Followers

Thursday, September 11, 2014

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!



சவுதி வேலை வாய்ப்பில் இந்தியர்கள் முதலிடம்!

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களில் எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 85 சதவீத வேலை வாய்ப்பினை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அமெரிக்க அய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி சவுதி கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம் போல் முதல் இடத்தை நம் இந்தியர்களே பிடித்துள்ளனர். துபாய், பஹ்ரைன், கத்தார், என்று வளைகுடா எங்கு நோக்கினும் இந்திய தலைகளே! :-) எனவே தான் இத்தனை இமாலய ஊழல்களுக்கு மத்தியிலும் நமது இந்திய பொருளாதாரம் தொடர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பெற்று வருகிறது.

இந்தியர்கள் 1.76 மில்லியன், பாகிஸ்தானிகள் 1.32 மில்லியன், பங்களாதேஷ் 1.31 மில்லியன், பிலிப்பைன்ஸ் 1.03 மில்லியன், இலங்கை 150000 என்று பல நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.

வாழ்க இந்தியா! வளர்க அதன் பொருளாதாரம் வளைகுடா பணத்தால்! ஆனால் பல இந்துத்வாவாதிகளுக்கு இஸ்லாத்தைக் கண்டால் பிடிக்காது. அந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து தினம் பெறப்படும் அந்நிய செலாவணியை மட்டும் பிடிக்கும். :-)

என்ன உலகமடா இது?

தகவல் உதவி
சவுதி கெஜட்
09-09-2014

------------------------------------------------------

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.


நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.


அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.


என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.


இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.


துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.


அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.


உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..

இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.

1 comment:

Anonymous said...

இந்த சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை, நானும் அதே கிழிந்த trouser போட்டு வளர்ந்த வான் தான். என் அப்பா சவுதி பணத்தில் என்னை அமெரிக்க அனுப்பினர். இப்போது அமெரிக்காவில் வசதியாக வாழ்ந்தாலும் , அந்த வறுமையில் வாழ்ந்தது நியாபகம் வருகிறது.