர்) தன்னை சிரம் பணிந்து வணங்கியதாக கனவு கண்டேன் என்று கூறுவதை(பைபிள் கதை) குரான் விவரிக்கிறது. இந்த சிரம் பணிதலையும் தவறென்று அல்லாஹ் ஏன் கூறவில்லை?
# ஆனந்த் சாகர் said...
//இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
-குர்ஆன்: 53: 62//
ஆதமுக்கு சிரம் பணியுங்கள்(சஜ்தா) என்று வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இட்டதாக குரான் கூறுகிறது. தனக்கு மட்டுமே எல்லோரும் சிரம் பணிய வேண்டும் என்று கூறுகிற அல்லாஹ் ஏன் இப்படி ஆதமுக்கு சிரம் பணியும்படி கூறி தனக்கு தானே முரண்படுகிறான்?
இப்ராஹிம் தன்னை சந்திக்க வந்த வானவர்களை சிரம் பணிந்து வணங்கியதாக குரான் கூறுகிறது. அதனை அல்லாஹ் ஏன் தவறென்று கூறவில்லை?
யூசுப் 11 நட்சத்திரங்கள்(சகோதரர்கள்) மற்றும் இரண்டு கதிர் கட்டுகள்(பெற்றோர்) தன்னை சிரம் பணிந்து வணங்கியதாக கனவு கண்டேன் என்று கூறுவதை(பைபிள் கதை) குரான் விவரிக்கிறது. இந்த சிரம் பணிதலையும் தவறென்று அல்லாஹ் ஏன் கூறவில்லை? #
மேலே உள்ளது எல்லாம் முஹம்மது (ஸல்) காலத்துக்கு முற்பட்டது, குரான் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திற்கும், அப்பறமும் உள்ளது. இறைவன் வணங்க சொன்னால் வணங்கணும், கூடாது என்றால் கூடாது.
ananth sagar,
There is no contradict in Islam and it's teaching.. in tamilnadu.. we people used to say "vanakkam" which is greetings and will you say this as worship . because the word "Vanakkam" also meant for worshiping.Same word differs in different situations. Remove ur painted specs then only u can see the true things. zahir.bukhari
@ ஆஷாக்,
//மேலே உள்ளது எல்லாம் முஹம்மது (ஸல்) காலத்துக்கு முற்பட்டது, குரான் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திற்கும், அப்பறமும் உள்ளது.//
கிமு, கிபி என்பது போல், முகம்மதுவுக்கு முந்தைய இஸ்லாமிய சட்டங்கள் அவருக்கு பிந்தைய இஸ்லாமிய சட்டங்கள் என்று ஏதேனும் இஸ்லாத்தில் இருக்கிறதா? எனக்கு தெரிந்து அப்படி ஏதும் இல்லை.
முகம்மதுவுக்கு முந்தைய காலம்வரை அல்லாஹ்வை தவிர மற்றவருக்கு சிரம் பணிந்து வணங்கினால் அதை அல்லாஹ் இணை வைப்பு என்று எடுத்துகொள்ள மாட்டான், அதே சிரம் பணிதலை ஒருவர் முஹம்மதின் காலத்திற்கு பிறகு செய்தால் அதை மட்டும் இணைவைப்பு என்று அல்லாஹ் கருதி அந்த நபரை நரகிற்கு அனுப்பி என்றென்றும் நெருப்பில் எரிப்பான் என்பது உங்கள் வாதம். உங்கள் வாதப்படி அல்லாஹ் நடந்துகொண்டால் அவன் பைதியக்காரனாகத்தான் இருக்க முடியும்.
// இறைவன் வணங்க சொன்னால் வணங்கணும், கூடாது என்றால் கூடாது.//
இதை மூடர்கள்தான் ஏற்றுக்கொள்வார்கள். முஹம்மது சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் சுயமாக சிந்திக்க தெரியாத மடையர்கள் அல்ல. எங்களுக்கு அறிவு பூர்வமான பதில் வேண்டும்.
Post a Comment