'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, September 04, 2014
தீண்டாமைக் கொடுமை - தலித் மாணவன் கை வெட்டு!
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு (03.09.14) இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை (01.09.14) பாடசாலைக்கு சென்றபோது கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக சாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்த 16 வயதான பரஞ்சோதி ரமேஸ் திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப் பாடசாலையில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
திங்கள்கிழமை (01.09.14) அன்று பாடசாலைக்கு சென்ற ரமேஸ் கையில் கைக்கடிகாரம் கட்டியுள்ளார். இதைப் பார்த்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர் ஏன் கைக்கடிகாரம் கட்டி வந்தாய் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் கடிகாரத்தைக் கழற்றி தூக்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். இதை எதிர்த்து ரமேஸ் அவர்களுடன் சண்டைக்குப் போயுள்ளார். பின்னர் மற்ற மாணவர்கள் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு (03.09.14) ரமேஸ், திருத்தங்கல் ரயில் நிலையம் அருகே நடந்து போய்க் கொண்டிருந்தபோது 15 மாணவர்கள் சேர்ந்து ரமேஸை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரமேஸை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ரமேஸ் நிலை குலைந்தார். இந்த நிலையில் திடீரென கத்தியை எடுத்து ரமேஸின் மணிக்கட்டை வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஸ் அவர்களிடமிருந்து கடுமையாக போராடி தப்பி ஓடி சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவரை குடும்பத்தினர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அரசுப் பாடசாலையில் தீண்டாமைக் கொடுமை, மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அடிக்கடி அங்கு மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் செருப்பு போடக் கூடாது, கடிகாரம் கட்டக் கூடாது என்று பல வகையிலும் மற்ற சமூக மாணவர்களால் துண்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
இதுதொடர்பாக ஏற்படும் மோதல்களை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் தலையிட்டு அமைதிக் கூட்டம் நடத்தி கட்டுப்படுத்தி வருகிறார்களாம். ரமேஸ் தாக்குதல் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
tamil.oneindia.in/news/tamilnadu/dalit-boy-s-wrists-cut-wearing-watch-school-tamil-nadu-210256.html
ஒரு தலித் மாணவன் அவனது தந்தையின் உழைப்பில் கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது அவ்வளவு பெரிய பாவங்களா?
ம்.... ம்... இந்துத்வ ஆட்சியில் இன்னும் எதெல்லாம் அரங்கேறப் போகிறதோ!
அமீத்ஷா வோடு கூட்டு சேர்ந்து முஸ்லிம்களை எவ்வாறு ஒழிக்கலாம் என்று யோசிப்பதை விடுத்து இது போன்ற சாதி மோதல்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால் இந்து மதத்தின் அழிவையாவது தடுக்க முடியும்.
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment