'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, September 04, 2014
புனித மெக்கா பள்ளி இமாம் குருதிக் கொடை!
இந்த வருட ஹஜ் புனித கடமைக்கு வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஐந்து நாள் இரத்த தான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் புனித மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் அவர்கள் தனது இரத்தத்தையும் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இது போன்ற இரத்ததான முகாம்கள் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு தேவைக்கு அதிகமாகவே இரத்தம் சேமிக்கப்படுகிறது. இந்த முகாமை வருடாவருடம் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜெத்தா கிளையின் பொருப்பாளர் முஹம்மது முனாஃப் அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் 'மன்னர் ஃபஹத் மருத்துவமனையோடு சேர்ந்து செப்டம்பர் 5 ந்தேதி இரத்த தான முகாம் நடத்தவுள்ளோம். இரண்டு மணியிலிருந்து ஆறு மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். 200க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் ரத்தத்தை ஹாஜிகளுக்காக தர இருக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம். 'ஒரு மனிதனை காப்பாற்றுவது ஒட்டு மொத்த மனித குலத்தையும் காப்பதற்கு சமம்' என்ற குர்ஆன் வசனத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.' என்று கூறினார்.
Mohammed Maunaff, president of Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Jeddah region, said that his organization with the collaboration of King Fahd Hospital in Jeddah will be organizing a blood donation camp on Sept. 5 between 2 p.m. and 6 p.m. at the King Fahd hospital in which more than 200 volunteers are expected to donate blood.
“We have been conducting the blood donation campaign in Jeddah for the last five years with the inspiration of Qur'anic verse that states that saving a life is akin to saving the whole of mankind,” Munaf added.
அவர் மேலும் கூறும் போது 'இது போன்ற முகாம்கள் சவுதி அரேபியாவின் பல நகரங்களிலும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தப்படுகிறது. எங்களின் இந்த முகாமுக்கு அனைவரும் வந்து இரத்ததானம் செய்து நன்மையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த சலாஹூதீன் என்பவரை 0508326083 என்ற இந்த நம்பருக்கு விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
04-09-2014
இரண்டு முறை நானும் ரியாத் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்துள்ளேன். ரியாத்தில் நடந்த முகாமுக்கு பல சவுதிகளும், மற்ற நாட்டவர்களும் வந்து ஆர்வமோடு ரத்தம் கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழனின் பெருமை சவுதியின் அனைத்து நகரங்களிலும் இன்று எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பலர் பல விதமாக அவதூறுகளை 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற இந்த அமைப்பின் மீது வீசிக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் தூரமாக்கி அகில உலக அளவில் தனது நற்பணிகளை தொய்வின்றி இந்த அமைப்பு இறை பொருத்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. இறைவனும் இந்த அமைப்புக்கு தனது அருட் கொடைகளை வாரி வழங்கி வருகிறான்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment